Friday, January 13, 2017

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!





பொங்கட்டும் எங்கும் தமிழ்
பாலுந்தேனும் ஆறாய் ஓடட்டும்
வேலும்மயிலும் துணை நிற்கட்டும்
தரணியெலாம் அமைதி நிலவட்டும்!

சங்கம் வளர்த்தவன் தலைநிமிரட்டும்
வங்கம் கடந்தவன் வளமாகட்டும்
பஞ்சம் பஞ்சாய் பறக்கட்டும்
வஞ்சம் வீழ்ந்து நொறுங்கட்டும்!

உழவன் உயர்ந்து நிற்கட்டும்
உளமெலாம் இன்பம் பெருகட்டும்
உலகெலாம் வியந்து நோக்கட்டும்
சிங்கம் சிறப்பாய் சிலிர்த்தெழட்டும்!

தைமகள் தரணியை மகிழ்விக்கட்டும்
தமிழ் நெஞ்சங்கள் நிறையட்டும்
எழில் வண்ணங்கள் கூடட்டும்
பொழில்சூழ் வளங்கள் பெருகட்டும்!

சர்வமும் அன்பாய் மலரட்டும்!!
வாழ்வெலாம் கரும்பாய் இனிக்கட்டும்!!




வீரத்தமிழனின் ஏறுதழுவல் ஆதரவுப் பேரணி


சங்கே முழங்கு..
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு
திங்களொடு செழும்பருதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்க ளோடும்
மங்குல் கடல் வற்றோடும் பிறந்த
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு
ஞாபகம் செய் முழங்கு சங்கே
சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூது சங்கே
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோளெங்கள் வெற்றித் தோள்கள்
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள்
ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனிழ்கமழ்ந்து வீரஞ்செய்
கின்றதமிழ் எங்கள் மூச்சாம்
பாவேந்தர் பாரதிதாசன்

Monday, January 9, 2017

கெய்ஷாக்கலை



பவள சங்கரி

மனித வாழ்வியலுக்கு அடிப்படைத் தேவைகளாகத் திகழ்வது உணவு, உடை, இருப்பிடம் ஆகியன. மனிதகுல வரலாற்றில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படுவதே பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் போன்றவை. இவைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள், சிதைவுகள் அனைத்தும் வரலாறாக பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையில் பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் போன்றவைகளே ஒரு நாட்டின் அடையாளமாக ஆகிவிடுகின்றன. ஜப்பான் நாட்டின் அடையாளம் சற்றே வித்தியாசமானதாகவே தென்படுகிறது. சமீபத்தில் நான் லெஸ்லி டவுனர் அவர்களின் ஆங்கில வழி ஜப்பானிய  “கெய்ஷா” என்ற விரிவான புதினத்தை தமிழில் மொழிபெயர்த்தபோது இந்த எண்ணம் உறுதியானது. ஒரு நாட்டின் முன்னேற்றம், அதன் வீழ்ச்சி என அனைத்தும் அந்நாட்டின் பெண்களின் நிலையை வைத்தே எளிதாக எடை போட முடியும் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.