Showing posts with label _மொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.. Show all posts
Showing posts with label _மொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.. Show all posts

Tuesday, March 10, 2020

கலீல் கிப்ரானின் வெருளி – சோளக்கொல்லை பொம்மை - The Scarecrow BY KAHLIL GIBRAN






கலீல் கிப்ரானின் வெருளி – சோளக்கொல்லை பொம்மை

ஒரு முறை நான் ஒரு சோளக்கொல்லை பொம்மையிடம், “தனிமையான இந்த வயல்வெளியில் நின்று களைத்துப்போயிருக்க வேண்டும் நீங்கள் ” என்றேன்.
அதற்கு அவர், “அச்சமூட்டுவது நீண்டு நிலைத்திருக்கும் அலாதியான ஆனந்தம் அல்லவா, ஆகவே ஒருபோதும் நான் சோர்வதில்லை. "

 ஒரு நிமிட சிந்தனைக்குப் பிறகு, “ உண்மைதான்; நானும் கூட
அறிந்திருக்கிறேன் அந்த மகிழ்ச்சியை" என்றேன் நான்.
 "வைக்கோலால் நிரப்பப்பட்டவர்களால் மட்டுமே அறிய முடியும் அதை", என்றார் அவர்.
அவர் என்னை பாராட்டினாரா அல்லது சிறுமைப்படுத்தினாரா என்று தெரியாமலே அவரை விட்டு வெளியேறினேன்.
வருடம் ஒன்று கடந்த அந்த நேரத்தில் தத்துவஞானியாக மாறியிருந்தார் அந்த வெருளி.
 மீண்டும் அவரைக் கடந்து சென்றபோது இரண்டு காகங்கள் அவருடைய தொப்பியின் கீழ் கூடு ஒன்று கட்டுவதைக் கண்டேன் நான்.

கலீல் கிப்ரான்
கலீல் கிப்ரான் ஒரு சோளக்கொல்லை பொம்மையிடம், “விலங்குகளையும், பறவைகளையும் விரட்டுவதற்காக உன்னை உருவாக்கியுள்ள  உழவரின் எண்ணத்தைப்  விளங்கிக்கொள்ள முடிகிறது என்னால். நீ ஒரு வெருளி என்ற போலி உருவம்தான் என்பதை அறிந்துகொள்ளும் அறிவற்ற பரிதாபமான விலங்குகள் அவை என்பதும் புரிகிறது எனக்கு. ஆனாலும் உன்னை மட்டும் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்னால். மழையிலும், கொளுத்தும் கோடையிலும், உறைபனியிலும் கூட தொடர்ந்து இங்கேயே நின்று கொண்டிருக்கிறாயே .... எதற்காக?”
அதற்கு அந்த வெருளி, அந்த விலங்குகளையும், பறவைகளையும் அச்சமூட்டும் ஆனந்தத்திற்காக கொட்டும் மழை, கொளுத்தும் வெய்யில், உறையச் செய்யும் பனி என எதையும் தாங்கலாம். நான் உண்மையல்ல என்பதும், என்னில் ஒன்றுமில்லை என்பதையும் அறிவேன் நான். இருந்தாலும் அதைப்பற்றிய கவலையில்லை எனக்கு. என்னுடைய மகிழ்ச்சியெல்லாம் அடுத்தவரை அச்சமூட்டுவதுதான் .....!”
என்னதான் சொல்ல வருகிறார் கிப்ரான் என்று தெரிகிறதா?
(1)  ஊரில் இது போன்று போலிப்பெருமையுடன் இருக்கும் சோளக்கொல்லை பொம்மைகளை புறந்தள்ளிவிட்டு முன்னேறிச் செல்லவேண்டியதுதான் .......
(2)  சுதந்திரம், பேரானந்தம், சத்தியம் போன்றவற்றிற்கான நம் போராட்டம் வெளி உலகத்துடன் இல்லை, ஆனால் அந்தப் போராட்டம் அனைத்தும் சோளக்கொல்லை பொம்மையான நம் போலியான மனதுடன்தான்!

The Scarecrow

Once I said to a scarecrow, “You must be tired of standing in this
lonely field.”

And he said, “The joy of scaring is a deep and lasting one, and I
never tire of it.”

Said I, after a minute of thought, “It is true; for I too have
known that joy.”

Said he, “Only those who are stuffed with straw can know it.”

Then I left him, not knowing whether he had complimented or belittled
me.

A year passed, during which the scarecrow turned philosopher.

And when I passed by him again I saw two crows building a nest
under his hat.





Monday, October 26, 2015

ஆப்பிளும் கலீல் கிப்ரானும்!



ஆப்பிள் ஒன்றை  அசைபோடும் உமது பற்கள்  உம்மிதயத்தில்  இதையும் சேர்த்தே அசை போடட்டுமே:

உமது விதைகள் எமது உடற்கூட்டில் உறையட்டுமே,
உமது நாளைய மொட்டுக்கள் எமது இதயக்கூட்டில்  மலரட்டுமே,
ஓ, உமது மணமே எமது சுவாசமாகட்டுமே,
ஆம், நாமிருவரும் ஈருடல் ஓருயிராகக் கொண்டாடி மகிழ்வோமே காலந்தோறும்!

கலீல் கிப்ரான்


“And when you crush an apple with your teeth, say to it in your heart:
Your seeds shall live in my body,
And the buds of your tomorrow shall blossom in my heart,
And your fragrance shall be my breath,
And together we shall rejoice through all the seasons.” 
― Kahlil Gibran

Monday, February 18, 2013

வாலிகையும் நுரையும் - கலீல் ஜிப்ரான் (12)



 

பவள சங்கரி


இப்புவியின் சுகங்களனைத்தையும் முழுமையாகத் தங்கு தடையின்றி அனுபவிக்கும் வகையில் துண்டாடிய புவனமதைத்   துறந்தவர் எவரோ அவரே துறவி.

