Saturday, October 27, 2012

நவராத்திரி கொழுக்கட்டை



அன்பு நட்புக்களே,

நவராத்திரி எல்லோரும் நன்றாக கொண்டாடியிருப்பீர்கள்.. ஆயுத பூஜைக்கு நம் ஊரில் பொறி, பொட்டுக்கடலை, நிலக்கடலை, அவுள், நாட்டுச் சக்கரை என அனைத்தும் போட்டு கலந்து வைத்து படையல் போட்டு அதை அனைவருக்கும் கொடுப்பது வழக்கம். எப்படியும் நிறைய மீந்து போகும். இனிப்பு இருப்பதால் அதனை வறுத்தோ அல்லது வேறு எந்த விதத்திலோ பயன்படுத்த முடியாது. விரைவில் நமத்தும் போய்விடும். இந்த முறை என் சிறு மூளையைக் கசக்கி ஒரு திட்டம் போட்டேன்.. ஒரு புது ரெசிப்பி ரெடி. அதான் நவராத்திரி கொழுக்கட்டை. செய்வதும் மிகவும் எளிது.


பொறி, அவுள், பொட்டுக்கடலை, நிலக்கடலை, நாட்டுச்சக்கரை அனைத்தும் கலந்த கலவையை மின்சாரம் இருக்கும் நேரம் பார்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இனிப்பு போதவில்லையென்றால் மேலும் கொஞ்சம் வெல்லம் சேர்க்கலாம். இந்தக் கலவையுடன் ,தேங்காய் பல்லு, பல்லாக நறுக்கி அதனை சிறிது நெய்விட்டு வதக்கிக் கொள்ளுங்கள் அதனை பொறி கலவையில் கொட்டி நன்கு பிசையவும். தேவையானால் கொஞ்சம் தேங்காய் தண்ணீர் அல்லது தண்ணீர் தெளித்து, கொழுக்கட்டைகளாக பிடித்துக் கொள்ளவும். இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து எடுத்தால் போதும். சூப்பர் கொழுக்கட்டை ரெடி.. செய்து,சாப்பிட்டுப்பார்த்துவிட்டுச் சொல்லுங்களேன்... சுவையோ சுவை!

நன்றி : வல்லமை

No comments:

Post a Comment