Monday, March 3, 2014

பாரதியின் , THE FOX WITH THE GOLDEN TAIL சிறுகதை! (தொடர்ச்சி - 3)


பவள சங்கரி


”பொன் வால் நரி”யில் இந்தக் காலகட்டத்தில் மிகப் பிரும்மாண்டமான ஆன்மீக மோசடி என மிகச் சரியாகவே கணிக்கப்பட்ட ஒன்றை” என பாரதி குறிப்பிட்டிருப்பது ஜே. கிருஷ்ணமூர்த்தியை உலக குருவாக ஆக்குவதில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைக் குறிப்பதாகும். இந்த நடவடிக்கைகள் முற்கூறப்பட்ட ‘மஹாத்மாக்களின்’ வழிகாட்டுதலின் பேரிலேயே நிகழ்ந்தன. இந்து பத்திரிக்கையில் 1911 ஜனவரி 24-ல் டாக்டர் நஞ்சுண்டராவ் இந்த ‘மகாத்மாக்கள்’ பற்றிய பெசண்டின் பிரசாரத்தை வன்மையாக மறுத்து எழுதிய கடிதம் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து ஆதரவாகவும், எதிராகவும் பல மாதங்கள் ‘இந்து’வில் கடிதப்போர் நிகழ்ந்தது. 

‘பொன் வால் நரி’யின் உள்ளடக்கத்தோடு மிக நெருங்கியத் தொடர்புகொண்டது, தியாசபி மகாத்மாக்கள் பற்றிய விமர்சனமாகும். 

குதுமி, மோர்யா எனும் ‘மகாத்மாக்களைப்’ பற்றிய விவரங்கள் சார்லஸ் வெப்ஸ்டர் லெட்பீட்டரின், 'Tha masters and the paul' எனும் நூலில் உள்ளன. 

குதுமி, மோர்யா வீடுகள் திபேத்தில் ஒருமலைக் கண்வாயில் எதிரெதிரே உள்ளனவாம். இவர்களது தோற்றங்கள் லெட்பீட்டர் நூலில் பின்வருமாறு வருணிக்கப்பட்டுள்ளன.

“The master Kathumi wears the body of a Kashmiri Brahman and is as fair in complexion as the average Englishman. His eyes are blue - His hair and beard are brown - He (Morya) is a Rajput king birth and has a dark beard divided into two parts, dark almost black hair falling to His shoulders, and dark and piercing eyes........ !"

ஜே. கிருஷ்ணமூர்த்தி விவகாரங்கள் காரணமாக பெசண்ட் மீது தொடுக்கப்பட்ட பரபரப்பான வழக்கிற்கு மூலாதாரமானவரே. இந்த லெட்பீட்டர்தான். இவர் ‘செக்ஸ்’ சம்பந்தமாகக் கொண்ட கொள்கைகள் இங்கிலாந்தில் 1960-ல் தியோசாபிகல் சங்கத்தில் மிகுந்த நெருக்கடிகளைத் தோற்றுவித்தன. சிவாவின், ‘வந்தே மாதரம்’ துண்டறிக்கையிலும் லெட்பீட்டரின் பாலுணர்ச்சி பற்றிய வக்கிரமான கொள்கைகள் பின்வறுமாறு குறிப்பிடப்பட்டு கண்டனம் செய்யப்பட்டுள்ளன. 

“இவருடைய சஹாவும், ஆப்த நண்பரும் அசுவபாவீகப் புணர்ச்சி ஆசிரமத்தின் தலைவருமான லெட்பீட்டர் செய்த அநாகரிக அறிவற்ற மிருகங்களும் செய்யாத துர்ச்செய்கைகளை முழுமனதுடன் ஆதரித்தது மன்னியில் அத்துர்ச் செய்கைகளை ஸ்தாப்பிப்பதற்காக அளவற்ற செலவு செய்து ஹைகோர்ட் தீர்மானங்களையும் மாற்ற முயன்றார்”

பொன் வால் நரியில் பின் வரும் பகுதியும் நினைவு கூரத்தக்கது:

“ஒரு முறை தகப்பன் கழுதை பொன் நரியிடம், தனது குட்டிகளை அவளுடைய கூட்டாளியின் தகாத உறவில் இருந்து பிரித்துத் தன்னிடம் ஒப்படைக்கும்படி வேண்டியது”

இங்கு தகப்பன் கழுதை என்பது திரு நாராணய்ய ராவையும்: குட்டிகள் என்பது ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஜே நித்தியானந்தாவையும், ‘பொன் நரி’ என்பது அன்னி பெசண்டையும், ‘அவளுடைய கூட்டாளி’ என்பது லெட்பீட்டரையும் குறிப்பனவாகும். இவ்வாறே பல குறியீட்டுச் சொற்களை பின்வருமாறு அறிய வேண்டும். 

“நரிகளின் தேசம் - இங்கிலாந்து; பொன் வால் - தியோசாபிகல் சொசைட்டி, கழுதை - குரங்குகளின் பழம்பெரும் பூமி- பாரத நாடு; நரிகள் - ஆங்கிலேயர்கள்; கிழக்கழுதை - டாக்டர் எஸ் சுப்பிரமணிய ஐயர்; காளையார் - டாக்டர் எம். சி. நஞ்சுண்டராவ். 

இவ்வாறே குறியீட்டுச் சொற்களை அறிந்து சொன்னதோடு பெசண்ட் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் விவரத்தையும் அறிவோமாயின் ‘பொன் வால் நரியின்’ நையாண்டித்தன இலக்கியச் சுவையை நுகர முடியும்.

நாராயணய்யா எனும் வைதீக ஆந்திர அந்தணர் தாசில்தாராக இருந்த காலத்திலேயே 1882 முதல் தியோசாபிகல் சொஸைடியில் உறுப்பினராக இருந்தார். 1907ல் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் அடையாறு தியோசாபிகல் சொஸைடியில் சேர்ந்தார். இந்த சொஸைட்டியில் ரகசிய உட்குழு பிரிவிலும், (Esoteric Section) பணியாற்றினார். பூர்வ ஜன்ம விவரங்களை பதிவு செய்வதிலும் இந்த ரகசிய உட்குழுவிற்கு பங்குண்டு. இவருடன் இவருடைய இரு புதல்வர்கள் ஜே. கிருஷ்ணமூர்த்தியும், ஜே. நித்தியானந்தாவும் வசித்து வந்தனர். 1909ல் லெட்பீட்டர் அடையாறு வந்தார். ஒருநாள் கடற்கரையில் நாராயணய்யாவின் இரு புதல்வர்களையும் கண்டார். எலும்பும் தோலுமாய் பலவீனமாகக் காணப்பட்ட பதினான்கு வயதான இளைஞர் கிருஷ்ண மூர்த்தியிடம் ஓர் அலாதியான ஒளி வீசுவதாக லெட்பீட்டர் கருதினார், அவரது மகாத்மாவான குதுமி, “நாராயணய்யா”வின் குடும்பம் இங்கு தங்கியிருப்பதில் ஒரு குறிக்கோள் உள்ளதென்றும், இரு சிறுவர்களுக்கும் விரைவில் பயிற்சி அளிக்க வேண்டுமென லெட்பீட்டரிடம் கூறினாராம். இரு சிறுவர்களும் இனி அவர்களுடைய தந்தைக்குரியவர்கள் அல்லர் உலகத்திற்குரியவர் எனும் மகாத்மா குதுமியின் செய்தியை பெசண்டிடம் தெரிவித்தாராம். லெட்பீட்டர், தியோசாபிகல் சொஸைட்டியின் துணைத் தலைவரான நீதிபதி எஸ். சுப்பிரமணிய ஐயர், நாராயணய்யாவிடம் பேசி இரு சிறுவர்களையும் பெசண்டின் பொறுப்பில் (legal guardianship) விட ஒப்பந்தத்தை எழுதினார். 1910 மார்ச் 6 - ல் பெசண்டிற்கும் - நாராயணய்யாவிற்குமிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. பிள்ளைகள் மேலைநாட்டு கல்வி முறையில் பயிற்சி பெற்று முன்னுக்கு வருவதற்கான வாய்ப்பாக நாராயணய்யா இந்த ஒப்பந்தத்தைப் பற்றி கருதினார். ஆனால் லெட்பீட்டரிடம் நம்பிக்கையில்லை . பெசண்டை நம்பியே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

