Tuesday, January 29, 2013

தைப்பூசத் திருவிழாவும், எம் நூல்கள் வெளியீடும்

பவள சங்கரி
Inline image 1

’தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது பழமொழி. பலவிதமான ஆன்மீகச் சிறப்புகளைக் கொண்டது தை மாதம். தை மாதத்தில், பூச நட்சத்திரத்தில் வரும் தினம் புண்ணிய தினமாக நம் முன்னோர்களால் வழிபடப்பட்டு வருகிறது. குறிப்பாக பௌர்ணமியும் சேர்ந்து வரும் தைப்பூசத் திருநாள் மிகவும் விசேடமானது. பதஞ்சலி முனிவருக்கும், வியாக்கிரபாதர் முனிவருக்கும், சிவசக்தியின் ஆனந்தத் தாண்டவக் காட்சி கிடைத்த அற்புத நாளாம்.

2013ம் ஆண்டு 27ம் நாள் பௌர்ணமி தினத்தில், சிவாம்சம் பொருந்திய சூரிய பகவான் மகர இராசியிலும், சக்தி அம்சம் பொருந்திய சந்திர பகவான் கடக ராசியில், பூச நட்சத்திரத்திலும் ஆட்சி பெற்று, சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் இருப்பது பௌர்ணமி தினத்தில் வரும் தைப்பூசத் திருநாளில் மிகச் சிறப்பாம். இந்நாளில் துவங்கப்படும் எக்காரியமாயினும் நிறைந்த பலனை அளிக்கக் கூடியதாகுமாம்.  அறிவின் தேவதையாக போற்றப்படும் குரு பகவான் பூச நட்சத்திரத்தின் நாயகனாகப் போற்றப்படுகிறார்.

சிவசக்தியின் ஆனந்தத் தாண்டவத்தில் இவ்வுலகம் தோன்றியதாகவும், முதன் முதலில் நீர் பின்பு நிலம், நெருப்பு, ஆகாயம் என அனைத்து பஞ்ச பூதங்களும் தோன்றியதாகக்  கூறுவார்கள்.

சிவபெருமானாரின் அருளால் தோன்றிய முருகப் பெருமானுக்கு அன்னை பராசக்தி சகல சக்திகளையும் வழங்கியத் திருநாளும் இத்தைப்பூசத் திருநாள் என்பதாலேயே, முருகன் வாழும் குன்றுதோறும் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் இந்த விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக பழனி மலை முருகன் கோவிலுக்குப் பாத யாத்திரையாகவும், விரதமிருந்து மாலையணிந்து பெரும் பக்தர் கூட்டம் வருவதைக் காண முடிகிறது. புனித நதிகளில் நன்னீராடி வழிபடுதலும் சிறப்பாம். கொங்கு நாட்டில், தைப்பூசத் திருநாளில்  குலதெய்வ வழிபாடு மிகச் சிறப்பாகச் செய்வதையும் வழமையாகக் கொண்டிருக்கிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் உலகப்பம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள எங்களுடைய குலதெய்வமான அருள்மிகு பெரியாண்டவர் எல்லம்மாதாய் திருக்கோயிலில் 14ம் ஆண்டு குடமுழுக்கு மற்றும் 36ம் ஆண்டு தைப்பூச விழா மிகச் சிறப்பாக நடந்தேறியது. வெளி நாடுகள் மற்றும் வெளியூர்களில் வாழுபவர்களும், இயன்றவரை வந்து கலந்து கொள்கிறார்கள். கிட்டத்தட்ட 4000 மக்கள் கலந்துகொண்ட இவ்விழா மிகச் சிறப்பாக அன்னதானத்துடன் நடந்தேறியது.

மணலும் (வாலிகையும்) நுரையும் - (9)


sand and foam - 9 - Khalil Gibran

பவள சங்கரி


வாழ்க்கை ஓர் ஊர்க்கோலம்.
பாதத்தின் அந்த மெத்தனம் அதை வெகு துரிதமாகக் கண்டுணர்ந்ததால் அவன் வெளியேறுகிறான்.
மேலும் பாதத்தின் அந்த துரிதம் அதை மிகத் தாமதமாகக் கண்டுணர்ந்ததால் அவனும்கூட வெளியேறுகிறான்.

பாபகம் என்ற அந்த ஒன்று உள்ளதெனில் நம்மில் சிலர்  நம் முன்னோர்களின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி அதைச் செய்கிறோம்;
மேலும் நம்மில் சிலர் நம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக, ஆளுமையுடன்  அதைச் செய்கிறோம்.

உண்மையில் நல்லவன் என்பவன் தீயவர்களாகக் கருதப்படும் அனைவருடனும் இருக்கும் அந்த ஒருவனே.

Monday, January 28, 2013

வான தேவதையின் வெண்ணாடை!




சுட்டெரிக்கும் சூரியனில்
கனிநதுருகும் வெண்பனியும்
கையகலத் திரைகொணடு பளபளவென மின்னும்
கடலளவு ஒளிக்கதிரை மறைக்கத்தான் இயலுமா?
கருமமே கண்ணாயினாரென
சொல்லொன்று செயலொன்றென்று
சுற்றித்திரியும் மாக்களாய் இன்றி
போக்கும் வரவுமிலா நித்தியமாய்
நிறைந்திருக்கும் வானொளியாய்
ஊடுறுவும் ஒளிக்கீற்றையும்
மறைந்திருக்கும் தண்ணளியையும்
தன்னகத்தேக்கொண்டுத் தவம்புரியும்
தன்னிகரில்லாத் தத்துவநாயகன்!

