Showing posts with label ஆன்மீகம் - தல புராணம். Show all posts
Showing posts with label ஆன்மீகம் - தல புராணம். Show all posts

Sunday, May 17, 2026

திருஅஞ்சைக்களம் திருக்கோயில்

 


 


திருவஞ்சைக்குளம் மகாதேவசுவாமி திருக்கோயில்

 






இறைவர் திருப்பெயர்:   அஞ்சைக்களத்தீசுவரர், மகாதேவர் 

இறைவியார் திருப்பெயர்: உமையம்மை 

தல மரம்:  கொன்றை மரம்

தீர்த்தம் :  சிவகங்கை 

வழிபட்டோர் : பரசுராமர், அப்பர், சேரமான் பெருமான் நாயனார்,  சுந்தரர், சேக்கிழார்

கோவில் திறந்திருக்கும் நேரம் - காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்.

அமைவிடம்

இக்கோயில் கேரளாவில் சென்னை - கொச்சி  இருப்புப்பாதையில் இரிஞாலக்குடா  நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 8 கி. மீ. தொலைவில் உள்ளது. திருச்சூரிலிருந்து 32 கி. மீ. தொலைவில் உள்ளது. சுந்தரரால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான இத்தலம் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது.

பரசுராமர் தன் தாயைக்கொன்ற பாவம் நீங்க இங்கு வழிபட்டுள்ளார். கழற்றறிவார் நாயனாரின் அவதாரத் தலமும், முத்தித்தலமும் இதுவே ஆகும். கழற்றறிவார் நாயனார் பெருமாக்கோதையார் என்றும், சேரமான் பெருமாள் நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். 

சேரநாட்டை ஆண்ட சேரமான் பெருமாள் நாயனார்  இத்தல இறைவனின்மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அவர் மகாதேவரை வணங்கும்போது, அவருக்கு இறைவனின் சிலம்பொலி கேட்கும். அதனைக் கேட்ட பின்பே, உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் இறைவனை வழிபடும்போது, சிலம்பொலி கேட்காததால், தன் வழிபாட்டில் குறை இருப்பதாக எண்ணி தன் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தார். அப்போது அங்கு சிலம்பொலி கேட்டது. அங்கு காட்சியளித்த சிவபெருமான், தான் சோழ நாட்டிலுள்ள சுந்தரர் எனும் பக்தரின் இனிமையான பக்திப் பாடலில் மெய்மறந்து அவரை கவனிக்க முடியாமல் போய்விட்டதாகவும், அதனால் சிலம்பொலி கேட்கச் சிறிது காலதாமதமானதாகவும் கூறினார். உடனே மன்னன், சுந்தரரைப் பற்றி இறைவனிடம் கேட்டறிந்து, அவரைத் தேடி அவரோடு நட்பு கொண்டார். பின்னர் சேர மன்னனின் அழைப்பை ஏற்ற சுந்தரர் திருவஞ்சைக்குளம் சென்று இறைவனை வழிபட்டுவிட்டு சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை மண்டலம் ஆகிய இடங்களில் உள்ள சிவன் கோயில்களில் வழிபட்டார். அவருக்கு மீண்டும் சேரநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எழவே, அங்குள்ள பல கோவில்களுக்குச் சென்று வழிபட்டு இறுதியாக திருவஞ்சைக்களம் சென்று, இப்பூவுலக வாழ்வினை அகற்ற வேண்டி தலைக்குத் தலை மாலை என்னும் பதிகம் பாடினார்.

"தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே

சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே

அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே

அதன்மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே

மலைக்கு(ந்) நிகர் ஒப்பன வன் திரைகள்

வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு

அலைக்கும் கடலங் கரைமேல் மகோதை

அணியா பொழில் அஞ்சைக்களத்து அப்பனே."

——(சுந்தரர் தேவாரம்

இதைக் கேட்ட இறைவன் அவரை அழைத்து வரும்படி, சிவ கணங்களை அனுப்பினார். அவர்களும் சுந்தரரை ஒரு வெள்ளை யானையில் அழைத்துச் சென்றனர். அப்போது சுந்தரர், தனது உயிர் நண்பரான சேர மன்னனை நினைத்தார். உடனே, சேர மன்னன் குதிரை ஒன்றில் அங்கு வந்து சுந்தரரை மூன்று முறை வலம் வந்து, அவருக்கு முன்பாக இறைவனிருப்பிடம் சென்றடைந்தார்.