லெட்பீட்டர்தான் இரு சிறுவர்களுக்கும் பயிற்சி அளித்தார். மகாத்மா குதுமியிடம் அவ்வப்பொழுது இந்த இரு சிறுவர்களை சூட்சம சரீரிகளாக லெட்பீட்டர் கொண்டுபோய் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்தாராம். லெட்பீட்டர் இதன் விளைவாக, “At the feat of the Master" எனும் நூலை கிருஷ்ணமூர்த்தி எழுதியதாகக் கூறப்படுகிறது. இந்த நூல் உலகத்தின் இருபத்தியேழு மொழிகளிலே மொழிபெயர்க்கப்பட்ட பெரும் சிறப்பை எய்தியது. 

டாக்டர் எம். சி. நஞ்சுண்டராவ் இந்த நூலை சின்னஞ்சிறு இளைஞரான கிருஷ்ணமூர்த்தி இயற்றியிருக்க முடியாது எனும் ஒரு விவாதத்தை இந்துவில் எழுப்பினார். லெட்பீட்டர் எழுதியிருக்கலாம் என்றும் அப்பொழுது பேசப்பட்டது. 

ஆன்மீகத்தின் பெயரால், கிருஷ்ணமூர்த்தி தெய்வாம்சம் பெற்றவரென்றும், உலக குரு வென்றும் (messiah) செய்யப்பட்ட பிரசாரத்தை பின் வருமாறு கேலியும் கிண்டலுமாகக் குறிப்பிட்டார்:

“.......... முப்பத்து முக்கோடி தேவர்களிலே எனக்குத் தெரிந்தவரை நம்முடைய மகாவிஷ்ணுவுக்குத்தான் சிரமம் அதிகம். பன்றி, விஷ்ணுவின் அவதாரம்; ஆமை விஷ்ணுவின் அவதாரம்; கவுண்டனூர் ஜமீன்தார் விஷ்ணு அவதாரம்; அன்னி பெசண்டு வளர்க்கிற (நாராயணய்யர் இடங்கொடாத) கிருஷ்ணமூர்த்தி பையன் அதே அவதாரம்”.

தமது பிள்ளைகள் லெட்பீடர் சகவாசத்தால் இழிவுப்படுத்தப்பட்ட பிரசாரத்திற்கு ஆட்பட்டதையும் கண்டு நாராயணய்யா மனம் நொந்தார். இவருடைய நொந்த உள்ளத்தை பாரதியார் பின்வருமாறு “பொன் வால் நரி” யில் சித்தரித்துள்ளார். 

‘மற்றவர்களைக் காட்டிலும் குட்டிகளுடன் பழகும் வாய்ப்புப் பெற்ற தந்தைக்கு மட்டுமே அவற்றின் உண்மை நிலையின் ரகசியம் தெரியவந்தது. தனது குட்டிகள் சகிக்க முடியாத இழி நிலைக்குத் தள்ளப்பட்டு வாலிழந்து நிற்கும் நிலை கண்டு வெதும்பிக் கொதித்தது. .......... எந்த இழிந்த விலங்குகளுக்கும் இழைக்கப்பட முடியாத சொல்லுக்கடங்காத இழிவுகள் தம் குட்டிகளுக்கு இழைக்கப்படுவதை அறிந்து மனம் நொந்தது”.

பெசண்ட் பொறுப்பில் இருந்த தமது பிள்ளைகளை விடுவிக்க நாராயணய்யா முடிவெடுத்தார். டாக்டர் நஞ்சுண்ட ராவிடம் ஆலோசனை கேட்டார். நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆலோசனை கூறப்பட்டது. 

