Thursday, April 28, 2016

சாமை பொங்கல்!



சாமை அரிசி
கார்போஹைட்ரேட் - 67 கிராம்
ஆற்றல் - 341 கிலோ கலோரி
புரதம் - 17.7 கிராம்
இரும்புச் சத்து - 9.3 கிராம்
கால்சியம் - 17 கிராம்
நார்ச்சத்து - 2.2 கிராம்
நல்ல கொழுப்பு - 1.1 கிராம்
பச்சரிசி (கைக்குத்தல்)
கார்போஹைட்ரேட் - 76.7 கிராம்
ஆற்றல் - 346 கிலோ கலோரி
புரதம் - 7.5 கிராம்
இருப்புச் சத்து - 3.2 கிராம்
கால்சியம் - 10 கிராம்
நார்ச்சத்து - இல்லை
நல்ல கொழுப்பு - இல்லை


 தினம் மூன்று வேளைகளும் அரிசி உணவையே எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
சிறுதானியங்களான கம்பு, சோளம், வரகு, பனிவரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு, போன்றவைகள் அதிக ஆற்றல் தரக்கூடியவைகள். அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்களை கொண்டதாக உள்ளன. பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம் என்பது உறுதி.
சாமை
சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிப்பது நார்சத்து. சாமை நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் . இதனை உணவாக உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், நோய் வராமலும் தடுத்திடவும் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
சாமையில் இரும்பு சத்து அளவிட்டால் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் அதிகம் என்பதால் இரத்தசோகை வருவதற்கான வாய்ப்பினை இது குறைக்கிறது.
நோய்களுக்கெல்லாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலை தீர்க்கிறது சாமை.
வயிற்றுக் கோளாறுக்கு சாமை நல்லதொரு மருந்தாகவும் இருக்கிறது. தாதுப் பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு அதிகம்.
ஆக ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் சாமை உட்கொள்வது நலம்!

சாமை பொங்கல்

DSC_0359[1]
தேவையானவை;
சாமை அரிசி - 1 கிண்ணம்
பாசிப்பருப்பு - 1/4 கிண்ணம்
இஞ்சி - 1 அங்குலத் துண்டு
பச்சை மிளகாய் - 3 (அ) 4
கருவேப்பிலை
மிளகு, சீரகம் - 1 தேக்கரண்டி
நெய் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
1. சாமை, பாசி பருப்பு இரண்டையும் தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும்.
2. நன்கு களைந்து இரண்டையும் குக்கரில் போட்டு மூன்று பங்கு தண்ணீர் ஊற்றவும்.
3. இஞ்சியை பொடியாக நறுக்கி, தேவையான உப்பும் சேர்த்து மூன்று விசில் வரும்வரை வேக விடவும்.
4. இறுதியாக மிளகு, சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
5. சூடாக, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

http://www.vallamai.com/samaiyal/archives/1610

No comments:

Post a Comment