Monday, July 27, 2015

அடியாரும் ஆன்மீகமும் (2)


பவள சங்கரி
1382426_823390031082957_239293274964935666_n
12914_823390161082944_8842537095226880754_n
ஆன்மீக நெறியில் நயந்து இருப்போரின் உள்ளம் என்றும் எதைக்கண்டும் அஞ்சுவதில்லை. எம்மைக் காக்கும் ஈசன், பரம்பொருள் எம்மை வழிநடாத்துவான் என்ற இறுமாப்பு கொண்டோர்களாகவே, தன்னம்பிக்கையின் சிகரமாக வலம் வருகின்றனர். அந்த வகையில் அப்பரடிகளின் பாடல்கள் அனைத்தும் பெரும்பாலும் சுதந்திர உணர்வுமிக்க எழுச்சிப் பாடல்களாகவே அமைந்துள்ளன எனலாம். உழவாரப்படை கொண்டு சமூகப் பணியையும் குறைவிலாது நிறைவேற்றியவர். சாதி, குலம், மதம் என எந்தவித வேறுபாடும் இன்றி, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற தூய நெறியில் வாழ்ந்தவர். இந்த தன்னம்பிக்கையே இவருக்கு பல்லவ மன்னனையே துணிந்து எதிர்க்கும் வல்லமையைப் பெற்றுத்தந்தது. சமூக நலன் கருதி தம் வாழ்க்கையையே அர்ப்பணித்த புரட்சிக் கவிஞர் இவர் என்றால் அது மிகையாகாது!

Sunday, July 26, 2015

அடியாரும், ஆன்மீகமும்!



 ‘பெரிய புராணம்’ எனும் தெய்வீக நூலில், அடியார்களைப் பற்றிப் பாடும்போது சேக்கிழார் பெருமான்,

கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்  
ஒடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார்
கூடு மன்பினிற் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.

Saturday, July 25, 2015

எத்தனை நாளுக்கோ?


பவள சங்கரி


ஆமாம்
தாங்கொணா துயரம்தான்
தீர்ந்துபோவதை
தவிர்க்க முடியவில்லைதான்
கண்ணீர்மல்க
காலிசெய்வதை ஏனென்று
கேட்காதீர்கள்
தீர்ந்த கணக்கின் சொச்சமும்
முற்றும் தீரும் சாபம்
கடந்தவை கரைசேர வாய்ப்பில்லை
விசும்பலை மூடிமறைக்க
காரணமுமில்லை.
சிறகொடிந்த புள்ளிற்கு சீவன்
சிதறிய சிற்பமாயினும்
மனமறிந்து வீசியெறியும் துரோகமும்
 தவிர்க்க முடியாதே?
நம் எல்லோருக்கும் இச்சுவை
வேண்டித்தானே இருக்கிறது?
தொட்டுக்கொள்ளவும் கட்டு
கட்டிச்செல்லவும்
சப்புக்கொட்டவும் குளிரூட்டவும்
குறைசொல்லவும் காலமுண்டு.
எத்தனை சொன்னாலும்
எப்படியிருந்தாலும்
இதற்கிணை வையத்திலில்லை
இனியொருநாளும் இருக்கப்போவதுமில்லை.
இருப்பதை யுகத்துக்கும் பாதுகாக்கவும்
சாதனமேதுமில்லை.
பட்டுக்கரம் பரிவுடன் பகிர்ந்தளித்த
மாதா ஊட்டாத சோறிது!
விட்டுத்தர வினைதீருமா
சுட்டபழத்தின் சுவையின்னும்
எத்தனை நாளுக்கோ?
கட்டிக்காக்க காவலன் யாருமுளரோ?
வெட்டவெளியில் காய்ந்தாலும்
சுக்காகி சூனியமாகிடுமே?
எத்தைத்தின்றும் பித்தம் தீரப்போவதில்லை
வித்தையேதும் கற்றதுமில்லை.
காயமே இது பொய்யடா வெறும்
காற்றடைத்த பையடா எனும்போது
கட்டிக்காக்கும் இப்பூவுடலே ஓர்நாள்
புழுத்துப் போகுமெனும்போது
தாய்ப்பாசம் மட்டுமே உயிர்மூச்சானவள்
ஓர்நாள் அதையும் துறந்து
பூவுலகம் செல்லும் பயணகதியில்
பரிவுடனே எமக்காக போட்டுவைத்த
பச்சை மாவடுவும் மாவிஞ்சியும்
பச்சைமிளகும் மாவளிங்கிழங்கும் மட்டும்
பரலோகம் ஏகாமல் நித்தியமாய்
வாழுவது சாத்தியமா என்ன?
குக்கரின் கூக்குரல்தாண்டி எங்கோ
சுற்றும் எண்ணங்கள்!
அம்மா.. அம்மா.. என்னம்மா ஆச்சு?
எந்த உலகில் மிதக்கிறாய்
சிலிர்த்து எழ திகைத்து நகர
எல்லாமே யதார்த்தமாச்சு!
ஆ..  ஆ... சூடுபட்ட பூனைதான்!


Thursday, July 16, 2015

அவந்திகா



பவள சங்கரி

அவந்திகா



நம் ஒவ்வொருவரின் செயல்பாட்டிற்குமே நாம் பெற்றிருக்கின்ற ஞானத்தின் இயல்பு, நம்மிடம் மறைந்துள்ள சத்வ, ரஜோ, தாமச குண இயல்புகள், நமது கொள்கைப் பிடிப்பு ஆகியவையும், நமது கர்மப் பலனும் தான் முக்கிய காரணம்.

ஒரு செயலில் ஈடுபடுதல், செய்யாமல் விடுவது, செய்யத்தக்க செயல், செய்யத் தகாத செயல், அச்சம், அச்சமின்மை, பந்தம், விடுதலை போன்றவற்றைச் சரியாக உணர்ந்துகொள்ளும் அறிவு தான் சாத்வீக புத்தி.

“எந்த ஓர் அறிவு செய்யத்தக்கது, செய்யத் தகாதது ஆகியவற்றைச் சரியாக அறிவதில்லையோ அது குழப்பமான ராஜச புத்தி. இவை தவிர தர்மத்தை அதர்மமாகவும், அதர்மத்தைத் தர்மமாகவும் மாற்றிப் புரிந்துகொண்டு செயல்படுவது தாமச புத்தி. இதற்கு நல்லதெல்லாம் தீயதாகவும், தீயவை நல்லவையாகவும் தோன்றும். எடுத்துச் சொன்னாலும் புரியாது. தொடர்ந்து தவறாகச் செயல்படவே தூண்டும்.

Wednesday, July 15, 2015

கர்மவீரர் காமராசர் !



தன் தாய்க்கு மாதம் 120 ரூபாய்  சாப்பாட்டு செலவிற்குக் கொடுப்பாராம். ஒரு முறை அவருடைய தாயார், மகனிடம், செலவிற்கு பணம் போதவில்லை கொஞ்சம் சேர்த்து கொடுக்கும்படி கேட்டாராம். ஆனால் நம் தலைவரோ முடியாது என்று மறுத்துவிட்டாராம். முதல் அமைச்சரின் தாயார் என்பதால் அடிக்கடி அவரக் காண வருபவர்களுக்கு காபி, தேநீர் கூட கொடுக்க முடியவில்லையே என்று அன்னை வருந்தியிருக்கிறார்.  அப்போது காமராஜரைப் பார்த்து அவருடைய  நண்பர் ஒருவர், ‘நீங்கள்தான் சம்பளம் வாங்குகிறீர்களே. அதையெல்லாம் என்ன செய்கிறீர்கள்?’  என்று கேட்க, அவரும் உடனே, ‘என் தாயாருக்கு சாப்பாட்டு செலவுக்கு பணம் அனுப்பி வைக்கிறேன். என்னுடைய  சாப்பாட்டு செலவுகள் போக, அடிக்கடி கட்சி வேலைகளுக்காக புதுடெல்லிக்குப் போவதால்,  சம்பளப் பணம் செலவழிந்து போகிறது. முதலமைச்சராகப் போனால் மட்டும்தான் அரசாங்கச் செலவு. நம் கட்சி வேலைகளுக்காகப் போனால் என் சொந்தப் பணத்திலேதான் சென்று வருகிறேன்’ என்று பதில் வந்துள்ளது. எத்தனை பெருந்தன்மை! இவரல்லவோ சிறந்த தலைவர்!