1912 ஜனவரியில் பெசண்டிற்கு எழுதப்பட்ட கடிதத்தில் தமது பிள்ளைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு நாராயணய்யா கோரினார். அடையாறு வாசஸ்தலத்தில் இருந்து வெளியேறுமாறு நாராயணய்யாவிற்குப் பதில் கடிதம் எழுதினார், பெசண்ட். 1912 ஜூலையில் மீண்டும் எழுதிய பதிவுத் தபாலில் ஒப்பந்தத்தை விலக்கிக் கொண்டதாக நாராயணய்யா அறிவித்தார். இந்தக் கடிதத்தை முழுமையாக ‘இந்து’ வெளியிட்டு நாராயணய்யாவிற்கு ஆதரவாக கிளர்ச்சியை வலுப்படுத்தியது. 

தந்தை இவ்வாறு போர்க்கோலம் கொள்ள, மகன் கிருஷ்ணமூர்த்தி பெசண்ட்டிடம் தமது ஆழ்ந்த விசுவாசத்தை வெளிப்படுத்தி அயல்நாட்டிலிருந்து கடிதம் எழுதினார். 

1913 -ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் பெசண்ட் தாமாகவே வாதாடினார்; சி.பி. ராமசுவாமி ஐயர், நாராயணய்யாவிற்காக வாதாடினார். சென்னை உயர்நீதி மன்றம், மே 26, 1913 -ல் அல்லது அதற்கு முன்பு கிருஷ்ணமூர்த்தியையும், நித்யாவையும், நாராயணய்யாவிடம் ஒப்படைக்கும்படி தீர்ப்பளித்தது. பாரதியார் இதை, “நீதிபதி குட்டிகளை தகப்பன் கழுதையிடம் நரிச்சி ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

பெசண்ட், லண்டன் “ப்ரிவிகவுன்சில்” நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்து வெற்றி பெற்றார். 1914 மே மாதம் இந்த தீர்ப்பு வெளிவந்தது. பாரதி இதற்கு முன்னமேயே பொன் வால் நரியை எழுதியதால், பெசண்ட் லண்டனில் பெற்ற வெற்றி இடம் பெறவில்லை. 

வ.உ.சி. சிவாவைப் போல பாரதி, பெசண்டிடம் கடைசிவரை விரோத உணர்ச்சியைக் கொள்ளவில்லை. பெசண்ட்டின் நியூ இந்தியாவில் பாரதியின் கட்டுரைகள் கடிதங்கள் வெளியிடப்பட்டன. கடலூர் சிறைவாசத்தில் இருந்து பாரதி மீள பெசண்ட்டும் உதவியதை பாரதியே குறிப்பிட்டுள்ளார். 

பொன்வால் நரியில் அறிந்துகொள்ள வேண்டியதைப்பற்றி பாரதியே முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆதிக்கத்தை எந்த வடிவிலும் ஏற்க மறுத்து எதிர்க்கும் பாரதியை ‘பொன்வால் நரி’ யிலும் காண்கிறோம். “ஏனைய நரிகள் கழுதைகளின் தேசத்திலிருந்தும் வெறும் பொருளாதார லாபங்களையே குறிவைக்கையில் நானோ அவற்றின் மீது ஆன்மிக ஆதிக்கத்தையே எளிதில் பெற்றுவிட்டேன்” என பொன்வால் நரி எக்காளமிட்டதை பாரதி அம்பலப்படுத்தினார். 

பாரதி அன்பர் ஈரோடு டாக்டர் ஜீவானந்தம், “The Fox with the Golden Tail" எனும் ஆங்கில நூலை தமிழாக்கம் செய்து வெளியிட முன்வந்தது பாராட்டுதலுக்குரியது. இதுவரை நிறைவு பெறாததொன்றை நிறைவு செய்துள்ளார். டாக்டர் ஜீவாவின் மொழியாக்கத்தில் கவனிக்கத்தக்க ஓர் அம்சம், பாரதி எழுத்துகளில் அவருக்குள்ள ஆழ்ந்தகன்ற பயிற்சியாகும். இதன் காரணமாக, இந்நூலில் பாரதி வழியை ஒட்டியே பெயர்கள் முதலானவற்றை தமிழாக்கம் செய்துள்ளார். ‘நரிச்சி’ என்ற சொற் பிரயோகத்தை பாரதியின் நவதந்திரக் கதைகளில் காண்கிறோம்; இந்த நூலிலும் பார்க்கிறோம். இவ்வாறே, “கழுதையினப் புத்தெழுச்சி” போன்ற தமிழாக்கங்களும் நூலிற்கு சுவை சேர்ப்பனவாகும்.

