Tuesday, December 7, 2021

புதிதாய்ப் பிறப்போம்!

 



 

 


வாழப்பழகு புள்ளின் அரசனைப்போல!

எழுபதாண்டுகள் வாழும் வரம்பெற்ற கழுகு

நாற்பதிலேயே முதுமைக் கோலம் அதற்கு

கொத்தித்தின்ன இயலாத கூர்மையிழந்த அலகு

உணவைக்கவ்வி இழுக்கும் வலுவிழந்த கால்நகங்கள்

பறக்கும் சக்தியின்றி மார்புக்கச்சையான சிறகுகள்

அத்தனையும் மீட்டெடுக்கத் துணியும் சாகசமாய்

மலை உச்சியின் பாறையில் அமர்ந்து

அலகெலாம் தேய்ந்து உதிரும்வரை உரசியும்

 ஓய்ந்துபோகாமல் புதிய கூரிய அலகுமுளைக்கக்

காத்திருந்து முளைத்தவுடன் வலுவிழந்த கால்நகங்களை

பிய்த்தெறிந்து புதுநகங்கள் முளைக்கக் காத்திருந்துப்பின்

கனத்துப்போன சிறகுகளையும் உதிர்த்து அடுத்து

புத்தம்புதிய சிறகுகள் முளைக்க மறுபிறவியுடன்

மலையோடும் மடுவோடும் முட்டி மோதி

முதுமை தொலைத்த இளமையுடன் வளமாக

வாழும் வல்லமையை வளர்த்துக்கொள்!

புள்ளின் அரசன் கழுகைப்போல் வாழக்கற்றுக்கொள்!!

 

No comments:

Post a Comment

சூழ்நிலைக் கைதி

வார்த்தைகளை கொஞ்சம் பக்குவமாகப் பயன்படுத்தியிருந்தால் இவ்வளவு பெரிய துன்பச் சூழலில் சிக்கியிருக்க மாட்டேன் சற்றே பொறுத்திரு எனும் மந்திர வார...