Monday, August 30, 2010

இனியும் விடியும்.............


பதின்மத்தின் பட்டொளி வேட்கை
கொழுந்து விட்டு எரிந்த காலம்
கூண்டுக் கிளி பேசிய காலம்
கூட்டுக் குயில் பாடிய தீரம்
பிரசவ வேதனையில் பூத்த மொட்டுக்கள்
மண்ணில் மணம் பரப்ப
ஏங்கிய ஏக்கம்............................
ஏக்கத்தின் தீவிரத் தாக்கம்
தாக்கத்தை தணிக்கத் தேடிய மேதகம்
திருப்பி அனுப்பி குப்பையாக்கிய சோகம்
முடிவுற்று, புதிய களம் கிடைத்த பூரிப்பு
சொந்தப் பூவாக நினைத்து முகர
கபடமற்ற மழலையென அடியெடுக்க
எண்ணிய எண்ணமாங்கு செயல்பட
முளைத்தது மற்றுமொறு கோடாறி
பல்லில் சிக்கிய துணுக்கென உறுத்தியது.
துணைக் கழைத்த இயற்கை
சீற்றம் கொள்ளாமல் குளிர்ச்சியூட்டினாலும்
மனிதம் மட்டும் மறத்துப் போகிறது.
அழகான பூவென்று அள்ளி முகறும் போது,
ஈழத்து வேதனை போல
வலையில் சிக்கிய பூவெனப் புரிந்தது......
பதின்மத்தின் வேதனை.......தொடர்ந்தது.....

5 comments:

  1. நல்லாருக்குங்க. இன்னும் கொஞ்சம் செதுக்கலாமே:)

    ReplyDelete
  2. நன்றி பாலா சார். அடுத்த முறை கண்டிப்பாக முயற்சிக்கிறேன். உங்களுடைய ஊக்குவிப்பிற்கு நன்றி சார்.

    ReplyDelete

சூழ்நிலைக் கைதி

வார்த்தைகளை கொஞ்சம் பக்குவமாகப் பயன்படுத்தியிருந்தால் இவ்வளவு பெரிய துன்பச் சூழலில் சிக்கியிருக்க மாட்டேன் சற்றே பொறுத்திரு எனும் மந்திர வார...