Wednesday, March 6, 2013

பாட்டி சொன்ன கதைகள் (3)


பவள சங்கரி
 

சமயோசித புத்தி!

ஹாய் குட்டீஸ்! நலமா ?

இன்னைக்கு நாம் காக்காயின் சமயோசித புத்தியைப் பற்றிய கதை பார்க்கலாமா?

காகங்கள் எப்போதும் கூடித்தான் இருக்கும். அதுக்கு ஏதாவது உணவு கிடைச்சுதுன்னா,உடனே அது மத்த காகங்களையும் கூப்பிட்டு எல்லோரும் சேர்ந்துதான் சாப்பிடுவாங்க..... மனிதர்கள்தான் எப்போதும் தன்க்கு வேணுமின்னு சேமித்து வைப்பாங்க.. ஆனா  காகங்கள் அப்படி இல்லை. கிடைச்ச உணவை தன் நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்து  மகிழ்ச்சியா சாப்பிடும்.... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை இல்லையா?

ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சாம். ஒரு நாள் அது இரை தேடி ரொம்ப தூரம் போயிடிச்சாம். சாப்பாடு, தண்ணீர் என எதுவுமே கிடைக்கலியாம். ஒரே பசியும் தாகமும் போட்டு வாட்ட துவண்டு போச்சாம் அந்த காகம். அப்ப அங்கே தெரு ஓரமா ஒரு ஜாடியில கொஞ்சமா தண்ணீர் இருந்ததாம். காகத்திற்கு அந்தத் தண்ணீரைப் பார்த்தவுடன் உயிரே வந்த மாதிரி இருந்ததாம். வேகமாகப் பறந்து போய் தண்ணீரைக் குடிக்கலாம்னு போனா,
அந்த ஜாடியின் வாய் ரொம்ப குறுகலாக இருந்த்தாலும், தண்ணீர் ஜாடியின் கீழே கொஞ்சமாக இருந்ததாலும் அந்தக் காகத்தினால் தண்ணீரைக் குடிக்க முடியாமல் தவிச்சுப் போனதாம். உடனே அதற்கு ஒரு யோசனை வந்ததாம். சுற்றி இருக்கிற சின்னச், சின்ன கற்களை ஒவ்வொன்றாக எடுத்து அந்த ஜாடிக்குள்ள போட்டுதாம். தண்ணீர் அப்படியே மேலே.. மேலே வந்ததாம்..  காகம் நிம்மதியா அந்த நீரைக் குடித்து தாகம் தீர்த்துக் கொண்டதாம்...


இப்படித்தான் நாமும் சமயத்திற்கு ஏற்றார் போல நம் மூளையைச் சரியாகப் பயன்படுத்தினால், நமக்கு வேண்டியதைப் பெறலாம் இல்லையா?, 

மீண்டும் சந்திப்போம்.

நன்றி : வல்லமை

1 comment:

  1. குட்டீஸ் எல்லாம் இதே கதையை வேறு விதமாக அருமையாக சொல்றாங்க...

    ReplyDelete