Friday, May 10, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (11)பவள சங்கரி
விட்டுக் கொடுத்தல் என்னும் வேதம்!
அனைத்து சமரசமும் கொடுத்துப் பெறுவது என்ற அடிப்படையில் இயங்குவது, ஆனாலும் அடிப்படையில் எந்த கொடுக்கல், வாங்கலும் இருக்க முடியாது. எந்த சமரசமும் சரணடைவதையையே அடிப்படையாகக் கொண்டது. காரணம் இவையனைத்தும் கொடுப்பதில் மட்டுமே உள்ளதேயன்றி எடுப்பதில் அல்ல…
மகாத்மா காந்தி
சில உறவுகள் நாம் விரும்பி ஏற்பது, சில உறவுகள் நாம் பிறக்கும்போதே தானாகவே அமைவது. பல நேரங்களில் உடன் பிறந்தவர்கள், பெற்றவர்கள் என்று தானாக அமைந்த உறவுகளின் மன வேறுபாடுகளைக்கூட அனுசரித்துப் போகும் நமக்கு, நாமாக விரும்பி ஏற்றுக் கொள்ளும் உறவுகள் மற்றும் நட்புகளின் சிறு தவறுகளைக்கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இரு கைகளையும் தட்டினால்தான் ஓசை. ஒரு கை ஓசையாக இருக்கும் பிரச்சனைகள் வெகு விரைவிலேயே நீர்த்துப் போய்விடுவதும் கண்கூடு.

Wednesday, May 8, 2013

பசுமையின் நிறம் சிவப்பு

பவள சங்கரி


”ஏம்மா.. வீட்டில யாரும்மா. எங்கம்மா உன் புருசன்? பணம் வாங்கறப்ப தேடி வந்து மணிக்கணக்கா குந்திக்கிட்டிருந்து வாங்கத் தெரியுது.  வட்டி கூட நேரத்துக்கு ஒழுங்கா வந்து கட்ட முடியல..  ஏம்மா எல்லாரும் சோத்துக்கு உப்பு போட்டுத்தானே திங்கறீங்க. எத்தனை வாட்டி நடக்குறது? எங்களுக்கெல்லாம் வேற பொழப்பே கிடையாதா?”

“ஐயா, அவுரு கடைவீதிக்கு போயிருக்காருங்க.  வந்தவுடனே வரச்சொல்றேங்க. சத்தம் போடாதீங்க ஐயா, அக்கம் பக்கத்துல மானம் போவுது.”

“ஓ.. மானமா அப்படி ஒன்னு இருக்குதா உங்களுக்கு. இருந்தா இப்படி பணத்தை வாங்கிக்கிட்டு மூனு மாசமா வட்டியும் கட்டாம, முதலுக்கும் வழியில்லாம தலை மறைவா இருப்பானா உன் புருசன், பேச வந்துட்டா.. இந்தா இந்த வெட்டி நியாயமெல்லாம் வாண்டாம். உன் புருசனை உடனடியா பணத்தைக் கொண்டாந்து கட்டச்சொல்லு. இல்லேனா நடக்குறதே வேற ஆமாம்...”

Monday, May 6, 2013

பாட்டி சொன்ன கதைகள்! (7)
பவள சங்கரி
இரண்டு நண்பர்கள்!
ஹாய் குட்டீஸ் நலமா?
கரடியைப் பார்த்திருக்கிறீர்களா? கரடி கனமான உருவமும், உடல் முழுவதும் அடர்ந்த முடியும், குண்டு கால்களும் கொண்ட பாலூட்டும் வகையைச் சார்ந்த மிருகம். இது மிக வேகமாக ஓடக்கூடியது. இதற்கு சிறுத்தை, புலி மற்றும் பூனையைப் போல மரத்தின் மீது ஏற முடியாது. பொதுவாக நாயைப் போன்று நல்ல மோப்ப சக்தி கொண்டது. மனிதர்களை அதிகமாக விரும்பக்கூடியது இந்தக் கரடிகள். மனிதர்களை வெகு எளிதாக மோப்பம் பிடித்து நெருங்கி வந்துவிடும். குகைகளிலும், பதுங்கு குழிகளிலும் தங்கும் குணமுடைய கரடிகள் வேகமாக நீந்துவதிலும் கெட்டிதான். சரி நம்மோட நண்பர்கள் கதைக்கும் இந்தக் கரடிக்கும் என்ன சம்பந்தம்னு பார்க்கலாமா?
ஒரு கிராமத்தில் ராமு, சோமு என்ற இரண்டு நண்பர்கள் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தார்கள். இருவரும் ஒன்றாகவே விளையாடுவது, பள்ளிக்குச் செல்வது என்று இணை பிரியாமல் இருந்தார்கள். ராமு எப்பொழுதும் அமைதியான குணமுடையவன். பயந்த சுபாவமும், நல்ல மனதும் கொண்டவன். சோமு அதற்கு நேர்மாறாக துணிச்சலும், சமயோசித புத்தியும் கொண்டவன். அதனாலேயே ராமு, சோமுவுடன் இருக்கும் போது மிகவும் பாதுகாப்பாக உணருவான். அவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு வெகு தூரம் நடக்க வேண்டும். இடையில் ஒரு காட்டைக் கடந்துதான் செல்ல வேண்டும். எப்பொழுதும் இருவரும் ஒன்றாகவேச் செல்வதால் ராமு தைரியமாக சோமுவுடன் செல்வான்.