Thursday, November 15, 2012

’தங்க மங்கை’ தீபாவளி சிறப்பிதழில் என் சிறுகதை!


அன்பு நண்பர்களே,

’தங்க மங்கை’ தீபாவளி மலரில் ‘கருணையினால் அல்ல’ என்ற என்னுடைய சிறுகதை பிரசுரமாகியுள்ளது. வாசித்து தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன். கருணையினால் அல்ல’ கதையின் சுட்டி இதோ:




நன்றி,
அன்புடன்
பவள சங்கரி


Wednesday, November 14, 2012

sand and foam (3) - Khalil Gibran மணலும் நுரையும்! (3)




sand and foam (3) - Khalil Gibran

மணலும் நுரையும்! (3)

ஏழு முறைகள் எம் ஞாதிருவை வெறுத்திருக்கிறோம் யாம்,
முதல் முறையாக அவளை, சாதுவான மங்கையாகக் கண்டாலும்   அவள உச்சத்தை எட்டக்கூடும்
இரண்டாம் முறை அந்த முடமாகிப் போனவனுக்கு முன்னால் துள்ளிக் கொண்டிருக்குமவளைக் கண்டேன்.
மூன்றாம் முறையாக கடினமானது மற்றும் எளிதானதிற்கும் இடையிலான தேர்ந்தெடுத்தலில் அவள் அந்த எளிதானதையேத் தேர்ந்தெடுக்கக் கண்டேன்.

Tuesday, November 13, 2012

தீபாவளிப் பரிசு!



 
அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே!
அன்புடன்
பவள சங்கரி


சிறுகதை

தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கிறது. புது துணி எடுக்கவோ, பலகாரம் செய்யவோ ஏதும் விருப்பம் இல்லை. ஒரு வாரமாக கடைவீதிக்குப் போகலாம் என்று கணவர் சுந்தரம் கூப்பிட்டு சலித்துப்போனதுதான் மிச்சம்.

எல்லாம் தீபாவளி கழித்து வாங்கினால் என்ன நட்டம். இந்தக் கூட்டத்தில் போய் அலைமோதி வாங்கி வந்து புதுசு உடுத்தனுமாக்கும். மெதுவா அப்பறமா வாங்கலாம்என்று தட்டிக் கழித்த சாவித்திரியைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஒரு காலத்தில் ஒரு மாதம் முன்பே எப்போது குழந்தைகளுக்கு துணி எடுப்பீர்கள் என்று சண்டை போட்ட மகராசியா இவள் என்று ஆச்சரியமாக இருந்தது. பள்ளிபாளையம் பேப்பர் மில்லில் வேலையில் இருந்த காலம் அது. போனஸ் வருவதற்குள் எப்போது வரும் என்று கேட்டு தொணப்பி எடுத்துவிடுவாள். 

Monday, November 12, 2012

நம்பிக்கை ஒளி! (6)




                               

பவள சங்கரி
காலம் ஏதோ ஒரு கணக்கு போட்டுக் கொண்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. எந்த் கணினி கொண்டு இந்த அளவீடூகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்று தெரிந்தால் கூட ஏதேனும் தப்பிக்கும் வழியைக் காணலாம். நல்லது நடக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதற்குத் தகுந்தாற்போல் தாம் சந்திக்ககூடிய அத்துனை பேரும் நல்லிதயம் கொண்டவர்களாக ய்தார்த்தமாக அமைந்து விடுகிறார்கள். அதுவே தம் கோரத் தாண்டவத்தை ஆடிப்பார்க்க முடிவு செய்துவிட்டால் திரும்பிய புறமெல்லாம் அடிமேல் அடி விழத்தான் செய்கிறது. தப்பிக்கும் வழியே இல்லாமல் கிடுக்கிப்பிடி போட்டு பிடித்துவிடுகிறது. நம்பிக்கை என்ற ஒரு பிடிமானம் மட்டும் கண்டெடுத்துக் கொண்டால் அதிலிருந்து எப்படியும் மீண்டு தப்பித்து வந்துவிடலாம். சுழட்டியடித்த சுனாமியும் ஒரு நேரம் அடங்கித்தானே ஆகவேண்டும்....