சிறப்புகள்

கேரள பாணியில் இக்கோயில் அமைந்துள்ளது. கேரள முறையைப் பின்பற்றி இங்கும் வெடிவெடித்து பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளது. வீதியில் நடுவில் உள்ள பெரிய மேடை யானை வந்த மேடை எனப்படுகிறது. கயிலாயத்திலிருந்து வெள்ளை யானை இங்கு வந்து சுந்தரரை கைலாயத்திற்கு அழைத்துச்சென்ற பெருமையுடையது. 

மூலவர், பிற சன்னதிகள்

இத்தல மூலவர் மகாதேவர் என்றும் அஞ்சைக்களத்தீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். மூலவர் மிகச்சிறிய சிவலிங்கம். விமானத்தில் யோக நரசிம்மர் உருவம் அமைந்துள்ளது. இங்குள்ள நடராசர், சேரமான் பெருமாள் பூசித்த பஞ்சலோகச்சிலை. இதன் கீழ் "திருவஞ்சைக் களத்து சபாபதி" என்றெழுதப்பட்டுள்ளது. இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் மூலவர் கருவறைக்குள் இணைந்து சதாசிவ மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.  மூலவர் தரை மட்டத்திற்கு மேல் சில அங்குல உயரமே உள்ளார். மக்கள் வழக்கில் திருவாஞ்சிக்குளம் என்று வழங்கப்படும்  இக்கோயில் பெருவாயில் மேற்கு நோக்கியது - சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கொடிமரத்தில்  எண் திசை நாயகர்களின் உருவங்கள் உள்ளன. இங்கு கணபதி, ஐயப்பன், அனுமன், நாகராசா, பசுபதி, சப்தமாதர்கள், காளை, நந்திகேசன், பள்ளியறை சிவன், பிரதோச நிருத்யா, நாகயக்சி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோருக்கான இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சன்னிதிகள் உள்ளன. சுந்தரருக்கும், சேர மன்னனுக்கும் தனிச்சன்னிதி இருக்கின்றன.  மலை நாட்டிலுள்ள ஒரே திருமுறைத்தலம் என்ற சிறப்பினை இத்தலம் பெறுகிறது.  கிழக்கு இராசகோபுர முன்புறத்தில் நுழையும்போது, பக்கக்கற்சுவரில், யானை உருவங்கள், வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வது போலவும், எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவது போலவும் அமைக்கப்பட்டுள்ளன. சுந்தரர், சேரமான் உருவங்களும் உள்ளன. (யானை வந்து ஏற்றிச் சென்றதாக ஐதீகம்)

விழாக்கள், வழிபாட்டு நேரம்

மாசி மாதம் மகா சிவராத்திரியும், அமாவாசையில் ஆறாட்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சுந்தரர் கைலாயம் சென்ற ஆடி சுவாதி நாளன்று ஆண்டுதோறும் சுந்தரருக்கும், சேரமானுக்கும் திருநீராட்டு செய்து விழா கொண்டாடப்படுகிறது. கேரள வழிபாட்டு முறையில் இத்திருக்கோயிலில் (தந்திரமுறையில்) வழிபாடுகள் நடந்தாலும், இந்த ஒரு நாளில் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம வழிபாடு நடைபெறுகின்றது. இங்குள்ள மர வேலைப்பாடுகள் காணத்தக்கவை. சங்க காலச் சேரர்களின் தலைநகரம் வஞ்சி. சுந்தரர் கயிலை சென்ற ஆடி, சுவாதி நன்னாளன்று, ஆண்டுதோறும் கோவை, சேக்கிழார் திருக்கூட்டத்தார் இத்தலத்திற்கு வந்து சுந்தரர், சேரமானுக்கு திருநன்னீராட்டு செய்து இவ்விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். பாதுகாப்பு கருதி, கொடுங்கோளூர் பகவதி அம்மன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள சுந்தரர், சேரமான் சிலைகளுக்கு அங்கேயே உள்ள திருமண்டபத்தில் நன்னீராட்டு செய்து அலங்கரித்து யானை குதிரை வாகனங்களில் வைத்து, திருஅஞ்சைக்களத்திற்கு விழாப்பொலிவுடன் எடுத்துச் செல்லப்பட்டு, இத்திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

 இறைவனின் பெரும் கருணையை அறிந்து மகிழ்ந்த சுந்தரர் இறைவனைப் போற்றி, ‘தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கேஎன்னும் பதிகம் பாடினார்.

