Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Friday, July 8, 2016

ஓஷோவிற்குப் பிடித்த ஜென் கதை





நான் மிகவும் நேசிக்கும் ஜென் கதை ஒன்று உள்ளது. நண்பர்கள் மூவர் காலைநேரத்தில் உலாவ சென்றிருந்தினர். அப்போது அவர்கள் திடீரென மலையில் ஜென் துறவி ஒருவர் நின்றிருப்பதை கண்டனர்.

அந்த மூன்று நண்பர்களில் ஒருவன், “அவர் அவருடைய நண்பர்களுடன் வந்திருக்க வேண்டும், இவர் அவர்களை விட முன்னால் வந்திருக்க வேண்டும். அதனால் இவர் அவர்களுக்காக காத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினான்.

இன்னொருவன், “நீ கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. ஏனெனில் அந்த மனிதரை பார்க்கும் போது ஒரு விஷயத்தை என்னால் நிச்சயமாக கூற முடியும். அவர் யாரோ ஒருவருக்காக காத்திருக்கவில்லை என்பதே அது. ஏனெனில் அவர் ஒருபோதும் பின்னால் திரும்பி பார்க்கவில்லை. அவர் வெறுமனே ஒரு சிலையைப் போல நின்று கொண்டிருக்கிறார். தனியாக விடப்பட்டு மற்றவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் யாராக இருந்தாலும் சிறிது நேரத்திற்கு ஒருமுறை அந்த நபர் வந்துவிட்டாரா இல்லையா என்று பார்ப்பார்கள். ஆனால் இவர் நகரவே இல்லை.

Monday, March 3, 2014

பாரதியின் , THE FOX WITH THE GOLDEN TAIL சிறுகதை! (தொடர்ச்சி - 3)


பவள சங்கரி


”பொன் வால் நரி”யில் இந்தக் காலகட்டத்தில் மிகப் பிரும்மாண்டமான ஆன்மீக மோசடி என மிகச் சரியாகவே கணிக்கப்பட்ட ஒன்றை” என பாரதி குறிப்பிட்டிருப்பது ஜே. கிருஷ்ணமூர்த்தியை உலக குருவாக ஆக்குவதில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைக் குறிப்பதாகும். இந்த நடவடிக்கைகள் முற்கூறப்பட்ட ‘மஹாத்மாக்களின்’ வழிகாட்டுதலின் பேரிலேயே நிகழ்ந்தன. இந்து பத்திரிக்கையில் 1911 ஜனவரி 24-ல் டாக்டர் நஞ்சுண்டராவ் இந்த ‘மகாத்மாக்கள்’ பற்றிய பெசண்டின் பிரசாரத்தை வன்மையாக மறுத்து எழுதிய கடிதம் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து ஆதரவாகவும், எதிராகவும் பல மாதங்கள் ‘இந்து’வில் கடிதப்போர் நிகழ்ந்தது. 

‘பொன் வால் நரி’யின் உள்ளடக்கத்தோடு மிக நெருங்கியத் தொடர்புகொண்டது, தியாசபி மகாத்மாக்கள் பற்றிய விமர்சனமாகும். 

குதுமி, மோர்யா எனும் ‘மகாத்மாக்களைப்’ பற்றிய விவரங்கள் சார்லஸ் வெப்ஸ்டர் லெட்பீட்டரின், 'Tha masters and the paul' எனும் நூலில் உள்ளன. 

குதுமி, மோர்யா வீடுகள் திபேத்தில் ஒருமலைக் கண்வாயில் எதிரெதிரே உள்ளனவாம். இவர்களது தோற்றங்கள் லெட்பீட்டர் நூலில் பின்வருமாறு வருணிக்கப்பட்டுள்ளன.

Tuesday, February 25, 2014

பாரதியின் , THE FOX WITH THE GOLDEN TAIL சிறுகதை! (தொடர்ச்சி - 2)


பவள சங்கரி


பெசண்ட் எதிர்ப்பியக்கத்தின் பிரச்சாரக் கிளர்ச்சியை சென்னை மாநில அரசு ஊக்கமுடன் அறிந்தது. மாநில அரசின் தலைமைச் செயலாளர், “Pleasing Polemics" எனும் குறிப்பையும் ஒரு ரகஸ்ய அறிக்கையில் எழுதியுள்ளார். ஆளுநர் அவையின் ஓர் உறுப்பினர், லெட்பீட்டரை, பெச்ண்ட் சேர்த்தது தவறென்றும் குறிப்பிட்டுள்ளார். 

சென்னை இந்து பத்திரிகை பெசண்ட் எதிர்ப்பியக்கத்தின் போர்முரசாக ஒலித்தது. சென்னையில் தீவிரவாத தேசியத் தலைவர்களின் புரவலராக உதவியவரும், “The Fox With the Golden Tail" ன் பிரதிகள் ஐந்நூற்றை வாங்கி உதவியவருமான டாக்டர் எம். சி. நஞ்சுண்டராவ் அவர்கள் பங்கும் பெசண்ட் எதிர்ப்பியக்கத்தில் குறிப்பிடத்தக்கது. 

