தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்தவாத் தரியா தாகி
முன்னெருப் புயிர்த்து விம்மி முகத்தினிற் கண்ணீர் வார
மன்னுயிர் காக்குஞ் செங்கோன் மனுவின்பொற் கோயில் வாயிற்
பொன்னணி மணியைச் சென்று கோட்டினாற் புடைத்த தன்றே.
”வளவ! நின் புதல்வ னாங்கோர் மணிநெடுந் தேர்மே லேறி
அளவிறேர்த் தானை சூழ வரசுலாந் தெருவிற் போங்கால்
இளையாவான் கன்று தேர்க்கா லிடைப்புகுந் திறந்த தாகத்
தளர்வுறு மித்தாய் வந்து விளைத்ததித் தன்மை” யென்றான்.
ஒருமைந்தன் தன்குலத்துக் குள்ளானென் பதுமுணரான்
‘தருமந்தன் வழிச்செல்கை கட’னென்று தன்மைந்தன்
மருமந்தன் றேராழி யுறவூர்ந்தான் மனுவேந்தன்;
அருமந்த அரசாட்சி அரிதோ? மற் றெளிதோ? தான்
“மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத்
தானதனுக் கிடையூறு தன்னாற்றன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தாற் கள்வரா லுயிர்தம்மால்
ஆனபய மைந்துந்தீர்த் தறங்காப்பா னல்லனோ?”
பாண்டிய மன்னனின் தவறான தீர்ப்பினால், கோவலன் கள்வன் என்று முடிவெடுத்து கொலையுண்டபோது , அதை அறிந்த கற்புக்கரசி , சிலம்பின் நாயகி, கண்ணகி,
‘ஈர்வது ஓர் வினை காண்; ஆ! இது! என உரையாரோ?
கண்பொழி புனல் சோரும் கடு வினையுடையேன்முன்
புண்பொழி குருதியிராய்ப் பொடி ஆடிக்கிடப்பதோ?
மன்பதை பழிதூற்ற, மன்னவன் தவறு இழைப்ப,
‘உண்பது ஓர் வினை காண்; ஆ! இது’ என உரையாரோ?
என்று பதைபதைத்து, கோபாவேசமாக மன்னன் முன் நின்று நீதி கேட்கிறாள் தலைவிரி கோலமாக!
அரசன் வினாவும் கண்ணகி விடையும்
நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்!
யாரையோ நீ? மடக் கொடியோய்! என
தேரா மன்னா! செப்புவது உடையேன்
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்
வாயில் கடைமணி நடுநா நடுங்க,
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத்தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்;
பெரும்பெயர்ப் புகார் என் பதியே; அவ்ஊர்
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெரும்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப,
சூழ்கழல் மன்னா! நின்நகர்ப் புகுந்து, இங்கு
என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக் களப்பட்ட கோவலன் மனைவி
கண்ணகி என்பது என்பெயரே என -
மன்னன் முன் கோபாவேசமாக நீதி கேட்கிறாள்....நீதி தவறிய மன்னனின் கதி என்ன?
தாழ்ந்த குடையான்: தளர்ந்த செங்கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன்! யானே கள்வன்!
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள் என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே தென்னவன்
கோப்பெரும் தேவி குலைந்தனள் நடுங்கி
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று
இணைஅடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி
பிஞ்ஞகனு நாவலர் பெருந்தகையை நோக்கி
‘என்னிடையு நின்னிடையு நின்றவிசை வால்யான்
முன்னுடைய தோர்பெரு வழக்கினை முடித்தே
நின்னுடைய வேள்வியினை நீ முயறி’ என்றான்.
‘ஆட்சியி லாவ ண்ததி லன்றிமற் றயலார் தங்கள்
காட்சியின் மூன்றி லொன்று காட்டுவா’ யென்ன, ‘முன்னே
மூட்சியிற் கிழித்த வோலை படியோலை; மூல வோலை
மாட்சியிற் காட்ட வைத்தே’னென்றனன் மாயை வல்லான்.
”அருமறை நாவ லாதி சைவனா ரூரன் செய்கை
பெருமுனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக் கியானு மென்பால்
வருமுறை மரபு ளோரும் வழித்தொண்டு செய்தற் கோலை
இருமையா லெழுதி நேர்ந்தே நிதற்கிலை யென்னெ ழுத்து “.
‘நான்மறை முனிவ னார்க்கு நம்பியா ரூரர் தோற்றீ
பான்மையி னேவல் செய்தல் கட’னென்று பண்பின் மிக்க
மேன்மையோர் விளம்ப நம்பி ‘விதிமுறை யிதுவே யாகில்
யானிதற் கிசையே னென்ன விசையுமோ’ வென்று நின்றார்.