சான்றோருக்கும், கவிவாணருக்கும் இடையே அங்கோர் பச்சைப்பசும்புல்வெளி இருக்கிறது; அந்தச் சான்றோரதைக் கடக்க நேர்ந்தால் விவேகியாகிறாரவர்; கவிவாணரதைக் கடக்க நேர்ந்தாலோ தீர்க்கதரிசியாகிவிடுகிறார்.

இருப்பினும் சந்தையில் தங்கள் தலைகளைக் கூடையில் சுமந்து கொண்டு, ”ஞானம்! விற்பனைக்கு ஞானம்!” எனக்கூவித் திரியுமந்த தத்துவ ஞானிகளைக் கண்டேன் யான்.
பாவமந்த தத்துவ ஞானிகள்’. தம் இதயத்திற்கு உணவளிக்கும் பொருட்டு தம் சிரசையே விற்க வேண்டியதாகிறது.

Monday, February 11, 2013

வாலிகையும் நுரையும் (11) - கலீல் ஜிப்ரான்



பவள சங்கரி


இரமியத்திற்கப்பால் எந்த மெய்ஞானமோ அன்றி  விஞ்ஞானமோ  இல்லை.
யானறிந்த ஒவ்வொரு உயர்ந்த மனிதனும் ஏதோ சிறிய அளவிலேனும் ஒப்பனை செய்திருந்தனர்; மேலும் அந்தச் சொற்பமே  அவனை மந்தமாக இருப்பதிலிருந்தோ அல்லது பித்துக்குளித்தனத்திலிருந்தோ அன்றி தற்கொலையிலிருந்தோ காக்கிறது.
 எவரையும் அதிகாரம் செலுத்தாமலும், எவரிடமும் அடிபணியாமலும் இருப்பவர் எவரோ அவரே உண்மையில் பெரிய மனிதர்.

அவன் குற்றவாளிகளையும் தீர்க்கதரிசிகளையும் அழிப்பதாலேயே அவனையோர் சராசரியானவன் என்று எளிதாக நம்பிவிடமாட்டேன்.

இறுமாப்பெனும் பிணியுடனான காதற்பிணியே பொறுமையென்பது.

புழுக்கள் திரும்பலாம்; ஆனால் இரசிகங்களும் (யானைகள்) கூட விட்டுக்கொடுக்குமென்பது விநோதம் இல்லையா?

Monday, February 4, 2013

மணலும் (வாலிகையும்) நுரையும் (10)


Sand And Foam - Khalil Gibran (10)

பவள சங்கரி


அவனுடைய சதைப்பிண்டத்திற்கு ஏறுதல் கடினமாவதுடன் அச்சுமை அவனுடைய பாதையையும் நீண்டதாக்கும்.
மேலும் உம்முடைய உணங்குதலில், அவனுடைய பிண்டம் மேல்நோக்கி புடைத்துக் கொண்டிருப்பதைக் கண்டால், அவனுக்கோர் அடி எடுக்க உதவும்; அது உம்மை மேலும் துரிதமாக்கும்.

ஒருவரைப் பற்றிய உம்முடைய அறிதலுக்கப்பால் எவரைப் பற்றியும் உம்மால் எடைபோட இயலாது, மேலும் உம்முடைய ஞானம் எத்துனை சிறிதன்றோ.

யான் அடக்குமுறைக்குப் போதிக்குமோர் வெற்றிவீரனுக்குச் செவி கொள்வதில்லை.

பிணைக்கப்பட்ட செடகச் சுமையை பொறுமையாகத் தாங்குபவன் எவனோ அவனே உண்மையான சுதந்திர மனிதன்

Tuesday, January 29, 2013

மணலும் (வாலிகையும்) நுரையும் - (9)


sand and foam - 9 - Khalil Gibran

பவள சங்கரி


வாழ்க்கை ஓர் ஊர்க்கோலம்.
பாதத்தின் அந்த மெத்தனம் அதை வெகு துரிதமாகக் கண்டுணர்ந்ததால் அவன் வெளியேறுகிறான்.
மேலும் பாதத்தின் அந்த துரிதம் அதை மிகத் தாமதமாகக் கண்டுணர்ந்ததால் அவனும்கூட வெளியேறுகிறான்.

பாபகம் என்ற அந்த ஒன்று உள்ளதெனில் நம்மில் சிலர்  நம் முன்னோர்களின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி அதைச் செய்கிறோம்;
மேலும் நம்மில் சிலர் நம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக, ஆளுமையுடன்  அதைச் செய்கிறோம்.

உண்மையில் நல்லவன் என்பவன் தீயவர்களாகக் கருதப்படும் அனைவருடனும் இருக்கும் அந்த ஒருவனே.

Monday, January 21, 2013

மணலும் (வாலிகையும்) நுரையும் - கலீல் ஜிப்ரான் - 8




பவள சங்கரி

 சுய - நுகர்வின்  விசித்திரமானதோர் வடிவம்! யான் தவறிழைத்திருக்கக்கூடிய மற்றும்  ஏமாற்றப்பட்ட காலமும் இருப்பினும் ,  யான் தவறிழைத்தும், வஞ்சிக்கப்பட்டும் இருக்கிறேன் என்பதை உணராமலே உள்ளேன் என்ற வீணான எண்ணம் கொண்டோரைக் கண்டு எள்ளி நகையாடலாம் யான்.

பின்பற்றுதலை விளையாட்டாகக் கொண்டு  பின்தொடருவோரைப் பற்றி யான் என்ன கூற இயலும்?

