Sunday, March 25, 2012

செருமனியிலும் இன்றும் வாழும் காந்தியடிகள்!


செருமனியின் புதிய குடியரசுத் தலைவர் ஜோசிம் கௌக் சென்ற வெள்ளிக்கிழமை நாட்டின் 11வது குடியரசுத் தலைவராகபொறுப்பேற்றுக் கொண்டபின் தம் நாட்டு மக்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அவர்கள் தங்கள் அச்சத்தை விட்டொழித்து, ஜனநாயகம் மற்றும் அதன் தலைமையின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளும்படியும், ”தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே ஒருவர் தம் வாழ்க்கையில் முன்னேற்றமும், வெற்றியும் காண முடியும் என்ற மகாத்மா காந்தியடிகளின் கொள்கை ஒரு தனி மனிதருக்கு மட்டுமல்லாமல் ஒரு நாட்டிற்கும் பொருந்தக்கூடியது. ஆகவே உங்களுக்குள் நம்பிக்கையை கட்டமைக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்” என்று உரையாற்றினார்.

72 வயதான ஜோசிம் கௌக் அவர்கள் எந்தக் கட்சியையும் சாராத, மக்களின் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட, பொதுநல சீர்த்திருத்தங்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் என்பதும், மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (நன்றி – பி.டி.ஐ)

படங்களுக்கு நன்றி :

http://en.wikipedia.org/wiki/Mohandas_Karamchand_Gandhi

http://www.globalpost.com/dispatch/news/regions/europe/germany/120323/joachim-gauck-sworn-in-germany-new-president


நன்றி : வல்லமை.

2 comments:

  1. இவர் மட்டுமல்ல.அதிகமான ஐரோப்பியர்கள் காந்தியை அறிந்து வைத்திருக்கிறார்கள்.400 பேர் வேலை செய்யும் என் வேலை இடத்தில் என் பெரிய அதிகாரியின் அறையில் காந்தித்தாத்தாவின் ஒரு செய்தியோடு அவர் படம் இருக்கிறது !

    ReplyDelete
    Replies
    1. அன்பின் ஹேமா,

      நல்ல செய்தி. கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      அன்புடன்

      பவள சங்கரி.

      Delete