Saturday, June 20, 2020

இணையக் குற்றங்களும் இணையவெளிச் சட்டங்களும் - புத்தக மதிப்புரை

 

 இணையம் இல்லாத காலம் ஒன்று இருந்ததா என்று சிந்திக்கும் நிலைக்குத் தள்ளப்படும் வகையில் இன்று நாம் இணையத்துடன் ஒன்றியிருக்கிறோம். குறிப்பாக கொரோனா தொற்றின் பின் இதன் பயன்பாடு பல வகையில் பல்கிப் பெருகியுள்ளது. ஆனாலும் இணையத்தின் அத்தியாவசியத் தேவையை உணரும் இந்த நேரத்திலும், தங்கள் குழந்தைகளுக்கு இணைய வழிப் பாடத்திட்டம் பாதுகாப்பானதாக இல்லை என்று குறை கூறுகிறார்கள் என்றால் இன்று இணையக் குற்றங்கள் எந்த அளவிற்குப் பெருகியுள்ளன என்பதை உணர முடிகிறது. நவீன தொழில்நுட்பங்களை முறையாகப் பயன்படுத்தத் தகுந்த பயிற்சிகளை எடுத்துக்கொள்வதே இதற்கான தீர்வாக இருக்க முடியுமே தவிர அதனை முழுமையாக ஒதுக்குவது என்பது இயலாத காரியம். பொதுவாக இணையக் குற்றங்களைக் களைவதற்குரிய வாய்ப்புகள் எவை, அதற்குரிய தண்டனைகள் என்ன என்பது போன்ற வினாக்களுக்கு விடை காணும் ஆர்வம் எழுவதும் இயல்புதானே?

அந்த வகையில் த்திரிக்கையாளர், சட்டவல்லுனர்,  சமூக ஆர்வலர், Microsoft மென்பொருள் வல்லமையும் Microsoft பயிற்சி சான்றி்தழ் பெற்றவர், சு நிர்வாக ஆளுமையில் தேர்ச்சி  பெற்றவர் என்ற பன்முக ஆளுமை கொண்ட முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் அவர்களின், ‘இணையக் குற்றங்களும் இணையவெளிச் சட்டங்களும்’ எனும் நூல் குறித்த நம் பார்வை இதற்கான விடையுமாகலாம்.

உலகின் அனைத்துத் துறைகளிலும் இணையம் ஆதிக்கம் செலுத்தும் இக்காலகட்டத்தில் இணணய வெளி மற்றும் சமூக இணையதளங்கள் பற்றி முழுமையான புரிந்துணர்வு அவசியமாகிறது. இணையத்தை தீய நோக்குடன் பயன்படுத்திய பாதகர் கையில் சிக்கி, சிதைந்த அனைத்துப் பெண்களுக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்ட அத்தியாவசியமான கருத்துகள் நிறைந்த அருமையான நூல் இது.

இன்று, சமூக ஊடகங்கள், பல்லூடகங்கள், அலைபேசி என பல்வேறு வடிவங்களில் இணையமே உலகம் முழுவதிலும் ஒருவருக்கொருவர் தொடர்பாடலுக்கு பயன்படும் இன்றியமையாதொரு ஊடகமாக விளங்குகி்றது.

ஆனால் கணினித் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த நாடுகளில் கணினிக் குற்றங்களும் சேர்ந்தே வளர்ச்சி பெறுவதும் தவிர்க்க முடியாததாக உள்ளன..  அக்குற்றங்களைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ள ஏற்கனவே உள்ள சட்டங்களில் திருத்தங்கள் செய்யவும், புதிய சட்டங்களை இயற்றவும் வேண்டிய தேவை அந்தந்த நாடுகளுக்கு ஏற்பட்டபோது, அத்தகைய மோசடிகளைத் தண்டிக்க முதலாவதாகச் சட்டம் இயற்றிய நாடு அமெரிக்காவைத் தொடர்ந்து, மலேசியா போன்ற பல நாடுகளும் உரிய சட்டங்களை இயற்றத் தலைப்பட்டன. அவற்றுள் சிஙகப்பூர் இயற்றிய ‘மின்னணுவியல்   பரிமாற்றச் சட்டம்’ குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிகரித்து வரும் இணையக் குற்றங்ளே இந்நூல் எழுதக் காரணமானது என்கிறார் ஆசிரியர். உலக நாடுகளுடன் வர்த்தகத்தில் பெருமளவில் போட்டியை எதிர்கொள்ளும் பொதுமக்கள் அதன் பாதுகாப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு கொண்டிருக்கவில்லைன்பது ஒரு குறை. இணைய குற்றங்களை தடுப்பதில் கடுமையான முயற்சிகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளதோடு இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் இதற்கான வழிமுறைகளையும் உள்ளடக்கியுள்ளது. அந்த வகையில் ணையகுற்றங்கள் மற்றும் இணைவெளிச் சட்டங்கள் பற்றி எளிய தமிழ் நடையில் வெளிவந்துள்ள இந்நூல் பொது மக்களுக்கு பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.

