Monday, July 10, 2017

INDIA IV - Bus stops a while




கொரிய மூலம் : கிம் யாங் - ஷிக்
ஆங்கில மூலம் : கிம் யாங் - ஷிக்
தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி



பேருந்து நின்ற சில மணித்துளிகள்


தெரு முனையில் சில மணித்துளிகள் நிற்கிறது பேருந்து.
சாளரத்தினூடே ஓர் சிறுவனைக் காண்கிறேன்
ஒருகை வேர்க்கடலை நிரப்பிய கூம்புவடிவ காகிதப் பொட்டலத்தைப் பிடித்திருக்கிறான்.

மின்னும் விழிகளுடன் என்னை நோக்கி வந்தவன் 
தனது பண்டங்களை நான் வாங்க விரும்பினான்.

பேருந்தில் அமைதியாக அமர்ந்திருந்தேன், என் மனம்
வெறுமையானதோடு ஆன்மாவும் தொலைந்தது
வளி பலரை ஒரு யுகத்திற்கே அடித்துச் சென்றுவிடுகிறது.


வாழ்கணக்கு!



கணக்குப்போட்டு வாழ்வதில் நிம்மதியாம்
அரைப்புள்ளி கால்புள்ளியாய் குழப்புவதெல்லாம்
 முற்றுப் புள்ளியில் தெளிவாகிவிடுகிறது
பெருகுவதெல்லாம் காழ்ப்பும் கயமையும்
கழிவதெல்லாம் அமைதியும் அருங்குணமும்
வகுப்பதெல்லாம் வரவும் வழக்கும்
கூட்டுவதெல்லாம் குழப்பமும் வஞ்சகமும்
கணக்குப்போட்டே கழிந்துவிடும் காலம்
மிஞ்சுவதெல்லாம் சிவமும் சித்தமும்
எஞ்சிய வாழ்க்கையின் கணக்கும் 
வஞ்சமிலா நோக்கமும் ஆக்கமும்
உறவும் பிரிவும் வரவும் செலவும்
தஞ்சமென தவமும் தயாளகுணமும்!
பஞ்சமில்லா அன்பும் பாசமும்!!

Sunday, July 9, 2017

குரு பூர்ணிமா!





குருவுடனான உங்கள் பயணம்
அறியாமையெனும் அந்தகாரத்தை ஒழித்து
ஒளியினூடேயானதொரு உன்னத பயணம்.
உங்கள் வாழ்வின் பிரச்சனைகளப்
புறந்தள்ளி வாழ்வின் உன்னத அனுபவங்களை
நோக்கி முன்னேறுங்கள்!
குரு பூர்ணிமா வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!