Posts

Showing posts from October 24, 2010

எழுத்தறிவிப்பவன்.................

Image
மாதா, பிதா, குரு, தெய்வம் என குருவிற்கு, மாதா, பிதாவிற்கு அடுத்த இடமும், தெய்வத்திற்கு மேலான இடமும் கொடுத்து வைத்துள்ளது நம் கலாச்சாரம். முன் காலங்களில் 'குருகுலம் ', என்று குழந்தைகளை சேர்த்து விட்டால், அங்கு குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்கள் முதல் கல்வியுடன், சகல கலைகளையும் கற்றுத் தருவார்கள். அரசனின் குழந்தையாக இருந்தாலும், ஆண்டியின் குழந்தையாக இருந்தாலும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்துதான் கல்வி பயிலுவார்கள். குரு சொல்லும் வாக்கை தெய்வ வாக்காகக் கொண்டு மாணவர்கள் அடி பணிந்து நடப்பார்கள்.
காலப் போக்கில் அந்த முறை மாறி, மறைந்தே விட்டது. பிறகு வந்த காலங்களில் குருவிற்கு, ஆசிரியர் என்று ஓரளவிற்கு மதிப்பு இருந்து கொண்டிருந்தது. ஆனால் சமீப காலங்களில் ஆசிரியர்களில் ஒரு சிலர் நடந்து கொள்ளும் முறை அந்த தெய்வீகப் பணியின் மீது ஒரு வெறுப்பையே மக்களுக்கு ஏற்படுத்துகிறது. மாணவர்களின் சேட்டைகள் அதிகரித்திருப்பது போல ஆசிரியர்களின் அடக்கு முறையிலும் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப் படுத்துகிறார்கள்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஒரு பள்ளியில் அப்படி ஒரு தண்டனை தவறு செய்யும் கு…

ஸ்ரீலங்கா அதிபருக்கு நல்லிணக்க அறிவுரை - வழக்குரைஞர் ஜார்ஜ் வில்லி

Image
மேதகு அய்யா அவர்களே, மதிப்பிற்குரிய காங்கிரஸ் பெண்மணி, திருமதி ராஜபக்ச, ஷீலா ஜேக்சன் லீ அவர்களே! இந்த அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு ஷீலா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். தூதரக தலைமை அதிகாரி அரோரா அவர்களுக்கும் நன்றி உரித்தாகுக.
மேன்மை தங்கிய விருந்தாளிகளே, லேடிஸ் & ஜென்டில் மென், மேன்மை பொருந்திய தங்களை இந்த பெருமை வாய்ந்த நகருக்கு வரவேற்கிறோம். ஓக் மரங்களையும் பாசாங்குப் பறவைகளையும் பொருட்படுத்தாவிட்டால், தாங்கள் இந்நகரத்தை சிறிலங்கா என்றே தவறாக எண்ணலாம்.
நான் பிறந்தது சிறிலங்காவில் தான். என் தாய், மனைவி சாந்தியின் பெற்றோர், மற்றும் என் தாத்தா, பாட்டி என அனைவரும் என் தாய்த்திருநாட்டின் புனிதமான பூமிக்கடியில்தான் சாமாதியாகியுள்ளனர். மேதகு அய்யா அவர்களே, நான் என்னுடைய 10 வது வயது வரை ஜாஃனாவில் வளர்ந்து, பிறகு கொழும்புவிற்கு இடம் பெயர்ந்தோம். என் மனைவி பதுளாவைச் சேர்ந்தவர். பெரு மதிப்பு வாய்ந்த ராணுவத் தளபதியாக இருந்த இவர் தந்தையுடன், தியாதலவாவில் வளர்ந்தவர். நான் ஜாஃனாவின் மகோசா மரங்களின் நறுமணம் நுகர்ந்தவன். கொழும்புவில் என் பால்யப் பருவத்தில் பள்ளிக்குச் செல்லும் போது, செ…

அகக் கண்கள் ...........

Image
அகக் கண்கள் திறந்து........... காட்சிகள் விரிகின்றன. அழகான நீர் நிலையைக் காண்கிறேன்! இரு புறமும் கொத்துக் கொத்தாக மலர்கள் தாங்கிய குறுஞ்செடிகள்....
நீலமேகக் கூரையில் வெண்பஞ்சுப் பொதிகள்.... வெளிர்நீல மலைக் குன்றுகளில் பனிபடர்ந்த மரக் கன்றுகள்!
அந்தி மயங்கும் நேரம்..... கூட்டில் அடையப் போகும் பறவைகளின் மெல்லிய கீதம். மனம் அமைதியில் திளைத்த இன்பம்.
அந்த ஓடைக்கரையில் ஒரு ஒரு குச்சு வீடு...... சின்ன அறையில் நிறைமனதுடன் நான்! குச்சு வீட்டின் கொல்லைப்புறத்து பசுமையான வயல் வெளி...... வளமையான பயிர்களின் நாணம்.....
கரையோரத்து மலர்களின் நறுமணம் குடில்........அழகான குடில்...... எளிமையான மனிதரும்... அழகான பறவைகளும்.... பகிர்ந்து வாழும் அழகிய குடில்....
குடிலின் அருகில் என் சொந்தங்கள் இல்லை..... என் சாதி இல்லை......என் மதம் இல்லை.... என் இனம் கூட இல்லை....... ஆனால் பெயர் மட்டுமே அடையாளமாக..... அந்த இனம் அன்பை மட்டுமே ஆதாரமாக....
இயற்கையின் இனிமையைக் கொண்டாடும் இனமாக........ அந்த அழகைப் பகிர்ந்து பருகும் இனமாக...... திறந்த இதயத்துடன், பரந்த மனதுடன் வாழும் இனம்.... அங்கு என் அமைதியான....... ஆனந்தமான வாழ்க்கை...........