வெள்ளையானையின் மீதேறிக் கயிலை சென்றபோது சுந்தரர் பாடியருளியது வருமாறு:

"தான்எனை முன் படைத்தான்; அதுஅறிந்து,
தன் பொன் அடிக்கே
நான்எனைப் பாடல்? அந்தோ! நாயினேனைப்
பொருட்படுத்து,
வான்எனை வந்து எதிர்கொள்ள,
மத்த யானை
அருள் புரிந்து, ஊன்உயிர் வேறு செய்தான் -
நொடித்தான்மலையே."
— 
சுந்தரர் 

இந்தப்பாடல் முடிவடைந்த நிலையில் சுந்தரரும் இறைவன் இடத்திற்கு வந்து சேர்ந்தார். சுந்தரர் இறுதியாகப் பாடிய பாடலைத் திருவஞ்சைக்களம் கோவிலில் சேர்ப்பிக்கும்படி இறைவன் ஆணையிட, வருண பகவான் அப்பாடலைக் கோவிலுக்குக் கொண்டு வந்து சேர்த்தார் என்கிறது ஆலயத்தின் வரலாறு.
இந்த ஆலயத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். வைணவ ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவரான குலசேகர ஆழ்வார் அவதரித்த தலம் இது.

சேரமன்னர்களின் பிரதான தெய்வமாதலால் இவ்விறைவனுக்கு திருவஞ்சிக்குளம் மகாதேவர் என்று பெயர். இது மருவி அஞ்சைக்களம் என்று ஆனது. இங்கு சங்காபிசேகம் சிறப்பான வழிபாடாகும். பிரம்மோத்சவம் மாசி மாதத்தில் 8 நாள் நடைபெறுகிறது. சுந்தரர், சேரமான் உருவங்கள் செப்புத் திருமேனிகளாக  உள்ளன. வெள்ளைக் கிணறு முக்கியமானது. அமாவாசையில் ஆறாட்டு (தீர்த்தவாரி) உற்சவம். திருக்கோயிலின் முன்பு இருந்த கோபுரங்கள் 1670ல் இடாய்ச்சுக்காரர்கள் தாக்குதலில் உடைக்கப்பட்டன. மேற்குப் பகுதி கோபுரத்தின் கீழ் இரண்டு நிலைகள் மட்டும் எஞ்சின. திப்பு சுல்தானின் கொடிய தாக்குதலால் திருக்கோயில் பெரும் சேதத்திற்கு உள்ளானது. திருக்கோயில் வழிபாட்டு மண்டபத்தில் உள்ள மலையாள எழுத்தில் உள்ள சமசுகிருதக் கல்வெட்டு, 'சமயப் புறத்தோனால் தகர்க்கப்பட்ட திருக்கோயிலை பலியத் கோவிந்தன் அச்சன் என்பவர் மீண்டும் எடுத்துக் கட்டிய' செய்தியைத் தெரிவிக்கிறது.


"சிந்தித்து எழுவார்க்கு நெல்லிக்கனியே

சிறியார் பெரியார் மனத்தேறலுற்றால்

முந்தித் தொழுவார் இறவார் பிறவார்

முனிகள் முனியே அமரர்க்கமரா

சந்தித்தடமால் வரைபோற்றிரைக (ள்)

தணியாதிடறுங் கடலங்கரைமேல்

அந்தித் தலைச் செக்கர் வானே யத்தியா (ல்)

அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே" (சுந்தரர்)

 

"நஞ்சை களத்துவைத்தநாத எனத் தொண்டர் தொழ

அஞ்சைக் களஞ்சேர் அருவுருவே.' (அருட்பா)


அஞ்சல் முகவரி -

 மகாதேவ சுவாமி திருக்கோயில்

திரு வாஞ்சிகுளம் - அஞ்சல்

(வழி) கொடுங்களூர் - 680 664.

