பவள சங்கரி
‘குட்டி
ஜப்பான்’ என்று அழைக்கக்கூடிய பட்டாசு
தொழிற்சாலை நகரமான சிவகாசிக்கு ஒரு
உறவினரைச் சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்தோம்..
பொதுவாக பயணம் என்றாலே எனக்கு
மிகவும் பிடித்த விசயம். அதிலும்
மழை வரும் முன்பு, லேசான
மண் மணத்துடன், மெல்லிய தென்றல் குளிர்
காற்றாய் வீச, உல்லாச உந்தின்
கதவின் கண்ணாடிகளை இறக்கிவிட்டு அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு வாலியின் கவிதைகள்
தேனிசையாய் முழங்க.. வேறு என்ன வேண்டும்?
மதுரை தாண்டி விருதுநகரைத் தொட்டவுடன், அதுவரை
வாய் மூடி மௌனமாக சாரதியாக
வந்தவர், ஒரு மெல்லிய சிலிர்ப்புடன், ‘அட,
விருதுநகர், நம்ம காமராசர் ஐயாவோட
ஊரு.. புண்ணிய பூமி’ என்று
சொல்லிவிட்டு அப்படியே நினைவில் ஆழ்ந்துவிட்டார். மெல்ல பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்.. அதாங்க
எங்க ஊட்டூக்காரவிக, திருநாவுக்கரசு அவிங்கதான்....

