Posts

Showing posts from 2019

உலகத் தமிழிசை மாநாடு

Image

Merry Christmas

Image

இணைந்த கோடுகள்! - கோகுலம் கதிர் இதழில்

Image
வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்?
கணவன், மனைவியின் ஏற்றத் தாழ்வுகள் குறித்த கவியரசு கண்ணதாசனின் அற்புதமான வரிகள்!

சுவர்கத்தில் மட்டுமே நிச்சயிக்கப்படுவதாக நம்பப்பட்ட திருமணங்கள் இன்று பணியிடம், தகவல் மையம், இடைத்தரகர் போன்று பல்வேறு இடங்களில், பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நிச்சயிக்கப்பட்டு, அதே வேகத்தில் முறிவும் ஏற்பட்டு சமூக கலாச்சாரங்களின் சீரழிவிற்கும் காரணமாகிவிடுகின்றன. இயந்திரமயமாக மாறிவரும் சமுதாயத்தின் தேவைகளும், அது நிறைவேறுவதற்கான போராட்டங்களும் பல நேரங்களில் பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடுகின்றன. பெண்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது வாழ்க்கையின் பலவிதமான திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய கனவுகள், கற்பனைகள், பருவம் ஏற்படுத்தும் எதிர்பார்ப்புகள் என்று மண நாளை எதிர்நோக்கி காத்திருக்கச்செய்கிறது. கடந்த இரண்டு பத்தாண்டுகளாக விவாகரத்து செய்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளன என்று சமீபத்திய ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவாகரத்து விகிதங்கள் அதிகரித்த போதிலும், நகர்ப்புறங…

வானவில் பண்பாட்டு மையத்தின் பாரதி விழா!

Image
வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் அன்புச் சகோதரர் திரு.இரவி கல்யாணராமன் Ravi Kalyanaraman அவர்களின் மூச்செல்லாம் பாரதியாக சுவாசித்துக்கொண்டிருப்பவரின் கடுமையான, பல்லாண்டுகால தொடர் முயற்சியால் இந்நிகழ்ச்சி தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வாக பிரகாசிப்பது பெருமைக்குரிய செய்தி.
டிசம்பர் மாதம் என்றாலே பாரதி – பாரதி என்றாலே வானவில் மையம் என்று சொல்லும் வகையில் பல ஆண்டுகளாக கடுமையான உழைப்புடன், மிகச்சிறப்பாக பாரதிக்கு விழா எடுத்து வரும் சகோதரர் திரு இரவி அவர்கள் சென்னையிலிருந்து விரிவாக்கமாக கொங்கு மண்ணிலேயும் விழா எடுத்ததற்கு உளமார்ந்த பாராட்டையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம். அறிவுசார்ந்த மக்கள் வாழும் கோவை மாநகரில், தமிழரின் வெற்றிக்குத் தடையாக இருப்பது பழமை வாதமா? புதுமை மோகமா? என்ற மிகச்சிறந்த தலைப்போடு சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்கள் தலைமையில், ஆகச்சிறந்த பேச்சாளர்களின் அணிவகுப்புடன் பாரதியின் கருத்துகளை ஒரு ஆய்வு அரங்கமாகவே இந்த பட்டி மண்டபத்தை மாற்றியிருந்தனர். அற்புதமான இந்த தலைப்பைத் தேர்ந்தெடுத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தவருக்குப் ப…

எம் மொழிகள்!

Image

பாட்டி சொன்ன கதைகள் - 29

Image
பவள சங்கரி
உயிரா? மானமா?
ஹாய் குட்டீஸ் நலமா?
முன் காலத்தில் நம் தமிழ் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் தெரியுமா?  மானமும், வீரமும் தம் இரு கண்களாகக் கொண்டுதான் வாழ்ந்தார்கள். 
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்.
என்பது வள்ளுவரின் குறள். அதாவது,  கடுங்குளிரிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள  உதவும் மயிற்கற்றையை  கவரிமா இழக்க நேர்ந்தால், எப்படி அவற்றால் வாழமுடியாதோ, அதேபோன்று  சான்றோர்கள் ஏதேனும் இழிவான காரியங்களால் தங்களுக்கு  அவமானம் நேர்ந்தால் உயிர்விடத் தயங்க மாட்டார்கள் என்பதே இதன் கருத்து. 
இப்படி உயிரை விட மானம்தான் பெரிது என்று வாழ்ந்த மாவீரர்கள் பலர் இருந்திருக்கிறார்கள் நம் நாட்டில். அப்படி ஒரு மாவீரன் பற்றிய கதைதான் இது!
சேர மன்னர்களில் இரும்பொறை மரபினர் என்ற  ஒரு சாரார் இருந்தனர்.  இந்த மரபில் கணைக்கால் இரும்பொறை என்ற ஒரு அரசர்  தம் குடிமக்களை கண் போல காத்து வந்தார். அந்த அரசர்,நல்ல அறிவும், இரக்க குணமும், துணிச்சலும், உதவும் மனமும், தன்னம்பிக்கையும்  ஆகிய அரசருக்குரிய நல்ல குணங்கள் அனைத்தும்  பெற்றிருந்தார். நல்ல தமிழ் பற்றும், அழகாகக் கவிபாடும் திறமும்…

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.

Image
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் நினைவு நாள் இன்று.