ஆசிரியர்களுக்கான ஓய்வறையினுள் நீண்ட மேசையின் முன் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், முன் நெற்றி வழுக்கையாக, நெற்றி நிறைய திருநீறு பட்டையாகப் போட்டுக் கொண்டு இடையில் அழகாக குங்குமப் பொட்டும் வைத்துக் கொண்டு நடு நாயகமாக அமர்ந்து கொண்டிருந்தார். அவர்தான் மயில்வாகனனாக இருக்கும் என்பதும் சொல்லாமலே புரிந்தது. அவரும் மாலுவைப் பார்த்தவுடன் தெரிந்து கொண்டார். தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அவளுடைய பயணம், குடும்பம் எல்லாம் பற்றிய சம்பிரதாயமான விசாரிப்புகளை முடித்துவிட்டு பின்பு அவளுடைய எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் பொறுமையாக்க் கேட்டு அறிந்து கொண்டார். நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருப்பதைப் பார்த்து மகிழ்ந்தவர், பின்பு அவளையும்  அழைத்துக் கொண்டு பள்ளியின் ஒரு மூன்று சக்கர வாகனத்தில் (ஆட்டோ)  கிளம்பினார். தில்லைராஜன் ஐயாவின் வார்த்தைகளுக்கு உள்ள மரியாதையைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அவர் பேச்சிலிருந்து தாங்கள் சந்திக்கப்போவது ஐஏஎஸ் கோச்சிங் செண்ட்டரில் பணி புரியும் ஒரு நபரைத்தான் என்பதும் புரிந்தது.

Wednesday, November 7, 2012

Sand and foam - Khalil Gibran மணலும், நுரையும் (2)



பவள சங்கரி


                                                   Sand and foam - Khalil Gibran (2)

மணலும், நுரையும் (2)

வெகு நேரம், அந்த, பருவ மாற்றங்களும்  அறியாமல், அமைதியாக, எகிப்தின் தூசிப்படலத்தினுள் கிடந்தேன் யான்.
பின்னர் அந்த நிசாந்தகன் எம்மை உயிர்த்தெழச் செய்ததால், யான் எழுந்து அந்த நைல் நதிக்கரையோரம் பகலோடு பாடிக்கொண்டும், நிசியோடு சுவனம் கொண்டும் நடந்தேன்.
மேலும் தற்போது அந்த பகலவனோ, தம் ஓராயிரம் பாதக்கிரணங்கள் கொண்டு எம்மை ஏறி மிதித்துச் சென்றதனால் யான் மீண்டும் அதே எகிப்தியப் புழுதியில் கிடக்க நேரலாம்.

Tuesday, November 6, 2012

நம்பிக்கை ஒளி ! (5)



பவள சங்கரி

பணிக்குச் செல்லும் பரபரப்பு காலை நேரத்தில் வாடிக்கையான காட்சிதான் என்றாலும், வீட்டிலுள்ள அனைவரும் ஒரு சேர ஒரே நேரத்தில் கிளம்ப வேண்டுமென்றால் கொஞ்சம் கூடுதல் டென்சன் தான். அதுவும் ஒரு குளியலறை, ஒரு கழிவறை என்று இருக்கும் வீடுகளில் கேட்கவே வேண்டாம். நீ முந்தி, நான் முந்தி என்று ஒரே கூத்துதான்.

சாவதானமாக உட்கார்ந்து துண்டு முடிந்துகொண்டு, காலையில் எப்.எம் ரேடியோவில் ஆரம்பித்து பின்பு டீவி சீரியல் ஒன்று பாக்கியில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த பரமுவா இது என்று ஆச்சரியமாக இருந்தது. எண்ணெய் வழியும் முகமும், பரட்டைத் தலையும் என்று எப்பொழுது பார்த்தாலும் அழுது வடிந்து கொண்டிருந்தவள் இன்று அரை மணி நேரமாக கண்ணாடி முன்னால் நின்று கொண்டிருப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. பாவம் எத்தனை ஆசையை சுமந்து கொண்டிருந்திருக்கிறது இந்தப் பிள்ளை என்று நினைத்துக் கொண்டாள் மாலு. மாநிறமாக இருந்தாலும், நல்ல களையான வட்ட முகம் அவளுக்கு. செதுக்கி வைத்த சிற்பம் போல அளவான நாசியும், துருதுருவென்ற கண்களும், பட்டுக் கன்னமும் அழகாகவே இருந்தாள். பாவாடை தாவணி உடுத்திக் கொண்டு அதைத் திரும்பி, திரும்பி நின்று அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். தாவணி கலருக்கு மேட்ச்சாக வளையலும், காது தோடும், கழுத்து மணியும் போட்டுக்கொண்டு , பொட்டும் கூட அதே கலரில் வைத்துக்கொண்டு கிளம்பியதைப் பார்க்க ஆச்சரியமாக் இருந்தது.

Wednesday, October 31, 2012

மணலும், நுரையும் - கலீல் ஜிப்ரான்



SAND AND FOAM - KHALIL GIBRAN (1926)


    "Half of what I say is meaningless, but I say it so that the other half may reach you."



மணலும், நுரையும்


அனுதினமும், இந்தக் கரையோரங்களில் அந்த மணல் மற்றுமந்த நுரையினிடையே,
நடை பயின்று கொண்டிருக்கிறேன் யான்
உயர்ந்த அந்த அலைகள் எமது பாதச்சுவடுகளை அழித்துவிடக்கூடும்,
மேலும் அந்த வளி அந்த நுரையையும் ஊதித்தள்ளிவிடும்.
ஆயினும் அந்தக் கடலும், கரையும் என்றும் நிரந்தரமாய் இருக்கும்.

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...