ன்றுணையம் இன்றி  ங்கி பப்பரிமாற்றங்கள் முதல் பய ஏற்பாடுகள் வரை பல்வேறு அன்றாடப் பணிகளும் நின்றுவிடும் எனும் அளவிற்கு மனி்த வாழ்வின்னைத்து செயல்பாடுகளிலும் இணையமும் கணினியும் இண்டறப் பிணைந்துள்ளன. அதற்கு கண்காணிப்பும், ஒழுங்கு முறையும், உலக அளவில் அவசியமாகிறது.

ணையத்தகவல் ஊடுவெளியை (Cyber Space)  உபயோகிக்கும் அத்தனை பேரும் அதனை நிர்வகிக்கும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களே.

உலகளாவிய இணையத்தளம், ணையம், ணையத் தகவல் ஊடுவெளி (INTERNET) எல்லாவற்றின் தகவல் பரிமாற் அம்சங்களையும் இணையச் சட்டங்கள் தொட்டு நிற்பதால் இணையச் சட்டங்கள் மிக முக்கியமானவை.

1960களில் ஆம்பிக்கப்பட்ட இதன் செயற்பாடுகள் 2010 ஆம் ஆண்டளவில் உலக மக்கள் தொகையின் 22 சதவீதமானவர்கள் கணினிப் பயனீட்டாளர்களாக உள்ளனர். தேடல் பொறியில் ஒவ்வொரு நாளும் பல இலட்சக்கணக்கானத் தேடல்கள் இ்டம் பெறுகி்ன்றன.

  ங்கி மோசடி, தரவுக் குறியீட்டுத் திருட்டு, வியாபா மோசடி, வரி ஏய்ப்பு, கடனட்டை மோசடி, வைரசு தாக்குதல், ணைசேதம், மின் அஞ்சல் வேவு பார்த்தல், சேவை மறுப்பு, ஆபாசப்படங்கள் போன்றணையக் குற்றங்கள் தற்போது சாதாரணமாகக் காணப்படுகின்றன.

2007 முதல் 2011 வரையிலான இணையக் குற்றங்கள் தொடர்பான பட்டியல் மாநிலங்கள், பெருநகரங்கள் வாரியாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

ணையகுற்றவியல் ஆய்வுப் பயிற்சியும் வி்சாரணைகள் மேற்கொள்வதற்கான ஆய்வு நிலையங்களையும் கேரளா, சாம், மிசோரம், நாகலாந்து, அருணாசலப்பிரதேசம், திரிபுரா, மேகலாந்து, மணிப்பூர், சம்மு, காசுமீர், மும்பாய், பெங்ளூரு, பூனா, கொல்கத்தா ஆகிய இ்டங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. 3680 காவல்துறை அதிகாரிகள், நீதித்துறை மற்றும் பொது சட்ட வல்லுனர்களுக்கு இ்தனூடாக பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

ங்கி விபரங்களை அறிந்து முறைகேடான முறையில் மாற்றீடு செய்தல் போன்று, ஒரு நாட்டின்டைத்துறைன்னொரு நாட்டின் இரகசியங்களைத் திருடு்தல், உளவு பார்த்தல் போன்ற பல ஒற்றுவேலைளும் அரங்கேறுகின்றன. அதோடு ணைவெளித் தாக்குதல் மூலம் ஒரு நாட்டின் பல குடிசார் சேவைகளை முடங்கச் செய்வதுடன்சு நடவடிக்கைகளையும் செயலிழக்கச் செய்யலாம். சுருங்கச் சொன்னால் வருங்காலத்தில் நாடுகளுக்கிடையிலான போர் தரை, கடல், விண்வெளி மார்க்கமாக மட்டுமல்லாமல் இணைவெளியிலும் நடக்கும் வாயப்பிருக்கி்றதாம்.

