Saturday, October 5, 2013

தாயே! தவமே!


பவள சங்கரி




தாயே! தவமே! தத்துவஞான ஒளியே!
மாயே மதிவதனி வாருமம்மா
சேயே யானுனைத் தழுவிடவே
காமதேனுவாய் கற்பகத்தருவாய் வாருமம்மா!

கொல்லன் உலையெனக் கொதிக்குமென் மனமே
நில்லெனக் கருணைகூர்ந்து வரமொன்றருள்வாயே
கல்லென்ற இதயம்கொண்டு எனைக் காணாமல்
கொல்லெந்தன் பாவம்யாவும்  பரிபாலியே!

ஊற்றைச் சடலமிதை உய்யும் வழியறியா உயிரிதை
தையல்நல்லாள் தள்ளிநின்றே பார்ப்பதென்னே
பைம்பொழில் மாதரசே பரிதவிக்கும் ஏழையெனை
கடைக்கண்ணால் பார்த்தருளுமம்மா!

3 comments:

  1. படமும் பாடலும் அருமை. பாராட்டுக்கள்.

    இனிய நவரத்திரி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. சேயே யானுனைத் தழுவிடவே
    காமதேனுவாய் கற்பகத்தருவாய் வாருமம்மா!//

    சேய் அழைத்தால், தாய் வந்து அருள்வாள்.
    கவிதை அருமை.
    நவராத்திரி வாழ்த்துக்கள்.

    ReplyDelete

சூழ்நிலைக் கைதி

வார்த்தைகளை கொஞ்சம் பக்குவமாகப் பயன்படுத்தியிருந்தால் இவ்வளவு பெரிய துன்பச் சூழலில் சிக்கியிருக்க மாட்டேன் சற்றே பொறுத்திரு எனும் மந்திர வார...