Thursday, March 9, 2017

சர்வதேச மகளிர் தினம் (2017)






ஆதி மனிதம் உருவானது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு என்றாலும் குரங்கிலிருந்து முதன் முதலில் தோன்றியது மூதாய் என்று நம் அறிவியல் அருதியிட்டுக்கூறும் பெண் தான் அவள். ஆதியில் பெண்ணே தலைமை வகிப்பவளாகவும், வேட்டையாடி உணவைக் கொண்டுவருபவளாகவும், சமுதாயத்தை வழிநடாத்துபவளாகவும் இருந்தாள். நாகரிகம் வளர ஆரம்பித்தவுடன் பொதுவுடமைக் கொள்கைகளில் மாற்றம் காண ஆரம்பிக்கவும், தனியுடைமைக் கொள்கை, அரசியல், மத நிறுவனங்கள் தலை தூக்க ஆரம்பித்தன. அறிவியல் கண்டுபிடிப்புகள் உருவாக ஆரம்பித்தன. மெல்ல மெல்ல ஆண் தலைமைப் பொறுப்பை ஏற்க ஆரம்பித்தான். முதல் விஞ்ஞானி, முதல் விவசாயி, முதல் ஞானி என அனைத்திலும் பெண்களே முன்னிலை வகித்திருந்தனர். ஆனாலும் சட்டங்கள், கருத்தாக்கங்கள், சமூக அமைப்புகள் என அனைத்திலும் பெண் ஓரங்கட்டப்பட்டு ஆண் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டான். மெல்ல மெல்ல அவள் வீட்டிற்குள் முடக்கப்பட்டு, குறுகிய எல்லைகளை வகுத்து, இறுதியாக இரண்டாந்தர குடிமக்களாகவும் ஆக்கப்பட்டாள். 15ஆம் நூற்றாண்டின் பிறகு ஐரோப்பிய நாடுகள் பெரும் அரசியல் மாற்றங்களைச் சந்தித்த பிறகு மனித உரிமைச் சிந்தைகள் எழுச்சியுற்றன.

Thursday, February 23, 2017

அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில்



புதுப்பாளையம், அந்தியூர்

guru

தமிழ்நாடு –  ஈரோடு மாவட்டம், அந்தியூரில் புதுப்பாளையம் எனும் இடத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு குருநாதசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. மிக வித்தியாசமான முறையில் அமைந்திருக்கும் தெய்வத் திருமேனிகள் காண்போரை தம் வசமிழக்கச் செய்வது நிதர்சனம். இக்கோவில், ஈரோடு மாவட்டம் , அந்தியூரிலிருந்து வடக்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு மலைத் தொடரின் அருகில் மிக  அமைதியானதொரு சூழலில் அமைந்துள்ளது.   பாண்டிய மன்னர்களின் ஒரு குறு நில மன்னனால்  கற்கோவில் கட்டி வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

Wednesday, February 22, 2017

இந்தியாவின் மொழிகள் நிலை



1961ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் புழக்கத்தில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை 1,652 என்று கண்டறியப்பட்டுள்ளன.
1971ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில், 10,000 மக்களுக்கும் குறைவாகப் பேசப்படும் மொழிகளைத் தவிர்த்து 108 மொழிகளை மட்டும் பட்டியலிட்டிருக்கிறார்கள். மற்ற மொழிகள் “மற்றவைகள்” என்று பட்டியலிடப்பட்டுள்ளன.
1991ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, தனிப்பட்ட இலக்கண அமைப்புகளுடன் கூடிய மொழிகளாக 1,576 மொழிகளைக் கண்டறிந்து வெளியிட்டுள்ளது.
2001ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள மொழிகளின் எண்ணிக்கை 1,721. அதில் 122 முக்கியமான மொழிகள் மட்டுமே பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகிறார்கள். மற்ற 1,599 மொழிகள் சிறுபான்மை சமூகத்தினர், உள்ளூர் குழுக்கள், பழங்குடிகள் போன்றவர்கள் பயன்படுத்தக்கூடியவைகள்.
முக்கியமான 122 மொழிகள் 10,000 ற்கும் அதிகமான பயனாளிகள் உள்ளனர். இதில் 29 மொழிகள் மட்டுமே 1 மில்லியன் மக்களின் புழக்கத்தில் உள்ளன.
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 122 மொழிகள் மட்டுமே 10,000 ற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துவதாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் இந்தியா 250 மொழிகளை இழந்துள்ளது.  இன்று 880 மொழிகள் வழக்கில் உள்ளன. 29 மொழிகள் 1 மில்லியன் மக்களுக்கும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அருணாசலப் பிரதேசத்தில் மட்டும் அதிகபட்சமாக 90 மொழிகள் வழக்கில் உள்ளன!

சர்வதேச தாய்மொழி தினம்!



பவள சங்கரி
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!
553997_10152582888510198_2088060395_n[1]
இன்று சர்வதேச தாய்மொழி தினம். உறவு, உணவு, உணர்வு என அனைத்தையும் கற்றுத் தரும் தாயின் மொழியே ஒருவரின் முக்கியமான மொழி. ஒருவர் எத்தனைதான் அந்நிய மொழிகள் கற்றிருந்தாலும் வேதனை, ஆபத்து, உணர்வினால் சூழப்பட்ட தருணம் போன்ற காலங்களில் தாய்மொழி மட்டுமே உள்ளத்திலிருந்து வார்த்தைகளாகி வெளிவரும். அப்படி வருவதற்கான வாய்ப்பு அமையப் பெறாதவர்கள் எதையோ இழந்தது போன்றதொரு நிலையில் இருப்பதை உணர்வார்கள். அந்த நிலையில் இதனால் மனக் குழப்பம் மேலும் அதிகரிக்கவும் வழிவகுக்கும்.

சர்வதேச தாய்மொழி தினம்




Tuesday, February 7, 2017

ஓவியக்கவி கலீல் கிப்ரானின் ஞானமொழிகள்



பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை முதன் முதலில் கையில் எடுக்கும்போது ஏற்படும் அந்த பரவச நிலையே நம் நூலை தீண்டும் இன்பம் அளிக்குமென்பது எல்லோருக்கும் இயல்பு. அந்த வகையில் என் உணர்வோடு பின்னிப்பிணைந்த கலீல் கிப்ரான் எனும் மாகவிஞனின் கவிதைகளில் ஒரு துளியை சுவைத்ததின் பலனாக இந்நூல் வெளி வந்துள்ளதில் பேரானந்தம். அதனை அன்பு நண்பர்களுடன் பகிர்வதில் மன நிறைவு! இதோ நூலின் முன்னுரை...

Sunday, January 29, 2017

சிக்கய்ய நாயக்கர் கல்லூரி தமிழ் இலக்கிய மன்ற விழா!








ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் தமிழ்த்துறையின் சார்பாக மிகச்சிறப்பான ஏற்பாடுகளுடன் 04/01/2017 அன்று நடைபெற்ற இலக்கிய மன்ற விழாவின் சில காட்சிகள். கல்லூரி முதல்வர் முனைவர் கு.உதயகுமார் , தமிழ்த்துறை தலைவர் முனைவர் ப.கமலக்கண்ணன், இலக்கிய மன்றப் பொறுப்பாளர் பேரா.க.இராக்கு மற்றும் பேராசிரியப் பெருமக்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், மாணவர்கள், மாணவிகள் அனைவருக்கும் நன்றி. 

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...