பவள சங்கரி
சந்தர்ப்பவாதி எலிகள்
ஹாய் குட்டீஸ் நலமா?

எலியைப் பார்த்திருக்கிறீர்களா? நீண்ட வால் கொண்ட ஒரு சிறிய உயிரினம் என்றாலும் அதன் வேலைகள் மிகப்பெரியது. சந்தர்ப்பவாதிகளான இந்த எலிகள் பெரும்பாலும் மனிதர்கள் வாழும் இடத்தில்தான் வாழ்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் இந்த எலிகளினால் உணவுப் பண்டங்களின் நாசம் அதிகம். எலிகள் பல பரிசோதனைச் சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. மனித இனத்திற்குப் பயன்படக்கூடிய முக்கியமான சோதனைகளான மரபுணுக்கள், வியாதிகள், மருந்துகளின் பின்விளைவுகள் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான பல்வேறு சோதனைகளுக்காக இந்த எலிகளே பயன்படுத்தப்படுகின்றன. வீட்டில் வளரும் எலிகளுக்கும், காட்டு எலிகளுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. வீட்டில் வளரும் எலிகள் அமைதியானதாகவும், மிகவும் அரிதாகவே கடிக்கும் வழக்கமும் கொண்டது. பெரும் கூட்டமாக வாழ்க்கூடிய இந்த எலிகள். மிக அதிகமாகக் குட்டி போடும் வழக்கமும் உடையது. பிரவுன் நிற எலிகளே அதிகமாக விஞ்ஞான பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதன் புத்தி கூர்மை, தீவிரம் மற்றும் ஒத்துப்போகும் தன்மை காரணமாக எலிகள் மிகப்பயனுள்ள ஒரு மரபணுக் கருவியாகப் பயன்படுகிறது. அதனுடைய உளவியல் பல வகையில் மனிதர்களைப் போலவே இருக்கிறது. பல நாடுகளில் இந்த எலிகள் உணவாக பயன்படுத்தப்படுகிறது. நம் இந்தியாவிலும் உணவுப் பஞ்சம் வந்த காலங்களில் விவசாயிகள் எலிகளை உணவாக உண்டு உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். பழமைவாதிகளான ஹாவாயி மற்றும் பாலினேசிய மக்களுக்கு இந்த எலிகள் அன்றாட உணவாக இருக்கிறது. இது போன்று இன்னும் பல்வேறு நாடுகள் எலியை உணவாக உட்கொள்கின்றனர். பாம்புகளுக்கு மிக முக்கியமான உணவாகும் இந்த எலிகள்.