Thursday, April 24, 2014

கலீல் ஜிப்ரானின் பொன் மொழிகள் - (1)



பவள சங்கரி

கலீல் ஜிப்ரானின் பொன் மொழிகள் என் மொழி பெயர்ப்பில் - (1)



கவிதை என்பது மனோவசியத்திற்கான ஞானம்
ஞானம் என்பதோ மனதினூடே இசைக்கும் கவிதை.
நம்மால் ஒருவரின் மனதை வசியப்படுத்த முடியுமானால், 
அதே நேரம் அவர் மனதில் நம்மால் இனிய கீதமிசைக்கவும் முடியும்.
பின்னர் உண்மையில் இறை நிழலில் வாழக்கூடும் அவனால்.
அகத்தூண்டுதல் எப்போதும் இசைக்கும். புத்துணர்வு ஒருபோதும் விளக்கமளிக்காது.

கலீல் ஜிப்ரான்

Tuesday, April 22, 2014

புவியீர்ப்பு!



பவள சங்கரி




எதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்குமாம்
சொல்கிறார்கள் அவர்கள்.
எரிகின்ற கொள்ளிகள் கூட அருகிலுள்ள  அனைத்தையும்
பாரபட்சமில்லாமல் ஈர்க்கும்.
பரியும் நரியும் பரிகாசமாய் கைகொட்டி எக்களித்தாலும்
மாடு என்றும் மாடாய் உயர்ந்து நிற்கும்.

Thursday, April 17, 2014

'இலைகள் பழுக்காத உலகம்’


பவள சங்கரி

'இலைகள் பழுக்காத உலகம்’  - புத்தக மதிப்புரை

ராமலஷ்மி அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பு இது. ஆழ்ந்த அனுபவத்தின் சாயலை ஏற்படுத்தும் தலைப்பு. இலைகள் பழுக்காத உலகம் என்று ஒன்று இருந்தால் அது எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தால் அது பலவிதமான எண்ண ஓட்டங்களுக்கு வழி வகுக்கின்றன. பழையன கழிந்தால் தானே புதியன பிறக்க முடியும்? பூமியில் புதியன வாழ இடம் வேண்டுமே.  வாழ்ந்து முடித்து ஆண்டு அனுபவித்த ஒன்று விலகி வழிவிட்டால்தானே புதிதாகப் பூத்து மணம் வீசும் ஒன்று வாழ வழி கிடைக்கும். இப்படியான எண்ணத்துடன் உள்ளே நுழைந்தால் அங்கே வேறு பல வண்ணங்களும் காணக் கிடைத்ததில் நின்றது எது, வென்றது எது என மீண்டும் சிந்தனை ஆற்றில் நீந்தியபடி வெளிவருவோம்..  ராமலஷ்மியின்  வார்த்தைகளின் எளிமையில் கருத்துகளின் கனமும் சுகமான சுமையாகத்தான் ஆகிவிடுகிறது!

Monday, April 14, 2014

வெற்றி தரும் புத்தாண்டே வருகவே!

பவள சங்கரி






கோட்டுப்பூவாம் கொன்றையிலுறையும்  கோபதியே
மறைகண்ட மங்கல மயோரனவன்
கறைக்கண்டன் கற்பகத்தருவானவன்
முயற்புல்லிற் பனித்துளியானவன்
மிறல்நகை கயற்கண்ணியின் சிற்றம்பலவன் 
சிறிபலம் நாடும் சுடலையாடியவன்
பற்பதமதில் பற்றாயர் கோலம்கொண்டவனவன்
பற்றாயமாய் சுபங்கரியின் மனத்திலுறைபவனவன்
சுப்பிரதீபம் நாடுவானவன்  தினம்! தினம்!
சித்திரை மகளவள் தருவாள் ஜெயம்! ஜெயம்!


Sunday, April 13, 2014

தமிழ் புத்தாண்டு மலர்ந்தது!


பவள சங்கரி



சித்திரை மகள் ஜனித்தாள்!
ஜெயமாய் முகம் மலர்ந்தாள்!!!

நித்தம் நிலவின் ஒளியில்
சித்தம் மலரும் சிரிப்பில்
முத்தம் சிதறும் புவியில்
கன்னம் சிவக்க கலந்தால்
முன்னம் இருந்த நிலையில்
இன்னம் இருக்க வள்ளல்
அருளும் அளித்து சொல்லல்
சுவையும் கரும்பும் தேனும்
பாலும் பழமும் கற்கண்டும்
சந்தம் பலவும் சரமாரியாய்
வெடிக்கும் உலகும் பிரகாசமாய்
படிக்கும் பாடமும் உள்ளுருக்குவதாய்
நொடிக்கும் பொழுதும் இன்னமுதாய்
வாழ்க! வாழ்கவே!! வளமாய் வாழ்கவே!!

Tuesday, April 8, 2014

பாம்பைக் கண்டால் ! (5)


மிக்க நன்றி திரு கல்பட்டு நடராஜன் ஐயா.


நேத்து ராத்திரி என் கனவுல ஒரு பாம்பு வந்து என்னைக் கேட்டிச்சு, “ஐயா கல்பட்டாரே எங்களெப் பத்தி கட்டுரை எளுதி எங்கெளெ ஒரே அடியா வெஷம் உள்ளவங்க, வெஷமம் செய்யறவங்கன்னு டீவீ சீரியலுங்களுலெ வர வில்லீங்க மாதிரி ஜனங்களுக்குக் காட்டீட்டீங்களே.  எங்களுக்கும் மனுசங்களுக்கும் ஆண்டாண்டு காலமா இருந்து வந்திருக்கிற தொடர்பு பத்தி ஒரு வார்த்தெ எளுதினீங்களா?  இது என்னங்க ஓர வஞ்செனெ?” ன்னு.  அதன் விளைவுதான் இந்த அஞ்சாவது கட்டுரை.

மனிதன் இந்த உலகில் தோன்றிய நாள் முதல் இன்று வரை பாம்பும் மனிதனும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.



Sunday, April 6, 2014

பாம்பைக் கண்டால்! (4)






பாம்புக் கடிக்கு வைத்தியம் பற்றிப் பார்க்கப் போகுமுன் வேறு சில பாம்புகள் பற்றியும் பார்க்கலாமா?

விஷம் துப்பும் நாகம்  (Spitting cobra) என்ற ஒரு பாம்பு ஆப்பிரிக்காக் கண்டத்தில் காணப்படுகிறது இந்த வகைப் பாம்பு..


http://www.impactlab.com/wp-content/uploads/2009/01/mozambique_spitting_cobra.jpg
விஷம் துப்பும் நாகம்

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...