பாரதியாரின் இந்த நூல் பெசண்ட் எதிர்ப்பு இயக்கப் போர்க்களத்தில் தோன்றிய அற்புத இலக்கியமாக பெரும் புகழ் கொண்டது. 

இந்திய ஆன்மீகச் சிறப்புகளை ஆங்கிலம் படித்த வருக்கத்தினரில் சிலர் சுயமாக சிந்திக்க மறுத்து ‘வெள்ளையர் பாராட்ட’ அந்தப் பாராட்டை அப்படியே கண்மூடித்தனமாக ஏற்றத்தைக் கண்டித்துள்ளது. இந்த நூல் திரு. நாராயணய்யா என்பவர் தமது புதல்வர்களான , ஜே.கிருஷ்ணமூர்த்தி, நித்யா என்பவர்களுக்கு பெசண்ட் அம்மையாரை பொறுப்பாளராக ஏற்றதும் பின் மனம்மாறி ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்ள வழக்கு தொடுத்ததும் இந்த நூலில் விதந்தோதப்பட்டுள்ளது. 

இந்த வழக்கிற்கான உள்நோக்கத்தில் அரசியல் கலந்துள்ளது என லெட்பீட்டர் என்பவர் லேடி எமிலி என்பவருக்கு 1912 அக்டோபரில் அடையாற்றில் இருந்து எழுதிய கடிதத்தில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார். 

“The truth is that the man is a tool of the political party here in India which is disaffected to the British Government and he is simply being used as a weapon of attack upon Mrs. Beasant and upon the Theosophical society, because that organisation has always stood for law and order. Mrs. Beasant has especially roused the enmity of that section of the people because she refused to allow the preaching of seditious doctrines to the students in the Central Hindu College". 

Monday, February 24, 2014

பாரதியின் , THE FOX WITH THE GOLDEN TAIL சிறுகதை!



பவள சங்கரி


1914ம் ஆண்டு பாரதியாரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட உருவகக் கதை! உயரிய நடையில் எழுதப்பட்டுள்ள மிக அரிதான இந்நூலை தமிழ் மொழிபெயர்ப்புடன்  ஈரோடு டாக்டர். வெ. ஜீவானந்தம் அவர்கள் 1983ம் ஆண்டு முதல் பதிப்பாக வெளியிட்டுள்ளார்கள். இந்தக் கதையின் காலச் சூழல், உருவகங்கள், குறியீடுகள் பற்றிய விளக்கம் இன்றிப் படிப்போருக்கு புரிய வாய்ப்பில்லை.  ‘பொன்வால் நரி’ என்ற மொழிபெயர்ப்பு நூலில் வழி நாம் அறிந்து கொள்ள வேண்டியதைப் பற்றி பாரதியே தம் முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாகத் தம் அணிந்துரையில் திரு பெ.சு. மணி அவர்கள் குறிப்பிட்டுள்ளது: 

“ஆதிக்கத்தை எந்த வடிவிலும் ஏற்க மறுத்து எதிர்க்கும் பாரதியை ‘பொன்வால் நரி’யிலும் காண்கிறோம். “ஏனைய நரிகள் கழுதைகளின் தேசத்திலிருந்தும் வெறும் பொருளாதார லாபங்களையே குறிவைக்கையில் நானோ அவற்றின் மீது ஆன்மீக ஆதிக்கத்தையே எளிதில் பெற்றுவிட்டேன்” என பொன்வால் நரி எக்காளமிட்டதை பாரதி அம்பலப்படுத்தினார்”. 

திரு பெ.சு. மணி அவர்களின் மிகச்சுவையான அணிந்துரையை முதலில் பார்த்துவிட்டு கதைக்குள் போனால் மேலும் சுவை கூடும்போல் உள்ளது! இதோ அவருடைய அணிந்துரை:

Tuesday, July 20, 2010

. உயரமாக நில்லுங்கள்

1. உடல் அளவில்.... உயர்ந்து நில்லுங்கள்
2. மன அளவில்....... உயர்ந்து நில்லுங்கள்
3. ஆன்மீக அளவில்....... உயர்ந்து நில்லுங்கள்.

குற்றம் கண்டு தனைத் திருத்துதல்

தன் குற்றம், குறை, கடமை, தன்னுள் கண்டு,
தான் கண்டு, தனைத்திருத்தும் தகைமை வந்தால்,
என் குற்றம், பிறர் மீது சுமத்தக் கூடும்.
ஏதெனும் கண்டாலும், மன்னித்தாலும்,
மேன்மைக்கே மனம் உயரும். பிறந்தவரால்
மிக வருத்தம், துன்பம். அதுவந்த போதும்
தன்மைக் கேயாம் செய்த பாவம் போச்சு.
நாம் கண்ட தெளிவு. இது வாழ்த்தி வாழ்வோம்.

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...