sand and foam - 9 - Khalil Gibran
பவள சங்கரி
வாழ்க்கை ஓர் ஊர்க்கோலம்.
பாதத்தின் அந்த மெத்தனம் அதை வெகு துரிதமாகக் கண்டுணர்ந்ததால் அவன் வெளியேறுகிறான்.
மேலும் பாதத்தின் அந்த துரிதம் அதை மிகத் தாமதமாகக் கண்டுணர்ந்ததால் அவனும்கூட வெளியேறுகிறான்.
பாபகம் என்ற அந்த ஒன்று உள்ளதெனில் நம்மில் சிலர் நம் முன்னோர்களின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி அதைச் செய்கிறோம்;
மேலும் நம்மில் சிலர் நம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக, ஆளுமையுடன் அதைச் செய்கிறோம்.
உண்மையில் நல்லவன் என்பவன் தீயவர்களாகக் கருதப்படும் அனைவருடனும் இருக்கும் அந்த ஒருவனே.



