Monday, March 5, 2012

கந்திற் பாவை

பவள சங்கரி
உரித்து வைத்த சட்டையும்
பளபளப்பாய்த்தான்
இருக்கிறது.
சட்டை இல்லாத
நிர்வாணமும்
பாரமற்ற சுகம்தானே.
எளிமையாய் இருப்பதால்
வலிமை இல்லாத
சடமாய் ஆகிவிடவில்லை.
இறக்கி வைத்த பாரம்
எளிதாக்கிவிட்டது
உள்ளதையும், உள்ளத்தையும்.
தோற்றத்தில் பகட்டு இருந்தாலும்
பகட்டு இல்லாத தோற்றமும்
அழகாய்த்தானே இருக்கிறது?
சிறகே ஒரு சுமையானபோது
போதிதந்த ஞானமாய்
புத்தி வந்தது.
புத்தி வந்த நேரம்
ஆணவமலம்
அறவே ஒழிந்தது!

படத்திற்கு நன்றி : http://www.gardenornaments.com/ItalPark/Statues/469.jpg
நன்றி : வல்லமை.

4 comments:

  1. கவிதையின் கருப்போலவே எளிமையான கவிதை.எப்போதும் எளிமை எதிலும் சுகம்.ஓவியமும் அழகு !

    ReplyDelete
  2. அன்பின் ஹேமா,

    நன்றி.

    ReplyDelete
  3. பதிவர்களுக்கு பணம் தரும் தளம் !

    Visit Here For More Details : http://mytamilpeople.blogspot.in/2012/03/profit-sharing-phenomenon.html

    ReplyDelete
  4. 'புத்தி வந்த போது நண்பரில்லையே' என்ற கண்ணதாசன் வரி ஏனோ நினைவுக்கு வந்தது.
    உள்ளதையும் உள்ளத்தையும்... ரசித்தேன்.

    ReplyDelete