Thursday, November 11, 2021

தமிழை முக்கியப் பாடமாக படிக்கலாமா?

 

தமிழை முக்கியப்பாடமாக எடுத்துப்படிப்பதால், தமிழ் ஆசிரியர், பேராசிரியர் தவிர வேறு வேலை வாய்ப்புகள் உள்ளனவா?

 

 

செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இணைய வழி கருத்தரங்கில் பங்கு கொள்வதில் மகிழ்கிறேன். வரவேற்புரை வழங்கி அமைந்திருக்கும் முனைவர்  மற்றும் தினேசு குமார்  தமிழ்துறை தலைவர் முனைவர் சக்திவேல் அவர்களுக்கும் முன்னிலை வகிக்கும் தாளாளர் மருத்துவர் பொ.செல்வராஜ் அவர்களு தலைமை உரை வழங்கி செயலர் முனைவர் கவித்ராநந்தினி பாபு அவர்களுக்கும் வாழ்த்துரை வழங்கியுள்ள முதல்வர் முனைவர் ந,ராஜவேல் அவர்களுக்கும், தரவுக்கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் கி.சி அருள்சாமி   துணை முத;வர் கெ.கெ. கவிதா துணை முதல்வர் முனைவர் ப. தாமரைச் செல்வன் துணை முதல்வர் முனைவர் கி.குணசேகரன்

 

 

என்னை நன்றாக இறைவன்

அனைவருக்கும் வணக்கம். தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளையின் சார்பில் இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ளும் நண்பர்களுக்கும், தமிழால் முடியும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவிருக்கும் தமிழறிஞர், தகைசால் பேராசிரியர் முனைவர் வீ. ரேணுகாதேவி அம்மையார் அவர்களையும் வருக வருக என வரவேற்று என் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

தமிழால் முடியும்!

 

தமிழை முக்கியப்பாடமாக எடுத்துப்படிப்பதால், தமிழ் ஆசிரியர், பேராசிரியர் தவிர வேறு வேலை வாய்ப்புகள் உள்ளனவா?

 

மனிதனின் அறிவாற்றலையும், தனித்திறனையும் வளர்த்துக்கொள்வதையே இலக்காகக்கொண்ட கல்வியின் காலமும் இருந்தது. என்றாலும் இன்றைய நிலையில் வாழ்வாதாரத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவும், வாழ்க்கையை வளமாக்கவும், பொருள் சேர்ப்பதற்காகவும் வேலைவாய்ப்பை அளிக்கும் வரமாகவே பார்க்கப்படுகிறது இன்றைய கல்வி. விரும்பிய பாடத்தைக் கற்பதைக்காட்டிலும் நல்ல வருமானம் அளிக்கும் கல்வியைக் கற்க வேண்டும் என்பதே பெற்றோரின் விருப்பமாகவும் உள்ளது. எந்த பாடம் படித்தால் நல்ல பணியும், நல்ல வருவாயும் கிடைக்கும் என்பதைத் தேடியலைவதே இன்றைய தலைமுறையினரின் சவாலாக உள்ளது. ஆனால் எந்த படிப்பாக இருந்தாலும் அதற்குரிய தேவையும் வாய்ப்பும் இருந்துகொண்டுதான் இருக்கின்ன என்பதை உணர்ந்தாலும் தமிழ் மொழிக் கல்வியைப் படித்தால் எதிர்பார்த்த அந்த வேலை கிடைக்குமா என்ற பெரும் ஐயமும் அனைவருக்கும் எழத்தான் செய்கின்றன. தமிழை முக்கியப்பாடமாக எடுத்துப்படிப்பதால், தமிழ் ஆசிரியர், பேராசிரியர் தவிர வேறு வேலை வாய்ப்புகள் உள்ளனவா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த ஐயத்தை தெளிவு பெறச்செய்யும் வகையில் முதலில் பேரா. ரேணுகாதேவி அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள். அடுத்து எமது கருத்துரையும் வழங்கவிருக்கிறேன். நன்றி.


என் பையன் ஒரே பிடிவாதமாக  பி. ஏ. தமிழ் இலக்கியம்தான் படிப்பேன் என்று அடம்பிடித்து படிக்கிறான். அவனுக்கு எங்க, என்ன வேலை கிடைக்கும்னுகூடத் தெரியவில்லையே என்று சில பெற்றோர் அறற்றுவதைக் கேட்டிருப்போம். இன்றைய உலகமயமாக்கலில் பணிச்சந்தை என்கிற job market, தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு என்ன வாய்ப்புகளைத் தருகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டியதும் அவசியம்.
இந்த நேரடியான கேள்விக்கு நேரடியான பதில் அறிந்தால் மட்டுமே மன நிறைவுடன் தமிழ் இலக்கியம் படிக்கமுடியும் என்பதும் உண்மை. முதலில் ஒரு உண்மையைப் பதிவு செய்துகொள்வோம். தமிழ் இலக்கியப் படிப்பு ஒன்றும் தரமற்றதோ அல்லது இரண்டாந்தரப் படிப்போ அல்ல என்பது சத்தியம்.
ஒருவேளை அப்படி இருந்தால், பல்கலைக்கழகங்கள் ஏன் அந்த பாடத்தை வைத்திருக்கப்போகிறார்கள் என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இணைய வழி கருத்தரங்கில் நான் ஆற்றிய உரையின் மறு பதிப்பு இது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.


ஒரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால் எத்தனையோ புதிய புதிய படிப்புகள் வந்துகொண்டு இருந்தாலும், ஆண்டுதோறும், தமிழ் இலக்கியம் படிப்பில் சேருகிறவர்களின் எண்ணிக்கை பெரிதாகக் குறைவதே இல்லை! இதற்கான காரணம் மிக எளிது. பலர் தமிழ் படிப்பதற்கு மிக எளிது என்று நினைத்தாலும், பெரும்பாலானவர்கள் தங்கள் பரம்பரையில் வழிவழியாகத் தமிழ் படிப்பதையே கடமையாகக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தமிழ் ஆசிரியர் குடும்பம் என்று பேர் பெறுவதில் பெருமிதம் கொள்பவர்கள் என்ற வகையில் இதற்கு விலையேதும் இருக்கமுடியாது. பழம்பெருமை மிக்க நம் தாய்மொழியாம் தமிழ் மொழியைப் படித்து அதன் வரலாறு, இலக்கியம், இலக்கணம் என அனைத்தையும் கற்பதை ஒரு வரமாகவே கருதுபவர்களும் பலர். ஆனால் சிலர் தமிழ் இலக்கியம் மட்டும் படிப்பதால் எங்கிருந்து வேலை கிடைக்கும்?’ என்கிறார்கள்.

 

நாம் முதலில் சிந்திக்க வேண்டியது வேறு எந்த படிப்பாக இருந்தாலும், பொறியியல், அழகுக்கலை, மருத்துவம், என எதுவாகவும் இருக்கலாம், அவைகளைப் படித்துவிட்டால் மட்டும் உடனடியாக வேலை கிடைத்து விடுகிறதா..என்பதுதான். பணிச்சந்தையில், தமிழ் இலக்கியம் அல்லது பொருளாதாரம், கணிதம் என்று வேறுபாடு காணும் அளவிற்கு பெரிதாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. இந்த வேலைக்கு இந்த திறன் சரிப்பட்டு வருமா என்பதை மட்டுமே பார்க்கிறார்கள் என்பதே உண்மை.

 

ற்று சிந்தித்துப் பாருங்களேன். ஒரு நகராட்சி பள்ளி. ஆசிரியர் பணியிடத்திற்கு ஒரு பணி வாய்ப்பு இருக்கிறது. உள்ளூரிலேயே, நல்ல வருவாயுடன் நிரந்தரமான வேலை கிடைத்தால் மகிழ்ச்சிதானே. யார்தான் வேண்டாம் என்பார்கள். ஆனால் இந்த வேலைக்கு தமிழ் இலக்கியம் படித்து, ஆசிரியர் பயிற்சி பெற்றவர்  பொருத்தமாக இருப்பாரா..? அல்லது, ‘பி. ஈ.’ என்ற பொறியியல் பட்டம் பெற்றவர் பொருத்தமானவராக இருப்பாரா என்பதை யாரைக் கேட்டாலும் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்தான் சரியான தேர்வு என்று சொல்லிவிடுவார்கள் இல்லையா.
அப்படியானால், பி. ஈ. பட்டம் இரண்டாந் தரமாக ஆகிவிட்டது என்று கொள்ள முடியுமா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதானே சொல்ல முடியும். காரணம் அந்தந்த பணிக்கும் அதற்கேற்ற கல்விக்கும்தான் முன்னுரிமை கிடைக்கும். அதற்காக மற்றவை எல்லாம் வேண்டாத படிப்புகள் அல்ல. இந்தப் பணிக்குப் பொருந்தி வராதவை என்பதைத்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

 

தொழிற்கல்வி, பொதுக்கல்வி எனும் இருவகைக் கல்விகளில், பொறியியல், மருத்துவம் ஆகியன தொழிற்கல்விகள். ஏதேனும் ஒரு தொழிலுக்கான நுட்பங்களைக் கற்றல் என்றாலும் ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கான ஆற்றலைத் தருகிற கல்வி, பிற தொழில்களுக்கு அதிகம் பயன்படாமல் போய்விடுவதுண்டு. அந்த வகையில் எந்த வகையான கல்வியாக இருந்தாலும் அதற்குரிய பலனும் இருக்கத்தான் செய்கின்றன.

 

தொழிற்கல்வியில் பட்டம் பெற்ற ஒருவர் அலுவலக உதவியாளர் பணியில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டால் அவரால் அங்கு என்ன பெரிதாக சாதித்துவிட முடியும்..? இன்றைய காலகட்டத்தில், தான் தேர்ந்தெடுத்துப் படித்த துறைக்கு வெளியே, ஒரு தொழிற் கல்விப் பட்டதாரிக்கு வேலையில் முன்னுரிமை கிடைப்பது என்பதும் மிகவும் அரிதாகத்தான் உள்ளது. ஆனால் இலக்கியம் போன்ற பொதுவான இவ்வகைக் கலைப் படிப்புகள், ஒருவரை, எல்லா சூழல்களுக்கும் பொருந்துகிற மனிதனாக மாற்றுகிறது என்பதுதான் உண்மை. கல்வி, வேலை வாய்ப்புத் தளங்களில் இதுபோன்ற தவறான புரிதல்களாலேயே குழப்பங்கள் ஏற்படுகின்றன.


பொதுவாக தமிழ் இலக்கியம்’ என்றவுடன் ஏதோ பழங்கதைகள் பற்றிய படிப்பு என்று சிலர் தவறான எண்ணம் கொள்கின்றனர். மொழியியல் கல்வியான இதில் இளங்கலை, முதுகலைப் பட்டம், ‘பி.எச்டி’ எனும் முனைவர் பட்டம் வரை பல நிலைகள் உள்ளன.
இலக்கியம் கற்றல் என்பது மொழி ஆராய்ச்சி தொடர்ந்து வளர்ந்து வருகிற ஒரு துறை என்பதால் மிகவும் சிறப்பு பெறுகிறது. அதிலும் தமிழ் போன்ற வளம் செறிந்த மொழியில் ஆராய்ச்சிகளுக்கான பணிகள் அதிகளவில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆசிரியர் பணிக்குச் செல்ல மிகச்சரியான பாதை என்றால் அது இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் என்கிற ‘பி. ஏ.’ ‘எம்.ஏ.’ எம்.ஃபில்’, ‘பி.எச்டி. போன்றவைகள்தான்.

 

இந்தியப் பண்பாட்டின், நாகரிகத்தின் அடிப்படைகளில் ஒன்றாகவும் தொன்று தொட்டு இன்றுவரை நமது நாட்டின் கலை, இலக்கியம், சமயம், தத்துவம் ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்புக்கு உரிமையுடையதாகவும் விளங்குவது தமிழ்மொழி. தமிழ்மொழியின் அடிப்படையில் அமைந்த வாழ்வியல், பண்பாடு ஆகியவற்றைச் சார்ந்த துறைகளில் கல்வி கற்பது பலரின் ஆழ்மன விருப்பமாகவும் உள்ளது. இந்திய நாகரிகத்தின், பண்பாட்டின் ஊற்றுக்கள் அனைத்தையும் ஆழமாகவும், விரிவாகவும் ஆராய வேண்டுமென்ற எண்ணமுள்ளவர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்பது தமிழ் இலக்கியத் துறையைத்தான்.

 

லக்கியத் துறையில், கலைப்புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்ப்புலம், மொழிப்புலம், அறிவியல்புலம் போன்ற 5 புலங்களும்,

சிற்பத்துறை, இசைத்துறை, நாடகத்துறை, ஓலைச்சுவடித்துறை, அரிய கையெழுத்துச் சுவடித்துறை, கல்வெட்டியல்துறை, நீரகழாய்வு மையம், அயல்நாட்டு தமிழ்க்கல்வித்துறை, மொழிபெயர்ப்புத்துறை, அகராதியியல் துறை, சமூக அறிவியல் துறை, அறிவியல் தமிழ்-தமிழ் வளர்ச்சித்துறை, இலக்கியத்துறை, மொழியியல் துறை, தத்துவமையம், பழங்குடி மக்கள் ஆய்வு மையம், இந்திய மொழிகள் பள்ளி, நாட்டுப்புறவியல் துறை, சித்தமருத்துவத் துறை, தொல்லறிவியல் துறை, தொழில், நிலறிவியல் துறை, கணிப்பொறிவியல் துறை, கட்டடக்கலைத்துறை, சுற்றுச்சூழல், மூலிகை அறிவியல் துறை, கல்வியியல், மேலாண்மையியல் துறை ஆகிய 25 துறைகளைப் பெற்றுள்ளன.