கேரளா - திருச்சூர் மாவட்டம்.

 

 

 

 


Thursday, February 23, 2017

அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில்



புதுப்பாளையம், அந்தியூர்

guru

தமிழ்நாடு –  ஈரோடு மாவட்டம், அந்தியூரில் புதுப்பாளையம் எனும் இடத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு குருநாதசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. மிக வித்தியாசமான முறையில் அமைந்திருக்கும் தெய்வத் திருமேனிகள் காண்போரை தம் வசமிழக்கச் செய்வது நிதர்சனம். இக்கோவில், ஈரோடு மாவட்டம் , அந்தியூரிலிருந்து வடக்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு மலைத் தொடரின் அருகில் மிக  அமைதியானதொரு சூழலில் அமைந்துள்ளது.   பாண்டிய மன்னர்களின் ஒரு குறு நில மன்னனால்  கற்கோவில் கட்டி வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

Thursday, September 22, 2016

மாயக்கண்ணன் – கோவர்த்தனநேசன்



அருள்மிகு கோவர்த்தனநேசன் ஆலயம் – மதுரா

மாயக்கண்ணன் குழந்தையாக அவதரித்த புனித பூமி மதுரா. இந்தியத் திருநாட்டின் எண்ணற்ற புனிதமான வழிபாட்டுத் தலங்களில் இதுவும் முக்கியமான ஒரு தலம். பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 100வது தலம் இது. பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் என ஐம்பெரும் ஆழ்வார்களால் 50 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது.
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் ஐந்தாவது பாசுரம் இது:

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
எனும் சிறப்பு வாய்ந்த இப்பாடல் மிக்க பொருட்செறிவு கொண்டது !

Wednesday, August 31, 2016

நான்மாடக்கூடல் நாயகி!


அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் – மதுரை
am1
அன்னை மீனாட்சியின் ஆட்சியின் அருமைப் பெருமைகள் அனைத்தும் தெள்ளத் தெளிவாகக்காட்டும் அற்புத ஆலயம் இது.
am
இமைகளற்ற மீன் தன் முட்டைகளை கண் பார்வையின் சக்தி கொண்டே பொரிக்கச்செய்து காத்து வருவதைப்போன்று மீன் போன்று அழகிய வடிவுடை நயனங்களைப் பெற்ற அன்னை மீனாட்சி இப்புவி மக்களை கண்ணிமைக்காது காத்து வருகின்றாள். இதன் காரணமாகவே அன்னை மீனாட்சி என்ற திருநாமமும் கொண்டாள்! அன்னை எழுந்தருளியிருக்கும் புனிதத் தலம் மதுரை மாநகர். பாண்டிய மன்னன் குலசேகரப் பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றியதால் கடம்பவனம் என்ற வனத்தை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைந்துள்ளதால்நான்மாடக்கூடல் என்ற அழகிய பெயரும் மதுரைக்கு உண்டு.

Wednesday, August 24, 2016

ஆண்டாள் – தமிழை ஆண்டாள்!


பவள சங்கரி
.
சிறீவில்லிப்புத்தூர் – கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்!
சிறீவில்லிப்புத்தூர் என்ற இப் புனிதத்தலத்தின் காரணப் பெயர், சிறீ என்ற இலக்குமி அவதாரமான ஆண்டாள், வில்லி என்ற மன்னன் ஆண்ட பாம்பு புற்றுகள் நிறைந்த புத்தூரில் வாழுகிறாள் என்பதாகும்.
aan5
ஆண்டாள், பெரியாழ்வாருடன் வடபத்ரசாயி சுயம்புவாக அவதரித்த தலம் என்பதால் இது முப்புரி ஊட்டிய தலம்.

Tuesday, August 2, 2016

திருஇரும்பூளை என்னும் ஆலங்குடி


அன்பு நண்பர்களே,

இது என்னுடைய 200 வது பதிவு . இதுவரை என்னை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் இனியும் தொடர்ந்து வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் அருள் பெறுவோம் வாருங்கள் நண்பர்களே. வணக்கம்.