உம் ஆடைகளில் தம் அழுக்கடைந்த கரங்களைத் துடைப்பவரே உம்முடைய அந்த ஆடையை எடுத்துக் கொள்ளட்டும். அவ்ருக்கு அது மீண்டும் தேவையாக இருக்கலாம்; கட்டாயமாக உமக்கு அதன் தேவையிருக்காது.

பணப் பறிமாறறம் செய்வோர் நற்காப்போனாக இருக்க இயலாது என்பது துயரம்.

Tuesday, January 8, 2013

மணலும், (வாலிகையும்) நுரையும்! (6)


Sand And Foam - Khalil Gibran

பவள சங்கரி

 

 மேதையென்பவன், ராபினின் மிதமானதொரு வசந்தகால துவக்கத்தின் கீதமானவன்.

மோசமான இறகு படைத்ததோர் ஆன்மாவாயினும், அதுவும்கூட உடற்தேவையினின்று தப்பிக்க இயலாது.

பித்தன் என்பதாலேயே அவன் உம்மையும், எம்மையும் விடக் குறைந்த தகுதியுடனான இசைக்கலைஞன் அல்லன்; ஒருகால் அவன் வாசிக்கிற அந்த இசைக்கருவி மட்டும் சிறிது ராகம் தப்பியதாக இருக்கலாம்.

  இருதயத்தின் அமைதியினூடே உறைந்திருக்கும், தம் குழவியின் இதழ்களின்மீது இசைக்கும், ஒரு தாயின் பாடல் அது.
நிறைவேறாத ஆசைகளென்பதே இல்லை.

Tuesday, November 27, 2012

Sand and Foam - Khalil Gibran (5)



 (வாலிகையும்) மணலும் , நுரையும்! (5)

பவள சங்கரி

புனையிழையவள் தம் முகத்தை புன்னகையால் முகத்திரையிடலாம்.

சோகத்தில் சோர்ந்த இதயமது, இன்பமான இதயத்துடன், இன்னிசை கீதமதை இதமாக இசைக்கும் அவரின் என்னே உயர் பண்பு.

எவனொருவன் மாதொருத்தியை புரிந்து கொள்கிறானோ, அல்லது மேதைகளை, சோதனைகளுக்குள்ளாக்குகிறானோ, அல்லது மௌனத்தின் மர்மமதை விடுவிக்கிறானோ, அவனொருவன் மட்டுமே சௌந்தர்யமான சொப்பனத்திலிருந்து, எழுப்பி, காலை உணவு மேசையின் மீது அமரச் செய்யக் கூடியவன்.

Wednesday, November 14, 2012

sand and foam (3) - Khalil Gibran மணலும் நுரையும்! (3)




sand and foam (3) - Khalil Gibran

மணலும் நுரையும்! (3)

ஏழு முறைகள் எம் ஞாதிருவை வெறுத்திருக்கிறோம் யாம்,
முதல் முறையாக அவளை, சாதுவான மங்கையாகக் கண்டாலும்   அவள உச்சத்தை எட்டக்கூடும்
இரண்டாம் முறை அந்த முடமாகிப் போனவனுக்கு முன்னால் துள்ளிக் கொண்டிருக்குமவளைக் கண்டேன்.
மூன்றாம் முறையாக கடினமானது மற்றும் எளிதானதிற்கும் இடையிலான தேர்ந்தெடுத்தலில் அவள் அந்த எளிதானதையேத் தேர்ந்தெடுக்கக் கண்டேன்.

Wednesday, November 7, 2012

Sand and foam - Khalil Gibran மணலும், நுரையும் (2)



பவள சங்கரி


                                                   Sand and foam - Khalil Gibran (2)

மணலும், நுரையும் (2)

வெகு நேரம், அந்த, பருவ மாற்றங்களும்  அறியாமல், அமைதியாக, எகிப்தின் தூசிப்படலத்தினுள் கிடந்தேன் யான்.
பின்னர் அந்த நிசாந்தகன் எம்மை உயிர்த்தெழச் செய்ததால், யான் எழுந்து அந்த நைல் நதிக்கரையோரம் பகலோடு பாடிக்கொண்டும், நிசியோடு சுவனம் கொண்டும் நடந்தேன்.
மேலும் தற்போது அந்த பகலவனோ, தம் ஓராயிரம் பாதக்கிரணங்கள் கொண்டு எம்மை ஏறி மிதித்துச் சென்றதனால் யான் மீண்டும் அதே எகிப்தியப் புழுதியில் கிடக்க நேரலாம்.

Monday, October 22, 2012

நித்திலம் - கலீல் ஜிப்ரான்

நித்திலம்



சிப்பியொன்று  தமதருகில் இருந்த மற்றுமொரு சிப்பியிடம், “ யான் பெரும் வலியைச் சுமந்து கொண்டிருக்கிறேன், கனரகமாகவும், உருண்டையானதுமான அது  எமைத் துன்பமுறச் செய்கிறதே,” என்றது..

மேலுமந்த மற்றொரு சிப்பியோ, “வாழ்க வாழ்க, அந்த விண்ணும், சாகரமும்!  எம்முள்  ஏதும் இருந்தும்,  இன்மையாலும், கூட யான்  எந்த வேதனையும் இன்றி சுகமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன்“ என்றதாம் மன நிறைவுடன்.

அத்தருணமதில் அவ்விடத்தைக் கடந்து செனற,, இவ்விரண்டு சிப்பிகளின் உரையாடலையும் செவிசாய்த்த, நண்டு ஒன்று தம்முள் ஏதுமிருந்தும் இல்லாததனால் சுகமாகவும், நிம்மதியாகவும் இருப்பதாகக் கூறிய அச்சிப்பியை நோக்கி, “ ஆம், நீவிர் சுகமாகவும், நிறைவாகவும் இருப்பினும் உம் அண்மையிலிருப்பவர் சுமப்பதோ சுகமான சுமையானதொரு பேரழகான நித்திலமன்றோ  “ என்றது.