 இவற்றோடு அறிவியல்– வாழ்வியற் களஞ்சிய மையம், பெருஞ்சொல்லகராதி, தூயதமிழ்-சொல்லாக்க அகரமுதலிகள் உருவாக்குதல் போன்றனவும், பதிப்புத்துறை, நூலகம், அருங்காட்சியகம் பேணல் போன்றவைகள் தொடர்பான பல பணிகளும் ள்ளன.

 

தமிழ் மீது ஆர்வம் கொண்டு மொழியைக் கற்கும் ஆவலுடன் உலகளாவி வருவோர்க்கெல்லாம் தமிழ்மொழியை, தமிழர் பண்பாட்டை, தமிழர் நாகரிகத்தை, கலைநலங்களைக் கற்பிக்கும் திறனை வளர்த்துக்கொள்பவர்கள் அதற்கான வாய்ப்புகளைப் பெற முடிகிறது. இந்திய ஆட்சிப்பணியான ஐ.ஏ.எஸ் பயிற்சியாளர்களுக்குத் தமிழ்மொழிப் பயிற்சி வழங்கும் வாய்ப்பும் அமைகிறது.

 

அறிவுலகமும் ஆராய்ச்சியுலகமும் பாராட்டிப்போற்றும் பல்வேறு பணிகளை நிறைவேற்ற வழிவகுக்கும் இலக்கியக் கல்வியை சிறப்பான முறையில் பயின்றவர்கள் பெரும் சாதனையாளராகின்றனர். இன்று பதிப்புத்துறை மிகச்சிறப்பாக வளர்ந்து வருகிற வகையில் இதற்கான சுய தொழில் வாய்ப்புகளும், பணிகளும் பெருகி வருகின்றன. சுய தொழில் செய்யும் ஆற்றல் உள்ளவர்களால் மேலும் சிலருக்கு பணி அளிக்கவும் இயலும்.

 

மண்ணின் மரபின் மணத்துடன் ஊன்றிய அற்புதமான நாடகப் படைப்புகளுக்கு உந்து திறனாக விளங்கும் நாடகத்துறைக்கும் நல்ல வரவேற்பு இருக்கின்றன. தொலைக்காட்சி தொடர் நாடகங்களுக்கு இன்று எவ்வளவு வரவேற்பு உள்ளது என்று நாம் அறிவோம். தமிழ் இசையில் தமிழரின் பங்கினை அறிந்துகொள்ளவும், அதைத் திறம்பட கற்பித்தலிலும் முதன்மை நோக்கோடு இசைத்துறை செயற்படுகிறது. இதில் நல்ல பாண்டித்யம் உள்ளவர்களுக்கு பல்வேறு பணி சார்ந்த வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

 

சிற்பத்துறையில் வல்லமை பெறுவதன் மூலம் வரலாற்று நெறியிலான படிமப்பாங்குகள், படிமக்கலை ஆய்வுகள், கோயிற் சிற்பங்கள் தொடர்பான சிற்ப நுணுக்க ஆய்வுகளை மேற்கொள்ளுதல் போன்ற கலைகளை திறம்பட கற்பிக்கலாம் அல்லது ஆய்வுக் கூடங்களையும் நிறுவலாம்.

 

கல்வெட்டுகள், தொல்லியல் அகழாய்வுத் துறை சார்ந்த கல்வி தமிழ்நாட்டின் பழங்கால, இடைக்கால வரலாற்றை ஆராய்தல் போன்ற கல்வெட்டியல் துறையின் பணிகளையும் மேற்கொள்ள வழிவகுக்கிறது. கடலுக்கடியில் புதைந்து கிடக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட வளங்களை வெளிக்கொணர்ந்து ஆய்வு செய்து பழம்பெருமைகளை நிலைநாட்டும் நீரகழாய்வுத் துறை சார்ந்த கல்வியும் மிகவும் வளம் சேர்ப்பவை. இதற்கெல்லாம் நல்ல வாருவாயும் உண்டு.

 

தமிழ்ச் சுவடிகளைத் தேடித் தொகுத்து அறிவியல் முறைப்படி பாதுகாத்தல், அருஞ்சுவடிகளை ஆய்வு செய்து பதிப்பித்து வெளியிடல், சுவடி ஆய்வு செய்து அரிய நூல்களை மீளவும் வெளியிடல் போன்ற சிறப்பான பணிகளுக்கு வழிவகுப்பவை ஓலைச்சுவடித்துறை. அரிய கையெழுத்துச் சுவடிகளைத் திரட்டுவதும், அவற்றைப் பாதுகாப்பதும் அச்சுவடிகளின் அடிப்படையில் தமிழக வரலாற்றை ஆராய்வதும் ஆர்வலர்களின் தனிச்சிறப்பான அரிய முயற்சியாக இருக்கும். இதற்கு பல்கலைக்கழகங்களின் உதவியும் பெறலாம்.

 

1982 ஆம் ஆண்டிலிருந்து, தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, அமெரிக்கக் குடியரசு, பிரிட்டன் ஆகிய நாடுகளில் குடியேறி வாழ்ந்து வரும் தமிழர்கள் தொடர்ந்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் அறிந்து போற்றவும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை முதலிய நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழில் உயர்கல்வி பெற்று மேம்பாடு அடையவும் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை பணியாற்றி வருகிறது. இந்தப் பணிக்கான தகுதியை சிறப்பாக வளர்த்துக் கொள்பவர்களுக்கு நல்ல பணி வாய்ப்புகளும் காத்திருக்கின்றன.

 

அறிவியல் தமிழ், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ் வழி அறிவியல் பரப்புதல், அறிவியல் துறையில் தமிழின் பயன்பாடுபற்றி ஆராய்தல் போன்று உயரிய நோக்கங்களைக் கொண்டு  கற்றல் மிகச்சிறப்பான பணிகளுக்கு வழியமைக்கும். பொதுவாக அறிவியல் ஆய்வுகள் அனைத்தும் தமிழில் ஆவணப்படுத்தும் முயற்சியை அரசு முன்னெடுக்க வழிவகுக்க வேண்டியது அவசியம் என்பதையும் பதிவுசெய்ய விரும்புகிறேன். அப்படி செய்யும்போது இவை சார்ந்த பணி வாய்ப்புகளும் பெருகும்.

 

அடுத்து மொழிபெயர்ப்புத் துறையைப் பொருத்தவரை, தமிழ் மொழியை வளப்படுத்தும் சீரிய நோக்கம் கொண்டதொரு துறை என்பதால் இது பரந்த பணி வாய்ப்பிற்கும் வழியமைக்கக்க்கூடியதாக உள்ளது.

 

பொதுவான, சிறப்பு நிலை அகராதிகள், பல வகைப்பட்ட ஆய்வடங்கல்கள், சொற்றொகுதிகள், சொற்பொருள் அடைவுகள், தொடரடைவுகள் முதலிய நோக்கு நூல்களைத் தொகுக்கும் தொகுப்பியல் துறையின் மூலம் பணியைப் பெறலாம்.

சமூகவியல், பொருளாதாரம் போன்ற இயல்களிலும் தமிழ்மொழி வழியாக நூல்கள் எழுதுவதற்காகவும், சிற்றூர்ப்புறச் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளை ஆராய்வதற்காகவும் அவற்றின் அடிப்படைச் செய்திக் கூறுகளைத் திரட்டுவதற்காகவும், அரசின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான பயன்மதிப்பீட்டுத் திட்டங்களை ஆராயவும் செயல்படும் சமூகவியல் துறையில் ஆற்றலை வளர்த்துக்கொள்பவர்களுக்கு சிறப்பான பணி காத்திருக்கிறது. தமிழ் இலக்கியங்களின்  உயராய்வுகளை மேற்கொள்ளுதல், மொழியியல் துறையின் மூலமாக தமிழ் மொழியமைப்பின் பல்வகைக் கூறுபாடுகளை ஆராய்வது போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

பொதுவாக தமிழ் இலக்கியம் கற்போருக்கு நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், பலர் தமிழ் படித்தால் எதிர்காலமே இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொள்கிறார்கள். இளங்கலை தமிழ் இலக்கியம் கற்பவர்களுக்கும், கணிதம், இயற்பியல், வரலாறு உள்ளிட்ட மற்ற பாடங்கள் கற்கும் மாணவர்களுக்கும் உரிய அனைத்து வேலைவாய்ப்புகளும் பொதுவானவையே என்பதே உண்மை.

 

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) தேர்வு முதல் இளங்கலைப் பட்டத்தைத் தகுதியாகக் கொள்ளப்படும் அனைத்து வேலைவாய்ப்புத் தேர்வுகளையும் தமிழ் கற்போரும் எழுதி வேலைவாய்ப்பு பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் வங்கித் தேர்வுகள், இரயில்வே தேர்வுகள் போன்றவைகளையும் தமிழ் படித்தோர் எழுதி பணி வாய்ப்பு பெறலாம். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, 2 உள்ளிட்ட தேர்வுகளையும் எழுதலாம்.  பி.எட் அல்லது புலவர் பட்டயம் படித்திருந்தால் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பணிக்குச் செல்லலாம். எந்தவொரு கல்வியையும் கடமைக்காகக் கற்காமல், அதை எந்த வகையில் கற்று முழுமையாகப் பயன் பெறமுடியும் என்பதை நன்கு அறிந்துகொண்டு கற்க முற்பட்டால் சிறப்பான பயனடையலாம். எடுத்துக்காட்டாக முதுகலையில் தமிழ் இலக்கியத்தில் உள்ள இதழியல் உள்ளிட்ட பல்வேறு விதமான படிப்புகள் உள்ளன. முதுகலை இதழியல் படித்தோருக்கு பத்திரிகை, ஊடகத் துறையில் செய்தியாளர், உதவி ஆசிரியர்  உள்ளிட்ட பலவிதமான பணி வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது பெரும்பாலும் இணைய இதழ்களுக்கு அதிகமான வரவேற்பு உள்ளதையும் அறிவோம். இணையம் தொடர்பான சிறந்த பயிற்சி உடையவர்களுக்கு இதுபோன்ற பணிகள் எளிதாக கிடைக்க வாய்ப்புகள் அதிகம். இதற்கு மிக முக்கியமான ஒன்று, தமிழைப் பிழையின்றிப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் வல்லமை பெற்றவர்களாக இருக்கவேண்டும்.  இத்தகையோரின் தேவைகள் பெருமளவில் உள்ளன. ஊடகத் துறை சார்ந்த தொலைக்காட்சி, வானொலி, பண்பலை (எப்.எம்) போன்றவைகளில் செய்தி வாசிப்பவர், நிகழ்ச்சி அறிவிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் போன்ற பணியிடங்களும் அதிகமாகவே காத்திருக்கின்றன. ஆங்கில மொழியிலும் ஓரளவிற்கேனும் பயிற்சி பெற்றிருப்பவர்களுக்கு, நம் நாட்டில் மட்டுமல்லாமல் சீனா, மொரீசியசு, சப்பான், இலண்டன் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் வானொலியில் தமிழ் அறிவிப்பாளராகவோ, நிகழ்ச்சித் தொகுப்பாளராகவோ பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கலாம். செய்தி இதழ்/செய்தித்தாள், சின்னத்திரை, வானொலி, பண்பலைஇவற்றிலும் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் தமிழர்கள் வாழும் இடங்களிலும் தமிழ் படித்தோருக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு.

 

தமிழில் எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., பட்டங்கள் பெற்றவர்கள் பல்கலைக்கழகக் கல்லூரிகளின் பேராசிரியர்களாக மட்டும்தான் செல்ல முடியும் என்பதல்ல. தமிழ் இலக்கியத்துடன் சேர்த்து கல்வெட்டு ஆய்வு, சுவடி வாசித்தல், சுற்றுலாவியல் போன்றவற்றில் பட்டயங்கள் என்கிற டிப்ளமாவும் பெற்றால் தமிழக அளவில் தொல்லியல் துறையில் பணியாற்றும் வாய்ப்பும் உள்ளது.