ணைத் தகவல் பரிமாற்றங்களைக் கண்காணிக்கும் வகையில் சர்வதேச சட்ட விதிகளில் திருத்தம் செய்வதோடு, சந்தேகத்துக்கு இ்டமான நபர்களின்ணையத் தொடர்புகளையும் அவர்களின்லைமனைகளையும் கண்காணிக்க இன்டர்போலுக்கு அனுமதி வழங்கினால்தான் இத்தகையக் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்கிறார் ஆசிரியர்.

ஆபாசப் படங்கள், தகவல்கள், சாதி, மத, இன, மொழி வெறியைத் தூண்டி மக்களிடையேகைமை வளர்க்கும் செய்திகள், பொய்யான தகவல்கள் இணையத்தில் பெருகிவிட்டன. இதற்கான சட்டங்கள், தண்டனைகள் பற்றியும், புதிய சட்டங்களுக்கான தேவைகளைப் பற்றியும் விரிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

ஏறக்குறைய முப்பது நாடுகளில் இருந்து மிகவும் நுட்பமான கணினித் தாக்குதல் ஒன்றின் மூலம், சுமார் நூறு வங்கிகளில் இருந்து பல நூறு மில்லியன் டாலர்கள் பம் திருடப்பட்டிருக்கி்றது என்று உருசிய கணினிப் பாதுகாப்பு நிறுவனமான “கேஸ்பர்ஸ்கி லேப்” கூறுகி்றது.

கணினிக் குற்றவாளிகள் ஒவ்வொரு வங்கியின் செயல்பாடுகளையும், அன் வழிமுறைகளையும் கற்றுக்கொண்டு,தையொட்டி வங்கியின் சட்டபூர்வமான செயல்பாடுகள் போல் தோன்றும் செயல்களைச் செய்ய முடியும் என்பதனையும் விளக்கியுள்ளார்.

அனைத்து வகையான தகவல்களும் தரும் வமாக இருக்கும் இணையமே வாழ்வை அழிக்கும் சாபமாகவும் ஆகி விடுகி்றது. இணையத்தில் ஆபாசப் படங்களும், செய்திகளும் நிறைந்த வலைமனைகள் ஏராளமாகப் பெருகி வருவதையும், அவற்றில் பல அண்மையில் முடக்கப்பட்டிருந்தாலும், அந்தப் படங்களை முற்றிலுமாகத் தடுக்க முடியாது என்றும் குறிப்பிடுகிறார்.

பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள வலைமனைகளின் தகவல்கள் உலக அளவில் பார்க்கப்படுகி்ன். பி்ற நாட்டு வலைமனைகளை முடக்க இந்தியாவுக்கு அனுமதி இல்லை. பல்வேறு நாடுகளில் அந்நாட்டுச் சட்டங்கள் இ்தனை அனுமதிக்கக் காரணம், பாலியல் உறவு, சிந்தனை பற்றிய கண்ணோட்டமும், கருத்தோட்டமும் நாட்டுக்கு நாடு, சமூகத்துக்கு சமூகம் வேறுபடுகின்றன. சக மனி்தர் தொடர்பான காழ்ப்புணர்ச்சி: சாதி, மத, மொழி, இனம் சார்ந்த  போட்டிகள் போன்றவைகளும் முக்கிய காரணங்கள்.

Computer Virus ன்ற கிருமி நிரல்கள் நாம் கணினியில் பயன்படுத்தும் மற்ற நில்கள் (programs) போன்றவையே என்றாலும் இவை நமது Hard disk – வன் தட்டையே  மொத்தமாக அழித்துவிடும்.

ஸ்மார்ட் போன் என்கிற திறன் பேசியைப் பொருத்தவரை முன்பு ஆபாசப் படங்கள் ஊடாக தீங்கு நில்கள் கணினிகளை ஊடுருவியது போக, ற்போது, ணையதள விளம்பரங்களும் இதற்குத் துணை போவதாகக் கண்டறியப்பட்டுள்ள.

இது போன்று கணினி உலகில் மென்பொருள் களவு (piracy) ன்பதும் உலக அளவில் பெருமளவில்டைபெறுகி்ன். நமது பாதுகாப்பு கருதி இதைப்பற்றியும் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்கிறார்.

முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல், அஞ்சல் குழுக்கள், லைப்பதிவு போன்ற தளங்களில் தம்மைப் பற்றிய சுய விபரங்களை உள்ளிடும்போது, ச்சேவையை வழங்கும் நிறுவனமோ அல்லது பி்றரோ ஒருவரின் அனுமதி இல்லாமல் வேறு செயல்பாடுகளுக்கு அவைகளைப் பயன்படுத்திக்கொள்வது ஒருவரின்ந்தரங்கத்தில் தலையிடுவதாகும்.

அதேபோல் மின்னஞ்சல் பெட்டியினுள் நுழைவதும், மின்னஞ்சலை திசை மாற்றுவதும் போன்றவற்றிற்கும் தண்டனை வழங்கும் முறையான சட்ட விதிகள் அமைக்கப்படவேண்டும் என்கிறார். சிக்கலான சட்ட அதிகார வரம்பு குறித்தும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இணைய விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் அனைத்து விதமான பொருட்களுக்கும் விற்பனை வரிச் சிக்கல் குறித்தும் ஐயமெழுப்புகிறார்.

  பதிப்புரிமையைப் பொருத்தவரை, ஒரு எழுத்தாளருக்கோ, லைஞருக்கோ தமது அசலான படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமை குறித்த  சட்டத்திருத்தம் குறித்தும் அறியத் தருகிறார்.

இலக்கிய படைப்புகள், சை, நாடகம் போன்றவற்றுக்குப் பதிப்புரிமை பெறலாம். படைப்பாளியின் வாழ்நாள் முழுவதும் அவருக்குச் சொந்தமாக இருக்கும். அவர் காலத்திற்கு அறுபதாண்டுகளுக்குப் பின்புவரை அவருக்கும், அவரது சந்ததியினருக்கும்  பதிப்புரிமை உண்டு. அதன் பின்னர் யார் வேண்டுமானாலும் அவற்றை எடுத்துப் பயன்படுத்தலாம்.

மேற்படி சட்டம், ஒரு எழுத்தாளருக்கு பதிப்புரிமையைத்விர தார்மிக உரிமையையும் வழங்கியிருக்கி்றது. அதன்படி எழுத்தாளர் தன்னுடையடைப்பை பதிப்பாளருக்கு உரிமம் மாற்றம் செய்துவிட்டாலும் கூட அந்த படைப்பின் மீதான எழுத்தாளரின் தார்மீக உரிமையை பதிப்பாளர் உட்பட எவரும் மறுக்க முடியாது.

வடிவமைப்பு காப்புரிமை  (PATENT RIGHT) பற்றியும் தெளிவாக விளக்கியுள்ளார். சொத்துரிமை பாதுகாக்கப்படுவது போன்று அறிவுசார் சொத்துரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சட்டத் திருத்தம் மிகப்பயனுள்ளது.

இணையவெளியின் மூலம் இந்தியாவில் நடந்த சில முக்கியமான குற்றங்கள் மற்றும் தண்டனைகள் குறித்து விளக்கியிருக்கிறார். யாகூ தளத்தின் வழக்குகள், பாடகி சின்மயி தொடர்பான வழக்கு என பல்வேறு முக்கியமான வழக்குகளையும் சுட்டியிருக்கிறார்.

பாதுகாப்பான இணையவெளிக்கான முன்னேற்பாடுகள் குறித்த விளக்கங்கள் மிகவும் பயனுள்ளவை.

விக்கிப்பீடியா, டைம்ஸ் ஆஃப் இந்தியா, டெய்லி டெலிகிராப் போன்ற, வன்முறை தொடர்பாக தடை செய்யப்பட்ட பதிப்புகள், பல பிரபலமான இணைய தளங்களின் குற்றப் பின்னணிகள், தமிழகத்தின் அண்மைய குண்டர் தடுப்புச் சட்டப்பிரிவு சார்ந்தவைகள், தமிழகக் காவல்துறையின் இணையக் குற்றப்பிரிவு ஏற்றுக்கொள்ளும் புகார்கள், அனைத்திற்கும் மேலாக முத்தாய்ப்பாக, ‘கவனிக்க வேண்டிய முன்னேற்பாடுகள்’ என்ற தலைப்பில் தீயின் இணையான இணையத்தை எந்த அளவிற்கு எச்சரிக்கையாக அணுக வேண்டும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், முக்கியமான குற்றங்களுக்குரிய தண்டனைப் பட்டியல், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தேசியக் கொள்கைகள் போன்றவைகள் கையேடாக பயன்படுத்தக் கூடிய அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகள்.

