Tuesday, November 17, 2020

நோய் எதிர்ப்பு சக்திக்கு கவுணி அரிசி

 

 


 

“கருப்பு கவுணி அரிசி”. - அதிக சத்துக்களும் (Nutrients), (Anti-oxidant) நிறைந்தது. மன்னர்களின் காலத்தில் இந்த கவுனி அரிசியை அரசர்களும், மந்திரிகளும் மட்டுமே பயன்படுத்துவர்களாம், மக்கள் யாராவது கருப்பு அரிசியை பயன்படுத்தினால் தண்டிக்கப் படுவார்களாம் .நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி, பழுப்பு அரிசி ரகங்களைவிட இந்த கவுணி அரிசி அதிக சத்துகள் நிறைந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் மற்ற அரிசி வகைகளைவிட மிகக் குறைந்த அளவே கவுணி அரிசி பயிரிடப்படுகிறது. அண்மைக்காலமாக இந்த அரிசியை அமெரிக்கா, சுத்திரேலியா, ஐரோப்பிய நாடுகளும் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
இதன் கருப்பு நிறத்துக்கு காரணமாக இருக்கும் ‘ஆன்தோசயானின்’ என்னும் நிறமி, இதயம், மூளை, ரத்தக்குழாய்களின் செயல்பாடுகளையும் பொதுவான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது. திராட்சை வகைகள், கத்தரிக்காய், ஊதா முட்டைக்கோஸ், மாதுளை, கருப்பு பீன்ஸ் போன்றவற்றில்தே ‘ஆன்தோசயானின்’ நிறமி நிறைந்துள்ளது. மற்ற அரிசி வகைகளில் உள்ளதைவிட கவுணி அரிசியில் சற்று குறைவான மாவுச்சத்தும், அதிகமான புரதமும், இரும்புச் சத்தும் ள்ள. வைட்டமின் பி & இ உள்ளதால் கண்களுக்கும், சரும ஆரோக்கியத்துக்கும் நல்லது என்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்தது.


இந்த அரிசியில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட் இருப்பதால் நீரிழிவு, புற்றுநோய், இதய நோய், எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளிலிருந்து  காப்பாற்றுகிறது. கவுணி அரிசியில் உள்ள நார்ச்சத்து, உணவுக்குப்பின் ரத்தச் சர்க்கரை உயராமல், சீராக இருக்க உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்சினைகள், வாயு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்சினைகளுக்கும் இந்த அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது.
ரத்த நாளங்களில் படியும் கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்துவதோடு நல்ல கொழுப்பின் அளவை உயர்த்தி, இரத்த நாளங்கள் முதிர்ச்சி அடையாமல் பாதுகாத்து இதய ஆரோக்கியத்தைக் காக்கிறது. 

 

 

மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த அரிசியை பண்டைய சீனாவில் அரசர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தார்களாம். ஒரு காலக்கட்டத்தில் இதன் மகத்துவத்தை அறிந்து மக்களும் பயன்படுத்தத் தொடங்க, அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் இந்த அரிசியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அதனால், இன்று வரை சீனாவில் தடைசெய்யப்பட்ட அரிசி என்றே இதை அழைக்கிறார்கள்.