தமிழ் மொழியோடு ஆங்கில மொழியிலும் நல்ல புலமை பெற்றவர்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிக்கும், தமிழ் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்கும் பணிகளுக்கான வாய்ப்புகளும் அதிகமான உள்ளன. திறமைக்கு ஏற்ற அளவிற்கு வருவாயும் பெருகும். இலக்கியம் உள்ளிட்ட பிற தகவல்களை, பிற மொழிகளுக்கும், பிற மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழி பெயர்ப்பது, பல்வேறு கல்லூரிகளில் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) நிதியுதவியுடன் மொழி பெயர்ப்பியலில் சான்றிதழ், டிப்ளமோ, உயர் டிப்ளமோ படிப்புகள் கற்றவர்களுக்கு இந்த வாய்ப்புகள் சிறப்பாகவே உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக பி.பீ.ஓ., கால் சென்டர்களில் ஆங்கிலம், ஆங்கில இலக்கியப் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இத்தகைய காரணங்களால் ஆங்கிலப் பாடத்தை தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறதென்பது அனைவரும் அறிந்ததே. என்றாலும் இன்று பல பி.பீ.ஓ. மையங்கள்  தமிழ் மொழியிலும் சேவை செய்ய முன்வருவதோடு, தமிழ் மொழி கற்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை சமூக ஆர்வலர்கள் பரிந்துரை செய்து வருவதும் நம்பிக்கைக்கு உரிய செய்தியாக உள்ளது.
தமிழர்கள் பெரும்பாலும் வேலைக்குச் செல்வதிலேயே ஆர்வமாக உள்ளார்கள் என்ற கருத்தும் அதிகமாகவே நிலவுகிறது. வேலையை உருவாக்கும் சூழலை உருவாக்கும் எண்ணம் கொண்டவர்களே சிறந்த வெற்றியாளர்களாக ஆகின்றனர். தமிழ்மொழியை அலுவல் மொழியாகக் கொண்டு தங்கள் நிறுவனங்களை உருவாக்க தமிழர்கள் முன்வர வேண்டும்.

தமிழ் கற்பவர்களுக்கு தமிழாசிரியர், பேராசிரியர் பணிகள் மட்டுமே கிடைக்கும் என்பதெல்லாம் கடந்த காலம். இன்று பல நிலைகளில் தமிழ் கற்பதால் சிறப்பான பணிகளையும் பெறும் வாய்ப்புகள் உள்ளன. தமிழோடு பண்மொழி /வணிகவியல் அறிந்திருந்தால் உலகில் தமிழர்கள் மிகுதியாக வாழும் பகுதிகளில் வைப்பகம் / தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பணி செய்யமுடியும்.

 

 தனியார் தொலைக்காட்சிகள் இன்று புற்றீசலாக உருவாகிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் நிகழ்ச்சித் தொகுப்புசெய்தி வாசிப்பு, நிகழ்ச்சித் தயாரிப்பு போன்ற பணிகளில் தமிழ் இலக்கியப் பட்டதாரிகள் சிறப்பாக பணியாற்ற முடியும். மரபார்ந்த செம்மையான தமிழறிவோடு கணினி அச்சுத் தொடர்பான பயிற்சியும் இருந்தால் பழந்தமிழ் இலக்கியங்களை அச்சிடுதல், மின்னுருவேற்றல் போன்றவற்றில்ணியாற்றும் வாய்ப்பு பெறலாம்.

அறநிலையத் துறை மற்றும் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில்  தமிழிசையில் வழிபாட்டுப் பாடல்கள் பாட ஓதுவார்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழில் அர்ச்சணை செய்யவும் பணியமர்த்தப்படுகின்றனர்.

 

வெளிநாடுகளிலும் பணிவாய்ப்புகள் பெருகி வருகின்றன. தமிழர்கள் உலகம் முழுவதும் தற்போது தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், சுத்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகளிலும் பணி காரணமாக குடிபெயர்ந்து வசிக்கின்றனர்.

உலகநாடுகளின் வாழும் தமிழ் மக்கள் அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மறந்துவிடக் கூடாது என்பதற்காக தமிழ் கற்பிக்கும் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அங்கும் தமிழாசிரியர்கள் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். தமிழோடு பிறமொழி அறிவும் இருப்பின் சிறப்பான ஊதியம் பெறலாம். மொழிபெயர்ப்பு பெரிய அளவில் வளர்ந்து வரும் துறையாக உள்ளது. வெளிநாட்டு மக்கள் தமிழ் மொழியின் தொன்மை காரணமாகவும், இலக்கிய நயம் குறித்த ஆர்வத்தினாலும் தமிழ் மொழியை ஆழ்ந்து கற்பதற்கு முன்வருகிறார்கள். அவர்களுக்கு இணையம் மூலமாக நேரலையில் காயலை என்கிற Skype போன்ற தளங்கள் மூலம் தமிழ் சொல்லிக்கொடுக்க ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். பலர் பகுதி நேர வேலையாகவும் செய்து பொருள் ஈட்டுகிறார்கள்.

 சிறப்பாக பணியாற்றி பெயர்பெற்ற பி.பி.சி, சீனா, சப்பான், இலங்கை, சுத்திரேலியா, அமெரிக்க வானொலிகளில் தமிழ் மொழிப் பிரிவு உள்ளது. அங்கும் தமிழ் கற்றறிந்தோருக்கு அதிகப்படியான ஊதியத்துடன் கூடிய பணிகள் கிடைக்கின்றன. விளம்பரத் துறையிலும் தமிழ்ப் பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்புகள் காணப்படுகின்றன. அடிப்படையான பட்டப்படிப்புடன், மின் பதிப்புத் துறைக்கான கணினி சார்ந்த குறுகிய காலப் படிப்புகளை கூடுதலாக மேற்கொண்டால் ஊடகத்துறைக்குள் தடம் பதிப்பதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ளலாம். படைப்புகளை எழுத, சரிபார்க்க, பிழை திருத்த, செய்திகளைச் சேகரிக்க, தொகுத்து வழங்க.. என காட்சி ஊடகங்களில் திரைக்கு முன்னேயும் பின்னேயும் வேலைவாய்ப்புகள் அதிகமுண்டு.

 

முகநூல், புலனம் [WahtsApp], தேடலி (கூகுள்), கீச்சகம் [டுவீட்டர்], கோரா [Quora] இவ்வாறு பல செயலிகள் தமிழ் மொழியை அலுவல்மொழியாக ஏற்றுள்ளன. இவைகள் மூலமாகவும் பணி வாய்ப்புகள் பெறலாம்.

 

கணனி மென்பொருள் நிறுவனங்கள், பெரிய அழைபேசி நிறுவனங்கள்,  

போன்றவைகளும் தமிழ் மொழியை தங்கள் நிறுவனங்களின் அலுவல் மொழியாக இணைக்கின்றன. தமிழும், ஆங்கிலமும் நன்கு அறிந்தவர்கள் இப்பணியில் வாய்ப்பு பெறலாம். எந்த மொழியாக இருந்தாலும், எந்தப் பாடமாக இருந்தாலும், ஒருவர் எவ்வளவு நன்றாகக் கற்றுத் தெளிவு பெறுகிறாரோ, அதற்கேற்ப மட்டுமே வேலைவாய்ப்பு இருக்கும்.

இனி வருங்காலத்தில் மொழிப்பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே வேலைவாய்ப்பு அதிகம் என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு. தொழில்நுட்பக் கல்வியில் சிறப்பாக தேர்ச்சி பெற்றவர்கள் என்றாலும் அவர்களிடம் Soft Skils எனப்படும் Communication Skills அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது; மொழிப்பாடம் கற்றவர்களுக்கே அது எளிதில் வரும்.

 

 எந்த படிப்பு படித்தாலும் பாடத்திட்டத்தை தவிர்த்து பாடம் சார்ந்த மற்றும் பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தற்போதைய காலகட்டத்தின் அத்தியாவசியத் தேவையான கணினி சார்ந்து ஏதாவது ஒரு பகுதி நேர படிப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மாற்று மொழியறிவை வளர்த்துக் கொள்ளவும் பயிற்சி எடுக்க வேண்டும். இது மட்டுமன்றி தங்களின் துறையில் அவ்வப்போது எந்த வகையான ஆராய்ச்சிகளெல்லாம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள முயலலாம்.

ஆசிரியர் துறைக்கு நிகராக வேலை வாய்ப்புகள் கொண்டது ஊடகத் துறை. அச்சு, காட்சி, பண்பலை வானொலி, இணையம், விளம்பரத்துறை என பரந்து விரிந்திருக்கும் ஊடகத் துறையின் மீது ஆர்வமும், திறமையும் உள்ளவர்களுக்கு மென் பொருள் நிறுவனப் பணியாளர்களுக்கு இணையான ஊதிய வாய்ப்புகள் பொதிந்திருக்கின்றன.

 

சொற்பச் செலவில் படித்து நல்ல வேலை வாய்ப்பைப் பெற மொழிப்பாடப் பட்டங்கள் உதவுகின்றன.

ஆசிரியர் துறையில் மொழிப்பாடம் படித்தவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அதிலும், முன்னுரிமைக்காகக் காத்திருக்காது, தகுதித் தேர்வை எழுதித் தனக்கான அரசுப் பணியை உறுதி செய்துகொள்ளும் இளம்வயதினர் அதிகரித்துள்ளனர். அரசுப் பணி மட்டுமல்ல, தனியார் துறையிலும் அதற்கு நிகரான ஊதியம் கிடைக்கும் என்ப தால் மொழி, கலைப் படிப்புகளில் தகுதியை பெருக்கிக்கொள்ளலாம்.

 

உண்மையில் உலகம் இன்று திறந்தவெளி பொதுச்சந்தையான பிறகு மொழிப்பெயர்ப்பாளர்களுக்கு அதிகமான தேவை ஏற்பட்டுள்ளது. எழுத்து சார்ந்து மட்டுமல்ல, தொலைக்காட்சி, திரைத்துறை எனப் படைப்பு சார்ந்த அனைத்து வகையிலும் மொழிபெயர்ப்பாளர்கள் திறம்பட செயலாற்றுகிறார்கள். இரண்டு மொழிகளில் நல்ல புலமை அவசியமாகிறது. ஒப்பிலக்கியத் துறையிலும் பணிக்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டு.

 

இலக்கியத்தில் இளநிலையில் படிக்கும் பாடத்தையே முதுநிலையிலும், ஆராய்ச்சியிலும், இதே மொழி அல்லது இலக்கியத்தைப் பாடமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை. கல்வெட்டியல், சுவடியியல், நாட்டுப்புறவியல், மகளிரியல், இதழியல்... எனத் தளங்களை மாற்றிக்கொள்ளலாம்.

 மொழி ஆராய்ச்சி, அருங்காட்சியகம், சுற்றுலாத்துறை, கலை பண்பாட்டுத்துறை போன்ற சர்வதேச அளவிலும் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. பொறியியல் படித்தவர்கள் வெளிநாடுகளில் பெரும் ஊதியத்திற்கு நிகராக தமிழ் படித்தவர்களும் அங்கு சம்பளம் பெறலாம். சர்வதேச அளவில் புலம் பெயர்ந்த தமிழர்கள்  சிறப்பாக பணி புரிவதையும் காண முடிகின்றது.

 

தட்டச்சு செய்வதோ அல்லது மொழிபெயர்ப்போ, பிழை திருத்தமோ என ‘பக்கத்துக்கு இவ்வளவு’ என்று வீட்டிலிருந்தபடியும், வேறு பணியிலிருந்தபடியே பகுதி நேரமாகவும் சம்பாதிப்பவர்கள் அதிகரித்துள்ளனர். இது தவிர, இல்லத்தரசியாக இருந்தோ, பகுதி நேரப் பணியாகவோ இணையம் வாயிலாக ஆசிரியராக பணியாற்றி கணிசமாகச் சம்பாதிப்பவர்கள் நகர் பகுதிகளில் அதிகரித்திருக்கிறார்கள். அரசு மற்றும் தனியார் துறையில் மக்கள் தொடர்புத் துறை பணிகள், கொள்கை விளக்கங்கள், பிரசாரங்கள், பிரசுரங்களை உருவாக்குவது போன்றவற்றிலும் கணிசமான வேலை வாய்ப்புகள் உண்டு.

 

இது மட்டுமின்றி, தமிழ்,  படிப்பவர்கள் அரசு போட்டித் தேர்வுகளில் பெருமளவு வெற்றி பெறுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். தங்களது மனதுக்குப் பிடித்த கல்வியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நல்ல சாதனையாளராக உருவெடுக்க முடியும். அரசுப் போட்டித் தேர்வுகள் எழுதுவதால் உயர் பொறுப்புகளுக்கும் செல்ல முடியும்.

இதுவரை நாம் உரையாடியவைகளின் அடிப்படையிலான சாரங்களைப் பார்க்கலாம்..

·         நமது தாய்மொழியான தமிழின் சிறப்புகளை அறியவும், அதை உலகிற்கு எடுத்துச் சொல்லவும் தமிழ் இலக்கிய படிப்புக்கள் உதவுகின்றன. தமிழில் இளங்கலை (பி.ஏ.) முதல் முனைவர் (பிஎச்.டி.) பட்டம் வரை பயிலலாம். உடன் கல்வியியல் பட்டமும் படிப்பவர்களுக்கு ஆசிரியர் பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஆசிரியர் பணிக்கான வாய்ப்புகள் உருவாகிக்கொண்டேதான் இருக்கின்றன.