“அறிதோறும் அறியாமை கண்டற்றால்” எனும் குறள் உணர்த்தும் உண்மை பாரதிக்கும் பொருந்தி நம்மை வியப்புறச் செய்கிறது. இந்த வியப்பை ‘பொன் வால் நரி’ மேலும் எடுத்துக் காட்டுகிறது. இந்த நூலில் பாரதியின் ஆங்கில மொழி நடையில் எழிலை கண்டுகளிக்க ஆங்கில மொழி மூலக் கதையும் தரப்பட்டுள்ளது, போற்றுதலுக்குரியது. 

டாக்டர் ஜீவாவின் இவ்வகைப்பணி பாரதி அன்பர்களின் தனிக் கவனத்திற்கும், பாராட்டுதலுக்கும் உரியதாகும்.  

பெ.சு. மணி (14-4-83)


மறைபொருள் குறிப்பமைந்த நீதிக்கதை - பொன் வால் நரி - இரண்டாம் பதிப்பின் முன்னுரை - சி.சுப்பிரமணிய பாரதி

நரியின் இவ்விரண்டாம் பதிப்பு முற்றிலும் எமது நாட்டத்தினால் பதிப்பிக்கப்படுவதன்று. சொல்லப்போனால் இது எம்மீது திணிக்கப்பட்டதென்றே சொல்லலாம். இந்தக் காலகட்டத்தின் மிகப் பிருமாண்டமான ஆன்மீக மோசடி என மிகச் சரியாகவே கணிக்கப்பட்ட ஒன்றை மோதி வீழ்த்திவிட வேண்டுமென்ற உணர்வால் உந்தப்பட்ட சில நண்பர்களின் அன்பான வேண்டுகோளே இப்பதிப்பிற்குக் காரணம்.

இந்து சமுதாயத்தின் முன்னோர்கள் ஆன்மீக உணர்வுகளின் கொடுமுடியையே தரிசித்தவர்கள் என்பது சகலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையே - ஆனால் இச்சமுதாயத்தின் அண்மைத் தலைமுறையினர், குறிப்பாக ஆங்கிலக் கல்வி பெற்றோர், வேறு எக்காலத்திலும், எந்ந்நாட்டிலும் காணமுடியாத அளவு மிகப்பெரிய ஏமாற்றுக்காரர்களாய் இருக்கிறார்கள் என்பதே எமது எண்ணம். ஆனால் இன்றைய இளம் தலைமுறையினராகிய நாம் இச்சுரண்டல்காரர்கள் இனியும் தங்களின் இத்தொழிலைத் தடையின்றி, அமைதியாகச் செய்யவிடக் கூடாதென உறுதி பூண்டுள்ளோம். இப்புனைக்கதையின் உள்ளாடும் மறை பொருள் நீதி இதுவே.

C.S. பாரதி
பாண்டிச்சேரி 
24 பிப்ரவரி 1914 

Have you read 'The Fox with the Golden Tail'? If not here you go.....! தம் முன்னுரையில் பாரதி அன்று சொன்ன கருத்து இன்றும் கூட - சில மாற்றங்களுக்குட்பட்டு - அப்படியே பொருந்துகிறதோ? சிந்திப்போமா? 