குழந்தைகள் தனி அறையில் இணையத்தில் உலவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் பயன்படுத்தும் கணினிகளை பொதுவான இடத்தில் வைக்கவும். இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும் என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களைக் கண்காணியுங்கள். நீங்கள் செல்லும்போது குழந்தைகள் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்கவும்” என்பது போன்ற பயனுள்ள அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.

கேரளா-சூரியநெல்லி பெண் பாலியல் பலாத்கார வழக்கில் பி.ஜெ.குரியனுக்கு ஆதரவாக இருக்கும் மகளிர் காங்கிரசு தலைவி பிந்து கிருஷ்ணாவை விமர்சித்து முக நூலில் கருத்து எழுதிய, தைப் பகிர்ந்து கொண்ட 140 பேர் மீது கேரளக் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. சமூக இணையதளத்தில் சொன்ன கருத்துக்காக இத்தனை அதிகம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை என்ற தகவல் ஆச்சரியத்தோடு முகநூல் போன்ற தளங்களை எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய விழிப்புணர்வையும் அளிக்கிறது.

புகார் அளிக்க அலுவலக முகவரியுடன், முனைவர் என். செண்பகராமன் ஐ.பி.எஸ், (ன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ், ய்வு) அவர்களின், வழக்கறிஞர் அல்லாத சாதாரண மக்களும் அறியும் வகையில் இணைய சட்டங்கள் குறித்து தமிழில் வந்துள்ள முதல் நூல் இது என்ற கருத்து கவனம் கொள்ளத்தக்கவை.

திரு. ஆர்.நடராஜ், இ.கா.ப., (காவல் துறை தலைமை இயக்குனர், ய்வு) அவர்கள் தமது அணிந்துரையில், நல்ல பயிர்களை அழிக்கும் பயிர்க் கொல்லிகள் போ, சமுதாயத்தைப் பாதிக்கும் வகையில் குற்றங்களும் குற்றவாளிகளும் முளைத்துள்ளனர் எனபதையும் மறுக்க முடியாது என்ற கருத்தும் ஏற்புடையது. இந்தப் புத்தகத்தில் ஆசிரியரின் உலகளாவிய அறிவு புலப்படுவதோடு கடினமான இணை  தளக் குற்றங்கள் அடங்கிய பொருண்மைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் இந்த அரிய நூலுக்கு ஆதாரங்களாகின்றன.

இந்த நூலின் விலை – உரூ 225

Giri Law House

Law books publishers & sellers

Salem

Ph; 94432 24162

இந்த நூல் கட்டாயம் அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து இன்னும் பல நல்ல நூல்களை அறிமுகப்படுத்துவோம். இணைந்திருங்கள் நண்பர்களே. நன்றி. வணக்கம்.

 

 

 

புகார் கொடுக்க அலுவலக முகவரி:

Cyber Crime Cell First floor, Block-3 Electronic Complex,  SIDCO Industrial Estate, Guindy, Chennai-32.

மினனஞ்சல் முகவரி: spcybercbcid.tnpol(at)nic.in

 

Assistant Commissioner of Police Cyber Crime Cell Commissioner office Campus Egmore, Chennai- 600008

Contact Details: +91-40-5549 8211

E-mail id: s.balu@nic.in

For Rest of Tamil Nadu, Address: Cyber Crime Cell, CB, CID, Chennai

E-mail id: cbcyber@tn.nic.in

( ன்றி: தமிழகக் காவல் துறை)

 

இணையக் குற்றங்களும் இணையவெளிச் சட்டங்களும்

முனைவர். சந்திரிகா சுப்ரமண்யன் MA MPHIL PHD LLB LLM Dips in Training and Business MCSD MAICD வழக்குரைஞர் - பாரிஸ்டர் - உயர் நீதிமன்றம் மற்றும் ஆசுத்திரேலிய உச்ச நீதி மன்றம் - சிட்னி,

விலை – உரூ 225

Giri Law House

Law books publishers & sellers

Salem

Ph; 94432 24162

E mail – girilawhouse@gmail.com

 

 


EVENTS


இல்லறமும் நல்லறமும் 14