·         தமிழ் படிப்பவர்களுக்கு தமிழாசிரியர், பேராசிரியர் பணிகள் மட்டுமே கிடைக்கும் என்பதெல்லாம் பழைய காலம். எண்ணற்ற மாற்று வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் அதற்கு தேவையானதெல்லாம் பரந்துபட்ட அறிவும், அதற்கான முயற்சியும்தான். அதாவது பல நிலைகளில் தமிழ் படித்தால் சிறப்பான பணிகளைப் பெறலாம்.

·         கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கான ஸ்லெட், நெட் தேர்வுகளில் தமிழ் ஆய்வு பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் கல்வியை நிறைவு செய்யும் வரை மாதம் ரூ. 6,000 முதல் ரூ. 12,000 வரை பல்கலைக்கழக மானியக் குழு ஊக்கத் தொகை தருகிறது.

·         அதேபோல, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ் பட்டப்படிப்பில் சேருவோருக்கு என தனியாக கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

·         தமிழ் இலக்கியம் படித்தால் இந்திய ட்சிப்பணித் தேர்வு எழுதலாம். ஆங்கிலம் பொது அறிவு இரண்டையும் வளரத்துக் கொள்ள வேண்டும். நாளிதழ்கள் படிக்க வேண்டும்.


இணையத்தமிழில் ஏராளமான வாய்ப்புகள் உண்டு என்றாலும் அதற்கான முயற்சிகளும் தேவை. இலக்கியங்கள் படிப்பதுடன் நின்றுவிடாமல்

1) கணிணியில் தமிழ்
2) செல்போனில் தமிழ் செயலிகள் உருவாக்குதல்
3) தமிழில் விளம்பரம் வடிவமைத்தல்
4) புத்தகம், பதிப்பித்தல் துறையில் தவறு திருத்தல், ப்ரூப் ரீடிங், போன்ற செயலாக்கப் பணிகளை ஊக்குவிக்கும் துறைகளில் கவனம் செலுத்தினால் நிச்சயம் வேலைவாய்ப்பு அதிகம்.

 தமிழ் மொழி மட்டும் படிப்பதால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா,  ஆங்கிலக் கல்வியும் வேண்டுமா என்பதே பலருக்கு பெரும் ஐயம். இன்று உலகளாவி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும், ஹூண்டாய் கார்களைத் தயாரிக்கும் தென்கொரிய நாடு ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எந்த நிலையில் இருந்தது, என்பதை சிந்தித்துப்பாருங்கள். தற்போது இதே கொரிய நாட்டில் அனைவரும் கொரிய மொழியிலேயேதான் உயர்கல்வி கற்கிறார்கள்.  ஐம்பது ஆண்டுகளுக்குள் அவர்கள் இந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளதற்குவர்கள் தாய்மொழிக் கல்வியில் கற்றதன் மூலம் ஆழ்ந்த ஞானம் பெற்றதால்தான் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் எழுதப்படும் முக்கியமான பல அறிவியல் நூல்களை இவர்கள் கொரிய மொழிக்கு மாற்றம் செய்கிறார்கள்.  பிரஞ்சுக்காரர்களைப்போல மொழிப்பற்று மிகுந்த கொரியர்கள், பழம்பெருமை மட்டுமே பேசாமல், மொழியையும், தங்களையும், தங்கள் நாட்டையும் முன்னேற்றுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.  பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருவதுபோல அங்கு வந்தாலும், அந்நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக அவர்கள் தங்கள் கொரிய மொழியை ஒருநாளும் புறக்கணிப்பதில்லை.

 

உழைப்புக்கும், சுறுசுறுப்புக்கும் பெயர்போன ப்பானியர்களும் இப்படித்தான் மொழிப்பற்று கொள்கிறார்கள். எம்.என்.சி என்கிற பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய ஆங்கிலக்கல்வியே தேவை என்ற கருத்து இருந்தாலும் தமிழ் மொழி படித்தவர்கள் அந்த வேலைக்கு தகுதியற்றவர்கள் அல்ல என்ற கருத்தும் உண்மைதானே.  கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் அமெரிக்காவின் பிடியில் இருந்து அவர்களால் முன்னேற்றம் கண்ட நாடு ஜப்பான் அல்லவா.  ஆனால் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் என்ன நடந்தது. அவர்கள் விழித்துக் கொண்டார்கள். இன்று தங்கள் தாய் மொழியை விட்டுவிட்டு ஆங்கிலத்தைத் தழுவவில்லை.   இதனால் அவர்களுடைய சாதனைகளுக்கு எந்த குறையும் இல்லை.

 

தமிழில் பயின்றாலும் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து முயன்றால் நிச்சயம் முன்னுக்கு வரலாம்.  வெளிநாடுகளுக்குச் சென்றும் தங்கள் வாழ்வாதாரத்தையும் பெருக்கிக்கொள்ளலாம்.  அதற்காக வேற்று மொழிகளைக் கற்க வேண்டியதில்லை என்பதில்லை.  எத்தனைக்கெத்தனை மொழிகள் கற்கிறீர்களோ அத்தனைக்கத்தனை உங்களுடைய சிக்கல் அவிழ்க்கும் திறன் அதாவது [problem-sovling skills] அதிகம் பெருகும் என்று ஆய்வாளர்கள் உறுதியளிக்கிறார்கள்.

 

தமிழ் இலக்கியம் மட்டுமே படிப்பதால்தான் எல்லைகள் விரிவடைவதில் சிக்கல் ஏற்பட்டு வாய்ப்புகள் குறைகின்றன என்ற கருத்தும் நிலவுகிறது. இதற்கான சில மாற்று வழிகளையும் கல்வியாளர்கள் முன் வைக்கின்றனர். அவற்றுள் சிலவற்றை பார்க்கலாம்.

 

தமிழ் மொழியை இலக்கணம், இலக்கியம் என்ற வகையில் மட்டும் பார்க்காமல், ஒவ்வொரு தொழில்நுட்பத்துடன் தமிழை இணைத்தால் மிகப்பெரிய வாய்ப்புகள் உருவாகின்றன என்கிறார்கள்.

 

எடுத்துக்காட்டாக,  பிக் டேட்டா (BIG DATA) போன்ற ஒரு தொழில்நுட்பத்துடன்  தமிழை உட்படுத்தினால் மிகப்பெரிய வாய்ப்புகள் தமிழிலயே உள்ளனவாம். ஒரு பல்பொருள் அங்காடியின் நிறுவனத் தரவுகளை முழுமையாக எடுத்து அவைகளை இந்த பிக்டேட்டா நுட்பத்துடன் இணைத்து அந்தத் தரவுகளை மொத்தமாக அலசி ஆராய்ந்தால் அந்த பல்பொருள் அங்காடியில் எந்தெந்த பொருட்கள் அதிகமாக விற்பனை ஆகியிருக்கின்றன என்பதைக் கண்டறியும் வகையில், அந்தப் பொருட்களின் தயாரிப்பாளர்களுக்கு அவைகளை ஆதாரங்களுடன் நிறுவினால், அவர்களிடமிருந்து பல்வேறு சலுகைகள் பெற்றுத்தர முடியும். இதை நுட்பமாக உணர்ந்து, இது போன்று எண்ணற்ற வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டு பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் இட்டால் உங்கள் வருவாய் எந்த அளவிற்கு உயரும் என்று சொல்ல வேண்டியதில்லை.

 

 அரசின் உதவியுடன் சில  திட்டங்களை மேற்கொண்டு மாற்றங்களைக் கொண்டுவர முயலலாம். பயன்பாட்டுத் தமிழ் என்கிற "அப்ளைட் தமிழ்" போன்ற படிப்பை உருவாக்கி,  "கணிணி+ தமிழ், வணிகம்+ தமிழ், பதிப்பகம்+ தமிழ்" போன்ற வாழ்வியலுக்குத் தேவையான விருப்பப் பாடத்திட்டங்களை உருவாக்கி பயிற்சி அளிக்கலாம். விளம்பரம், தகவல் தொடர்பு போன்ற வணிக மொழிகளை தமிழில், சுவையாகவும், ஆக்கபூர்வமாகவும் செயல்படுத்தும் முறையை ஆய்ந்தறிந்து பயிற்சி அளிக்கலாம். கல்லூரியிலேயே வணிகத்துறையும், தமிழ்த்துறையும் இணைந்து இதற்கான பாடத்திட்டங்களை உருவாக்குவதும் சிறந்த பயனுள்ள திட்டமாக இருக்கும். தமிழ் அறிஞர்களும், கல்வியாளர்களும், கணினித் துறை வல்லுநர்களும் இணைந்து குழு அமைத்து அதற்கான ஆய்வுகளையும், திட்டமிடலையும் மேற்கொண்டு அவைகளை பெரிய நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்படுத்தலாம்.

 

தமிழை படிப்பவர்கள் அதோடு நின்றுவிடாமல் மேற்கொண்டு நிரலாக்கம் (Programming) தொடர்பான படிப்புகளையும் படிப்பதால் தமிழ்-கணினி, தமிழ்-செல்பேசி தொடர்பான வேலை வாய்ப்புகளுக்கும் பயனுள்ள வகையில் அமையும். இன்று இணையமும், கைபேசியும் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்றாகிவிட்டது. பல இடங்களில் உள்ள கணினிகளைச் செயற்கைக்கோள் மூலம் இணைப்பதே இணையம் என்ற இண்டர்நெட்.  தமிழ் வளர்ச்சிக்கும் இந்த கணினி, இணையத் தொழில்நுட்பம் ஆகிய இரண்டும் இன்று பெரிதும் பயன்படுகின்றன. ஆசிய அளவில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழுக்கே அதிகமான இணைய அமைப்புகள் உள்ளன. தமிழில் சுமார் 2,000 இணைய அமைப்புகளும் ஒரு கோடி பக்கங்களும் உள்ளன.

 

இதனைத் தமிழில் படிப்பதற்காக அமுதம், லதா, பாமினி, மயிலை, பூபாளம், முரசு ஆகிய மென்பொருள்கள் இணையம் மூலமாகக் கிடைக்கின்றன. இணையம் மூலமாகவே தமிழர், தமிழ் பண்பாடு, தமிழர் வரலாறு தொடர்பான பல்வேறு தகவல்கள், கடல் கடந்த நாடுகளுக்கு உடனுக்குடன் கடத்தப்படுகிறது. இந்த வாய்ப்புதான் இன்றைய முக்கியமான வேலை வாய்ப்பாகவும் மாறிக்கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும், பல தமிழ் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டுதான் உள்ளன.  இணையம் மூலம், மின்னூலாக சேமிக்கப்பட்டுள்ள சங்க கால இலக்கியங்கள் மட்டுமல்லாமல் தற்கால புதுமைப் படைப்புகள் வரை பலப்பல அரிய நூல்களைக் கண்டடைய முடிகிறது. இதற்கான திட்டப் பணிகளையும் அதற்கான நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு முன்னெடுப்பதன் மூலமும் வருமானம் பெறலாம்.

இணைய வளர்ச்சியால் தமிழ்க் கல்வியை எளிமைப்படுத்தி வழங்கும் வகையில் பல இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன.

 

 சொந்தமாக ஒரு இணையதளத்தையோ அல்லது blogger, wordpress போன்ற இலவச வலைப்பதிவு சேவைகளைப் பயன்படுத்தியோ உங்கள் அறிவாற்றலையும், தனித்திறமைகளையும் உலகறியச் செய்வதன் மூலமும் நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளலாம். விளம்பரங்களாலும் வருமானம் பெறலாம்.

ஃபைவர் (Fiver) , அப்வொர்க் (Upwork) போன்ற சுயாதீன வேலைவாய்ப்புத் தளங்கள் (Freelancing websites) மூலமாகவும் பல தமிழ் மொழி சார்ந்த பணிகள் பெறலாம். இது போன்ற இணையதளங்களின் மூலமாக மொழிபெயர்ப்பு பணிகள் பெறவும் வாய்ப்புகள் உள்ளன. மொழிப்புலமை உள்ளவர்கள் அதற்கான முயற்சியையும் தங்கள் வலைப்பூ மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் முயன்று நல்ல வருமானம் பெறலாம்.

Freelancer - Hire & Find Jobs என்ற தளத்தில் ஒரு கணக்கை தொடங்கி வைத்தால், தமிழில் புத்தகம், கட்டுரைகள், வேறு படைப்புகள் எழுத தேவை இருப்பவர்கள் அவர்களைத் தொடர்பு கொள்வர். 1000 முதல் 1500 வார்தைகள் கொண்ட ஒரு கட்டுரைக்கு $ 5 முதல் $ 10 வரை கிடைக்கும். வீட்டில் இருந்து வேலை செய்யவும் பல இணையதளங்கள் உள்ளன. கூகுள் மூலம் அவைகளைக் கண்டறிந்து தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். தட்டச்சு செய்யத் தெரிந்தவர்களுக்கு ஒரு பக்கம் தட்டச்சு  செய்ய 100 ரூபாய் கிடைக்கும்.

இந்தியாவில் ஃப்ரீலான்ஸர்கள் (Freelancer) ஆண்டிற்கு ரூ. 60 லட்சம் வரை சம்பாதிப்பதாகக் கூறுகிறார்கள். இதற்கு இன்றைய இணையதள வளர்ச்சியே உறுதுணையாக இருக்கிறது. சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் வருமானம் ஈட்டலாம்.