‘மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டனென்னு நாமம்
பெற்றனை; நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டே யாகு, மாதலான் மண்மே னம்மைச்
சொற்றமிழ் பாடு’ கென்றார் தூமறை பாடும் வாயான்.
அந்த நொடியிலிருந்து நம்பி ஆரூரர், ஆண்டவனை ,
பித்தாபிறை சூடிபெரு மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன் மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணை நல்லூரருட் டுரையுள்
அத்தாவுனைக் காளாயினி அல்லேனென லாமே.
என்று தேவாரப் பதிகம் பாட ஆரம்பித்தார்.
”ஈங்கிவன் குறித்த கொள்கை இது: இனி இவனுக்காகத்
தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்திங் குன்பால்
ஆங்குநின் தாள்கள் போற்றும் பேய்வடி(வு) அடியேனுக்குப்
பாங்குற வேண்டும்” என்று பரமர்தாள் பரவி நின்றார்.
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்.
“பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல் உன்னை
என்றும் மறவாமை வேண்டும்; இன்னும் வேண்டும் நான்
மகிழ்ந்து பாடி, அறவா! நீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க” என்றார்.
கோவலனும், பாடுஅமை சேக்கையுள் புக்குத் தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம்கண்டு, “யாவும்
சலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடிக்
குலம் தரு வான் பொருள் குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணுந் தரும் எனக்கு என்ன...
பதிபக்தியில் சிறந்த கண்ணகியோ மறுமொழியாக,
நலம்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச்
சிலம்பு உள கொண்ம் எனச்...
“மண்ணி னிற்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும்
அண்ண லார்அடி யார்தமை அமுதுசெய் வித்தல்
கண்ணி னாலவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல்
உண்மை யாமெனில் உலகர்முன் வரு”கென உரைப்பார்.
கன்னிதன் வனப்புத் தன்னைக் கண்களால் முடியக் காணார்
முன்னுறக் கண்டார்க கெல்லாம் மொய்கருங் குழலின் பாரம்
மன்னிய வதன செந்தா மரையினிற் கரிய வண்டு
துன்னிய ஒழுங்கு துற்ற குழல்போல் இருண்டு தோன்ற.
மண்ணிய மணியின் செய்ய வளரொளி மேனி யாள்தன்
கண்ணினை வனப்புக் காணில் காமரு வதனத் திங்கள்
தண்ணளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீள
ஒண்ணிறக் கரிய செய்ய கயலிரண் டொத்து லாவ
கண்ணகியின் நெற்றி,புருவம்,இடை, கண் இவைகளைப் புகழ்தல்
குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
பெரியோன் தருக திருநுதல் ஆக, என;
அடையார் முனை அகத்து அமர் மேம்படுநர்க்குப்
படை வழ்ங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்,
உருவு இலாளன் ஒருபெரும் கருப்புவில்
இரு கரும்புருவம் ஆக ஈக்க;
மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்
தேவர் கோமான் தெய்வக் காவல்
படைநினக்கு அளிக்க, அதன் இடைநினக்கு இடைஎன,
அறுமுக ஒருவன் ஓர்பெறு முறை இன்றியும்,
இறும் முறை காணும் இயல்பினின் அன்றே
அம்சுடர் நெடுவேல் ஒன்று நின்முகத்துச்
செம்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது;
கண்ணகியின் சாயலும் நடையும் மொழியும்
மாஇரும் பீலி மணி நிற மஞ்ஞை, நின்
சாயற்கு இடைந்து, தண் கான் அடையவும்;
அன்னம் நல்நுதால்! மெல் நடைக்கு அழிந்து
நல்நீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும்;
அளிய தாமே, சிறு பசும் கிளியே,
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின்
மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும்,
மடநடைமாது! நின் மலர்க்கையின் நீங்காது
உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின ;
கோவலனின் ஐம்புலன்களுக்கும் இன்பம் தந்ததைப் பாராட்டல்
மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசுஅறு விரையே! கரும்பே! தேனே!
அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே!
பெரும்குடி வாணிகன் பெரு மடமகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ் இரும் கூந்தல் தையால்! நின்னை என்று
உலவாக் கட்டுரை பல பாராட்டி,
தயங்கு இணர்க் கோதை தன்னொடு தருக்கி
வயங்கு இணர்த் தாரோன் மகிழ்ந்து செல்வுழிநாள்
தொடரும்
