Saturday, June 25, 2011

பாசம்!




















சுழன்று சுழன்று சூறைக் காற்றாய் சுற்றியடிக்கும் பாசம்!
நெருக்கி நெருக்கி திணறச் செய்யும் பாசம்!
நெருங்கி நெருங்கிச் செல்ல வழுக்கிச் செல்லும் பாசம்!
பிரித்து, பிரிந்து பேரிடர் செய்யும் பிரிய பாசம்!
பழித்து, கிழித்து இதயம் பிளக்கும் பாசம்!
சிரித்து, சிறைப் பிடித்து சித்தம் கலக்கும் பாசம்!
மறைத்து, மறைந்து மனதை மயக்கும் பாசம்!
கொடுத்து, பிடுங்கி கொடுமையாய் கும்மாளமிடும் பாசம்!
அடித்து, அணைத்து அசட்டையாய் அன்பு பொழியும் பாசம்!
நெருங்கினால், பிரிந்து, பிரிந்தால் நெருங்கி சாலம் காட்டும் மாயம்!
[அந்த பாசம்]

அழகில் தியானம்


அழகில் தியானம்

பசுமையில் ஒரு தெளிவு
வெண்மையில் ஒரு அமைதி
தனிமையில் ஒரு இனிமை
அழகில் வரும் நிறைவு
தியானம் ஒரு தெய்வீகம்!

முதுமை நம்பிக்கை!


கடினமான கற்பாறையும் இணையாகுமா?
நளினமான பசுந்தளிரும் இணையாகுமா?
பகட்டான பாசியும் இணையாகுமா?
வறண்ட பூமியும் இணையாகுமா?
பாறையைத் தாண்டிய பாலைவனமும்
இணையாகுமா அன்னையேயுன் மன உறுதியின் முன்!
வழியில் கிடந்து சிரிக்கும் வண்ணமலரே
வாழும் வகையறியாயோ மென்மலரே
காலம் உனக்கும் நலல நண்பன்
பாழும் உலகில் மிதிபடாமல் அன்புகாட்டி
நாளும் உனைக் காக்க நல்லோர் பலரிருக்க
வீழும் அச்சம் உனக்கின்றி அமைதியாய்
வண்ணமும் நல் எண்ணமும் மேலோங்க
மின்னும் நட்சத்திரமாய் ஒளி வீசுகவே!