உங்கள் வலைத்தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் என்றால் உங்கள் வருமானம் பலமடங்காக இருக்கும் என்கிறார்கள். வலைத்தளத்தில் பாடல்கள், காணொலிச் செய்திகள், காணொலிகள், இணைய விளையாட்டுகள், ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் போன்ற கோப்புகளை பதிவிறக்கம் செய்யும் இணைய தளத்தை அதாவது (Blogger or Website) உருவாக்க வேண்டும். அதில் பதிவிறக்கம் செய்ய வரும் பார்வையாளர்கள் பதிவிறக்க பொத்தானை அழுத்தும் போது விளம்பரம் வரும் எனவே இது மூலமாக நல்ல வருமானம் பெற முடியும். உங்களுக்கு வருகின்ற பார்வையாளர்களை பொறுத்து உங்களின் தினசரி வருமானம் நிர்ணயிக்கபடும். அதேபோல இன்று  YouTube சேனல் ஆரம்பிப்பது கூட ஒரு இணையவழி தொழில்தான். இப்படி எண்ணற்ற வாய்ப்புகள் கடல்போல் விரிந்திருக்கின்றன. பொறுமையுடன் அவைகளைக் கண்டடைவதுதான் என்று நம்முன் இருக்கும் சவால். உழைப்பின்றி உயர்வு ஏது. எதற்கும் கடுமையாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும்.

 

வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள் என்கிறார் அப்துல் கலாம்.

 

பாவாணர் - பன்னாட்டு கருத்தரங்கம்



மகளிர் கிறித்தவக் கல்லூரி, நாகர்கோயில், தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளை, தமெரிக்கா தொலைக்காட்சி, அமெரிக்கா ஆகியோர் இணைந்து நடத்தும், ‘பாவாணர் பைந்தமிழ் கொடை’ எனும் பொருண்மையிலான இந்த ஐந்து நாள் பன்னாட்டுப் பயிலரங்கின் 5ஆம் நாள் நிறைவு  நிகழ்வில் கலந்து கொண்டிருக்கும் தங்கள் அனைவரையும் தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளைச் சார்பில் வரவேற்பதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.

நேற்றைய நான்காம் நாள் நிகழ்வில் தமிழ்ச்செம்மல் உயர்திரு பதுமனார் ஐயா அவர்களின் உரை மிகச் சிறப்பாக அமைந்திருந்ததும், மாணவச் செல்வங்களுக்குப் பயனுள்ள வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இந்த கருத்தரங்கின் காரணமாக இருக்கும் மகளிர் கிறித்தவக் கல்லூரியின் தாளாளர் உயர்திரு ஆபிரகாம் நெல்சன் ஆசிர் அவர்களையும் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி.எம் பத்மா அவர்களையும், தமெரிக்கா தொலைக்காட்சியின் நிறுவனர் திரு மகேஷ் நாட்டாண்மை அவர்களையும், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கலா ஞானசெல்வம் அவர்களையும், ஒருங்கிணைப்பாளரும், இந்நிகழ்ச்சியின் ஆணி வேராக சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அன்புச் சகோதரி தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் தே.ஷீஜா அவர்களையும், நன்றி உரையாளர்கள், முனை. பாப்பா, முனை.ஜெயா எஸ்கலின், முனை. சங்கீதா, முனை.ஜெஸ்லின் நிமா ஆகியோர்களையும், தொழில்நுட்ப உதவி அளித்து வரும் பேரா. ஜெசிந்த் ஜெயபாலன் அவர்களையும் தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளையின் சார்பில் வருக வருக என அன்போடு வரவேற்கிறோம். இந்நிகழ்வில் சிறப்பான பயிற்சி பெறும் வகையில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றிருக்கும் அத்துணை மாணவச் செல்வங்களையும், ஆய்வு மாணவர்களையும் இதற்கு உறுதுணையாக இருக்கும் அத்துணை பேராசிரியப் பெருமக்களையும் அன்புடன் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

 

 மொழிஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர், சொல் ஆராய்ச்சி வல்லுநர், பன்மொழி வல்லுநர் தேவநேயப் பாவாணர் இளம் பருவத்திலேயே தமது தாய் - தந்தையரை இழந்தார். ஐந்தாம் அகவையிலேயே கொடிய வறுமைக்கு ஆளானார். தமது தாய் வழி பாட்டனாரின் அரவணைப்பில் வளர்ந்தர், அவரது உதவியால் வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள ஆம்பூர் மிசௌரி நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப்பள்ளியில் பயின்று பின்னர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் திருச்சபை விடையூனியக் கூட்டுறவு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 1921ம் ஆண்டு ஆசிரியப் பணிக்குச் செல்ல அவர் விரும்பியபோது, அவருக்கு, அவரது ஆசிரியர், பண்டிதர் மாசிலாமணி என்பவர் ஒரு சான்றிதழ் வழங்கினார். அதில் பாவாணரின் பெயரை, “தேவநேசக் கவிவாணன்” என்று குறிப்பிட்டார். பின் அப்பெயரையே தம் பெயராகக் கொண்டார் பாவாணர். அவ்வாண்டிலேயே தாம் இளமையில் பயின்ற ஆம்பூர் நடுநிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

1924ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத் தேர்வு எழுதி வென்றார். “நேசன்” என்பதும் “கவி” என்பதும் வடசொற்கள் என்பதை அறிந்துகொண்ட பின்னர், தம் பெயரைத் “தேவநேயப் பாவாணர்” என அமைத்துக்கொண்டார்.
சுருக்கமான சில தகவல்கள்
1. 1925-ல் சிறுவர் பாடல் திரட்டு என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது. தொல்காப்பிய சூத்திரக் குறிப்புரை, உரிச்சொல் விளக்கம், செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு, தென்மொழி என ஏராளமான கட்டுரைகள், கட்டுரைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் இசைக் கலம்பகம், இயற்றமிழ் இலக்கணம் குறிப்பிடத்தக்கவை.

2 பல தமிழ் அறிஞர்களைப் பற்றி நூல்கள் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் பல புத்தகங்கள், கட்டுரைகளை எழுதியவர். 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழின் சிறப்பு குறித்து பல்வேறு இடங்களில் உரையாற்றியுள்ளார். ஆங்கிலத்திலும் சிறந்த நடையுடன் பேசக்கூடியவர்.

3.அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திராவிட மொழி ஆராய்ச்சித் துறையின் ரீடராக (1956 1961) பணி யாற்றினார். வேலையை இழந்து கஷ்டப்பட்ட நேரத்தில்கூட மொழி ஆராய்ச்சியை இவர் நிறுத்தியது இல்லை.

4. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.

5 ‘தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின்  தந்தை’ என்று போற்றப்படுகிறார். 1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்.

6. ‘உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன்’ என்று கூறியவர். ‘தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய்; ஆரிய மொழிகளுக்கு மூலம்’ என ஆதாரங்களுடன் வாதிட்டவர்.

7. கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதத்தில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை உறுதிசெய்து காட்டியவர். 40-க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்று சிறப்பாக சொல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். தமிழ்ப் பெருங்காவலர், செந்தமிழ் நாவலர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

8. தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராக கருதப்படுபவர். ‘மொழிஞாயிறு’ என்று போற்றப்படும் தேவநேயப் பாவாணர் 79ஆம் வயதில் மறைந்தார்.

9. இவரது இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது.

10. அன்றைய முதல் எம்.ஜி.ஆர், அவருடைய இறுதிசடங்கில் கலந்துகொண்டார்.

நிறைவுரை

இதுவரை சிறப்பாக நடந்து முடிந்துள்ள இந்த 5 நாள் பயிலரங்கின் நிறைவு விழாவிற்கு வந்துள்ளோம். 


தமிழகத்தில் மட்டுமல்லாமல் எல்லை கடந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா போன்ற பல நாடுகளிலும் தாய்மொழியாகியுள்ள நம் தமிழ் மொழி மிக விரிந்த எல்லை கடந்ததொரு தளம் அமைந்துள்ள மொழி.  பொ.ச.மு.500 துவக்கத்திலேயே தமிழ் எழுத்து வடிவப் பதிவைக் காண்கிறோம். ஆக, கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் பல்வேறு ஆட்சி மாற்றங்கள், மத ஆதிக்கங்கள் என முரண்பட்ட  சூழல்களிலும் அறுந்துவிடாத தொடர் சங்கிலிகளாக நீண்டு வந்துள்ள மொழி வரலாற்றில் தனித்தன்மை வாய்க்கப்பெற்றுள்ள மொழி தமிழ்.

பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் நம் நாட்டிற்கு வந்தபின்புதான் ஆங்கில மொழி அறிமுகம் பெற்றாலும் அதற்கு முன்னரே தமிழ்நாட்டில் 700க்கும் அதிகமான பாடசாலைகள் இருந்ததாக 1797ஆம் ஆண்டின் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன குறிப்பேட்டின் மூலம் அறியமுடிகின்றது. 

 

1834-ல் மெக்காலே இந்தியாவிற்கு வந்த பிறகு, இந்திய பாரம்பரிய கல்வி முறையை மாற்றி, ஆங்கில புத்தகங்களை மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப் பரிந்துரை செய்ததால், 1835-ம் ஆண்டு இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த பென்டிங் பிரபு மெக்காலேவின் பரிந்துரைகளை ஏற்றார். இதையடுத்து மெக்காலே கல்விக்குழு உருவாக்கப்பட்டது.

1853-ல் சார்லஸ் உட் தலைமையில், பட்டப்படிப்புகளை ஆங்கில மொழியில் வழங்கவும்ல்கலைக்கழகங்கள் தொடங்கவும் ஏற்பாடுகள் செய்தார். இங்குதான் ஆங்கிலத்தின் ஆதிக்கம் ஆரம்பமாகிறது. காலனித்துவத்தின் நோக்கங்களை மேம்படுத்துவதற்காக பிரிட்டன் தனது மொழியைப் பயன்படுத்தினாலும்  இப்போது உலகெங்கிலும் உள்ள கலாச்சார ஏகாதிபத்தியத்தின் ஒரு வடிவமாகப் பயன்படுத்துகிறது.

 

பல நாடுகள், முக்கியமாக ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காலனித்துவப்படுத்தப்பட்ட நாடுகள், சுதந்திரத்திற்குப் பிறகும், காலனித்துவ சக்திகளின் மொழியை தொடர்ந்து பயன்படுத்துகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் ஆதிக்கம், ஆங்கிலேயர்களால் காலனி ஆதிக்கமில்லாத நாடுகளை ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்ளத் தூண்டியதன் காரணம் இது சர்வதேச மொழி என்று கருதப்படுவதுதான். சீனா, பிரான்சு, ஜெர்மனி, ஸ்பெயின், ஜப்பான், பிரேசில், ரஷ்யா போன்று பல நாடுகள் தங்கள் தாய்மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருவதோடு உயர் கல்வியும் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குவதைக் காணமுடிகின்றது. அவர்களால் முடியும்போது நம்மால் ஏன் முடியாது என்று சிந்திக்கவேண்டும்.

உயர்கல்வியில் விரும்பி சேர்பவர்களில் 45 சதவீதம் மாணவர்களே படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். இதற்கு புரிதல் இல்லாத மொழிவழிக் கற்பித்தலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

உயர்கல்வி என்பது வாழ்வில் ஏற்படும் பரிணாம வளர்ச்சி என்பதை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் புரிந்துகொண்டு அதற்கான முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். பாவேந்தர் பாரதிதாசன் சொல்வது போன்று 'அறிவை விரிவு செய்து அகண்டமாக்கவும் முயலவேண்டும். அறிவை அகண்டமாக்க உதவுவது மொழி. எத்துணை மொழியை வேண்டுமானாலும் கற்கலாம்.

தமிழ் மொழியைப் பயன்படுத்தத் தொடங்கும் வேளையில், ஆய்வுப் பொருட்களும் ஆவணங்களும், அதற்கான ஆதாரங்களும் தமிழ் மொழியில் தயாரிக்கப்படும் என்பதால் சொல்லகராதியும் வளங்களும் காலப்போக்கில் வளர்ந்துகொண்டே இருக்கும்.

 

இன்று, தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, குறிப்பாக கணினித்துறையில், நாம் ஒரு சிறந்த நிலையில் இருக்கும் வகையில் தமிழ் மொழிக்கான வளங்கள் கிடைப்பதற்கும், பிற இடையூறுகளுக்கு தீர்வு காணவும் எளிதாக வழிவகுக்கும்.