The Fox with the Golden Tail
(A Fable)
Once upon a time, there was an old she-fox whom here fellow-foxes of the Fox-land detested very much, for she was very plain-spoken and very proud. And so they cut off here tail as a sort of punishment.
She said : “ Oh my dear brethren, won’t you make me your ruler ?” On hearing this, all the foxes laughed a big laugh and drove her away with jeers and scorn. She then purchased an artificial gilt tail and having fastened it to her back, emigrated to the ancient land of Asses and Apes.
The Assess asked her “Who are you ?” She said “ I am the great she-fox of the golden tail, the wisest among all the foxes of Fox-land. They asked me over there to be their ruler. But I did not care for that position. I have a contempt for the intelligence of foxes and I have become a great admirer of the wisdom of the Asses, especially the older ones. And I have decided that it is better to be an humble pupil among the Asses than a great teacher and ruler among my own kind. Oh venerable Asses, teach me your wisdom.”
On hearing this, all the Asses, especially the old ones, brayed for joy. And they began to speak to one another in their homes and councils, “What thinkest thou, brother? While the ordinary foxes pretend that they are much wiser than we and behave haughtily and contemptuously towards us, the wisest Fox of them all has discovered that we, we the Asses, are the noblest and most thoughtful among animals and she has come to be a pupil among us. Yet the Apes in our own land have been mimicking the ways of the foxes and foolishly despising our great and ancient asinine institutions and traditions. Oh, what will the golden tail will once for all stop their poisonous chattering and they will here-after cease teasing and humiliating us by their so-called criticism of our time-honored Ass-traditions.”
And the Asses had rightly judged their fellow-countrymen, the Apes. For the latter also were greatly impressed by the strange act of the Fox of the golden tail. “Whatever a fox says must be right” so argued many of the Apes, “and if the wisest of them all comes and pays homage to the culture of the Asses, we have reason to pause and consider if we have been quite right in laughing at our compatriots in such an outrageous manner as we have been doing.”
But a few advanced Apes though to themselves, “Nonsense! How can we give up the convictions of a life-time and begin to respect these Asses on the Assertion of a single old fox, while all other foxes still treat them with open contempt? What the foxes do, we must do. And if there is a split among the foxes themselves, we Can’t help it. We shall merely cling to the doctrines of the majority of the foxes. “Thus thinking, they kept themselves aloof from the new movement of Assiatic Revival.
But the Revival itself progressed wonderfully, thanks to the winning ways of the Fox of the golden tail who gradually dropped her old pride and intolerance but substituted instead the worst type of cunning and sedulous flattery.
The Apes bent their heads low before the triumphant march of Assiatic reaction, and the Asses put on pontifical airs. Naturally, all this moved the simple hearts of the Asses, especially ;the older ones, very deeply and the emotions of joy and gratitude rose to such a high pitch among the long-eared ones that they soon elected the old Fox as their leader and High-priestess and gave her the improved title of the Golden Fox.

