பவள சங்கரி
இறைவனின் படைப்பில் எத்தனையோ விநோதங்கள்! நாட்டுக்கு நாடு அது சற்று வித்தியாசப்பட்டாலும், நமக்கும் மேல் ஏதோ ஒரு சக்தி, தம் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் நம்மைக் கவர்ந்திழுக்கும் அவைகள் நம்மை பிரமிக்கச் செய்வன. விஞ்ஞானம் எந்த அளவிற்கு வளர்ந்து கொண்டிருந்தாலும், மெய்ஞ்ஞானமும் அமைதியாக தம் பங்கைச் செலுத்திக்கொண்டுதான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ காணமுடிகிறது. இதுவே மனிதர்களின் அத்துமீறல்களின் எல்லைக்கோடுகளாகவும் ஆகிவிடுகிறது. நாட்டுக்கு நாடு, மனிதர்களும், மதங்களும், சட்ட திட்டங்களும், கலாச்சாரமும், பண்பாடும் மாறலாம். ஆனால் உலகம் முழுவதற்குமான அந்த பொதுவான சக்தி ஒன்றேதான் அல்லவா.. நம் இந்துக்களின் மகத்தான மாபெரும் சக்தி என்றும், வாழ்நாளில் ஒரு முறையேனும் தரிசனம் பெறவேண்டும் என்ற பேராவலை ஏற்படுத்தக்கூடியதுமான அந்த ஒன்று திருக்கயிலாயம். மெய்மறக்கச் செய்யும் அச்சுகானுபவம் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றல்ல.