Saturday, March 26, 2016

’நேர்மாற்று உளவியல்’‘நேர்மாற்று உளவியல்’ அப்படின்னு ஒரு விசயம் இருக்கு தெரியுங்களா..? இது  வெற்றிக்கான ஒரு எளிதான உத்தி. சமீபத்தில் ஒரு கடற்கரையில் ஒரு தேநீர் விற்கும் சிறுவனிடம் இதைக்கண்டு ஆச்சரியப்பட்டேன். செம அறிவாளி போல… இந்தப் பையன் இருக்க வேண்டிய இடமே வேறு.. பிற்காலத்துல பெரிய ஆளா வருவாயப்பா என்று வாழ்த்திவிட்டுத்தான் வந்தேன்..  அப்படி என்ன செய்தான்னுதானே யோசிக்கறீங்க..? பின்ன என்னங்க.. எல்லோரும் டீ…  டீ…  சாய்… சூப்பர் பால் டீ..  சூப்பர் ஏலக்காய் டீ…..   சூப்பர் இஞ்சி டீ அப்படீன்னு விற்கறத பார்த்திருக்கோம். இவன் மட்டும் ‘படு மோசமான டீ..’ ரொம்ப ரொம்ப மோசமான டீ..’ அப்படீன்னு கூவிக்கொண்டிருந்தான்.  என்ன ஆச்சரியம் கொஞ்ச நேரத்தில் அத்தனை தேநீரையும் விற்று தீர்த்து விட்டான் அந்த சிறுவன். தேநீர் அதிகமாக குடிக்கும் வழக்கம் இல்லாத நான்கூட அப்படி என்ன மோசமான டீ, குடித்துதான் பார்க்கலாமே என்று வாங்கிக் குடித்தேன் என்றால் பாருங்கள். இதே உத்தியை சமீபத்தில்  விஜய் தொலைக்காட்சி பிரபலம் ஒருவர் பயன்படுத்தி தன் நூல் ஒன்றிற்கு ‘இதை வாங்க வேண்டாம்’ என்று எதிர்மறையாக தலைப்பிட்டு விற்பனையில் சாதனை படைத்தாரே, அது  நினைவிருக்குமே? என்னமா யோசிக்கிறாய்ங்க...... 

http://www.vallamai.com/?p=67454

Thursday, March 24, 2016

புத்திசாலித்தனமும், அறிவும் ஒன்றா?

பவள சங்கரி
images
சாக்ரடீசு மிக யதார்தமான அறிஞர். ஒரு நாள் அவருடைய அபிமானி ஒருவர் அவரிடம் வந்து, ஐயா புத்திசாலித்தனமும், அறிவும் ஒன்றா? இல்லையென்றால் இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? என்று வினவுகிறார்.
அவரும் மெல்லிய புன்னகையுடன், “அதோ அங்கு திண்ணையில் உட்கார்ந்திருக்காரே அந்த பெரியவர்கிட்ட போய், இங்கிருந்து அடுத்த ஊருக்குப்போக எவ்வளவு நேரம் ஆகும்னு கேட்டுவிட்டு வா” என்றார்.
அந்த மனிதரும் அப்படியே போய் அந்தப் பெரியவரிடம் கேட்க, அவரோ பதிலேதும் கூறாமல் மேலும், கீழும் பார்த்துவிட்டு பேசாமல் இருந்துவிட்டாராம். இவரும் விடாமல் 2,3 முறை கேட்டுவிட்டு, பாவம் மனநிலை சரியில்லாதவர்போல என்று நினைத்து திரும்பிச்செல்ல நான்கு அடி எடுத்து வைத்தார்.
உடனே அந்தப் பெரியவர், ‘யப்பா, நீ ஒரு 15 நிமிடத்தில் அடுத்த ஊருக்குப் போய் சேர்ந்துவிடலாம்’ என்று சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டார்.
இத்தனை முறை கேட்டு பதில் சொல்லாத பெரியவர் திடீரென்று ஏன் சொன்னார் என்ற ஆச்சரியத்துடன், அவரையே அதற்கான காரணமும் கேட்டார்.
‘ஏம்ப்பா நீ எவ்வளவு வேகமாக நடக்கக்கூடியவன் என்று தெரிந்தால்தானே நீ கடக்க வேண்டிய தூரத்திற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று நான் கணக்கிட முடியும்’ என்றவரை ஆச்சரியமாகப் பார்த்ததோடு கும்பிட்டுச் சென்றவன் அதை அப்படியே போய் சாக்ரடீசிடம் சொல்கிறார்.
அதற்கு சாக்ரடீசு அதே புன்னகையுடன், ‘இதற்குப் பெயர்தானப்பா புத்திசாலித்தனம்’ என்றாராம்!