The Golden Fox was much delighted at this favorable turn of affairs. “After all, “She thought, “ it is something to be a ruler even among Asses. Of course, old age is an intolerable nuisance and so is the enforced company of the long-eared species. But then I have got this consolation that I can make those d-d foxes see that I am not an ordinary person and that I am as cunning as the cunnings of them all. While other foxes merely strive for economic advantages in this Ass-land, I have easily gained a spiritual domination and this includes your economics and everything else. And the Asses call me the Golden Fox, confound their dear, stupid heads!” Her position among the Asses subsequently induced the emigrant Foxes to show her some outward respect and sometimes even take her advice on economic matters. All this success soon made the Golden Fox lose her head. Her rule over the Asses gradually became more and more harsh, arrogant and whimsical, so that she soon began to tire the ;patience of even the most patient of her asinine followers. Discontent began to spread, especially among those who were her personal attendants.
One morning a middle-aged Ass whispered to an old comrade, “What thinkest thou, brother? The Golden Tail of the Golden Fox, I say, is a false and artificial one. She does not always wear it. I have seen her removing it and depositing it into a box before going to bed, each night. What sayest thou to this?”
“Pooh!” said the old Ass w2ho was famous in the Ass-land for his great mastery of Assiatic culture and erudition. “We, older people, knew it long ago. It is the usual custom of the foxes. All of them, even those that have ordinary tails instead of golden ones as our leader, put them off before sleeping. “And the old one laughed scornfully at the ignorance displayed by his younger comrade.
The middle-aged Ass did not know what to say in reply. So he went home without further parley although he still had his own doubts about the accuracy of his old comrade’s observation.
As time went on, other Asses also began to get suspicious about the genuineness of the golden tail and everywhere in the learned and erudite Ass-circles there were murmurings about the intolerable rule and incredible pretensions of the Golden Fox.
The Golden Fox them thought that she must slightly change her tactics and so his on a new device to rekindle the waning loyalty of her followers. She knew she could always depend on the allegiance of the Elders of the long-eared community. So she induced the chief of the Elders to prevail upon a typically asinine member of the community to make an unconditional present of the latter’s two colts to herself, so that, she declared, she might convert the little ones into golden-tailed Asses by initiating them in all the subtleties of the culture of the great Fox-race and by certain other mystic processes.
“Oh.” She said, “after I succeed in making their tails golden like my own, you will see that all the animals will hold them in the highest reverence and teat them as Divine beasts. It will add to the glory of the entire Ass tribe. And great miracles will be wrought by them such as were never heard of before in the animals of Ass-land.”
This sensational announcement and all the flattering hopes it held out to the vanity of the long-eared race pleased the latter beyond all measure. A bargain was soon struck and two little ones were entrusted to the care and guidance of the Golden Fox. The first thing she did with her new wards was to have their little tails secretly cut off and make them wear big hoops so as to hide this loss from the scrutiny of her not over-scrutinous followers. She also made the little ones to always confine themselves to a small room in her own house and there sit with their backs turned towards the wall whenever there was company. She then proclaimed to the Asses that the tails of her young wards were slowly changing, that they had already become partly golden and that when the process was perfected they would be exposed to the sight of the whole world.
I the meanwhile, she ordered the more devoted and faithful Asses to come and offer daily worship to the little ones who were already alleged to be well advanced on the path to the Super-Ass condition. Great was the sensation which spread in the Ass-land, on account of these miraculous proceedings.
The older Asses were eagerly expecting the great day when the little Golden Asses, that were to be, would attain the Adept stage and the miracle of it all would once for all elevate the Ass-race to the highest point of spiritual glory.
But the parent who had more access to the little ones than others soon found out the real secret and felt greatly aggrieved and humiliated at the fate of his colts who had fallen into the unbearable degradation of being tail-less Asses. He therefore protested to the Golden Fox, and asked her to restore his little ones to himself. Trouble ensued and it was greatly feared by the High-priestess and other leaders of the Assiatic Revival that the whole fraud would be exposed and they would be covered with endless shame.
The Chief Elder, who had, by this time, passed the stage pf the dupe and become a willing participant in the schemes of the Golden Fox, easily prevailed upon the parent to give up his fears, promising on behalf of the Golden Fox that the little ones would be sent to Fox-land and given a through training in the great Fox-Culture and no further outrage to the parental sentiments would be committed thenceforth.
The satisfied the parent and the Golden Asses that were to be were accordingly sent to Fox-land. In the meanwhile, the tongue of rumour somehow spread the entire story throughout the length and breadth of the ancient land of Asses and Apes. The Apes began to heap scorn and irony on the heads of the poor Asses. “So you would fain manufacture Golden Asses, would you?” chartered the Apes, “And the Golden Fox is going to elevate your children to the Super-Ass state! Super-Ass indeed! Tail-less, tail-less…..”
Information reached the Parent from Fox-land that his little ones had their long ears also cut off under orders from the Golden Fox and many other worse degradations were also mentioned, unworthy not merely of the sacred Ass-race but of any animal however vile it might be. “Ah, the shame of it! How we have been duped! Asses and no tails ! Asses and no long ears! Alas, my dear little ones! Why did I ever listen to the perfidious brayings of the Chief Elder? Why did I ever trust the Golden Fox? Ah, my children, they will next cut off your dear silver noses. And you are so far away from me, removed by miles and miles of forests and seas.”
Thus lamented the parent and finding that the Golden Fox was in no mood to return his little ones to his custody and that all his comrades were either unwilling or unable or both to render him any assistance in this matter, he went to a large-hearted and wise Bull-one of the stay remnants of a race which was very numerous in the land long long ago-and besought his counsel.
The Parent was especially wrathful against a compatriot of the Golden Fox, who was here chief accomplice and executed on the little ones all the degradations required by her and many other unutterable infamies for which she apparently gave no sanction. He had once prayed to the Golden Fox to remove his little ones from the foul association of her accomplice.
But she paid no need to his prayers and turned him out, heaping contempt and abuse on his poor head, and calling him the stupidest Ass in the whole of Ass-land.
The Bull listened to all this and advised the parent to seek redress in courts of law. And the Bull promised him every assistance that such an unfortunate Ass deserved at the hands of a nobler animal.
And the parent went to a court of law accordingly and asked that the Golden Fox be compelled to restore the custody of his children either to himself or, in case the court should consider him to be too much of an Ass to be entrusted with the care even of his own little ones, to any other person whom the Court might deem fit. This bold step adapted by the Specimen-Ass encouraged many other members of the community to come out and openly denounce the ways and pretensions of the Golden Fox. The wave of asinine resentment and revenge was set in motion and, excepting the oldest ones like the Chief Elder, very few remained faithful to the Golden Fox.
One morning, the Golden Fox discovered to her amazement, that her personal attendant had committed a nocturnal burglary and run away with her golden tail. There were crowds of Asses standing outside her house waiting to see her walk out without any tail, golden or other.
The Golden Fox endured all this disgrace with much outward show of fortitude. The judge decided that the Golden Fox should restore the little ones to their parent, viz. the Specimen – Ass.
The Golden Fox then took a short trip to Fox-land. The Asses were expecting that when she returned she would bring the little ones with her. But no. She came alone and of course, she wore no gilt-tail this time. She had also dropped all pretensions to modesty and good manners. She defied openly the laws of me and of gods. The old spirit which cost her tail in her early days took possession of her soul once again.
She heaped words of very bitter contempt and very violent hatred on the Ass – race which she had once praised as the noblest, wisest and loveliest on earth.
She now began to humour the Apes, calling them the dearest creatures on earth and delivering a series of lectures on topics which were dear to the Apeheart, such as the following:
1. The superiority of tail-less animals over all tailed ones, always excepting the Foxes.
2. How, even among the Foxes, a tail-less one is superior to the rest.

