Tuesday, October 1, 2013

அல்லியும் ஆதவனும்!



பவள சங்கரி





ஆதவனே அல்லியின் மொழியறிவான்
அறிவானவன் பிரம்மாக்களின் உய்கையை 
 உய்கையின் முடிவாக்கும் வேதமது கீதை
கீதையின் பாதையில் இனியதொரு கீதம்    

 கீதமதின்  வேதம் வீணையறியும் மாயம்
 மாயமும் இதமாய் ஏற்படுத்தும் காயம்
காயமிது காற்றடைத்த பையாயினும்
பையினுள் நிறைந்திருக்கும் பரிவெனும் மெய்

 மெய்கண்டால்  உளத்தில் சித்திக்கும் தவம்
தவம் கசடற கருத்தினை வழங்கும் கற்பகமாய்
கற்பகமும் மாசில்லா மனமருளும் மரகதமாய
மரகதமணியும் மலர்செண்டும் மதமறியாது  

மதமும் பதமாய் கட்டுக்குள்போகும் மந்திரமாய்
மந்திரமும் தந்திரமும் மறைந்து மலருமங்கு மனிதம்
மனிதம் மகோன்னதத்தின் மாசற்ற சோதி
சோதிப்பிழம்பாய் சுட்டும்விழியாய் சுடரொளியாய் ஆதவன்!


படத்திற்கு நன்றி:
http://elenau-elena.blogspot.in/

                                                                                 

2 comments:

  1. //மனிதம் மகோன்னதத்தின் மாசற்ற சோதி// ;)))))

    அருமையான ஆக்கம். பொருத்தமான படம். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. // கீதமதின் வேதம் வீணையறியும் மாயம்
    மாயமும் இதமாய் ஏற்படுத்தும் காயம் //

    அருமை... பாராட்டுக்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete