Sunday, December 23, 2012


அன்பு நண்பர்களே,


பேராண்மைமிக்க பெண் சாதனையாளர்கள் பற்றிய என்னுடைய கட்டுரைத் தொகுப்பை பெருமைமிகு, ‘கோனார் மாளிகை’ பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய நான்கு புத்தகங்களை பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள் என்பதை மன  நிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நம் நண்பர்கள் முடிந்தவர்கள் வாங்கிப் படித்து தங்களின் மேலான கருத்துக்களைக் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதோ முதலாவதாக ‘விடியலின் வேர்கள்’ . வரலாற்றுப் புதின ஆசிரியர் திரு திவாகர் அவர்களின் சிறப்பானதொரு அணிந்துரையுடன் அழகாக வடிவமைக்கப்பட்டு வெளிவந்துள்ளது.


Monday, December 17, 2012

வாழ்வே தவமாய்!




    “வீணையடி நீ எனக்கு,
    மேவும் விரல் நானுனக்கு
    பூணும் வடம் நீ எனக்கு,
    புது வயிரம் நானுனக்கு”


 பாரதியின் இந்தப் பாடலை வாசிக்கும்போது மட்டும் கவிதாவின் வீணை சற்றே அதிகமாக குழைந்து, குழைந்து போவது போல்த் தோன்றுவது காட்சிப்பிழையாகக் கூட இருக்கலாம். ஆனால் கவிதாவின் குரலில் ஒலிக்கும் அந்த ஜீவனுள்ள வரிகள் கேட்போரின் செவிகளில் தேன் மழை சொரிந்துவிட்டுச் செல்வதைத் தவிர்க்க இயலாது. கலைமகளின் அந்த இசைக்கருவி இந்தப் பூமகளின் விரல்களின் நர்த்தனத்தில் தேவகானம் பொழிவது உறுதி என்று பிரபல இசை விமர்சக வித்தகர் சுப்புடுவிடமே தம் இளம் வயதிலேயே விருது பெற்ற பெருமையுடையவள். இன்று காதோரம் சில நரை முடிகள் எட்டிப் பார்க்கும பருவத்திலும், குரலிலும், மீட்டும் இசையிலும் சற்றும் தொய்வில்லாத அதே வளம் கண்டு வணங்காதவர் இலர்.  

Tuesday, December 11, 2012

நம்பிக்கை ஒளி! (10)




ஒட்டவும் முடியாமல், விலகவும் முடியாமல் உள்ளே உறுத்தும் சில உறவுகள் கொடுக்கும் வலி மன நிம்மதியைப் பறித்து விடக்கூடியது. ஒவ்வொன்றாக உறவுகளெல்லாம் விட்டு விலகிய காலம் போய் இன்று மெல்ல மெல்ல புதிய சொந்தங்களும், பந்தங்களும் ஒட்டிவர வாய்ப்பு அமைந்தும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் மாலதி. சின்னம்மாவிடம் நேரில் சென்று பேச வாய்ப்பில்லாதலால், முத்தழகு அண்ணனைப் பற்றிய தகவலை போனில் விவரமாகச் சொன்னாள். விசயம் அறிந்தவர் உள்ளம் நெகிழ்ந்து, “மாலு ஆண்டவன் உன் வாழ்க்கையிலும் கண் திறந்திருக்கிறான். உனக்கும் ஒரு விடிவு காலம் வந்திருக்கு. தேவையில்லாம விரோதத்தை வளர்த்துக்காதே.. குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. அவிங்கவிங்க சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி போக வேண்டியதுதான். முத்தழகனும் தெரிஞ்சு எந்த தப்பும் செய்யலையே.. காலம் செய்யுற கோலம் இதெல்லாம்..  இனிமேலாவது உன் வாழ்க்கை நிறைவா இருக்கணும்டா...  எதையும் மனசுல வச்சிக்காதே...” என்று சொன்னது அப்போதைக்கு அவ்ளுடைய கோபத்தை சற்றே தணியச் செய்திருந்தாலும், அண்ணன் என்று முழுமையாக ஏற்றுக் கொள்ளும் எண்ணம் மட்டும் வர மறுத்துக் கொண்டிருந்தது. சுப்ரஜாவும்  ஓரிரு முறை போனில் தொடர்பு கொண்டு பேசியும், பாசம் பெரிதாக வரவில்லை. காலம் மட்டுமே எல்லாவற்றையும் செப்பனிடும் வல்லமை பெற்றதன்றோ?

Friday, December 7, 2012

தாமிர சபை


பவள சங்கரி


காந்திமதியம்மன் உடனமர் ஸ்ரீ நெல்லையப்பர் ஆலயம்


மூலவர்    :     நெல்லையப்பர்  (வேண்ட வளர்ந்தநாதர் )
அம்மன்/தாயார்    :     காந்திமதி, வடிவுடையம்மை
தல விருட்சம்    :     மூங்கில்
தீர்த்தம்    :     பொற்றாமரைக்குளம் (ஸ்வர்ண புஷ்கரணி கருமாறித் தீர்த்தம், சிந்துபூந்துறை
பழமை    :     1000-2000 வருடங்களுக்கு முன்


சிவபெருமானாரின், நடராசத் திருமேனியின் அருட்கூத்து நடத்துகின்ற ஐம்பெரும் சபைகளான, ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை ஆகியவற்றில் “தாமிர சபை” என்று போற்றப்படுகிற காந்திமதியம்மன் உடனமர் நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலியில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சபைகளில், இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர சபையாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன.


தேவாரப் பாடல் பெற்ற பாண்டிநாட்டுத் தலங்களில் இது 14வது தலம்.

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப்பதிகம்

Monday, December 3, 2012

நம்பிக்கை ஒளி! (9)






பவள சங்கரி

நம்பிக்கைஒளி (8)

சகோதரன் என்ற சக்தி வாயந்த உறவு இருந்தும் இல்லாமல் மனம் வெறுப்படைந்த நிலையில், ஒரேயடியாக மறந்துபோன நினைவுகள் அனைத்தும் மெல்ல மெல்ல தலை தூக்கி தூக்கத்தையும், படிப்பையும் கெடுத்தது. இத்தனை நாள் இல்லாத அந்த பாசம் இன்று மட்டும் எப்படி
புதிதாக வரும் என்ற கோபமே மேலிட்டது.

"மாலு, மாலு என்னாச்சு.. கண்ணெல்லாம் சிவந்திருக்கு.. உடம்பு ஏதும் சரியில்லையா?” நெற்றியில் கை வைத்துப் பார்த்த, உடன் தங்கியிருக்கும் அறைத்தோழி ஆர்த்தி உடல் நெருப்பாய்க் காய்வதை உணர்ந்து, “நல்ல காய்ச்சல் இருக்கும் போல இருக்கு மாலு. வாங்க டாக்டர்கிட்ட போய் வரலாம். நானும் வேண்டுமானால் இன்று ஆபீசிற்கு லீவ் போட்டுவிடுகிறேன்என்றாள்.அதெல்லாம் வேண்டாம் ஆர்த்தி, ’மெட்டாசின்மாத்திரை இருக்கு போட்டுகிட்டு தூங்கி எழுந்தா சரியாகிடும். நீங்க அனாவசியமா லீவ் எல்லாம் போட வேண்டாம். கிளம்புங்க ஆர்த்தி, ... இவ்வளவு அக்கறையா சொன்னதற்கு ரொம்ப தேங்க்ஸ்

Wednesday, November 28, 2012

மீண்டுமொரு சரித்திரம்





காத்திருக்கிறாள்
கன்னியவள்
கனிவான மணமகனுக்காக...

கண்ணில் ஓர் காதலுடன்
கையில் மாலையுடன்
சுயம்வர மண்டபமதில்...

Tuesday, November 27, 2012

Sand and Foam - Khalil Gibran (5)



 (வாலிகையும்) மணலும் , நுரையும்! (5)

பவள சங்கரி

புனையிழையவள் தம் முகத்தை புன்னகையால் முகத்திரையிடலாம்.

சோகத்தில் சோர்ந்த இதயமது, இன்பமான இதயத்துடன், இன்னிசை கீதமதை இதமாக இசைக்கும் அவரின் என்னே உயர் பண்பு.

எவனொருவன் மாதொருத்தியை புரிந்து கொள்கிறானோ, அல்லது மேதைகளை, சோதனைகளுக்குள்ளாக்குகிறானோ, அல்லது மௌனத்தின் மர்மமதை விடுவிக்கிறானோ, அவனொருவன் மட்டுமே சௌந்தர்யமான சொப்பனத்திலிருந்து, எழுப்பி, காலை உணவு மேசையின் மீது அமரச் செய்யக் கூடியவன்.

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...