ஆம், வலியையும் வேதனையையும் சுமந்தாலும், சுமப்பது முத்தல்லவோ ?


2 காதல் கீதம் .

ஒரு முறை கவிஞனொருவன் காதல் கவியொன்று புனைந்து வைத்தான். அதிரம்மியமாக அமைந்துவிட்ட, கீதமதனைப் பிரதிகள் பலவாக உருவாக்கியவன்,  ஆடவர், மகளிர் என இரு பாலரான நண்பர்கள் மற்றும்  அறிந்தவர்களென அனைவருக்கும் அனுப்பி வைத்தான். மலைகளுக்கப்பால் வசித்துக் கொண்டிருக்கும், ஒரு முறை மட்டுமே சந்தித்திருந்த இளம் மங்கையொருத்திக்கும் போய்ச் சேர்ந்ததந்தக் காதல் கவிமலரின் பிரதியொன்று.

இரண்டொரு நாளில் அந்த இளம் மங்கையவளிடமிருந்து தூதுவன் ஒருவன் வந்தானொரு மடலையும் சுமந்து கொண்டு.. அம்மடலில் அவள், “ நீவிர், எமக்கெழுதிய அக்காதல் கவிமலர் எம் உள்ளத்தையேக் கொள்ளை கொண்டுவிட்டது. நீவிர் இக்கணமே வந்து எம் தாய் தந்தையரைச் சந்தித்துப் பேசினால் நம் திருமண, நிச்சயதார்த்ததிற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம் “ என்று எழுதியிருந்தாள்.

அக்கவிஞனோ அந்த லிகிதமதற்குப் பதிலாக, அவளுக்கு, “எம்  சிநேகிதியே, இஃது ஒரு பாவலனின் இதயத்திலிருந்து பீறிட்டுக் கிளம்பும்  இனிய காதல் கானம். ஏதோவொரு ஆடவனால்  ஏதோவொரு மங்கைக்காக இசைக்கப்படும் இனிய கீதம்தான் இது,” என்றான்.

அதற்குப் பதிலாக அவள்,” ஒரு கபட வேடதாரியின் பொய்யுரைகள்! இன்றிலிருந்து எம் இறுதிக் காலம் வரை உம்மால் இவ்வுலகின் அனைத்துப் புரவலர்களையும் ஒட்டு மொத்தமாக வெறுக்கிறேன்” என்றாள்.

கவிதை என்பதே, பொய்யுரை என்பதை அறிந்திருந்தும், ஒரு கவிஞன் அந்த பொய்யுரை மீது காதல் கொள்வதே இயல்பு.



The Pearl

Said one oyster to a neighboring oyster, “I have a very great pain within me. It is heavy and round and I am in distress.”

And the other oyster replied with haughty complacence, “Praise be to the heavens and to the sea, I have no pain within me. I am well and whole both within and without.”

At that moment a crab was passing by and heard the two oysters, and he said to the one who was well and whole both within and without, “Yes, you are well and whole; but the pain that your neighbor bears is a pearl of exceeding beauty.”
                                        - –oOo– -


The Love Song

A poet once wrote a love song and it was beautiful. And he made many copies of it, and sent them to his friends and his acquaintances, both men and women, and even to a young woman whom he had met but once, who lived beyond the mountains.

And in a day or two a messenger came from the young woman bringing a letter. And in the letter she said, “Let me assure you, I am deeply touched by the love song that you have written to me. Come now, and see my father and my mother, and we shall make arrangements for the betrothal.”

And the poet answered the letter, and he said to her, “My friend, it was but a song of love out of a poet’s heart, sung by every man to every woman.”

And she wrote again to him saying, “Hypocrite and liar in words! From this day unto my coffin-day I shall hate all poets for your sake.”
              - –oOo– -

நன்றி : திண்ணை

Friday, October 19, 2012

சோகத்தின் சுகம் !


பவள சங்கரி

The Madman - when my sorrow was born - Khalil gibran

எம் துக்கம் செனித்தபோது

(சோகத்தின் சுகம்)

  எம் துக்கம் செனித்தபோது யான் அதைக் கவனமாக, பேணிப் பாதுகாத்தேன். மேலும்  பாசத்தோடு பராமரித்தேனதை.
 
  மேலும் எம் துக்கம் மற்ற உயிரினங்களைப் போன்றே, செம்மலும், சோபிதமும், மற்றும் வியத்தகு பூரிப்புடனுமே வளர்ந்தது

  நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தோம். யானும் எம் துக்கமும், எங்களுக்கான ஞாலத்தையும் நேசித்தோம். இந்தத் துக்கமும் மெல்லிதயம் கொண்டிருந்தாலும், எம்முடையதும் துக்கத்தின்மீது கருணையுடனே இருந்தது.

   எம் துக்கமும், யானும் , அளவளாவிக் கொண்டிருந்தபோது, இந்தத் துக்கம் சொற்திறம் கொண்ட இனிய நாவைக் கொண்டிருந்ததாலும், , எம்முடையதும் துக்கத்துடன் அதே சொல்லாற்றலை வெளிப்படுத்தி இருந்ததாலும், எமதருமை ஞான்றுக்கும் சிறகு முளைத்திருந்தது, மற்றும் எங்கள் சுரசனிகளும் சுவனங்களால் கட்டுண்டுக் கிடந்தது.

 எம் துக்கமும் யானுமென நாங்களிருவரும் இணைந்து இசை  பாடிக்கொண்டிருந்தபோது, எங்களின் அண்டை அயலார் தத்தம் சாளரங்களின் அருகமர்ந்து, அம்பரத்தினும் ஆழமானதும் மற்றும் விசித்திரமானதுமான நினைவலைகளைச் சுமந்த அந்த மெல்லிசைகளைச் சுவைத்துக் கொண்டிருந்தனர்.

