பவள சங்கரி
ஹாய்
குட்டீஸ் நலமா?
விருந்தோம்பலும் குரு பக்தியும்!
ஆதி
காலந்தொட்டு நம்முடைய இந்திய பாரம்பரியத்தில், விருந்தோம்பல், நட்பு,
அன்பு, பாசம், பண்பு, ஆன்றோருக்கும்,
மூத்தோருக்கும் மரியாதை போன்றவற்றிற்கு தனிப்பட்ட
கவனம் செலுத்தப்படுவது இயல்பு. நம் மரபணுக்களில்
ஆழமாக ஊறிய ஒன்று இது
என்றுகூட சொல்லலாம். திருநாவுக்கரசு நாயனார் புராணத்தின் ஒரு
பகுதியான அப்பூதியடிகள் வரலாறு இப்படியான
நம்முடைய தமிழர் பண்பாட்டிற்கு அழகான
ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவதைப் பாருங்கள்!
அப்பூதியடிகள்
திங்களூர் எனும் ஊரில் வசித்த
ஒரு சிறந்த சிவ பக்தர்.
நால்வர் பெருமானாரில் ஒருவரான திருநாவுக்கரசர் வாழ்ந்த
7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சைவ சமய வளர்ச்சிக்கு
திருநாவுக்கரசர் ஆற்றிய தொண்டுகளும், அதற்காக
அவருக்கு ஏற்பட்ட சோதனைகளும், இறையருளால்
அவையனைத்தையும் கடந்து, பக்தியில் திளைத்து
இருந்ததை எண்ணி, எண்ணி அவர்மீது
மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டிருந்தார். இதன்
காரணமாக திருநாவுக்கரசர் பெயரால், அன்ன சத்திரங்கள், தர்ம
சாலைகள், மடங்கள் என அனைத்தும்
அமைத்திருந்தார். இதனையறிந்த திருநாவுக்கரசர், அப்பூதியடிகளை நேரில் சந்திக்கும் ஆவலில்
திங்களூருக்கு வருகிறார். அவரது இல்லம் நோக்கிச்
சென்று அப்பூதியடிகள், தன் இல்லம் முதல்
உயிருள்ள தம் மகன்களுக்கு மூத்த
திருநாவுக்கரசு, நடு திருநாவுக்கரசு, இளைய
திருநாவுக்கரசு என்ற பெயரையும், மற்றும்
வீட்டில் பயன்படுத்தும் முக்கிய பொருட்களுக்கும்கூட திருநாவுக்கரசர்
பெயரைச் சூட்டி அழகு பார்ப்பதைக்
கண்டு வியந்து அவரிடமே சென்று,
‘ஏனப்பா இப்படி எவரோ ஒருவர்
பெயரை உன் செல்வங்களுக்கு வைத்திருக்கிறாயே’
என்று கேட்டிருக்கிறார். உடனே கோபமுற்ற ஆப்பூதியடிகள்,
‘ஐயா பெரியவரே, தயவுசெய்து அவரை எவரோ ஒருவர்
என்று சொல்லாதீர்கள், இந்த ஊரில் அவரைப்
பற்றி தெரியாதவர் ஒருவரும் இல்லை. நீங்கள் யார்?
எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு
அப்பர் பெருமான் (திருநாவுக்கரசருக்கு மற்றொரு பெயர்)
“நான்,
வாகீசன், தாங்க முடியாத சூலை
நோயைக் கொடுத்துப்பின் என்னை ஆட்கொண்டானப்பா ஒருவன்”
என்றார். அடுத்த கணம் அவர்
யார் என்பதை உணர்ந்து கொண்டு
மகிழ்ச்சி வெள்ளத்தில் நீராடி, தம் குடும்பத்தாருடன்
வந்து அவரை வீட்டினுள் அழைத்துச்
சென்றார்.
அவருடைய
அன்பில் கட்டுண்ட திருநாவுக்கரசு பெருமான் அன்று அவருடைய வீட்டில்
தங்கி விருந்து உண்டு செல்வதாக முடிவெடுத்தார்.
மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த அப்பூதியடிகள் தம்
மனைவியிடம் சொல்லி அருமையான விருந்திற்கு
ஏற்பாடு செய்கிறார். மூத்த மகனை அழைத்து
வாழைத்தோட்டத்தில் இலை அறுத்துக் கொண்டுவரும்படி
அன்னை சொல்ல, அந்த சிறுவனும்
தோட்டத்திற்குச் செல்கிறான். சிவபெருமானின் திருவிளையாடலால், கொடுமையான நாகப்பாம்பு தீண்டிவிடுகிறது. தாயிடம் இலையைக் கொடுத்து
விடம் தீண்டியதைக் கூறாமல் வீழ்ந்து இறக்கிறான் செல்வ
மகன். விடம்
ஏறியதால் கருநீலம் பூத்த உடலோடு அன்பு
மகன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து
நின்றார் அப்பூதியடிகள். சற்று நேரத்தில் தெளிவடைந்தவராக,
இந்த சோகமான செய்தியை திருநாவுக்கரசு
பெருமான் அறிந்தால் உணவு உண்ண முடியாதே
என்பதால், தன் அன்புச் செல்வத்தை
துணியில் சுற்றி அவர் காணாத
வகையில் மறைத்து வைத்தார்.