மாணவர்கள்மிழ் மொழியில் விளக்கம் பெறும்போது அறிவியலின் சிக்கலான கருத்துகளைப் புரிந்துகொள்வது எளிது. ஆசிரியர்களுக்கு போதுமான தமிழ்மொழி அடிப்படையிலான கற்பித்தலும் வழிகாட்டுதல்களும் குறிப்புகளும், தொழில்நுட்பக் கல்விக்கான சொற்களஞ்சியம், மொழிபெயர்ப்புகள் பயிற்சி ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

அதற்கான ஒரு சிறு முன்னெடுப்பு மட்டுமே இந்த பாவாணர் பைந்தமிழ் கொடை எனும்  5 நாள் பயிலரங்கம் என்று கூறலாம். மாணவர்கள் மேற்கொண்டு இந்தச் சொல்லாய்வுகளை மேற்கொண்டு கட்டமைத்துக்கொண்டு தங்கள் உயர் கல்விக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இந்தப் பயிலரங்கின் முக்கிய நோக்கம் என்ற வகையில் இந்தப் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்று மாணவர்களும் உற்சாகமாகக் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

இந்த சிறப்பான பயிலரங்கம் பரவலாகச் சென்று சேர்ந்ததற்கு காரணமாக உள்ள தெமெரிக்கா தொலைக்காட்சியின் நிறுவனரும் தலைவருமான திரு மகேஷ் நாட்டாண்மை அவர்கள் நியூ யார்க் Albany தமிழ் சங்கத்தில் இரண்டு வருடங்களாக தலைவராக இருந்தவர் . NRI என்கிற குறும்படத்தை எடுத்து எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்தார்., தொழில் முனைவோர்களுக்கு பல ஆலோசனைகள் வழங்குவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார், பல கல்லூரி மற்றும் பள்ளிகளில் தன்னம்பிக்கை பேச்சாளராக  மாணவர்களை ஈர்ப்பவர். அவருக்கு உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.  கல்லூரி நிர்வாகத்தினருக்கும், மிகச் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கி நிகழ்ச்சியை செம்மையாக நடத்திச் சென்றுள்ள அன்புச் சகோதரி முனைவர் தே.ஷீஜா மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ள அத்துணை பேராசிரியப் பெருமக்களுக்கும், தொழில்நுட்ப உதவியை சிறப்பாக வழங்கியுள்ள சகோதரர். பேரா. ஜெசிந்ந் அவர்களுக்கும் தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளை சார்பாக பணிவான நன்றியை உரித்தாக்குகிறோம். அனைத்திற்கும் மேலாக தமது பல்வேறு பணிகளுக்கு இடையிலும் இந்த பயிலரங்கை மிகச் சிறப்பாக நடத்திக் கொடுத்துள்ள எங்கள் அன்பு ஐயா, தமிழ்ச்செம்மல் பதுமனார் அவர்களுக்கு மீண்டும் பணிவான வணக்கத்தையும் நன்றியையும் தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளை சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

 

 

 

மொழிஞாயிறு என்று போற்றப்படும் தேவநேயப் பாவாணர் அவர்களின் ஆகச்சிறந்த தமிழ்ப்புலமையை பறைசாற்றும் வகையில் நம் தமிழ்ச்செம்மல் பெருந்தகை மதிப்பிற்குரிய பதுமனார் ஐயா அவர்களின் பயிலரங்கம் மூலமாக பல ஐயங்கள் தெளிவுறப் பெற்றோம்.

1925-ல் சிறுவர் பாடல் திரட்டு எனும் பாவாணரின் முதல் நூல் வெளிவந்தது. தொல்காப்பிய சூத்திரக் குறிப்புரை, உரிச்சொல் விளக்கம், செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு, தென்மொழி என ஏராளமான கட்டுரைகள், கட்டுரைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இவர் எழுதிய நூல்களில் இசைக் கலம்பகம், இயற்றமிழ் இலக்கணம்  போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதுமட்டுமின்றி பல தமிழ் அறிஞர்களைப் பற்றி நூல்களையும் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் பல நூல்கள், கட்டுரைகளை எழுதியவர். 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளவர் தமிழின் சிறப்பு குறித்து பல்வேறு இடங்களில் உரையாற்றியும் உள்ளார். ஆங்கிலத்திலும் சிறப்பாக உரையாற்றக்கூடியவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திராவிட மொழி ஆராய்ச்சித் துறையில் பணியாற்றியவர் ஒரு தருணத்தில் பணியை இழந்து வறுமையில் உழன்ற  நேரத்திலும்கூட தமது மொழி ஆராய்ச்சியை இவர் நிறுத்தவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள், ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம் போன்ற வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.
தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின்  தந்தை’ என்று போற்றப்படுகிறார். 1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் முதல் இயக்குநராகவும் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்.
 கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதத்தில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை உறுதிசெய்து காட்டியவர். 40-க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்று சிறப்பாக சொல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். தமிழ்ப் பெருங்காவலர், செந்தமிழ் நாவலர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
 தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராக கருதப்படுபவர். அரசு மரியாதையுடன் நடத்தப்பட்ட இவருடைய இறுதிச் சடங்கில்
அன்றைய முதல்வர் திரு எம்.ஜி.ஆர், அவர்களும் கலந்துகொண்டார். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு தமிழ் ஆளுமையின் பெயரில் நடந்து கொண்டிருக்கும் இந்த கருத்தரங்கின்

காரணமாக இருக்கும் மகளிர் கிறித்தவக் கல்லூரியின் தாளாளர் உயர்திரு ஆபிரகாம் நெல்சன் ஆசிர் அவர்களையும் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி.எம் பத்மா அவர்களையும், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கலா ஞானசெல்வம் அவர்களையும், ஒருங்கிணைப்பாளரும், இந்நிகழ்ச்சியின் ஆணி வேராக சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அன்புச் சகோதரி தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் தே.ஷீஜா அவர்களையும், நன்றி உரையாளர்கள், முனை. பாப்பா, முனை.ஜெயா எஸ்கலின், முனை. சங்கீதா, முனை.ஜெஸ்லின் நிமா ஆகியோர்களையும், தொழில்நுட்ப உதவி – பேரா. ஜேசிந்த தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளையின் சார்பில் வருக வருக என அன்போடு வரவேற்கிறோம். இந்நிகழ்வில் சிறப்பான பயிற்சி பெறும் வகையில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றிருக்கும் அத்துணை மாணவச் செல்வங்களையும், ஆய்வு மாணவர்களையும் இதற்கு உறுதுணையாக இருக்கும் அத்துணை பேராசிரியப் பெருமக்களையும் அன்புடன் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

 

 

 

 

 

சொல் ஆராய்ச்சி வல்லுநர், பன்மொழி வல்லுநர் தேவநேயப் பாவாணர் இளம் பருவத்திலேயே தமது தாய் - தந்தையரை இழந்தார். ஐந்தாம் அகவையிலேயே கொடிய வறுமைக்கு ஆளானார். தமது தாய் வழி பாட்டனாரின் அரவணைப்பில் வளர்ந்தர், அவரது உதவியால் வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள ஆம்பூர் மிசௌரி நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப்பள்ளியில் பயின்று பின்னர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் திருச்சபை விடையூனியக் கூட்டுறவு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 1921ம் ஆண்டு ஆசிரியப் பணிக்குச் செல்ல அவர் விரும்பியபோது, அவருக்கு, அவரது ஆசிரியர், பண்டிதர் மாசிலாமணி என்பவர் ஒரு சான்றிதழ் வழங்கினார். அதில் பாவாணரின் பெயரை, “தேவநேசக் கவிவாணன்” என்று குறிப்பிட்டார். பின் அப்பெயரையே தம் பெயராகக் கொண்டார் பாவாணர். அவ்வாண்டிலேயே தாம் இளமையில் பயின்ற ஆம்பூர் நடுநிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
1924ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத் தேர்வு எழுதி வென்றார். “நேசன்” என்பதும் “கவி” என்பதும் வடசொற்கள் என்பதை அறிந்துகொண்ட பின்னர், தம் பெயரைத் “தேவநேயப் பாவாணர்” என அமைத்துக்கொண்டார்.

மகளிர் கிறித்தவக் கல்லூரியின் தாளாளர் உயர்திரு ஆபிரகாம் நெல்சன் ஆசிர் அவர்களையும்,

மகளிர் கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கலா ஞானசெல்வம் அவர்களையும், ஒருங்கிணைப்பாளரும், இந்நிகழ்ச்சியின் ஆணி வேராக சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அன்புச் சகோதரி தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் தே.ஷீஜா அவர்களையும், நன்றி உரையாளர்கள், முனை. பாப்பா, முனை.ஜெயா எஸ்கலின், முனை. சங்கீதா, முனை.ஜெஸ்லின் நிமா ஆகியோர்களையும், தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளையின் சார்பில் வருக வருக என அன்போடு வரவேற்கிறோம். இந்நிகழ்வில் சிறப்பான பயிற்சி பெறும் வகையில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றிருக்கும் அத்துணை மாணவச் செல்வங்களையும், ஆய்வு மாணவர்களையும் இதற்கு உறுதுணையாக இருக்கும் அத்துணை பேராசிரியப் பெருமக்களையும் அன்புடன் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

 

 

 

 

 

இந்நிகழ்வில் பயிலரங்கப் பயிற்சியாளராகப் பங்குபெற, தம்முடைய எண்ணற்றப் பணிகளுக்கிடையே, மாணவச் செல்வங்களாகிய தங்கள் அனைவரின் நலன் கருதி மிகுந்த கடமையுணர்வுடன் இந்த 5 நாள் பயிலரங்கில் பயிற்சி அளிக்க ஒப்புக்கொண்டுள்ள சீர்மிகு தமிழறிஞர், உலகளாவிய தமிழியக்கத்தின் பொருளாளரும், சிறப்பான ஆசிரியருமான தமிழ்த்திரு பதுமனார் ஐயா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

மகளிர் கிறித்தவக் கல்லூரியின் தாளாளர் உயர்திரு ஆபிரகாம் நெல்சன் ஆசிர் அவர்களையும், தலைமையுரை ஆற்றவுள்ள கல்லூரி முதல்வர் முனைவர் சி.எம். பத்மா அவர்களையும், வாழ்த்துரை வழங்க உள்ள தமெரிக்கா தொலைக்காட்சி நிறுவனத்தின் நிறுவனர் திரு மகேஷ் நாட்டாண்மை அவர்களையும், மகளிர் கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கலா ஞானசெல்வம் அவர்களையும், ஒருங்கிணைப்பாளரும், இந்நிகழ்ச்சியின் ஆணி வேராக சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அன்புச் சகோதரி தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் தே.ஷீஜா அவர்களையும், நன்றி உரையாளர்கள், முனை. பாப்பா, முனை.ஜெயா எஸ்கலின், முனை. சங்கீதா, முனை.ஜெஸ்லின் நிமா ஆகியோர்களையும், தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளையின் சார்பில் வருக வருக என அன்போடு வரவேற்கிறோம். இந்நிகழ்வில் தங்கள் அறிவுக்கண் திறக்க வேண்டியும், தூய தமிழில் எழுதவும், பேசவும் சிறப்பாக பயிற்சி பெறவும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றிருக்கும் அத்துணை மாணவச் செல்வங்களையும், இதற்கு உறுதுணையாக இருக்கும் அத்துணை பேராசிரியப் பெருமக்களையும் அன்புடன் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

 

''வடமொழியினின்று தமிழை மீட்பதே என் வாழ்க்கையின் குறிக்கோள்'' என்ற கொள்கையைத் தம் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தவர் பாவாணர்.

ஒருமுறை ஒரு அறிஞர் பெருமகனார் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரில் மிதிவண்டியில் வந்த ஒருவர் அவரை கவனிக்காமல் அவர்மீது மோதிவிட்டார். உடனே வருந்தி பதற்றத்துடன் ''அய்யா மன்னித்துக்கொள்ளுங்கள்... தெரியாமல் மோதிவிட்டேன்'' என்கிறார். இதைக்கேட்ட அந்த அறிஞர் கடும் கோபம் கொள்கிறார். மோதியவருக்கு ஆச்சரியம். ஆனால் அவரோ தமக்கு அடிபட்டதையும் மறந்துவிட்டு, ''மன்னிப்பு என்பது உருதுச் சொல். பொறுத்துக்கொள்ளுங்கள் என்பதே சரியான தமிழ்ச் சொல்'' என்றிருக்கிறார். இப்படிச் சாதாரண பேச்சில்கூட, ஒரு சிக்கலான தருணத்தில்கூட தூய தமிழ் மொழியை மட்டுமே உச்சரிக்க வேண்டும் என்ற உறுதி கொண்டிருந்தவர் அவர், வேறு யாருமல்ல, இன்றைய நம் பயிலரங்க நிகழ்வின் நாயகர் தனித்தமிழ் இயக்கத்துக்கு வேராக நின்று தமிழை வளர்த்த தமிழறிஞர் தேவநேயப் பாவாணர்தான்.

'மாந்தன் பிறந்தது மறைந்த குமரிக்கண்டம், அவன் பேசிய மொழி தமிழே, தமிழே உலக முதன்மொழி, தமிழே திராவிடத்துக்குத் தாய், தமிழே ஆரியத்துக்கு மூலம்' என்று சூளுரைத்த பாவாணர், 'நேசன்' என்பதும் 'கவி' என்பதும் வடமொழிச் சொற்கள் என்பதை அறிந்துகொண்டவர் தமது இயற்பெயரான தேவநேசன் என்பது தூய தமிழ் பெயராக இல்லை என்பதால் தேவநேயப் பாவாணர் என்று மாற்றிக்கொண்டார்.