   யானும், எம் துக்கமும் ஒன்றாக நடை பயின்றபோது , தத்தம் மென்பார்வையுடன்  எங்களைப் பரிவோடுப் பார்த்தவர்கள் தங்களின் அபரிமிதமான இன்சொற்களுடன் கிசுகிசுக்கவும் செய்தனர். மேலும் அதிஅற்புதமான அத்துக்கத்துடன் இருப்பதில் யான் கொள்ளும் தற்பு காரணமாக  எங்கள் மீது கூழைப் பார்வைகளை வீசியவர்களும் உண்டு.

ஆயினும் மற்ற உயிரினங்களைப் போன்றே எம் துக்கமும் மரித்துப்போனது; யான் ஆவேசமும், ஆழ்ந்த சிந்தையும் மட்டுமே துணையாகக் கொண்டு  தனிமையில் வாடுகிறேன்.

   தற்போது யான் செப்பும் மொழிகளனைத்தும் எம் செவிப் பறைகளையே பலமாகப் பதம் பார்க்கின்றன..

   யாம் இசைக்கும் எம் மெல்லிசைகளைச் செவிமடுக்க எந்த அண்டை அயலாரும் வருகிலர்.

   யான் தெருவில் செல்லும் தருணமதிலும் எம்மைக் கண்டுகொள்வோரும் இலர்.

எம்முடைய நித்திரையில், “பாவம்,  தம் துக்கம் மரித்துப்போனதால் பரிதவித்துக் கிடக்கிறான் பார், ஆங்கொரு மனிதன் ” என்ற பரிதாபமான குரல் மட்டுமே ஒலிக்கிறது.


AND WHEN MY JOY WAS BORN

மேலும் எம் சுகம் செனித்த தருணமதில்.....

  மேலும் எம் சுகம் செனித்தபோது, ஆர்வமாக அதை எம் கரங்களில்  ஏந்திக் கொண்டு, “வாருங்கள், எம் அணடை அயலோரே, வந்து பாருங்கள், எமக்கு இன்று சுகம்  செனனமாகியிருக்கிறது, கதிரொளியில் கலகலவென நகைக்கும் அதனுடன் கைகோர்த்துக் கொண்டாடலாம் வாருங்கள்”, என எம் இல்லத்தின் கூரைமீது நின்று கூவியழைத்தேன்.

  ஆயினும் எம் அதிஅற்புதமான அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அண்டை அயலோர் எவரும் வருகிலர்.

   ஏழு அம்புலியிலும் யான் எம் இல்லத்தின் மேற்கூரையின் மீதிருந்து நிதமும் கூவிக்கூவி அழைத்தபோதினும் எம்மைக் கண்டுகொள்வோர் எவருமிலர். மேலும் யானும் எம் சுகமும், சட்டை செய்வோரும், வருகைபுரிவோரும் எவருமின்றி தனிமையில் ஏங்கிக் கிடந்தோம்.

  பிறகு, எம்மைத்தவிர மற்றெந்த நல்லிதயமும் அதனை ஆரத்தழுவவுமின்றி, தம் மெல்லிதழ்களால் சும்பனமுமிடாதலாலும் எம் சுவர்கமது சோகத்தில் வெளுத்தேப்போய் விட்டது.

  பிறகு எம் மகிழ்ச்சி தனிமைப்படுத்தலால் செக்கமானது. மேலும் தற்போது யான் அவிதலான எம் துக்கமதின் இனிய நினைவுகளுடன், மரித்த எம் மகிழ்ச்சியையும் நினைவு கூர்கிறேன். ஆனால் நினைவுகள் என்பது சில கணமே காற்றில் சலசலத்துப் பின் மௌனமாகிப்போகும் கூதாளிக் காலத்து இலைதானே.


When My Sorrow Was Born

When my sorrow was born I nursed it with care, and watched over it with loving tenderness.

And my Sorrow grew like all living things, strong and beautiful and full of wondrous delights.

And we loved one another, my Sorrow and I, and we loved the world about us; for Sorrow had a kindly heart and mine was kindly with Sorrow.

And when we conversed, my Sorrow and I, our days were winged and our nights were girdled with dreams; for Sorrow had an eloquent tongue, and mine was eloquent with Sorrow.

And when we sang together, my Sorrow and I, our neighbors sat at their windows and listenend; for our songs were deep as the sea and our melodies were full of strange memories.

And when we walked together, my Sorrow and I, people gazed at us with gentle eyes and whispered in words of exceeding sweetness. And there were those who looked with envy upon us, for Sorrow was a noble thing and I was proud with Sorrow.

But my Sorrow died, like all living things, and alone I am left to muse and ponder.

And now when I speak my words fall heavily upon my ears.

And when I sing my songs my neighbours come not to listen.

And when I walk the streets no one looks at me.

Only in my sleep I hear voices saying in pity, "See, there lies the man whose Sorrow is dead."


And When My Joy Was Born

And when my joy was born I held it in my arms and stood on the house-top shouting, "Come ye, my neighbours, come and see, for Joy this day is born unto me. Come and behold this gladsome thing that laugheth in the sun."

But none of my neighbours came to look upon my Joy, and great was my astonishment.

And every day for seven moons I proclaimed my Joy from the house-top -- and yet no one heeded me. And my Joy and I were alone, unsought and unvisited.

Then my Joy grew pale and weary because no other heart but mine held its loveliness and no other lips kissed its lips.

Then my Joy died of isolation.

And now I only remember my dead Joy in remembering my dead Sorrow. But memory is an autumn leaf that murmurs in the wind and then is heard no more.


