Friday, July 21, 2017

INDIA /IX - Observing an Ox, I reflect - எருதைக்கண்டே வினையாற்றுகிறேன் நான்





கொரிய மூலம் : கிம் யாங் - ஷிக்
ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் - சுப்
தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி



விட்டு விலகுவதென்பது ஒரேயடியாக விலகுவதல்ல
தங்கியிருத்தலென்பதும் ஒரேயடியாக தங்கிவிடுதலல்ல.

மக்களும் மாக்களும் தாவரங்களும் கூட;
ஒவ்வொன்றும் விலகுவதைப்போலவே தங்கியிருக்கின்றன
தங்குவதைப்போலவே விலகியும் இருக்கின்றன.

பூமியில்லாத வானமும் இல்லை,
வானமில்லாத பூமியும் இல்லை.

ஆதியில் அனைத்தும் ஒன்றாகவே படைக்கப்பட்டன
முடிவற்று ஒன்றாகவே இருக்கின்றன.

பாரம்பரிய பாதுகாப்பு



நல்ல பழக்கங்களை பரம்பரைப்பழக்கம் என்ற பெருமையோடு வழித்தோன்றல்களுக்கு பயிற்றுவிக்கும் அதே வேளையில் இடைச்செருகலான தீய பழக்கத்தைக் கண்டறிந்து அதை வேருடன் களைந்தெறிவதில்தான் பாரம்பரியப் பாதுகாப்பு உள்ளது! 
#வாழ்க்கை