http://www.vallamai.com/?p=67425

Wednesday, March 23, 2016

’கடலோடி’ நரசய்யாhttp://www.vallamai.com/?p=67399

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.
வள்ளுவனார் வழியில் வாழ் அறிவுடையார் இவர் என்பதை இவருடன் சிறிது பொழுதே உரையாடும் எவரும் எளிதில் உணரக்கூடும். நம் இந்தியக் கப்பற்படையில் பணியாற்றிய பெருந்தகை, கடலாய்வறிஞர், வரலாற்றாய்வாளர், சிறந்த கட்டுரையாளர், கதாசிரியர், தேச பக்தர், மனிதாபிமானி என பன்முகங்கள் கொண்ட ஆளுமை இவர். கப்பற் பொறியியல் கல்வியில் தேர்ச்சி பெற்ற இவர் ‘நரசய்யா’ என அனைவராலும் அன்பாக அழைக்கப்பெறும் , ஒரிசா மாநிலத்தின், பெரகாம்பூர் என்னும் இடத்தில் பிறந்தவரான, காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா என்பவர். இந்திய கடற்படை கப்பல்களில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த பேறு பெற்றவர். அதன்பின் ஐ.என்.எஸ்.விக்ராந்த் என்ற விமானந்தாங்கிக் கப்பலின் விமானத் தளத்தின் தலைவராக (ஃபிளைட் டெக் சீஃப்) பணியாற்றினார். பிறகு வணிகக் கப்பலில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இறுதியாக விசாகப்பட்டினத் துறைமுகத்தில் 1991ஆம் ஆண்டில் தலைமைப் பொறியாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். துறைமுகப் பணியின் இடையில் வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்கவேண்டி கடற்படையால் அழைக்கப்பட்டு அதில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. உலக வங்கியின் அழைப்பின்பேரில் ஆலோசகராகவும், கம்போடியா புனர் நிர்மாணத்தில் பங்கு கொண்டதும் இவருடைய ஆகச்சிறந்த ஆளுமை குறித்து நாம் அறிந்துகொள்ளத் தக்கதாகும்.
DSC_5842

Tuesday, March 22, 2016

தேவ வாத்தியம்!பவள சங்கரி
‘தேவ வாத்தியம்’ என்பது எது? ஏன் அது அப்படி அழைக்கப்படுகிறது?
images (1)
‘கடம்’ என்ற மண்பானை போன்ற தோற்றமுடைய அந்த எளிமையான இசைக்கருவிதான் ‘தேவ வாத்தியம்’ என்று அழைக்கப்படுகிறது. இது கர்நாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்று. தோற்றத்தில் சாதாரண மண் பானை போலவே இருந்தாலும் இரண்டிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. கடம் தயாரிப்பதற்கு மூன்றுவிதமான மண் தேவை. வைகையாற்று வண்டல், கண்மாயில் பதிந்து கிடக்கும் களிமண் மற்றும் மணல். ஒரு மாட்டு வண்டி வண்டலில் 40 கடம் செய்யலாமாம். சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற ‘குடமுழவு’ எனும் இசைக்கருவியே நாளடைவில் மருவி ‘கடம்’ என்று ஆனதாகவும் சொல்கிறார்கள்.