Tuesday, September 24, 2013

வல்லமையில் புத்தக மதிப்புரை போட்டி!


பவள சங்கரி
வாசிப்பினை நேசிப்போம்! 
வாசிப்பினை சுவாசிப்போம்!
நல்ல புத்தகம், நல்ல நண்பனைப் போன்றது . நேரம் பொன்னானது. அப்படிப்பட்ட நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யும் முக்கியமான விசயங்களில் நூல் வாசிப்பிற்கே முதல் இடம் என்றால் அது மிகையாகாது! நம் பொழுதை வெட்டியாகக் கழிக்காமல் வெல்லக்கட்டியாகச் சுவைக்கச் செய்யும் வல்லமை வாசிப்பிற்கு மட்டுமே உண்டு. வாழ்வில் எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கும் தேவையான சக்தியை நமக்குக் கொடுப்பதில் நல்ல புத்தக வாசிப்பிற்கு பெரும்பங்கு உண்டு. ஒரு இசைக்கருவியை மீட்டுவது மட்டுமே கலை அல்ல. நல்ல வாசிப்பும் ஒரு அற்புதமான கலைதான்! வாசிப்பு நம் வாழ்க்கைத் தரத்தையே உயர்த்த வல்லது. பதவியும் பட்டமும் பெறுவதற்காக மட்டுமல்லாமல் ஒன்றை ஏற்கவோ அன்றி ஒதுக்கவோ, மறுக்கவோ அன்றி விவாதிக்கவோ தேவையான ஆற்றலை நமக்கு நல்ல வாசிப்பு மட்டுமே வழங்க முடியும். தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய கடைசி நிமிடங்களில் கூட புத்தகம் வாசிப்பதை நிறுத்தவில்லை பகத்சிங்! ஆம், தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய சில நிமிடங்களுக்கு முன்னால், லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’என்ற நூலை வாசித்த பிறகுதான் தூக்குக் கயிறை முத்தமிடப் போனான் பகத்சிங்.

Monday, September 23, 2013

குகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..


பவள சங்கரி
DSC09812-167x300

ஆண்டு, அனுபவித்து ஓய்ந்து போனவர்கள் சந்நியாசம் வாங்கிக்கொண்டு அமைதியாக ஹரே, ராமா, சிவ… சிவா.. என்று உட்கார்ந்தால் நிம்மதி தேடி ஆண்டவனின் பாதத்தில் சரணடைந்திருக்கிறார்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம்.  விவேகானந்தரின் குருவான, 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமகிருஷ்ணபரமஹம்சர்  சிறு வயதிலேயே ஆன்மீக விசயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தவர் மற்றும் பல அற்புத சக்திகளைக் கொண்டவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்ததோடு  அதனை  வலியுறுத்தியவர். குருவை மிஞ்சிய சீடனாக விவேகானந்தரும் இளமை முதலே காசியில் இருக்கும் கைலாயநாதரின் தவக்கோலத்தை சிலையுருவில் விரும்பி வழிபட்டதால் தானும் துறவியாக வேண்டும் என்பதில் நாட்டம் அதிகமானது. தியானத்தில் அதிக ஈடுபாடு கொண்டு தன் ஆன்ம சக்தியையும் பெருக்கிக் கொண்டிருக்கிறார். பாம்பு ஊர்வது கூட அறியாமல் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி முத்தெடுத்தவர். இந்த ஆத்ம ஞானம் பலருக்கும் வழிகாட்டியாக, ஆசைக் கடலில் அகப்பட்டு அல்லற்பட இருந்தோரை  மீட்டு இறைவழியில் செலுத்தி நித்திய இன்பம் காணச்செய்தது.

Sunday, September 22, 2013

நிசப்தம்!


பவள சங்கரி
சிப்பிக்குள் இருக்கும் துளிநீரும் முத்தாகிறது நிசப்தமாய்
ஆயிரம் தத்துவங்கள் சொல்லும் மலர்கள்கூட நிசப்தமாய்
மொட்டவிழும் இனிய தருணம்கூட நித்சலமாய், நிசப்தமாய்
சாரி சாரியாய் வரிசைகட்டி மாரிக்காக சேமிக்கும் நிசப்தமாய்
பாரி வள்ளலென வாரி வழங்கும் தேனமுதையும் நிசப்தமாய்
பரவசமாய் பகட்டாய் உடுத்தி மகிழ உயிர்விடும் நிசப்தமாய்ஊணொளி உருக்கி உள்ளொலி பெருக்கி உவப்பிலா ஆனந்தம் நிசப்தமாய்
உணர்ந்துணர்ந் துணர்விழந்து உள்ளொளிபெருக் கியூய்ந்து நிசப்தமாய்
தணிந்துதணிந்து தாழ்வதே தகுநெறியென்று ஒடுங்கி நிசப்தமாய்
பணிந்து பணிந்து நாளும் பரமனைப்போற்றிட நிசப்தமாய்
இன்னுயிரின் இருளகன்று மண்ணுயிரனைத்தும் வளம்பெற நிசப்தமாய்
இயற்கையாய், இறையாய், இமயமாய், தியானத்தில் நானும் நிசப்தமாய்! 


படத்திற்கு நன்றி:

http://silent-nona-light.deviantart.com/art/Nature-Smiles-139473848