நன்றி : திண்ணை வெளியீடு

Sunday, October 7, 2012

கலீல் ஜிப்ரானின் காதல்



The forerunner - Love - Khalil Gibran

கலீல் ஜிப்ரானின் காதல்

சிம்மம் நீரருந்த வருகிற அதே ஓடையிலிருந்தே
அந்தக் குள்ளநரியும் மூஞ்சூறும் நீரருந்துகிறது 
என்கிறார்கள் அவர்கள்.

இறந்து கிடக்குமோர் உடலினுள்ளே 
கழுகும், ராஜாளியும் தத்தம் அலகினால் தோண்டும்போது,  
அச்சவத்தின் முன்னிலையில்
இரண்டும் ஒன்றுக்கொன்று சமாதானமாகவே
உள்ளதென்கிறார்கள் அவர்கள்.

Sunday, September 30, 2012

சிங்கமடங்கல் - கலீல் ஜிப்ரான்






கதையே கவிதையாய்!

சிங்கமடங்கல் - கலீல் ஜிப்ரான்
 (சிங்கத்தின் மகள்)

   தம் சிம்மாசனத்தின் மீது துயில் கொண்டிருந்த ஒரு மூதாட்டி அரசிக்கு சாமரம் வீசிக்கொண்டு நின்றிருந்தனர், நான்கு அடிமைகள்.  குறட்டை விட்டுக்கொண்டிருந்த அந்த அரசியின் மடியில் பூனை ஒன்று மெலிதாக உறுமிக்கொண்டு, அந்த அடிமைகளை சோம்பலுடன் வெறித்துக் கொண்டிருந்தது. 

  முதல் அடிமை பேச ஆரம்பித்து, “இந்த மூதாட்டி தூங்கும் போது எவ்வளவு அவலடசணமாக இருக்கிறார் பாருங்கள். அவர் வாய் துருத்திக்கொண்டு, சாத்தான் தனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்துவது போல சுவாசித்துக் கொண்டிருக்கிறார்.“ என்றான்.

  பின்னர் அந்த பூனை உறுமிக்கொண்டே, “ அவருடைய உறக்க நிலையிலும், உங்களுடைய விழிப்பு நிலை, அடிமைத்தனத்தின் அவலட்சணத்தில் பாதிகூட இல்லை ” என்றது.

  மேலும் அந்த இரண்டாம் அடிமையோ, “உறக்கம் அவருடைய சுருக்கங்களை ஆழப்படுத்துவதைவிட, மென்மையாக்கக்கூடும் என்று நீவிர் எண்ணியிருக்கலாம். அவர் ஏதோ தீய கனவு கண்டுகொண்டிருக்கலாம்” என்றான்.

  அந்தப் பூனை மேலும் உறுமியவாறு, “நீயும்கூட உறங்கி, உம்முடைய சுதந்திரம் குறித்து கனவு காணலாமல்லவா” என்றது.

   மேலும் அந்த மூன்றாம் அடிமையோ, “ஒருவேளை அவர்தாம் கொன்றவர்களின்  ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாரோ என்னவோ” என்றான்.

  மேலும் அந்த பூனை உறுமிக்கொண்டு, “ ஆம், உம்முடைய முன்னோர்கள் மற்றும் உம்முடைய சந்ததியினரின் ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்றது.

  மேலும் அந்த நான்காம் அடிமையோ, “அவரைப்பற்றி பேசுவதற்கு மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நின்று கொண்டே விசிறிக்கொண்டிருப்பது எம்மை மிகவும் களைப்படையச் செய்கிறதே” என்றான். 

  அந்தப் பூனை மேலும் உறுமலுடன், “ முதலும், முடிவுமற்ற அனைத்திற்கும் நீவிர் விசிறிக் கொண்டிருக்கலாம்; காரணம், பூமியில் உள்ளது போன்றேதான் அது சுவர்கத்திலும் உள்ளது” என்றது.

  அந்த நேரத்தில் அந்த மூதாட்டி அரசி உறக்கத்திலேயே தலையசைத்தபோது அவளுடைய கிரீடம் தரையில் விழுந்தது.

  அதற்கு அதில் ஒரு அடிமை, “அது ஒரு கெட்ட சகுனம்” என்றான்.

  மேலும் அந்த பூனையோ உறுமலுடன், “ஒன்றிற்கு தீய சகுனமாக இருக்கக்கூடியது மற்றொன்றிற்கு நல்ல சகுனமாகிறது” என்றது.

  இரண்டாம் அடிமையோ, “அவர் விழித்தவுடன் தம்முடைய கிரீடம் கீழே வீழ்ந்து கிடப்பதைப் பார்த்து கட்டாயம் நம்மைக் கொல்லப்போகிறார்” என்றான்.

  அதற்கு மேலும் அந்த பூனையோ, “உங்கள் பிறப்பிலிருந்து அன்றாடம் அவர் உம்மை கொன்றுகொண்டுதான் இருக்கிறார் என்றாலும் நீவிர் அதை அறியவேயில்லை” என்றது.

  மேலும் அந்த மூன்றாம் அடிமையோ, “ஆமாம், அவர் நம்மைக் கொன்றுவிட்டு, அதை இறைவருக்கான அர்ப்பணிப்பு என்பார்”, என்றான்.

  மேலும் அந்த பூனையோ, “ பலமற்றவர்கள் மட்டுமே  கடவுளருக்கு அர்ப்பணிக்கப்படுகிறார்கள்” என்றது.

  மேலும் அந்த நான்காம் அடிமையோ, மற்றவர்களை அமைதியாக இருக்கச் செய்துவிட்டு, மெதுவாக அலுங்காமல் அவர் உறக்கத்தையும் கெடுக்காமல், அந்த மூதாட்டி அரசியின் தலையில் அந்தக் கிரீடத்தை எடுத்து திரும்ப வைத்தான்..

  மேலும் அந்த பூனையோ உறுமலுடன், “ஒரு அடிமை மட்டுமே வீழ்ந்த கிரீடத்தை ஒப்படைக்கிறான்” என்றது.

  சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த மூதாட்டி அரசி விழித்து, தம்மையே பார்த்துக்கொண்டு கொட்டாவி விட்டாள். பிறகு அவள், யான் கனவு கண்டேன். அதில் ஒரு பழமையான ஓக் மரத்தைச் சுற்றி, நான்கு கம்பளிப் பூச்சிகள் தேள் ஒன்றினால் விரட்டப்படுவதைக் கண்டேன். அந்த என் கனவு எனக்குப் பிடிக்கவில்லை” என்றாள்.

  தம் கண்களை மூடிக்கொண்டு உறங்கப்போனாள் அவள் மீண்டும். குறட்டை விட ஆரம்பித்தவளுக்கு நான்கு அடிமைகளும் விசிறினர்.

  மேலும் அந்த பூனை உறுமலுடன், “விசிறுங்கள், விசிறுங்கள், முட்டாள்களே. நீங்கள் விசிறுங்கள். நீங்கள் விசிறுகிறீர்கள். ஆனால் அந்த நெருப்பு உங்களை பயன்படுத்திக்கொள்கிறது” என்றது.


THE FORE RUNNER - THE LION'S DAUGHTER

      Four slaves stood fanning an old queen who was asleep upon her throne. And she was snoring. And upon the queen's lap a cat lay purring and gazing lazily at the slaves.
      The first slave spoke, and said, "How ugly this old woman is in her sleep. See her mouth droop; and she breathes as if the devil were choking her."
      Then the cat said, purring, "Not half so ugly in her sleep as you in your waking slavery."
      And the second slave said, "You would think sleep would smooth her wrinkles instead of deepening them. She must be dreaming of something evil."
      And the cat purred, "Would that you might sleep also and dream of your freedom."
      And the third slave said, "Perhaps she is seeing the procession of all those that she has slain."
      And the cat purred, "Aye, she sees the procession of your forefathers and your descendants."
      And the fourth slave said, "It is all very well to talk about her, but it does not make me less weary of standing and fanning."
      And the cat purred, "You shall be fanning to all eternity; for as it is on earth, so it is in heaven."
      At this moment the old queen nodded in her sleep, and her crown fell to the floor.
      And one of the slaves said, "That is a bad omen."
      And the cat purred, "The bad omen of one is the good omen of another."
      And the second slave said, "What if she should wake, and find her crown fallen! She would surely slay us."
      And the cat purred, "Daily from your birth she has slain you and you know it not."
      And the third slave said, "Yes, she would slay us and she would call it making a sacrifice to the gods."
      And the cat purred, "Only the weak are sacrificed to the gods."
      And the fourth slave silenced the others, and softly he picked up the crown and replaced it, without waking her, on the old queen's head.
      And the cat purred, "Only a slave restores a crown that has fallen."
      And after a while the old queen woke, and she looked about her and yawned. Then she said, "Methought I dreamed, and I saw four caterpillars chased by a scorpion around the trunk of an ancient oak tree. I like not my dream."
      Then she closed her eyes and went to sleep again. And she snored. And the four slaves went on fanning her.
      And the cat purred, "Fan on, fan on, stupids. You fan but the fire that consumes you."
    

 நன்றி : திண்ணை வெளியீடு

Saturday, September 22, 2012

பாவலர்கள் - கலீல் ஜிப்ரான்



பாவலர்கள்

நான்கு பாவாணர்கள் மேசையின் மீது இருந்த திராட்சைரச மதுக் கோப்பையைச் சுற்றி அமர்ந்திருந்தனர். முதல் கவிஞன், ”எம் மூன்றாம் கண் மூலமாக, ஒரு மாய வனத்தின் பறவைகள் மேகங்களாய் விண்வெளியில் நகருவது போல் இந்த மதுவின் சுகந்த மணத்தையும் காண்பதாக என்ணுகிறேன் யான்” என்றார்.
  இரண்டாம் பாவலரோ தம் சிரத்தை உயர்த்திக் கொண்டு, “எம்முடைய அகச்செவியின் மூலம் அந்த மூடுபனிப் புள்ளினங்கள் பாடுவதைக் கேட்கிறேன். மேலும் வெண்மையான ரோசா தன் மென்மையான இதழ்களுக்குள் தேனீயை சிறைப்பிடித்து வைத்திருப்பதைப் போன்று அந்த மெல்லிசை எம் இருதயத்தைக் கட்டி வைத்துள்ளது” என்றார்.

Thursday, September 6, 2012

கதையே கவிதையாய்! - வழி





 வழி - கலீல் ஜிப்ரான்

குன்றுகளின் மத்தியில், தம் தலைப்பிள்ளையான ஒரே மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள் ஓர் பாவை.
  மருத்துவர் ஆங்கே நின்று கொண்டிருக்கையிலேயே, அக்குழந்தை இறந்தது ஓர் காய்ச்சலினால்.
  அந்தத் தாயவள் வேதனையினாலே. மனம் குழம்பிப் போனாள்  அம்மருத்துவரிடம், “சொல்லுங்கள், சொல்லுங்கள் அவனது செயல்களை முடக்கிப்போட்டதோடு, அவனுடைய இனிய கானத்தையும்  அமைதியாக்கியது எது?” என்று பதறினாள்.
  அந்த மருத்துவரோ, ”அது அந்தக் காய்ச்சல்தான்” என்றார்.
  மேலும் அந்தத் தாய், “ஏன் அந்தக் காய்ச்சல்?” என்றாள்.

Monday, August 6, 2012

வேதனை – கலீல் கிப்ரான்

வேதனை’ பற்றி பகரும்படி வினவினாளே பேதையொருத்தி!

உம் புரிதல்கள் அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டுள்ள அந்த ஓட்டின் உடைவே உம் வேதனை.