அன்புடன்

பவள சங்கரி



அருள்மிகு ஆபத்சகாயேசுவர சுவாமி

குரு பரிகார தலம்

இறைவன் - காசி ஆரண்யேசுவரர், ஆபத்சகாயர்.
இறைவி - ஸ்ரீஉமையம்மை, ஏலவார் குழலியம்மை
விசேட மூர்த்தி - ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி
விசேட தலம் - ஸ்ரீகுரு பரிகாரத்தலம்
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம், இலக்குமி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம் போன்ற 8 தீர்த்தங்கள்.

முன்னுரை : தெய்வ மணம் கமழும் நம் தமிழ்த் திருநாட்டில் ஆலயங்கள் நம் ஆன்மிக ஞானத்தை ஊக்குவிக்கும் ஊற்றுகள் . அத்தகைய கவின்மிகு ஆலயங்களில் தனித்தன்மை வாய்ந்த தலங்களில் திருஇரும்பூளையும் ஒன்று. பாடல் பெற்ற தலம். இத்தல வரலாற்றை தியானிப்பதன் மூலம் ஆலமுண்டானின் அருளைப் பெறுவது திண்ணம்.

அருள்மிகு ஏலவார் குழலி அம்பிகை உடனுறை அருள்மிகு காசியாரண்யேசுரர் எழுந்தருளியுள்ள திருஇரும்பூளை கோவிலின் பழம்பெருமைகள் பெரிதும் போற்றுதலுக்குரியது.


திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்:-
Inline image 2

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

தட்சிணாமூர்த்தி வழிபாடு

மோனநிலை அமர்ந்திட்டே மும்மலத்தின் கட்டவிழ்த்து
முத்திக்கு வித்தாகும் மூலகுரு மூர்த்தியதாய்
தேனமுதப் பொருளாகி தென்முகமாய்த் தானமர்ந்து
தெவிட்டாத சின்மயத்தை தெளிவாக்கும் தெள்ளியனாய்
ஆனந்த நிலையாக ஆலின்கீழ் அமர்ந்தங்கே
அறமதனை நால்வருக்கும் அறிவிக்கும் ஐயனாகித்
தானவனாய் ஆக்கிடுமோர் தற்பரமே தானாகும்
தட்சிணாமூர்த்தியின் தாள்பணிந்து சிரமேற்கொள்வோம்.

திருஇரும்பூளை - திருஞானசம்பந்தர் பதிகம்:

1. சீரார் கழலே தொழுவீரிதுசெப்பீர்
வாரார் முலைமங்கை யொடும் முடனாகி
ஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே.

2. தொழலார் கழலேதொழு தொண்டர்கள் சொல்லீர்
குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகி
எழிலா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
கழல்தான் கரிகா னிடையாடு கருத்தே.

3. அன்பா லடிகை தொழுவீ ரறியீரே
மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி
இன்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே.

4. நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர்
கச்சிப் பொலிகாமக் கொடியுடன் கூடி
இச்சித் திரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே.

5. சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர்
நற்றாழ் குழல்நங்கை யொடும் முடனாகி
எற்றே யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
புற்றா டரவோடென்பு பூண்ட பொருளே.

6. தோடார் மலர்தூய்த் தொழுதொண்டர் கள்சொல்லீர்
சேடார் குழற்சே யிழையோ டுடனாகி
ஈடா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
காடார் கடுவே டுவனான கருத்தே.

இப்பதிகத்தின் 7வது செய்யுள் சிதைந்து போயிற்று என்பர்..

8. ஒருக்கும் மனத்தன்ப ருள்ளீ ரிதுசொல்லீர்
பருக்கை மதவேழ முரித்துமை யோடும்
இருக்கை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
அரக்கன் உரந்தீர்த் தருளாக் கியவாறே.

9. துயரா யினநீங்கித் தொழுந்தொண்டர் சொல்லீர்
கயலார் கருங்கண்ணி யொடும் முடனாகி
இயல்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே.

10. துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண்டர் கள்சொல்லீர்
பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி
இணையில் லிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே.

11. எந்தை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
சந்தம் பயில்சண்பை யுண்ஞான சம்பந்தன்
செந்தண் தமிழ்செப் பியபத் திவைவல்லார்
பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே.