உணவு
உண்ணும் வேளை வந்தது. திருநாவுக்கரசர்
மகேஸ்வர பூஜையை முடித்துக்கொண்டு, சாப்பிட
உட்கார்ந்தவர், மூத்த திருநாவுக்கரசை அழைத்தார்.
உண்மையைச் சொல்லவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல், ‘அவன் இன்று இங்கு
உதவான்’ என்றார். ஆனால் திருநாவுக்கரசர், மீண்டும்
வற்புறுத்தி அவனை வரச்சொல்லவும், வேறு
வழியில்லாமல் அப்பூதியடிகள் நடந்த சம்பவத்தை வேதனையுடன்
கதறியழுதபடி சொன்னார். அப்பூதியடிகளின் அன்பில் உள்ளம் உருகிய
திருநாவுக்கரசர், அவர்தம் மகனின் இறந்த
உடலை திருக்கோவிலின் முன் கொணரச் செய்து,
ஒன்றுகொ
லாமவர் சிந்தை யுயர்வரை
ஒன்றுகொ
லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ
லாமிடு வெண்டலை கையது
ஒன்றுகொ
லாமவ ரூர்வது தானே.
என்ற திருப்பதிகம் பாடினார்.
உடனே சிவபெருமானின் திருவருளால், இறந்த
அவருடைய மகன் மீண்டும் உயிர்
பெற்றான். விருந்தோம்பலின்
மகிமை, இறைவன் மீது கொண்ட
நம்பிக்கை, மூத்தோரின் மீது மரியாதை போன்ற
பலவற்றையும் உலகிற்கு உணர்த்தவே இப்படியொரு திருவிளையாடல் என்று புரிகிறதா!
சரி
நம் கதைக்கு வருவோமா ?
நரியும் கொக்கும் !
ஒரு
நரியும் கொக்கும் கொஞ்ச நாட்களாக நண்பர்களாக
இருந்தனர். சில நாட்களாக தூரமாகப்
பயணம் சென்று அப்போதுதான் திரும்பியிருந்தது
கொக்கு. அதையறிந்த நரி, நேரில் சென்று
கொக்கை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, தன் வீட்டிற்கு விருந்திற்கு
வரும்படியும் அழைத்துவிட்டு வந்தது. கொக்கும் மகிழ்ச்சியுடன்
ஒப்புதல் அளித்தது.
அடுத்த
வாரத்தில் ஒரு நாள் தானும்
அந்த நரியை விருந்திற்கு கூப்பிட்டிருந்தது.
அதேபோல் அந்த நரியை இன்முகத்துடன்
வரவேற்று, அதற்குப் பிடித்த திராட்சை இரசமும்,
மீன் துண்டும் தயார் செய்து எடுத்து
வந்தது. ஒரு நீண்ட வாய்
குவிந்த ஜாடியில் ஊற்றி கொண்டு வந்து
அதன் முன்னால் வைத்தது. திராட்சை இரசத்தின் வாசம் அதனை எப்படியாவது
பருகத் துடிக்கச் செய்தது. ஆனால் அந்த ஜாடியினுள்
தலையை நுழைக்க முடியாமல் அவதிப்
பட்டுக்கொண்டிருந்ததை கவனிக்காமல் தான் மட்டும் அதனுள்
மூக்கை நுழைத்து எளிதாக பருக
ஆரம்பித்தது. ஆனாலும் மனம் கேட்காத
கொக்கு, அந்த நரிக்கு ஒரு
அகன்ற வட்டிலில் மீன் வறுவலை வைத்துக்
கொடுத்தது. ஆவலுடன் வேக வேகமாக
சாப்பிட ஆரம்பித்தது நரி.
அச்சச்சோ..
அந்த மீனில் இருந்த முள்,
நரியின் தொண்டைக்குழிக்குள் சிக்கி, மூச்சு திணற
ஆரம்பித்தது. உடனே அந்தக் கொக்கு
சற்றும் தயங்காமல் நரியின், வாயைப் பிளந்து தன்
நீண்ட அலகினால் அதன் தொண்டைக் குழியில்
குத்திக் கொண்டிருந்த முள்ளை மெதுவாக வெளியே
எடுத்தது. அப்போதுதான் நரிக்கு மூச்சே வந்தது.
நண்பனை விருந்திற்கு கூப்பிட்டுவிட்டு அதை ஒழுங்காக சாப்பிட
விடாமல் செய்துவிட்டோமே, அப்படிப்பட்ட தன்னை இவ்வளவு பெரிய
இக்கட்டிலிருந்து காப்பாற்றிவிட்ட இந்த கொக்குதான் இனி
எனக்கு உண்மையான நண்பன் என்று முடிவு
செய்து அதனிடம் மன்னிப்பும் கேட்டது
நரி!
திருநாவுக்கரசர் + அப்பூதியடிகள் கதையும், கொக்கு+நரி விருந்தோபல் கதையும் படிக்க சுவாரஸ்யமாக இருந்தன. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteகுனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
ReplyDeleteபனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனிதப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே.
கதையும் அருமை...