3. The paramount importance to Apes and Asses of voyagbes to Fox-land.
4. The basest of animals-the Asses. (A jeremiad against long ears, white noses etc.)
5. How to convert an Ass into an Ape.

6. How to convert an Ape into a Fox; etc; etc.
But the Apes were not in mood to be won over by old she – foxes. They well remembered their old wrongs, how in the earlier days the Golden fox used to vilify and mock them and so on; so they drove her out with scorn and contempt. She then made a last desperate effort to win back the allegiance of the Asses. But there is a limit even to Asinine folly and credulity. They too brayed scorn at her. In the meanwhile the authorities of the law pressed her to bring the little ones to the Ass-land and deliver them to their parent. But she had so far disfigured the little ones that she could not dare to obey that order.
So she secretly fled away to the Republic of Bees and Ants, where warrants from Ass-land could not be executed and it is understood that she has started a new cult there whose chief doctrine seems to be that the land of Bees and Ants will become a paradise the day on which they elect an old and tail-less She-Fox as President of their Republic – a cult to which she has given the strange title of Foxo-Bees-Antism.
Finis
Opinions
Dr. Nanjunda Rao, B.A., M.B.C.M., F.C.S. Writes:

“It has a high educational value. A careful study of th booklet will do good to all the children in our country, young as well as old.”
Prof. K.B. Ramanatha, M.A., B.L., F.M.U. Writes:“It hits off very clerverly the weaknesses of our men and none of us come off well. And if we should be a self-complacent lot and not have any gift of humour, we should owe you a grudge.”

Courtesy : http://www.mahakavibharathiyar.info/English/the_fox_with.htm 

1 comment:

  1. டாக்டர் ஜீவா அவர்களுக்கும், சி.சுப்பிரமணிய பாரதி அவர்களுக்கும் நன்றி...

    ReplyDelete