விடுதலைப் போராட்டவீரர் உயர்திரு எஸ்.பி. வெங்கடாசலம் தமது சுயசரிதையில் ..... (”இப்படிக்கு நான்” என்ற தலைப்பில் என் எழுத்து வடிவில் )
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் வெள்ளைக்காரனுக்குப் போட்டியாக ‘இந்தியன் ஸ்ட்ரீம் நேவிகேஷன் கம்பெனி (Indian Stream Navigation Company) என்று ஒரு கப்பல் கம்பெனியை ஆரம்பித்த நேரத்திலேயே, எனது பாட்டனார் திரு. சீரங்க முதலியார், 1000 ரூபாய் கொடுத்து, கப்பல் கம்பெனியின் பங்குதாரராகத் தன்னை இணைத்துக்கொண்டார். அந்தக் கப்பல் கம்பெனி தூத்துக்குடிக்கும், இலங்கைக்குமான சுதேசிக் கப்பலை இயக்கி, வெள்ளைக்காரக் கப்பல் கம்பெனியை முடமாக்கியது. இந்த நிலையில் வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பாரதியார் போன்றவர்கள் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தை மிகத் தீவிரமாக நடத்தி வந்தார்கள். அவர்களின் வந்தே மாதரம் என்னும் கோஷம் பட்டி தொட்டியெல்லாம் எதிரொலிக்கச் செய்தது. இதனால் ஆத்திரமடைந்த மாவட்டக் கலெக்டர் ஆஷ்துரை ராஜதுவேஷ வழக்கில் கைது செய்து இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்புக்கூற கா…

Quotes

Image

பொன் குடமும் - மண் குடமும் - கோகுலம் கதிர் இதழில்

Image

என் மொழிகள்

Image

அகிலாண்ட நாயகி!

Image
அன்புறுவாய் அகிலம் ஆள்பவள் அன்னை
புன்முறுவாய் புவியாவும் பூத்துநிற்பவள் பூமாரி
நான்மறை வித்தாய் தவத்தின் சித்தாய்
கனியின் இரசமாய் கருணைக் கடலாய் காப்பவள்!
கலைமாமணிகள் நிறைந்த சபையில் கவிமாமணிகள் காலத்தைக் கட்டியிழுத்து கவிமாமணிகளும் கலைமாமணிகளும் இணைந்து கசடறக் கற்பிக்க வேதத்தைத் துணைக்கழைத்தால் தோதாய் வந்து நின்று ஊட்டிவிட்டுப்போ!
இளங்கவிகள் பெருங்கவிகளாகி பட்டமும் பதவியும் பரிசுகளும் விருதுகளும் வினைகளும் விருட்சங்களாய் பரந்து விரிந்து தாமரையாய் மலர்ந்து கலைமாமணிகளையும் கவிமாமணிகளையும் உருவாக்கி வெற்றித் திலகமிட்டு செங்காந்தளாய் சிவந்து சிந்தித்து சிறப்புற்று சிகரமேறி சிகரமேற்றி இருளகன்று இன்புற்று வாழ வரமளித்துவிடு!
கலைமாமணிகளும் கவிமாமணிகளும் இளங்கவிகளும் நாளும் பெருகி நலிவுற்ற செவ்விதழ்கள் நலமுற்று நாற்புறமும் விருந்தும் விரிவான தொகுப்பும் விளைவித்து விளைந்து பெருமையுடன் வலம்வர வடிவுடை நாயகி வரமருளும் தேவிநீ!
அம்புவியைக் காக்கும் அருளன்னை - கனிவுடனே இப்புவி மாந்தரின் சங்கடம் போக்குபவளாம் மந்திரச் சொல்லால் பணிந்து நாடாளும் வெந்தயத்தீயின் விதியை வீழ்த்துவாளாம்!

கொடுமணல்

Image

ஆதித்தமிழர் வணிக மேலாண்மை

Image

Cornelian beads 2

Image

திருக்குறளும் வாழும் வழிமுறைகளும் (the art of living)

வாழையடிவாழையாய்வாழ்வாங்குவாழ!

முன்னுரை : அகமும் புறமும் காதலும் வீரமும் இணைந்தவையே சங்கப்பாடல்கள். இவை வீட்டையும் நாட்டையும் போற்றிய தமிழ் மக்களின் உணர்வுகளால் பின்னப்பட்ட சொற்களஞ்சியம். அந்த வகையில் சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் சீரிய கருத்துகளுடன் தனிச்சிறப்புடன் படைக்கப்பட்ட ஒப்புயர்வற்ற நூல் திருக்குறள். இலக்கியம், அறம், மெய்யியல் வாழ்வியல், அரசியல், பொருளியல் போன்ற அனைத்துப் பரிமாணங்களையும் கொண்ட தெய்வீக நூல் என்றால் அது மிகையாகா. தனி மனித வாழ்வு உயரவும், சமூக முன்னேற்றம் மலரவும், எக்காலத்தும் பொருந்தும் வகையில் பல்வேறு புதிய கருத்துகளைத் தன்னகத்தே கொண்டது குறள். சாமான்ய மனிதன் முதல் சாதனையாளன் வரை அனைத்து மக்களும் மாக்கள் ஆகாமல் மகிழ்ந்து வாழ வகைசெய்யும் அற்புதப் பனுவல்கள் எளிய நடையில் படைக்கப்பட்ட நூல். சான்றாண்மையும், சமதர்மமும் நிறைந்து மனிதன் நிம்மதியுடன் வாழ வழிவகை செய்யும் உயரிய நோக்கத்துடன் தள்ளவேண்டியவற்றையும், கொள்ளவேண்டியவற்றையும் பகுத்தாய்ந்து செம்மையாக வாழ வழி சொல்லும் அற்புதக் காவியம் என்பதோடு நாட்டின் நல்லாட்சி மலர அரசியல் திட்டங்களும் அளிக்கும் ஆகச்சிறந்த படைப்பு…