Monday, January 26, 2015

குடியரசு தின நல்வாழ்த்துகள்!






பவள சங்கரி

அன்னிய ஆதிக்கமெனும் அகந்தைத்தளையை
அகிம்சையெனும் சம்மட்டியால் அடித்துநொறுக்கி
இம்சையெலாம் களைந்து அன்னையவளை
சிம்மாசனமேற்றிய சிம்மங்களை சிகரமேற்றி
நினைவுகூரும் நிறைவான தருணமிது!

தேகம்வருத்தி குருதிசிந்தி இன்னுயிரீந்து
தாய்மண்ணை மீட்ட மித்திரர்கள்
வன்மையோரவர் பாதம் பணிந்து
நன்முத்துக்களின் தியாகம் போற்றி
அவர்தம் வழித்தொடரும் தருணமிது!

ஒருதாய் மக்களெனும் உன்னதமும்
ஓர்குலம் ஓரினமெனும் நல்மனமும்
அறவழியும் அன்புநெறியும் உளமேற்று
புறவழியும் புன்மைநெறியும் புறந்தள்ளி
புத்தொளியூட்டி வீரவாகை சூட்டியதருணமிது!

இந்தியநாடு என்வீடு இந்தியனென்பதென் இறுமாப்பு! 
சத்தியமும் சமத்துவமும் எங்கள் உயிர்மூச்சு!
வந்தே மாதரமென்பது எங்கள் அன்றாடப்பேச்சு!
புத்தன் இயேசு காந்தி அல்லாவென எல்லாமுமெங்கள் நேசம்! 
ஒன்றுகூடி உறவாடிக் கொண்டாடுமெங்கள் தேசம்!

Tuesday, January 13, 2015

இனிய மகர சங்கராந்தி!


இனிய வணக்கம் நண்பர்களே!



கதிரோனுக்கொரு விழா சங்கராந்தி
தீயென ஒளிருமே அறிவுச்சுடர்
ஞானஒளியும்  மலருமே வாழ்வினில்
சகலசெல்வமும் தருமே மகர சங்கராந்தி
அன்புடன்  - பவளா

Wednesday, December 31, 2014

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே. வரும் ஆண்டு அனைவருக்கும் அனைத்து வளங்களும், நலங்களும் அருள மனமார்ந்த பிரார்த்தனைகள் நண்பர்களே.




Tuesday, December 30, 2014

பனிப்புயல்


பவள சங்கரி



அடாது வீசிக்கொண்டிருக்கிறது பனிப்புயல்
குளிராடையின்றி அலையோரம் அலையுமனது
நடுங்கியபடி கடக்கிறது காலங்களை
தெருமுனை வழிகாட்டியின் அருகில்
நோட்டமிட்டவாறு கூரிய அம்புகள்
பனிப்புயலையும் குத்திக் கிழிக்கும்
வல்லமை கொண்டததன் முனைகள்
கதிரொளியால் உருகி வழியப்போகும்
அப்பனிப்புயல் ஏதோவொரு நேரம் 
நீராய்ப் பெருகி ஓடக்கூடியது

எந்த மூளை அதிக சக்தியுடையது. ?





பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...