வற்றாத காவிரிநதி பாயும் , சோழவள நாட்டின் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், நீடாமங்கலம் இரயில் நிலையத்திற்கு வடக்கே 7 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து தெற்கே 17 கி.மீ தொலைவிலும் கும்பகோணத்திலிருந்து (நீடாமங்கலம் வழி) பேருந்து தடத்தில் அமைந்துள்ளது. சோழநாட்டில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற 274 தலங்களில், காவிரிக்குத் தென்கரையில் அமைந்துள்ள 127 தலங்களின், 98வது தலமாக விளங்குவது திருஇரும்பூளை என்ற ஆலங்குடி தலமாகும். சிவபெருமான் திரு இரும்பூளை உடைய மகாதேவர் என்னும் திருப்பெயரால் கல்வெட்டில் கூறப் பெறறுள்ளார்.

இவ்வூரின் சிறப்பு, இவ்வூரில் விடத்தால் யாதொரு தீங்கும் ஏற்படுவதில்லையாம். காரணம், பாற்கடல் கடைந்த போது உண்டான ஆலகால விடத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய தேவர்கள், சிவபெருமானிடம் அபயம் புகுந்தனர். அவ்வமயம், பெருமான், தம் தோழராகிய சுந்தரமூர்த்தியாரைக் கொண்டு, அவ்விடத்தைக் கொண்டுவரச் செய்து, அதனைப் பருகித் தம் கண்டத்தில் அடக்கியமையினால், இத்தலத்திற்கு இப்பெயர் பெற்றது. இதனை விளக்கும் காளமேகப் புலவர் அருளிய பாடல் இதோ:

ஆலங் குடியானை ஆலால்ம் உண்டானை
ஆலங் குடியான் என்று ஆர்சொன்னார் - ஆலம்
குடியானே யாகில் குவலயத்தோ ரெல்லாம்
மடியாரோ மண்மீதினில்.

கோவில் ஐந்து நிலை இராஜ கோபுரத்துடனும், ஊரின் மத்தியில், நாற்புறமும் தாமரை பூத்த அகழியாலும் உயரமான மதில்களாலும் சூழப்பெற்று கவின்மிகு தோற்றத்துடன் காட்சியளிப்பது சிறப்பு. தென்புறம் அமைந்த இதன் கோபுரத்தில் மிகப்பழமையான சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. கோபுர வாயிலினுள் நுழைந்ததும், மேலக்குடவறையில், கலங்காமல் காத்த விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. முழுமுதற் பொருளை, மூத்த கணபதியை வணங்கி, முதல் பிரகாரத்தினுள் நுழைந்தால், எதிரே அம்மையாரின் தெற்கு நோக்கிய சன்னதி காணப்படுகிறது. சற்று உள்ளே சென்று, மேற்கு நோக்கித் திரும்பினால், இரண்டாவது வாயிலைக் கடந்தால், உள்ளே தென்புறத்தில் சூரியர் சன்னதி உள்ளது. தென்புறம் உற்சவர், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அழகிய திருக்கோலக்காட்சி காணலாம். அடுத்தாற்போல், உட்பிரகாரத்தில், நால்வர் திருவுருவமும், சூரியேசர் சோமேசர், குருமோட்சேசுரர், சோமநாதர், சப்தரிசிநாதர், விஷ்ணு நாதர், பிரம்மேசர் ஆகிய சப்தலிங்கங்களோடு, காசி விசுவநாதர், விசாலாட்சி,அகத்தியரும் எழுந்தருளியுள்ளனர்.

