Tuesday, December 30, 2014

எந்த மூளை அதிக சக்தியுடையது. ?








குழந்தைகளின் கல்வித் திட்டங்களில் பெரும் மாற்றங்கள் வர வேண்டும் என்பது நம் நெடு நாளையக் கனவாகவே உள்ளது. குழந்தைகள் வெறும் புத்தகப் புழுவாக, மனப்பாடம் செய்து ஒப்புவித்து, மதிப்பெண் பெற்று பட்டம் வாங்கி, வேலை தேடி......  அப்பப்பா இப்படியே போகிறது வாழ்க்கை. எதையும் ஆக்கப்பூர்வமாக, வாழ்க்கைக்குத் தேவையானபடி, நடைமுறை அறிவு பெறத்தக்கவாறு நம் கல்வித்திட்டம் அமைந்தால் நம் குழந்தைகளின் வாழ்க்கை எப்படியிருக்கும்..    பொது அறிவில் இந்த உலகையேக் கலக்கிவிட மாட்டார்களா.. 


அதுசரி. ஒரு சின்ன கேள்வி. இந்தப்படத்தில் இருப்பது நியூ ஜெர்சி, பெஞ்சமின்  பிராங்ஃளின் அருங்காட்சியகத்தில் எடுத்த புகைப்படம். பூங்காவோ, அருங்காட்சியகமோ, கண்காட்சியோ, விளையாட்டு அரங்கமோ என அனைத்து இடங்களும்  குழந்தைகளுக்காகவே, அவர்களுக்கு அறிவு புகட்டும் வண்ணம் மட்டுமே அமைந்திருப்பது பாராட்டுதலுக்குரியது. சரி ஒரு சிறு சந்தேகம், குதிரை, மாடு, மனிதன் இதில் யாருடைய மூளை பெரியது? எந்த மூளை அதிக சக்தியுடையது. வரிசைப்படுத்தலாமா? 

1. மனிதன்
2. குதிரை
3. மாடு

மனமும், மூளையும் தொடர்புடையதா என்ற ஆய்வு பல்லாண்டுகளாக எந்த முடிவும் இல்லாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 


இனிமையான மெல்லிசைகள் மட்டுமே காலத்தால் என்றும் அழியாதது. உள்ளத்தை உருக்கி உணர்வுகளை சிலிர்க்கச்செய்கிறது என்பது மறுக்க இயலாத உண்மை. மனித மூளை இன்னிசைகளைத் தக்க வைத்துக்கொள்ளும் அளவிற்கு வார்த்தைகளை தக்க வைத்துக்கொள்வதில்லை என்பதே நிதர்சனம் இல்லையா..?


மனித மூளை 100 பில்லியன் நியூரான்கள் கொண்டது. ஒவ்வொரு நியூரானும் மற்ற ஏனைய 10,000 நியூரான்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. நம்முடைய ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு சிந்தையும் நம் மூளையால் உருவாகிறது. இருப்பினும் இது எப்படி நடக்கிறது என்பதெல்லாம் இன்னும் அவிழ்க்கப்படாத பெரும் அதிசய முடிச்சுகளாகவே உள்ளது. ஒவ்வொரு மனிதரின் மூளையும் வேறுபட்டது. இந்த மூளைதான் ஒவ்வொரு மனிதரையும் தனிப்பட்டவராகக் காட்டுகிறது. 

இதோ பிலடெல்பியா பெஞ்சமின் பிராங்ஃளின் அருங்காட்சியகத்தின் பிரம்மாண்ட மூளைக்குள் செல்லலாமா...  


1 comment: