Friday, January 11, 2013

சுவாமி விவேகானந்தரின் தத்துவ முத்துக்கள்!


பவள சங்கரி

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கைத் தத்துவங்கள்!

உம்மை நேசிப்பவரை ஒருக்காலும் வெறுக்காதே!

உமக்கு உதவியவரை ஒருநாளும் மறவாதே!

உம்மை நம்பியவரை ஒருபோதும் ஏமாற்ற எண்ணாதே!


15 வாழ்க்கைத் தத்துவங்கள்

1. அன்பு மட்டுமே வாழ்க்கையின் மேன்மைக்கான வழி.
சுயநலமில்லாத சத்தியமான அன்பு ஒன்றே அமைதியாக வாழும் வழி.

Thursday, January 10, 2013

2013ம் ஆண்டின் புத்தகத் திருவிழாவில் எனது எழுத்திற்கு ஒரு அங்கீகாரம்

அன்பு நண்பர்களே,

வணக்கம். நாளை 11.01.2013, சென்னை நநதனத்தில் துவங்க உள்ள புத்தகக் கண்காட்சியில்  கடை எண்: 488 மற்றும் 489 பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரின் கடையில் என்னுடைய 4 புத்தகங்களும் வெளியாக உள்ளன. நண்பர்கள் இயன்றால் சென்று வாங்கிப் படித்து தங்களுடைய மேலான கருத்தைப் பகிர்ந்து கொண்டால் நன்றியுடையவளாக இருப்பேன்.

(1) விடியலின் வேர்கள் -  பேராண்மைமிக்க பெண் சாதனையாளர்கள்

(2) கனலில் பூத்த கவிதைகள்! - சிறுகதைத் தொகுப்பு

(3) கனவு தேசம் - சிறுகதைத் தொகுப்பு

(4) நம்பிக்கை ஒளி! - குறுநாவல்



 நன்றி.

அன்புடன்
பவள சங்கரி                                           

Tuesday, January 8, 2013

மணலும், (வாலிகையும்) நுரையும்! (6)


Sand And Foam - Khalil Gibran

பவள சங்கரி

 

 மேதையென்பவன், ராபினின் மிதமானதொரு வசந்தகால துவக்கத்தின் கீதமானவன்.

மோசமான இறகு படைத்ததோர் ஆன்மாவாயினும், அதுவும்கூட உடற்தேவையினின்று தப்பிக்க இயலாது.

பித்தன் என்பதாலேயே அவன் உம்மையும், எம்மையும் விடக் குறைந்த தகுதியுடனான இசைக்கலைஞன் அல்லன்; ஒருகால் அவன் வாசிக்கிற அந்த இசைக்கருவி மட்டும் சிறிது ராகம் தப்பியதாக இருக்கலாம்.

  இருதயத்தின் அமைதியினூடே உறைந்திருக்கும், தம் குழவியின் இதழ்களின்மீது இசைக்கும், ஒரு தாயின் பாடல் அது.
நிறைவேறாத ஆசைகளென்பதே இல்லை.

Monday, January 7, 2013

எரிதழல் கொண்டு வா!



பவள சங்கரி

மூடியிருந்த அறைக் கதவின் வழியாக உயிரை உருக்கும் மரண ஓலம். தீயால கருகி எரிந்து துடிக்கும் இறுதி நேரத்து போராட்டம். தெருவில் கூட்டம் கூடிவிட்டது. யாரோ ஆம்புலன்சுக்கும், போலீசுக்கும் போன் செய்தும் விட்டார்கள். படித்தவர்கள் குடியிருக்கும் அரசாங்க, டெலிபோன் குவார்டர்ஸ் பல மாடிக் கட்டிட்க் குடியிருப்பின் அருகில் உள்ள தனி வீடு. காலை ஷிப்ட் முடித்து வீட்டிற்கு  வந்தவர்கள் பக்கத்து வீட்டில் வந்த மரண ஓலமும், எரியும் வாசமும் கண்டு அரண்டு போய் மளமளவென காரியங்கள் செய்து கொண்டிருக்க, அந்த வீட்டின் உரிமையாளர், ஆசிரியை சரசுவதி ஒன்றுமே அசைவில்லாமல் மந்திரித்து விட்டதுபோன்று சுய நினைவின்றி  உட்கார்ந்திருப்பதைப் பார்த்து ஏதும் புரியாமல் அருகில் சென்று எவ்வளவோ உலுக்கியும், பலனில்லை. ஆம்புலன்சு அருகில் இருந்ததால் அடுத்த சில நிமிடங்களிலேயே வருவதற்குள், தானியங்கி பூட்டு பூட்டிக் கொண்ட அறையை வெளியிலிருந்து திறந்துகொண்டு பொறியாளர் சந்தானமும், லைன்மேன் கார்த்தியும் முந்திக்கொண்டு முதலுதவி செய்ய, அதற்குள் பாதி வெந்த நிலையில் அங்கு துவண்டு கிடப்பது டீச்சரம்மாவின் ஒரே செல்ல மகன் ரகு என்கிற ரகுவரன். இத்தனை கூச்சல், குழப்பத்திலும் எந்த உணர்வுமே இல்லாத சடமாய் உட்கார்ந்திருக்கும் தாயைப் பார்த்து ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. சில மணித் துளிகளில் அனைத்தும் நடந்து முடிந்து விட்டது.  ரகு மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்க, சுயநினைவு அற்ற நிலையில் நடந்தது பற்றி ஏதும் அறிந்து கொள்ள முடியாமல் காவல் துறையினரும், குழப்பத்துடன் சரசுவிற்கும் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

Wednesday, January 2, 2013

கொங்கு நாட்டு மகளிருக்கான சடங்குகளும், சம்பிரதாயங்களும்



பவள சங்கரி

இயற்கையின் படைப்புகளிலேயே மிகவும், உன்னதமானது பெண் இனம். அனைத்து உயிரினங்களுக்கும்   தனிப்பட்டதொரு மென்மையையும், அழகையும் அள்ளி வழங்கியிருப்பது கண்கூடு. அந்த வகையில் மனிதப் பிறவியில் இந்தப் பெண் இனம் பல வகையான உணர்வுகளுக்கும், அதற்குரிய சூழலுக்கும் ஆட்படுவதும் இயற்கை. இந்த இயற்கையின் விநோதத்தை அதீதமாக காட்சிப்படுத்த நினைப்பது மனிதர்களுக்கேயுரிய இயல்பாக இருப்பதே நம் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளின் முக்கிய அம்சமாக இருக்கிறது. இதில் பெரும்பாலும் நன்மைகளும், தீமைகளும் சமமாகக் கலந்து இருப்பதே நிதர்சனம். வளர்ந்து விட்ட நாகரீகத்தில் மற்றைய சில நாடுகளில் ஓரளவிற்கு இதெல்லாம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், நம் இந்திய கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் இதெல்லாம் இன்றும் வழமையாகத்தான் இருக்கிறது. வாழையடி வாழையாக கடைபிடிக்கப்படும் பழக்க வழக்கங்கள் பல அர்த்தமுள்ளதாக இருப்பினும், சில வேண்டாதவையாகவும் தேவையற்றவைகளாகவும் உள்ளது.

பொதுவாக பெண்களின் பருவக் காலங்களை , பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை மற்றும் பேரிளம்பெண் என ஆறு வகைகளாகப் பிரித்துள்ளனர். பேதைப் பருவம் என்பது ஏழு வயது வரையிலான குழந்தைப் பருவம். பெதும்பை என்பது பதினொரு வயது வரையிலான ஒரு பருவம். அடுத்து வருவதுதான் மங்கை எனும் பூப்படையும் பருவம். மடந்தை என்பவள் திருமண வயதில் இருக்கும் பத்தொன்பதிற்கும் மேற்பட்ட பருவத்தினள். அரிவை எனும் பருவம் இருபத்தைந்து வயதான தாய்மைப் பருவம். தெரிவை என்பது உலகம் அறிந்த முப்பது வயதிற்கும் மேலான பருவம். அடுத்து நாற்பது வயதுப் பருவமான உலக ஞானமும், அனுபவமும் பெற்ற பேரிளம் பெண் என்பது. இதன் அடிப்படையிலேயே நம்முடைய பெரும்பான்மையான சம்பிரதாயங்கள் அமைந்திருக்கின்றன.

Monday, December 31, 2012

மெய்ஞ்ஞானத்திலிருந்து தோன்றியதே விஞ்ஞானம்!


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே!!


வல்லமைக்கு நன்றி


நேர்காணல் – பவள சங்கரி

புகழ் கண்டு மயங்காதே
புகழ் தேடிச் செல்லாதே
புகழாரம் பாடாதே.

இன்னல் கண்டு கலங்காதே
இகழ்ச்சி கண்டு பதராதே
இகழ்ந்துரைக்க எண்ணாதே

தியானம் என்றால் என்ன?

“எண்ணத்தை வெளிப்படுத்துவதுதான் தியானம். நல்லெண்ணத்தை நாம் கொள்ளும்போது அதுவே நம் செயலுக்கு ஆதாரமாக விளங்குகிறது. நற்சுவாசத்துடன், நல்லெண்ணத்தை நாம் வெளிப்படுத்தும்போது அந்த அலைகள் அதற்கு தகுந்தவற்றை ஈர்த்து நம் செய்கைக்கு துணை புரிகின்றது.”
“தியானம் மூலம் தம் குருதேவர் கொடுக்கும் பாடங்களின் மூலம் தம்முடைய மெய்ஞ்ஞானத்தை உயர்த்திக் கொள்வதோடு தம் வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொண்டு அதன் தரத்தையும் உயர்த்திக் கொள்ளலாம். சப்த ரிஷிகளின் துணையோடு மாமகரிஷிகள், நவகோள்கள் , ராசி மண்டலங்கள், நட்சத்திர மண்டலங்களின் ஈர்ப்போடு தம்மைத் தாமே உயர்த்திக் கொள்ள்லாம்” என்று ஆணித்தரமாகக் கூறும் ஞானத்திருமதி ராஜம்மாள் பாலசுப்பரமணியம் அம்மையார், தன்னுடைய 70 அகவையைத் தாண்டியவர். நல்ல ஆரோக்கியமும், தெளிவான சிந்தனையும், கலகலப்பான உற்சாகமும், அமைதியான மனோநிலையும் கொண்ட இளம் மங்கையாக வலம் வருதலே இதற்கான சான்று.. ஆவிகளுடன் தம்மால் உரையாட முடியும் என்றும் அதற்கான அனுமதி கிடைக்கும் போது மட்டுமே அது குறித்த செய்திகளை பகிர்நது கொள்ள முடியும் என்றும் சொல்லி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். இது குறித்து அவரிடம் மேலும் சில வினாக்களும் அதற்கான அவ்ருடைய விடைகளும் பல ஐயங்களை தெளிவாக்கும் விதமாக அமைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியின் தாளாளர் ’கவாலியர்’ எம். எஸ் மதிவாணன் அவர்களின் உடன் பிறந்த சகோதரி இவர். இவர்களின் குடும்பமே ஆழ்ந்த ஞானமும், எண்ணமே கடவுள் என்ற உறுதியான நிலைப்பாடும், நேர்மையே  இலட்சியம் என்ற கடப்பாடும் கொண்டு செயல்படும் பாங்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியது.

வள்ளியம்மை





பவள சங்கரி

கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தினக் கொடியை ஏற்றி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் .வீரதீர சாகசங்கள் புரிந்தவர்களுக்கு விருது வழங்குவதற்குத் தயாரானார். சுனாமியின் போது தம் உயிரைப் பணயம் வைத்து, இரண்டு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய இளைஞன், ஒகேனக்கல் ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்த படகிலிருந்து பல உயிர்களைக் காப்பாற்றிய முதியவர், இளம் பெண்களைக் கடத்தும் கும்பலைக் காட்டிக்கொடுத்த நபர், குழந்தைக் கடத்தல் கும்பலைக் கண்டுபிடிக்க உதவியவர் என முதன்மை வரிசையில் அமர்ந்திருப்போரின் மத்தியில் தம்முடைய மனைவி வள்ளியம்மை நாச்சியார் என்கிற வள்ளியும் அமர்ந்திருப்பதைக் கணவன் முத்துமணி. உற்று நோக்கியவாறு காத்திருந்தான்.

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...