Inline image 3

அடுத்து ஆக்ஞா கணபதி, சோமாசு கந்தர், நின்ற கணபதி, சந்திரசேகரர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வயானை பக்தர், சண்டிகேசுரர், கல்யாண சாத்தா, சப்தமாதா முதலிய உற்சவர்களும், அடுத்து முருகன், வள்ளி, தேவசேனை சன்னதியும், இலக்குமி தேவியும் , வடக்குப் புறம், நவக்கிரகம், சபாபதி, சிவகாமி அம்மை, சம்பந்தர், அப்பர், மணிவாசகர் ஆகியோரின் காட்சிகளும் காணப் பெறலாம். சபாநாதர் சன்னதியில் திருமுறைக்கோவிலும், அடுத்து உற்சவ தட்சிணாமூர்த்தி, சனகாதி நால்வருடன் காட்சியளிக்கிறார். பைரவர், சந்திரன் சன்னதியும், சுவாமி மகா மண்டபத்தில் நந்தி, பலிபீடம் உள்ளது. மகா மண்டப வாயிலில், துவாரபாலகரும், கருவறையில், கிழக்கு நோக்கி ஆபத்சகாயரும், அர்த்த மண்டபத்தில் பள்ளியறை சொக்கரும், போகசக்தி அம்மையாரும் உள்ளனர். இத்தலத்து சிறப்பு மூர்த்தியான குரு தட்சிணாமூர்த்தி இருப்பிடமும், மேலக்கோட்டத்தில் லிங்கோத்பவரும், வடக்கோட்டத்தில், பிரம்மா, துர்க்கை, சண்டிகேசுரரும் அடுத்து, ஞானகூபம் என்னும் தீர்த்தக் கிணரும் உள்ளன. வெளியே சுக்கிரவார அம்மன் சன்னதியும், பள்ளியறையும் உள்ளன. தெற்கு நோக்கிய அம்மன் சன்னதி த்னிப்பிரகாரத்தில் அமைந்துள்ளது. துவார சக்தி, செப்பு நந்தி பலிபீடமும், கீழ்ப்புறம் திருமாலைக்கட்டி மண்டபமும் ,மேற்கு நோக்கி சனீசுவரர் சன்னதியும், வடபுறம் வசந்த மண்டபமும், கீழ் புறம் யாகசாலையும், பாக சாலையும், அன்னதான சமையல் கூடமும், வடக்கு பார்த்து சப்தமாதா ஆலயமும், வடபுறம் திரு நந்தவனமும் உள்ளது. இத்திருத்தலம்,காவிரி நதியின், தென்கரையில் ஒரு காத தொலைவில் உள்ளது. இந்த ஊரில் இதுவரை அரவு தீண்டி ஒருவரும் மரித்ததில்லை என்று சொல்லப்படுகிறது.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்தில் வந்து முறைப்படி வணங்கி வழிபட்டு தட்சிணாமூர்த்தியை தரிசித்து ஞானோபதேசம் பெற்றார். இத்தலத்தில் உள்ள குருமூர்த்தியை, குரு வாரத்தில் வணங்கி வழிபடுவோருக்கு, சிவஞானம் எளிதில் கைகூடும் என்பது ஆன்றோர் வாக்கு.

திருவிழாக்கள் :

பஞ்ச பருவ உற்சவம், மாதாந்திர குருவாரந்தோறும், விசேச தரிசனமும்,குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்கும் காலங்களில் குருப்பெயர்ச்சி இலட்சார்ச்சனையும் நடைபெறும். பிரதி வருட மாசி மாத குருவாரத்திலும், மகா குருவாரத்திலும், கலச பூசைகளும், மலர் அர்ச்சனைகளும் நடைபெறும். மாசி மாத கடைசி குருவாரத்தன்று, சங்காபிசேகமும்,விசேச அபிசேக அலங்கார, ஆராதனைகளும் நடைபெறும். தைப்பூசத்திலும், பங்குனி உத்திரத்திலும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. சித்திரைப் பௌர்ணமியைக் கொண்டு, பத்துநாள் உற்சவ விழாவும், தட்சிணாமூர்த்திக்குத் தேர் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.

பூமியிலிருந்து கிடைக்கப்பெற்ற திருவிளக்குகள் பற்றி கல்வெட்டுகள் கூறும் விபரம்:

19-3-2009 அன்று இத்திருக்கோவிலின் உள்பெரிய பிரகாரத்தில் வடக்குப் பகுதியில் பிரகார மண்டபம் கட்டுவதற்காக தோண்டியபோது, புதையுண்டு கிடைக்கப்பெற்ற திருவிளக்குகள் அனைத்தும் கி,பி. 11-12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து குத்துவிளக்குகளாகும். இது குறித்த செய்தியும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இது ஆதாரப்பூர்வமான செய்தியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் கலையம்சமும், வடிவமும் அதனைத் தெளிவாக்குகின்றன, குருபகவான் மட்டுமல்லாமல், சனிபகவானும் இங்கு விசேசமாக வழிபடப்படுகிறார்.


--






பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...