Tuesday, July 14, 2015

நாடகத் துறையில் ஒரு மைல்கல்!


பவள சங்கரி
நம் சங்கத் தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் உள்ளடக்கியது. இயற்றமிழ் இன்று மெல்ல, மெல்ல உருமாறிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் நம் தமிழ் வல்லுநர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. கர்நாடக இசை, மெல்லிசைப் பாடல்கள், பக்தி இலக்கியம் போன்றவைகள் மூலமாக இசைத்தமிழ் காப்பாற்றப்பட்டு, தம் நிறம் இழக்காமல் இருக்கிறது. தம் எண்ணங்களை தமது உடல்மொழியின் வாயிலாக இயல்பாக வெளிப்படுத்தி, புறத்தார்க்குப் புலனாக நடித்துக் காட்டுதற்கு ஏற்றவாறு அமைந்த மொழிநடை நாடகத் தமிழ் என வழங்கப்படுகிறது. ஆனால் வீரம், காதல், பக்தி, வாழ்க்கை நெறி, வாழும் முறை என அனைத்தையும் உள்ளடக்கிய நம் தமிழ் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் நாடகக் கலை இன்று வருங்கால சந்ததியினருக்கு முழுமையாகச் சென்றடையுமா என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. தற்பொழுது திரு. கிரேசி மோகன், திரு ஒய்.ஜி. மகேந்திரன், திரு. எஸ்.வி. சேகர் போன்ற குறிப்பிட்ட சிலரே நாடகவியலை கட்டிக்காத்துக்கொண்டு வரும் சூழலில் சமீபத்தில் திரு.கிரேசி மோகன் அவர்களின், ‘சாக்லேட் கிருஷ்ணா’ என்ற நாடகம், நகைச்சுவையும், ஆன்மீகமும் கலந்த கலவையாக, பிரகாசித்துக் கொண்டிருக்கும் மேடை நாடகம் தன்னுடைய 777 வது நிகழ்ச்சியை வெகு சிறப்பாகக் கொண்டாடியுள்ளது. போகிற போக்கில் தம் யதார்த்தமான வசனம் மூலம், சகோதரர் மாது பாலாஜி மற்றும் தம் நாடகக் குடும்பத்துடன் உலகின் பல பகுதிகளில், வெகு சிறப்பாக நடந்து வரும் மேடை நாடகம் இது. திரையுலகிலும், எழுத்து, வசனம் என அனைத்திலும் தம் முத்திரையைப் பதித்துள்ள மூத்த எழுத்தாளர், திருமிகு சித்ராலயா கோபு, உலக நாயகர் திருமிகு கமலஹாசன், திருமிகு நல்லி குப்புசாமி அவர்கள் முன்னணியில், சென்னை மயிலை நாரத கான சபாவில், அரங்கு நிறைந்த காட்சியாக மிகச் சிறப்பாக நடந்தேறியது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, மிகப்பெரிய தொகைக்கு நுழைவுச் சீட்டு விற்பனை ஆகியுள்ளதுதான். மக்களிடம் நல்ல நாடகங்களைக் காணும் ஆவல் அதிகமாக இருப்பதையே இது உணர்த்துகிறது.
acraz
திரு.நல்லி குப்புசாமி அவர்கள் கமலஹாசன் அவர்களின் சமீபத்திய வெற்றிப்படமான ‘பாபநாசம்’ திரைப்படத்தை பாராட்டிப் பேசியவர், அப்படத்தில் பல காட்சிகளில் தாம் வெளியில் வந்து நின்று கொண்டதைக் கண்ட நண்பர்கள் காரணம் கேட்டபோது, தாம் ஏற்கனவே மலையாளத்தில் வந்த, மோகன்லால் படத்தை பார்த்திருந்ததால், போலீசார் அவரை அடிக்கும் காட்சி வரும் நேரத்தில் அதைக் காணச்சகிக்காது, வெளியில் வந்துவிட்டதாகச் சொன்னார்.

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...