Friday, July 25, 2014
Tuesday, July 22, 2014
புன்னைநல்லூர் முத்துமாரியம்மன்
பவள சங்கரி
மூலவர் : முத்து மாரியம்மன், துர்க்கை
தல விருட்சம் : வேம்பு மரம்
தீர்த்தம் : வெல்லகுளம்
பழமை : 500 ஆண்டுகள்
புராணப் பெயர் : புன்னைவனம்
ஊர் : புன்னைநல்லூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
தல சிறப்பு : இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக, புற்று வடிவில் அருள் மழை பொழிகிறார்.
தல வரலாறு : நம் இந்தியத் திருநாட்டில் அமைந்திருக்கும் ஒவ்வொரு ஆலயத்திற்கும் அதன் அதிசயத்தின் அடிப்படையில் ஒரு வரலாறு இருக்கத்தான் செய்கிறது. சில நேரங்களில் இது புராணக்கதை என்ற குறுகிய வட்டத்தில் சென்றாலும், வரலாற்றில் நீங்காத இடம் பெற்றுள்ள மன்னர்களால் எழுப்பப்பட்ட ஆலயங்கள் என்ற ஆதாரங்கள் ஓரளவிற்கேனும் அதன் நிலைப்பாட்டை உறுதி செய்யக்கூடியதாகவே உள்ளது. அந்த வகையில் இத்தலமும் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது என்ற சிறப்பைப் பெறுகிறது.
Monday, July 21, 2014
டாப் டக்கர்
பவள சங்கரி
மச்சி, எங்கடா இருக்கே, சீக்கிரம் வாடா.. ஷாப்பிங் போகனும்னு சொன்னேனில்ல..
எங்கடா, இப்பதான் டூட்டி முடிச்சு வெளியே கிளம்பறேன். வந்து சேர இரண்டு மணி நேரம் ஆகும். பீக் ஹவர்.. பஸ் கிடைச்சி வரணுமே.. அப்புடி என்னடா அவசரம் உனக்கு.. வீக் எண்ட் போலாமே மச்சி...”
“இல்லடா, என்னோட போன் ரொம்ப மக்கர் பண்ணுது.. உடனடியா வாங்கியாகணும். முக்கியமான டேட்டாஸெல்லாம் அழிஞ்சி போச்சுன்னா என்ன பண்றதுன்னு பயமா இருக்குடா.. இன்னைக்கு சம்பளம் வாங்கினேன். அதான் உன்னோடது மாதிரி ஒரு நோக்கியா போன் வாங்கலாம்னு பாக்குறேன்”
நோக்கியா வேண்டாம்டா. மைக்ரோசாஃட்காரன் நோக்கியாவை வாங்குனதிலிருந்து இன்னும் சரியா செட்டாகலடா... எல்லோரும் இப்ப அதைவிட்டு சேம்சங்க் போயிட்டிருக்காங்க. அதான் இப்ப மார்கெட்ல டாப் டக்கரா போகுது. நான் இப்ப சாம்சங்க் கம்பெனிக்கு அடுத்த ஸ்டாப்புலதான் பஸ்ஸீக்கு நிக்கறேன். நீ கிளம்பி வந்துடு. நான் அப்படியே பொடி நடையா அதுக்குள்ள வந்து சேந்துக்கறேன்.. சரியா”
“ம்ம்.. அப்படியா சொல்ற.. ஓகேடா மச்சி. இதோ இப்ப உடனே கிளம்பறேன். வந்து நம்ம உடுப்பி கிருஷ்ணா பவன்ல சூப்பர் நெய் ரோஸ்ட் வாங்கித் தறேன்”
“ஓகே.. ஓகே.. அப்ப சீக்கிரம் வந்து சேரு. பசி வயித்தைக் கிள்ளுது”
Wednesday, July 16, 2014
Monday, July 7, 2014
மானசா
பவள சங்கரி
“மானசா.. ஏய் மானசா.. எந்த உலகத்துல இருக்கே நீ.. எப்பப் பார்த்தாலும் காதுல பாட்டை மாட்டிக்கிட்டு, ஏதோ உலகத்துல சஞ்சாரம் பண்ணிக்கிட்டு .. என்ன பண்றே.. நான் கழுதையா கத்துறது ஏதாவது உனக்கு காதுல உழுகுதா..
இல்லைனா எப்பப் பார்த்தாலும் சிரிப்பும், கும்மாளமும் தான்”
ஏனோ இந்த அம்மாக்களுக்கு மட்டும் தான் கடந்து வந்த அந்த ஸ்வீட் சிக்ஸ்டீன் மனசு மறந்தே போகுது.. எத்தனை சுகமான பருவம் அது. கண்ணுல பார்க்குறதெல்லாம் அழகு. எதோ எல்லாமே தனக்காகவே படைக்கப்பட்டது போல ஒரு நினைப்பு. அதோட உலகத்துலயே தன்னைவிட வேற அழகியே இல்லைங்கற மதர்ப்பு..
1008 கோணத்துல கண்ணாடியில அழகு பாக்குறதே முக்கியமான வேலை..
இத்தனை கற்பனையையும் அந்த ஒற்றை வரியில் தவிடு பொடியாக்க அம்மாவுக்கு மட்டுமே சாத்தியம். “இங்க பாருடி, சும்மா சிலுப்பிக்கிட்டுத் திரியாத.. பன்னிக்குட்டி கூட பருவத்துல அழகாத்தான் இருக்கும்.. போ.. போ.. போய் பொழப்பப் பாரு..”
Subscribe to:
Posts (Atom)
பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43
63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர் கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...
-
விடியற்காலை....பிரம்ம முகூர்த்த வேளை. தியானத்திற்கான அருமையான நேரம். வஜ்ராசனத்தில் பயிற்சிகள் முடித்து, சுகாசனத்தில் ப்ரணாயாமம் ..............
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...






