பவள சங்கரி
சுய - நுகர்வின் விசித்திரமானதோர் வடிவம்! யான் தவறிழைத்திருக்கக்கூடிய மற்றும் ஏமாற்றப்பட்ட காலமும் இருப்பினும் , யான் தவறிழைத்தும், வஞ்சிக்கப்பட்டும் இருக்கிறேன் என்பதை உணராமலே உள்ளேன் என்ற வீணான எண்ணம் கொண்டோரைக் கண்டு எள்ளி நகையாடலாம் யான்.
பின்பற்றுதலை விளையாட்டாகக் கொண்டு பின்தொடருவோரைப் பற்றி யான் என்ன கூற இயலும்?
உம் ஆடைகளில் தம் அழுக்கடைந்த கரங்களைத் துடைப்பவரே உம்முடைய அந்த ஆடையை எடுத்துக் கொள்ளட்டும். அவ்ருக்கு அது மீண்டும் தேவையாக இருக்கலாம்; கட்டாயமாக உமக்கு அதன் தேவையிருக்காது.
பணப் பறிமாறறம் செய்வோர் நற்காப்போனாக இருக்க இயலாது என்பது துயரம்.