தேவநேயப் பாவாணர், ஆம்பூரில் பள்ளிப் படிப்பை முடித்தர் பின்னர் நெல்லை பாளையங்கோட்டை திருச்சபை உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்துவிட்டுத் தமிழாசிரியராகச் சீயோன்மலையிலும், ஆம்பூரிலும் பணியாற்றினார். உதவித் தமிழாசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார்.

1968-ல் திருச்சி மாநகரில் பாவாணர், 'உலகத் தமிழ்க் கழகம்' என்ற கழகத்தை ஆரம்பித்தார். இவற்றின் மூலமாக 4 மாநில மாநாடுகளையும் நடத்தினார். 'முதல் தாய்மொழி', 'திராவிடத்தாய்', 'தமிழ் வரலாறு', 'தமிழர் வரலாறு', 'பண்டைய தமிழர் நாகரிகமும் பண்பாடும்', 'இந்தியாவில் தமிழ் எவ்வாறு கெடும்', 'தமிழ்நாட்டு விளையாட்டு', 'பழந்தமிழாட்சி' போன்ற  நூல்களையும், 'திருக்குறள் தமிழ் மரபுரை' என்ற ஆராய்ச்சி நூலையும் எழுதி உள்ளார்.  43-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இதில் 4 ஆங்கில நூல்களும் அடங்கும்.

1955-ல் சேலம் தமிழ்ப் பேரவை 'திராவிட மொழிநூல் ஞாயிறு' என்ற பட்டமும், 1964-ல் மதுரை தமிழ்க் காப்புக் கழகம் 'பெருங்காவலர்' பட்டமும் வழங்கின. 'செந்தமிழ்ச் செல்வர்' என்ற பட்டத்தையும் பெற்றார்.

1981-ல் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அதில் 'மாந்தன் தோற்றமும்... தமிழர் மரபும்' என்ற தலைப்பில், சுமார் ஒருமணி நேரத்துக்கு மேலாகச் சொற்பொழிவாற்றினார்.

பாவாணர் பணியிலிருந்த காலத்திலும் ஓய்வுபெற்ற நிலையிலும் பொதுவாக இரவு 12.00 மணிவரை தமது ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருப்பாராம். காலை 5.00 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவாராம். அத்துடன் பிறர் தமது காலில் விழுவதை, பாவாணர் ஒருபோதும் விரும்ப மாட்டாராம். காரணம் ''மாந்தன், இன்னொரு மாந்தன் காலில் விழுவது தன்மானக் கேடு'' என்பாராம்.

பாவாணர் ஆங்கில மொழியில் மிகுந்த புலமை பெற்றிருந்தபோதிலும், எப்போதும் தமிழ் மொழியிலேயே பேச விரும்புவார். குறிப்பாகத் தனித்தமிழில்தான் பேசுவாராம். தமிழ் அறவே தெரியாதவரிடம்தான் ஆங்கிலத்தில் பேசுவார். ஓய்வெடுக்க விரும்பினால் கூட அந்த நேரத்திலும் அகராதிகளையும் கலைக்களஞ்சியத்தையும் புரட்டிப் பார்த்துக்கொண்டிருப்பாராம்.

பாவாணர், அகரமுதலிகளைத் தொகுப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார். வளர்ந்துகொண்டே இருந்த அப்பணியை தமது  இறுதி மூச்சு வரை போராடி அத்தொகுப்பை முடித்துள்ளார். வாழ்நாளின் இறுதிவரை தமிழுக்காகவே வாழ்ந்த பாவாணரின் தமிழ்ப்பணியைத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் நினைந்து, அவர்தம் வழியில் சென்று தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்ப்பதுடன், அதனைக் காப்பதும் அனைவரின் கடமை என்ற வகையில் நாம் இந்த பயிலரங்கத்தில் இணைந்திருக்கிறோம். மாணவச் செல்வங்கள் முதுபெரும் தமிழ் அறிஞரும், சிறப்பு வாய்ந்த ஆசிரியரும், தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதாளருமான நம் பதுமனார் ஐயா அவர்களின் அருமையான பொழிவைச் செவிமடுத்து, தேவையான இடங்களில் குறிப்பெடுத்துக் கொண்டும் இந்த அருமையானதொரு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளையின் சார்பில் அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

ஆய் வேளிர் அரச குடும்பத்து 3 பெண்களின் தென் கொரிய கடல் பயணம்.

 

 

 

ஆய் வேளிர் அரச குடும்பத்து 3 பெண்களின் தென் கொரிய கடல் பயணம்.

 

கயா நாட்டின் முதல் அரசி கயாவின் மேற்குப் பகுதியிலிருந்து கடல் கடந்து வந்த பெண் என்றும், அவர் மலாயாவிலிருந்தோ அல்லது இந்தியாவின் தென்பகுதியிலிருந்தோ கடல் பயணம் மேற்கொள்ளப்பட்டதாக கொரியாவின் தொன்மங்கள் குறிப்பிடுகின்றன. பொ.ச. 3ஆம் நூற்றாண்டில் உருவான சில்லா அரசு கயா நாட்டின் மீது போர் தொடுத்து அந்நாட்டின் அத்தனை வரலாற்று எச்சங்களையும் அழித்து அதன் பின்னரே சில்லா அரசு எழுச்சி பெற்றது. சில்லா அரசாட்சிக் காலத்தில் மூன்று நாடுகளின் வரலாறு என்ற ஒரு தொன்மக் கதை புனையப்பட்டது. அவை மேலை நாட்டவரின் கவனத்தை ஈர்க்காமல் அது ஒரு மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட நிலப்பகுதியாகவே மாறி சீன - சப்பானிய நாடுகளின் நிழலில் ஒரு புறக்கடையாகவே விளங்கி வந்தது. கொரியாவுக்கென ஒரு தனி வரலாறோ, மொழியோ, வாழ்வியல் மரபோ வெளி உலகிற்குத் தெரியாமல் மறைக்கப்பட்டிருந்தது. முதன் முதலில் மார்கோபோலோ எழுதிய கொரியா பற்றிய குறிப்பே மேலை நாடுகளுக்கு கொரியா என்ற நிலப்பகுதி இருப்பதை உணர்த்தியது. 14ஆம் நூற்றாண்டில் புத்த மதத் துறவியான இல்யோன் எழுதிய சாம்குக்யுசா என்ற தொன்மத்தில் கொரியாவின் முதல் அரசி பற்றிய சில செய்திகள் காணக் கிடைக்கின்றன. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக கிம் என்ற தொல்லியல் ஆய்வாளர் கயா நாட்டின் முதல் அரசி எங்கிருந்து வந்தார் என்ற தேடலைத் தொடங்கினார். தென் கொரியாவின் கயா பேரரசு முற்றிலும் அழிந்த பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தென்கொரிய அரசு அந்த அரசிக்காக ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கியது. அந்த நினைவுச் சின்னத்தில் இருந்த இரட்டை மீன் சின்னத்தை அடையாளமாகக் கொண்டு கிம், தாய்லாந்தின் ஆயுக்தா, பாக்கிசுத்தான், ஆஃப்கானிச்சுத்தான் என பல பகுதிகளுக்குச் சென்றுவிட்டு இறுதியாக அயோத்தியா நகருக்கு வருகிறார். அயோத்தியா நகரின் ஒவ்வொரு இல்லத்தின் முகப்பிலும் இரட்டை மீன் சின்னம் இருப்பதைக் கண்டார். எந்ந்தத் தரவுகளும் இன்றி எந்தவித ஆழமான ஆய்வுகளும் மேற்கொள்ளாமல் கொரியாவின் முதல் அரசி அயோத்தியாவின் இளவரசி என்ற அனுமானத்தை வெளியிட்டார். அதுவே தென் கொரிய இந்தியா  இரு நாட்டின் வாழ்வியல் மரபு தொடர்பான இருநாட்டு வெளியுறவுக் கொள்கை உருவானது. தென் கொரிய மக்கள் தாங்கள் அயோத்திய இளவரசியின் வழி வந்தவர்கள் என்று நம்பத் தொடங்கினர். அதன் அடிப்படையில் அயோத்தியாவில் பல கோடி செலவில் கயாவின் முதல் அரசிக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பியுள்ளார்கள். அயோத்தி இளவரசியே கயாவின் முதல் அரசி என்ற நம்பிக்கை வலுப்பெற்று அயோத்தி இளவரசி என்ற கருத்துரு ஆழமாக கொரியர்கள் மனதில் வேரூன்றியது. இந்தியாவின் கொரிய தூதரான திரு. பார்த்தசாரதி என்பவர் அந்த இளவரசிக்கு சூரிரத்னா என்று பெயரிட்டு ஒரு புதினத்தை எழுதினார். இப்படியாக எந்த ஆதாரமும் இல்லாமல் நம்பிக்கை அடிப்படையில் அயோத்தி இளவரசியே கொரிய அரசி என்ற கருத்துரு உருவாகி அதுவே ஒரு வரலாறாக மாறிப்போனது. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இளவரசியே தமிழ் புத்தத்தைப்  பரப்பவும் கடல் வணிகத்தை மேம்படுத்தவும் தென்கொரிய தமிழக இரு நாட்டின் நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டின் ஒரு கடற்கரை துறைமுகத்திலிருந்து கடல் வணிகப் பாதையில் சென்று தென் கொரியாவின் பூசன் நகரின் அருகில் உள்ள மான்செங்டோ தீவை அடைந்திருக்கலாம் என்ற அனுமானத்தை மேற்கொண்டு தரவுகளின் அடிப்படையில் நிறுவுவதற்காக தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளை முழுமையான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதுவரை சென்னை பலக்லைக்கழகத்தைச் சார்ந்த சிவராஜப் பிள்ளை என்ற இணைப்பேராசிரியர் தமிழக மன்னர்களின் காலத்தையும் நீண்ட நெடிய சங்கிலித் தொடர் போன்ற 1932 ம் ஆண்டு அளவிலே முயற்சி மேற்கொண்டார். கிரேக்க நாட்டின் வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையாகக் கொண்டு ஆய் குறுநில மன்னர்களின் கொங்கு நிலப்பரப்பை ஆண்ட ஆய் அண்டிரனின் காலம் பொ.ச. 48 என்று நிறுவியுள்ளது இதற்கான ஆதாரமாகக் கொள்ளலாம். கொரியாவின் தொன்மங்களில் கூட இளவரசி பொ.ச. 42இல் தமிழ் நாட்டுத் துறைமுகத்தில் தொடங்கி 2 மாதங்கள் கடல் பயணம் செய்து ஜூலை மாதம் 4 ஆம் தேதி மான்செங்டோ தீவில் இறங்கினார் என்று குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரத்தில் குமரி முதல் வட இமயத்து ஒரு மொழி வைத்து என்று தொடங்கக்கூடிய ஒருவழி உரைநடையில் விற்புலி கயல் என்ற மூவேந்தர் மன்னர்கள் பற்றிய குறிப்பு உள்ளது. கிரேக்க வரலாற்றின் அடிப்படையில் மூவேந்தர்கள் தோன்றிய காலம் பொ.ச.மு.  3ஆம் நூற்றாண்டு என்று குறிப்பிடுகிறது. அதற்கு முன்னர் பல குறுமன்னர்கள் கிராமங்கள் அடங்கிய சிறு சிறு நாடுகளில் ஆட்சி புரிந்தார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒட்டிய நிலப்பகுதியில் செங்கோட்டை கணவாய் தொடங்கி பாலக்காட்டுக் கணவாய் பகுதி வரை பல நாடுகள் இருந்தன. (படத்தில் காணலாம்) பொது சகாப்தத்திற்கு முற்பட்ட காலத்தில் தென்நாட்டின் தென் பகுதியில் தென் முனையில் ஆய் நாடு என்ற ஒரு நாடு இருந்ததை கிரேக்க வரைபடங்கள் சுட்டுகின்றன. ஆய்நாடு அழிந்த பின்பு ஆய் வேளிர்கள் புலம் பெயர்ந்து பாலக்காட்டுக் கணவாய் வழியாக கொங்கு நிலப்பரப்புக்குள் நுழைந்து சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கொங்கு நிலப்பரப்பை கையகப்படுத்தி பொ.ச. 100இல் கொங்கு நாடு என்ற பகுதியில் ஆட்சி செய்ய ஆரம்பித்தார்கள். அதே வரை படத்தில் கொரியாவில் கயா நாடு உருவானதாக வரைபடத் தரவுகள் சுட்டுகின்றன. தனித்தனியாகக் கிடைக்கக்கூடிய தகவல்களைத் தொகுத்து ஆய் கொங்கு வேளிர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கொரியாவின் கயா நாட்டிற்கு சென்றனர் என்ற அனுமானம் வலுப்பெறுகிறது. இதற்கு அடிப்படை கிரேக்க சங்க கால வரலாற்றுத் தகவல்கள் ஆகும். கயா நாடு உருவாகுவர்தற்கு முன்னரே கொங்கு நாட்டு மணி வணிகர்கள் கல்மணிகளையும், சூது பவளத்தையும் தென் கொரியாவில் சந்தைப்படுத்தினார்கள். தமிழர்களே முதன்முதலாக இரும்புக் கனிமத்தை உருக்கி இரும்புக் கருவிகளையும் எஃகுக் கருவிகளையும் உருவாக்கினார்கள் என்றும், எகிப்து நாட்டின் பிரமிடுகளைக் கட்டுவதற்காக கருங்கற்களை நெம்பி எடுத்து பெரும் சதுரக் கற்களாக மாற்ற தமிழகத்தின் இரும்பு நெம்புகோல் (கடப்பாரை) பயன்படுத்தப்பட்டது என்ற ஒரு வரலாற்றுத் தகவல் உள்ளது. கொங்கு நாட்டில் குறிப்பாக கொடுமணல் பகுதியில் கலமணிகளிலும், சுதுபவள மணிகளிலும் சிறு துளையிட்டு அவற்றை மாலையாகக் கோர்க்கும் தொழில்நுட்பம் உருவானது. தமிழகத்திலும் தென் கிழக்கு ஆசியாவிலும் எங்கெல்லாம் இரும்புக் கனிமம் கிடைக்கின்றதோ அங்கெல்லாம் சூதுபவள கல்மணி மாலைகளில் துளையிட்டு மாலை கோர்க்கும் தொழிற்சாலைகள் உருவாகின்றன. ஹூபர்ட் என்ற வரலாற்று ஆசிரியர் அவருடைய கொரிய வரலாற்று நூலில் தென்கொரியாவின் வரலாற்றைக் குறிப்பிடும்போது இரும்பு தொழில்நுட்பம் தெரிந்த உன்னதமான வாழ்வியல் வரலாறாகக் கொண்ட ஒரு குழு கடல் பயணம் செய்து அங்கே அவருடைய மேற்பார்வையில் கயா பேரரசை உருவாக்கியிருக்கக்கூடும் என்ற அனுமானத்தை குறிப்பிடுகிறார். கயா நாட்டின் முதல் அரசனான சுரோ என்ற பெயருக்கு இரும்பு மனிதன் என்ற பொருளும் உண்டு. இந்த கரோஷிமா என்ற வரலாற்று ஆய்வாளர் தமிழக படைப்புகளில் சங்க கால படைப்புகளில் மட்டுமே தரவுகள் அதிகம் உள்ளன என்றும் சங்கம் மருவிய காலத்தில் வடபுலத் தாக்கத்தால் வெறும் புனைவுகளே தோன்றின என்று குறிப்பிடுகிறார். முடிவாக ஆய் வேளிர் குல இளவரசிகள் மூவர் அவர்களுடைய மூத்த சகோதரர்களின் அறிவுரைப்படி கடல் பயணம் மேற்கொண்டு கயாவின் மூன்று நிலப்பகுதிகளை அரசாண்டவர்களை மணந்து கொண்டனர் என்றும் அனுமானிக்கலாம். கொரிய அரசிக்குப் பிறந்த 10 குழந்தைகளில் பெரும்பான்மையானவர்கள் அவருடைய சகோதரரின் அறிவுரைப்படி புத்த மதத்தைத் தழுவினார்கள். அரசியின் வேண்டுகோளின்படி 2 குழந்தைகளுக்கு தாய்வழி சமுதாயத்தின் பெயரிட்டு அழைக்கப்பட்டனர். அந்த இரு பிரிவினரே இன்றைய கொரியாவின் செல்வச் செழிப்பு மிக்க குழுவினராக மாறி இரும்பு அடிப்படையிலான கப்பல் கட்டும் தொழில் வாகனங்கள் தயாரிப்புத் தொழில்களில் உலகப் புகழ் பெற்று விளங்குகிறார்கள். அவர்களில் கிம் என்ற பிரிவைச் சார்ந்த ஒருவரே தமிழ் நாட்டில் சிறீபெரம்புதூரில் ஹூண்டா என்ற கார் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த வாகனங்களை ஏற்றுமதி செய்வதற்காகவே எண்ணூரில் ஒரு துறைமுகம் செயல்படுகிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் கொரியாவின் துணைத் தூதர் தமிழகத்தில் மாமல்லபுரத்திற்கோ மற்ற பகுதிகளுக்கோ சென்றால் எங்களுக்கும் தமிழகத்திற்கும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு தொப்புள் கொடி தொடர்பு உணர்வு இருப்பதாகவே குறிப்ப்ட்டார். இந்தத் தகவல்களின் தொகுப்பின் அடிப்படையில் கொங்கு நிலப்பகுதியின் ஆய் வேளிர் அரச குடும்பத்திற்கும் தென் கொரியாவின் கயா நாட்டின் அரச குடும்பத்திற்கும் தொடர்பு உள்ளது என்ற கோட்பாடு உருவாகியுள்ளது.

