ஈரோடு கொங்கு கலையரங்கில் நேற்று (24/07/2016) சி.கே.கே. அறக்கட்டளை சார்பில், சமுதாய அக்கறை உள்ளதா என்பது குறித்த பட்டி மன்றம் நடந்தது. ‘சொல்லின் செல்வர்’ திரு சுகி.சிவம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடந்த இந்த பட்டி மன்றத்தில் சமுதாய அக்கறை குறைந்துள்ளது என்ற அணியில் பேரா. ராமச்சந்திரன், திரு.மோகனசுந்திரம், பேரா. திருமதி.சாந்தாமணி ஆகியோரும், சமுதாய அக்கறை அதிகரித்துள்ளது என்ற அணியில் முனைவர்.சுந்தர ஆவுடையப்பன், திரு மணிகண்டன், வழக்கறிஞர் சுமதி ஆகியோரும் வாதிட்டனர். இலக்கிய அரங்கம் என்று ஆவலாகச் சென்றவர்களுக்கு சற்று ஏமாற்றம்தான். காரணம் வாதிட்ட அனைவரும் இலக்கியம் குறித்து ஏதும் பேசவில்லை. மேலோட்டமான வாதமாகவே இருந்தது. ஆனாலும் அனைவரின் வாதங்களும் சுவையாகவே அமைந்திருந்தது. இந்தக்குறையை நிவர்த்தி செய்யும்விதமாக நடுவர் திரு சுகி.சிவம் அவர்கள் தமது உரையில் ஆழ்ந்த பல கருத்துகளை முன்வைத்தது பாராட்டிற்குரியது
Subscribe to:
Post Comments (Atom)
காகத்தின் நுண்ணறிவு!
காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...

-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
No comments:
Post a Comment