Friday, January 25, 2013

தேசிய பெண் குழந்தைகள் தினம்




பவள சங்கரி

பெண்களை உயர்வாக மதித்து நடத்தும் நாடுதான் முன்னேறும் - காந்தியடிகள்


இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனைக் காக்கவும், அவர்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த  விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 24 ஆம் நாள் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதே தினத்தில்தான், 1966ம் ஆண்டு நம் இந்தியாவின் முதல் பெண் பிரதமராக  இந்திராகாந்தி அவர்கள் பதவியேற்றார்.


நம் இந்தியாவைப் பொறுத்தவரை பெண் குழந்தைகளை வளர்ப்பதை பெரும் சுமையாகக் கருதும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பதால் பெண் சிசுக் கொலை மிகப் பரவலாக ஆனது. இதன் காரணமாக 2001ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 933 பெண்கள்தான் இருந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை நகர்ப்புறங்களில் 946 ஆகவும், கிராமப் புறங்களில் சுமார் 900 ஆகவும் இருக்கிறது..ஹரியானா மாநிலத்தில் மிகக் குறைவாக 861 பெண்களும்தான் இருந்திருக்கிறார்கள்.
கடந்த 20 ஆண்டுகளில்  ஒரு பாவமும் அறியாத ஒரு கோடி பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்பட்டிருக்கின்றன என்பது வேதனையான விசயம்.அதாவது தினசரி கிட்டத்தட்ட 2000 குழந்தைகள் அழிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பில் தெரிவித்திருக்கிறது.

Monday, January 21, 2013

மணலும் (வாலிகையும்) நுரையும் - கலீல் ஜிப்ரான் - 8




பவள சங்கரி

 சுய - நுகர்வின்  விசித்திரமானதோர் வடிவம்! யான் தவறிழைத்திருக்கக்கூடிய மற்றும்  ஏமாற்றப்பட்ட காலமும் இருப்பினும் ,  யான் தவறிழைத்தும், வஞ்சிக்கப்பட்டும் இருக்கிறேன் என்பதை உணராமலே உள்ளேன் என்ற வீணான எண்ணம் கொண்டோரைக் கண்டு எள்ளி நகையாடலாம் யான்.

பின்பற்றுதலை விளையாட்டாகக் கொண்டு  பின்தொடருவோரைப் பற்றி யான் என்ன கூற இயலும்?

உம் ஆடைகளில் தம் அழுக்கடைந்த கரங்களைத் துடைப்பவரே உம்முடைய அந்த ஆடையை எடுத்துக் கொள்ளட்டும். அவ்ருக்கு அது மீண்டும் தேவையாக இருக்கலாம்; கட்டாயமாக உமக்கு அதன் தேவையிருக்காது.

பணப் பறிமாறறம் செய்வோர் நற்காப்போனாக இருக்க இயலாது என்பது துயரம்.

Wednesday, January 16, 2013

மணலும், (வாலிகையும்) நுரையும் - 7





பவள சங்கரி


மணலும், (வாலிகையும்) நுரையும்  - கலீல் ஜிப்ரான்

பெருநீரைத் தேடாத நதியையும்
வசந்தமாய் மாறாத கூதாளிக்கால
மனநிறைவையும் நாம் மொழிவது
யாதென்று இயற்கையன்னையவள்
சிரத்தைகொளல் வேண்டுமோ.
கட்டு முகனையைப் பற்றி
நாம் கூறுமனைத்தையும் கவனம் கொள்ள வேண்டுமோ,
நம்மில் எவரெவர் இவ்வளியை
சுவாசிக்கப் போகிறோம்?

Monday, January 14, 2013

நுவல் - திருமதி கமலாதேவி அரவிந்தனின் சிறுகதைத் தொகுப்பு


பவள சங்கரி

நுவல்- புத்தக மதிப்புரை

வாழ்வியலின் வண்ணங்கள்!
Inline image 6Inline image 7
 
திருமதி கமலாதேவி அரவிந்தன் அவர்களின் சில ஆய்வுக் கட்டுரைகளின் நுட்பமான கருத்துக்களில் கவரப்பட்டதன் விளைவு, அவருடைய மற்ற படைப்புகளையும் தேடிப்பிடித்து வாசிக்கத் தூண்டியது. சிங்கையின் முன்னணி எழுத்தாளர்களின் ஒருவரான திருமதி கமலாதேவி அரவிந்தன் நாவல், சிறுகதைகள், நாடகங்கள், ஆய்வுக்கட்டுரைகள், என அனைத்துத் தளங்களிலும் தம் தனிப்பட்ட முத்திரைகளைப் பதிததவர். சமகால இலக்கியங்களில் இவருடைய எழுத்து நவீனத்துவம் என்ற வகையில் தனித்து நிற்கக்கூடியது. மலையாள மொழியை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், தம் சிறு வயது முதலே தமிழ் மொழியின்மீது கொண்ட தீராக் காதலால் கவிதையில் ஆரம்பித்து, தற்போது தமிழ் இலக்கிய வரலாற்றில் தமக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார். பெண் எழுத்தாளர் என்றால் ஒரு வரையறைக்குள்தான் எழுத முடியும் என்ற இலக்கணத்தை முறியடித்துவெகு யதார்த்தமாக எந்தக் கட்டுப்பாடும், இல்லாமல் சரளமாக எழுதும் மிக வித்தியாசமான நடை இவருடையது. இதுதான் நவீன பாணி எழுத்தோ என்று எண்ணும் போது பிரம்மிப்பாகத்தான் இருக்கிறது. நுவல்என்ற இந்த தொகுப்பு 13 வித்தியாசமான சிறுகதைகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்துள்ளதும், கவர்ச்சியான த்லைப்புடன் எழுதப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...