பெரியம்மை

 

 

பெரியம்மைங்கற ஒரு தொற்று பற்றி தெரியுமா? அது கொடிய துன்பங்களின் ஊற்று.

பயங்கரமான இந்த பெரியம்மை நோயைத் தடுக்க ஆரம்ப காலத்தில், தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு முன்பு என்ன செய்தார்கள் தெரியுமா!

1700 களின் முற்பகுதியில், ஒனேசிமஸ் என்பவர் பெரியம்மை நோயைத் தடுக்க ஒரு புரட்சிகரமான வழியைக் கண்டுபிடித்தார். யார் இந்த ஒனேசிமஸ்? தடுப்பூசியில் என்ன பயங்கரம்?

 

பெரியம்மை நோய் பாஸ்டன் நகரில் அதி வேகமாக பரவிய காலகட்டம் அது. கரீபியன் கடல் வழியாக வந்த கப்பலில் பயணித்தவர்களே முதலில் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் அனைவரையும் மொத்தமாக ஒரு வீட்டில் அடைத்து, கடவுளே இந்த வீட்டின் மீது கருணை காட்டுங்கள் என்று எழுதப்பட்ட சிவப்பு கொடியைக் கட்டி அடையாளப்படுத்தினர். இந்த கொடிய நோய்க்கு அஞ்சிய மக்கள் ஊரை விட்டு ஓடத் தொடங்கினர்.

 

அவர்கள் அஞ்சுவதற்கு காரணம் இருந்தது. பெரிய தொற்றுநோய்களில் ஒன்றான இது  காட்டுத்தீ போல் பரவியது. பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதத்தினர் உயிர் இழந்தனர்.

 

 1721 ஆம் ஆண்டின் பெரியம்மை தொற்றுநோய் அதற்கு முன் வந்ததை விட வித்தியாசமானது. நகரத்தில் நோய் பரவியதால், நவீன மருத்துவ சிகிச்சைக்கு முன் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.

 

ஆனால் அந்த தொற்று நோயைப் பற்றிய வலுவான புரிதல், ஒனேசிமஸ் என் ஒரு அடிமை மனிதனுக்கு இருந்துள்ளது. நோய் வராமல் தடுப்பதற்கு ஒரு சாத்தியமான வழியை ஆனால் புரட்சிகரமான  ஒரு வழியை அவர் பரிந்துரைத்தார். ஒனேசிமஸின் இந்த யோசனை செம அச்சத்தைக் கொடுத்தாலும்  ஒரு தைரியமான மருத்துவரும் அமைச்சரும் வேறு வழியில்லாத நிலையில்  பெரியம்மை நோயை தடுக்க அந்த பரிசோதனையையே துணிவுடன் மேற்கொண்டர்.

காலனித்துவவாதிகள் பூர்வீக அமெரிக்கர்களிடமும் நோயை பரப்பினர். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல், வைரஸை எதிர்த்துப் போராட முடியாத பூர்வீக சமூகங்களை அந்த தொற்று அழித்தது.

 

இது எப்படி ஆரம்பித்தது என்றால்,

 அடிமைகளின் கப்பல்களிலிருந்து காலனிகளுக்குள் நுழைந்து விரைவாக   சுகாதாரமற்ற, நெருக்கமான குடியிருப்புகளில் பரவியது.

இந்த அடிமைகளில் ஒருவரான ஒனேசிமஸ் மேற்கு ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்ர்.

"பொல்லாதவர், "பயனற்றவர்" என்று அதிகாரியின் நாட்குறிப்பில் பதிவு செய்யப்பட்ட இவர்தான் 1716 இல் பெரியம்மை நோயை எவ்வாறு தடுப்பது என்று தனக்குத் தெரியும் என்று உறுதியாகக் கூறி இதற்கான  ஒரு அச்சமூட்டும் தீர்வையும் சொன்னார். ஆம்,

ஒனேசிமஸ் குறிப்பிடப்பட்ட அந்த முறை சற்று பயங்கரமானதுதான்.  பெரியம்மை நோயால்  பாதிக்கப்பட்ட நபரின் கொப்புளங்களிலிருந்து சீழ் எடுத்து அதை  மற்றொருவரின்  கையில் திறந்த காயத்தின் வழியாக அதை நேரடியாகத் தேய்ப்து. தொற்றால் பாதிக்கப்பட்டவரின் அந்த திரவம் அடுத்த மனிதரின் வெட்டுப்பட்ட பகுதியின் மூலமாக அவர் உடலில் நுழைந்தவுடன், அந்த நபர் பெரியம்மைக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டது போன்று ஆகிறார். இது ஒரு தடுப்பூசி அல்ல என்றாலும் இது நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதற்கான குறைவான ஆபத்தான தொற்றுக் கிருமியை வெளிப்படுத்துகிறது. பெறுநரின் நோய் எதிர்ப்பு சக்தியைச் செயல்படுத்தி பெரும்பாலானவர்களை நோயிலிருந்து பாதுகாத்தது.

 

 ஒனிசிமஸின் இந்த முறை மற்ற அடிமைகளுடன் பரிசோதிக்கப்பட்டு அதன் நடைமுறை துருக்கியிலும் சீனாவிலும் பயன்படுத்தப்பட்டது. இது பெரியம்மை நோயைத் தடுக்க பெருமளவில் உதவும் என்ற நம்பிக்கையில் மாசசூசெட்சிலும் பிற இடங்களிலும் பரப்பப்பட்டது.

இறுதியாக,

பெரியம்மை தொற்றுநோய் பாஸ்டனில் 844 பேரை அழித்தது, அதாவது அப்போதைய மக்கள்தொகையில் 14 சதவிகிதம். ஆனால் இதுதான் எதிர்கால தொற்றுநோய்களுக்கான தடுப்பூசிக்கு களம் அமைக்க உதவியது. 1796 ஆம் ஆண்டில், எட்வர்ட் ஜென்னர் ஒரு சிறந்த தடுப்பூசியை உருவாக்கினார், அது சிறப்பாக வேலை செயலாற்றியதால் பெரியம்மை தடுப்பூசி மாசசூசெட்ஸில் கட்டாயமாக்கப்பட்டது.

 

 ஒனேசிமஸ்  அறிமுகப்படுத்திய நுட்பத்தின் வெற்றி பிற்காலத்தில் தடுப்பூசியை உருவாக்கி நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது - இறுதியில் பெரியம்மை நோயை ஒழிக்க வழிவகுத்தது.

 

1980 ஆம் ஆண்டில், உலகளாவிய நோய்த்தடுப்பு தடுப்பூசி பரவுவதால் பெரியம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. முற்றிலும் அழிக்கப்பட்ட ஒரே தொற்று நோய் இதுவாகவே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

திவுசெய்யப்பட்ட வரலாற்றில் மூன்று கொடிய தொற்றுநோய்கள் ஒரு ஒற்றை பாக்டீரியா, எர்சினியா பெஸ்டிஸ், பிளேக் என்று அழைக்கப்படும் ஒரு அபாயகரமான தொற்று காரணமாக ஏற்பட்டது.

 

541 இல் பைசண்டைன் பேரரசின் தலைநகரான கான்ஸ்டான்டினோப்பிளுக்கு ஜஸ்டினியன் பிளேக் வந்தது. இது எகிப்திலிருந்து மத்திய தரைக்கடல் கடலில் கொண்டு செல்லப்பட்டது, சமீபத்தில் கைப்பற்றப்பட்ட நிலம் பேரரசர் ஜஸ்டினியனுக்கு தானியத்தில் அஞ்சலி செலுத்தியது. பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட பிளைகள் தானியத்தில் தின்பண்டமான கருப்பு எலிகளின் மீது சவாரி செய்தன.

 

பிளேக் கான்ஸ்டான்டினோப்பிளை அழித்தது மற்றும் ஐரோப்பா, ஆசியா, வட ஆபிரிக்கா மற்றும் அரேபியா முழுவதும் காட்டுத்தீ போல் பரவி 30 முதல் 50 மில்லியன் மக்களைக் கொன்றது, ஒருவேளை உலக மக்கள்தொகையில் பாதி.

 

"நோய்வாய்ப்பட்டவர்களைத் தவிர்ப்பதைத் தவிர அதை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது பற்றி மக்களுக்கு உண்மையான புரிதல் இல்லை" என்கிறார் டிபால் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் தாமஸ் மொக்கைடிஸ். "பிளேக் எப்படி முடிந்தது என்பது பற்றி, சிறந்த யூகம் என்னவென்றால், ஒரு தொற்றுநோயில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எப்படியாவது உயிர்வாழ்வார்கள், மேலும் உயிர் பிழைத்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது."

 

 

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...