அக்கனியின் கல்லும் உடையும் பொருட்டு, அதன் இருதயம், கனலோனின் கிரணமதைத் தாங்குதல்போலே, நீவிரும் உம் வேதனையை அறியத்தான் வேண்டும்.

உம் வாழ்க்கையதின் அன்றாட அற்புதக கணங்களினூடே, உம் இருதயமதை உம்மால் கிடத்த முடியுமானால், உம்முடைய மகிழ்ச்சியைக் காட்டிலும் உம்முடைய வேதனைகள் குறைந்த அதிசயோத்தியாகக் காட்சியளிக்காது;

உம்முடைய வயல்வெளிகளின்மீது கடந்து போகும் அந்தப் பருவக்காலங்களை ஒப்புக்கொள்ளுமாப்போலே, எஞ்ஞான்றும் உம் இருதயமதின் பருவ மாற்றங்களதையும் நீவிர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

குளிர்க்காலங்களினூடேயான உம்முடைய பருவரல்களை நீவிர், அமைதியாக கண்காணிப்பீராக.

பெரும்பான்மையான உம் வேதனைகள் நீவிரே தேர்ந்தெடுத்ததுதானே.

உம்முள் இருக்கும் அந்த மருத்துவன் உம் சுகவீனத்தைத் தாமே குணப்படுத்தும் கைப்பானதொரு நச்சுப்பானம் போன்றதுதானே அது.

அதனால், அம்மருத்துவன் மீது நம்பிக்கைக்கொண்டு, அவனுடைய பிணி அகற்றும் மருந்தை அமைதியுடனும், கலக்கமின்றியும் பருகிடுவீராக.

அவர்தம் கரங்கள் பாரமாகவும், வன்மையாகவும் இருப்பினும், புலப்படாத மென்கரத்தினால் வழிநடத்தப்படுவீர் நீவிர்.

அவர் கொண்டுவரும் அக்கோப்பை உம் இதழ்களதைச் சுட்டாலும் அவைகள் தம்முடைய புனிதமானக் கண்ணீரால் ஈரமாக்கி இளகச்செய்யப்பட்ட களிமண் கொண்டு அக்குயவனால் வடிவமைக்கப்பட்டதுதானே.

“On Pain”

“Your pain is the breaking of the shell that encloses
your understanding.

Even as the stone of the fruit must break, that its
heart may stand in the sun, so must you know pain.

And could you keep your heart in wonder at the
daily miracles of your life, your pain would not seem
less wondrous than your joy;

And you would accept the seasons of your heart,
even as you have always accepted the seasons that
pass over your fields.
And you would watch with serenity through the
winters of your grief.

Much of your pain is self-chosen.
It is the bitter potion by which the physician within
you heals your sick self.

Therefore trust the physician, and drink his remedy
in silence and tranquillity:

For his hand, though heavy and hard, is guided by
the tender hand of the Unseen,

And the cup he brings, though it burn your lips, has
been fashioned of the clay which the Potter has
moistened with His own sacred tears.”

- Kahlil Gibran,
“The Prophet- On Pain”

http://youtu.be/AVx6H68Siww

–

Sunday, September 11, 2011

எவ்வம் - கலீல் ஜிப்ரான்

நொந்த மனம் கொண்ட பேதையொருத்தி ’எவ்வம்’ பற்றி பகல்வீர் ஐயனே என  வேண்டினாள் !

பகன்றாரே பலவும் சிந்தையதுவும் விழித்தெழ:

உம் புரிதல்கள் அனைத்தும் உள்ளடக்கிய கூட்டை உடைத்தெறியும் உசாத்துணை உம் எவ்வமே அம்மணி!

கனிந்து நிற்கும் கனியாயினும் ஞாயிறொளியில் இதயத் தாமரை மலர ஓட்டை உடைத்தெறியும் எவ்வம் பொறுக்க வேண்டுமே!

 வாழ்வின் அன்றாட அற்புதங்களை வியப்புடனுறைந்து  உம் இதயக்கூட்டில் அணைக்குங்கால், உம் இன்பத்திற்கு இம்மியளவும் குறைவிலா அதிசயத்தையும் தோற்றுவிக்க வல்லதந்த எவ்வமன்றோ?

உம் வயல் வெளியில் கடந்து போகும் கால மாற்றங்களை ஏற்றுக் கொள்வது போன்றே உம் இதய வெளியின் மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ள இயலும் உம்மால்!

உம் துயரங்களின் நடுக்கங்களின் (குளிர்) ஊடே பொறுமையாக கவனம் கொண்டு நோக்கினால் உம்முடைய பெரும்பான்மையான துயரங்களுக்கான காரணமே உன் சுய - தேர்வு  மட்டுமேயன்றோ?

உம்முள் இருக்கும் வைத்தியன் அளிக்கும் மருந்து கசப்பானதாக இருப்பினும் அதுதானே உம் பிணியைப் போக்கும் உபாயம்?

ஆம், அந்த வைத்தியன் மீது நம்பிக்கை வை முழுமையாக! அத்தோடு அவனளிக்கும் கசப்பான தீர்வையும் சகித்துக் கொண்டு பொறுமையுடன் பருகி விடு!

அவன் கையில்  பலமும், உறுதியும் ஓங்கி இருப்பினும்,  மற்றொரு மாயக் கை ஒன்று மென்மையாக ஒரு மலர்பாதை விரிக்கும் உனக்கு!

அவன் அளித்த அக்கோப்பை உன் மென்மையான இதழைப் பதம் பார்த்தாலும்,

குயவனால் தம் புனிதமான கண்ணீரால் வார்க்கப்பட்டு அழகாக வடிவமைக்கப்பட்டதன்றோ அக்கோப்பை?


http://www.youtube.com/watch?v=AVx6H68Siww&feature=related



பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...