Friday, February 21, 2020
Friday, February 14, 2020
Wednesday, January 29, 2020
அரிசி வைத்தியம்!
குற்றவாளி உண்மை
பேசுகிறானா என்று கண்டுபிடிக்க அரிசி வைத்தியம்!
பல நூற்றாண்டுகளாக ஆசியாவில் குற்றவாளிகள் பொய்
பேசுகிறார்களா என்பதைக் கண்டுபிடிக்க, “அரிசி” பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆம், ‘lie
detector’ என்ற தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு,
குற்றவாளிகளை வாய் நிறைய வறண்ட அரிசியைக் கொடுத்து மென்று உமிழச்
சொல்வார்களாம். உண்மை பேசுபவர்கள் என்றால் சரியாக மென்று விடுவார்களாம். ஆனால்
அவர்கள் பேசுவது பொய் என்றால் அரிசி ஒழுங்காக மெல்ல முடியாதாம் ... உமிழ் நீர்
வறண்டு விடுவதால் அரிசி நாக்கு, மேல் அன்னம் என்று
ஒட்டிக்கொள்ளுமாம்
Sunday, January 26, 2020
திருவள்ளுவர் விழா
வி.ஐ.டி.
வேந்தர் கல்விக்கோ. விசுவநாதன் ஐயா அவர்களின் தமிழியக்கம் சார்பில் தமிழகம்
முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு விழா எடுக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (26/01/2020) ஈரோடு அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு சுகந்தி அவர்களின் ஒத்துழைப்புடன், உயர்திரு அரங்க.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில்
சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முப்பதுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகள்
குறிப்பிட்ட காலத்தில் குறள் ஒப்புவிக்கும் போட்டியில் கலந்து கொண்டனர். தமிழியக்க
இணைச் செயலாளர் முனைவர் ஜோதிமணி, பொருளாளர் முனைவர் செந்தாமரை ஆகியோருடன், திரு
அரங்க சுப்பிரமணியமும் நடுவராக இருந்து, பங்கு பெற்ற அனைத்து மாணவச்
செல்வங்களுக்கும் தமிழியக்கத்தின் சார்பாக சான்றிதழ்களும், சிறப்பாக ஒப்புவித்த
மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வரலாற்றாசிரியர் திரு
கணியன் பாலன், ஈரோடு நவரசம் கல்லூரியின் துணை முதல்வரும், ஈரோடு மாவட்ட
தமிழியக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திரு செல்வம், நாமக்கல் மாவட்டச் செயலாளர்
திரு இளங்கோ ஆகியோர் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு குறள் சார்ந்த அரிய பலக்
கருத்துகளை எடுத்துக்கூறினர். ஐயன் வள்ளுவருக்கு குறள் இசை அஞ்சலி
செலுத்தப்பட்டது.
Wednesday, January 22, 2020
தாமஸ் கார்லைல் தன்னம்பிக்கை
எந்த சக்தியும் படைப்பாற்றலின் குறுக்கே தடையாக நிற்கவியலாது என்பதற்கு சிறந்த உதாரணம் - தாமஸ் கார்லைல் என்ற பிரித்தானிய வரலாற்றாசிரியர், எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், தத்துவவாதி, கணிதவியலாளர். (திசம்பர், 04, 1795 - பிப்ரவரி, 05, 1881)
அவரது படைப்புகளில் மிக முக்கியமானது, பிரஞ்சுப் புரட்சி, 3 தொகுதிகள். The French Revolution, 3 vol. (1837), (1858-65)
இந்த பிரெஞ்சுப் புரட்சி நூலின் முதல் தொகுதியின் முழுமையான கையெழுத்துப் பிரதியை சிறப்பாக முடித்துவிட்ட மன நிறைவில் அதனை தனது நண்பரான தத்துவஞானி ஜான் ஸ்டூவர்ட் மில் என்பவரிடம் கருத்தைப் பெறுவதற்காகக் கொடுத்துள்ளார். அவர் அதை வாசிக்க ஆரம்பிப்பதற்குள்ளாகவே அவருடைய பணிப்பெண், அதன் மகத்துவம் குறித்து அறியாதவர், தற்செயலாக அதை வெண்ணீர் காய்ச்சுவதற்காக எரித்துவிட்டார். இதனால் மனமுடைந்து விரக்தியில் சில நாட்கள் கழிந்த பின்னர், கார்லைல் ஒரு நாள் தன் இல்லத்தின் சாளரம் வழியாக கட்டிடம் கட்டும் தொழிலாளர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் அந்த செங்கல் கட்டிடங்களை அடுக்கடுக்காக மீண்டும், மீண்டும் அடுக்கிக் கொண்டிருப்பதைக் கண்டவரின் எண்ணத்தில் ஒரு புத்துணர்வு தோன்றியது. விரக்தியான மனநிலையிலிருந்து மீண்டு வந்தவர், முதல் பகுதியை மீண்டும் எழுதுவதற்கு முன்பு இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை புதிதாக எழுதினார். அந்தக் காலத்தின் வரலாற்று படைப்புகளில், மிகச் சிறந்ததாகக் கருதப்பட்ட இவருடைய இந்த படைப்புக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது.
கார்லைலின் பாணி மிகவும் வித்தியாசமாகவும், சிறப்பியல்புடையதாகவும் இருந்தது. இயல்பான நாவலாசிரியரின் அல்லது வரலாற்றாசிரியரின் பாணியில் இல்லாமல், இரண்டிலிருந்தும் வேறுபட்ட கூறுகள் இருந்தபோதிலும். அவர் கண்களுக்கு முன்பாக நிகழ்ந்த நிகழ்வுகளைப் பற்றி கருத்து தெரிவிப்பது போலவும், சில வரலாற்று கதாபாத்திரங்களை நேரடியாகவும் தெளிவாகவும் அணுகிய வகையில் எழுதினார். இதனாலேயே ஏனைய மற்ற வரலாற்றாசிரியர்களிடம் ஆழ்ந்த விரோதப் போக்கை வளர்த்துக் கொண்டார். தொழில்முறை வரலாற்றாசிரியர்களின் தனிப்பட்ட புறநிலைத்தன்மை அவருடைய எழுத்துக்களில் இல்லை என்பதே அவருடைய தனித்தன்மை மற்றும் சிறப்பு!
Sunday, January 19, 2020
தமிழ் மொழிவழிக் கல்வி
கர்நாடக மாநிலத்தில் கன்னடம் கட்டாயமாகப் பயில வேண்டும் என்பது போல மகாராட்டிரத்திற்கு மராட்டிய மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, தாய்மொழி கன்னடம் தான் பயிற்று மொழி; 10ஆம் வகுப்பு வரை, கன்னடம் கட்டாய மொழிப் பாடம் என்ற, சட்ட திருத்தத்தை, கர்நாடகா அரசு நிறைவேற்றியுள்ளது.
'தொடக்கக் கல்விச் சட்டம் 1920' சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை, தாய் மொழியான தமிழில் தான் கல்வி கற்றுத் தரவேண்டும் என்பதற்கான விதிகள், 1924இல் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில், தாய்மொழி வழிக் கல்வி தான் வலியுறுத்தப்படுகிறது என்பது உறுதியாகிறது. தற்போதுள்ள கல்வி உரிமைச் சட்டத்தின், 29 (எம்) பிரிவும், தேசிய கல்விச் சட்டமும் தாய்மொழிக் கல்வியைத் தான் வலியுறுத்துகிறது. இந்நிலையில், ஒன்றாம் வகுப்பிலிருந்து, தாய்மொழி வழி கல்வியை போதிக்காமல் இருப்பது சட்ட விரோதமானது அல்லவா?
ஏன் நம் தமிழ் நாட்டில் மட்டும் நம் தமிழ் மொழி வழிக்கற்பித்தல் கட்டாயமாக்கப்படவில்லை மை லார்ட்?
Subscribe to:
Posts (Atom)
காகத்தின் நுண்ணறிவு!
காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...

-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...