Friday, May 2, 2014

கலீல் ஜிப்ரானின் பொன் மொழிகள் (3)


பவள சங்கரி





முன்னேறு. தயங்கி நில்லாதே! முன்னேற்றம்தான் முழுமை
முன்னேறு! பாதையில் கிடக்கும் முட்களுக்கு அஞ்சாதே!
அதில்  வடியும் குருதி அழுகலானது!


கலீல் ஜிப்ரான்

என்ன செய்யலாம்?


பவள சங்கரி




சோதனை எலியாய் இருந்தால் சோகமென்பதே இல்லை 
எதையும் சிந்திக்க வேண்டிய தேவையும் இல்லை
புல்லிலும் புதரிலும் ஓடிஓடி வயிறையும் நிரப்பிடலாம்
எல்லாமே குதூகலமாயும் கொண்டாட்டமுமாய் ஆகிடலாம்

வேணிலில் காயலாம், நிழலில் இளைப்பாறலாம்
குளிரானால் வைக்கோலினுள் சுருண்டு கிடக்கலாம்
நாள்முழுதும் எங்கும் கிடக்கலாம் எதிலும் புரளலாம்
தங்கும் இடமும் சலனமின்றி சடுதியில் மாறலாம்

Wednesday, April 30, 2014

சந்திரோதயம்


பவள சங்கரி
கைவண்ண ஓவியம் : நர்மதா



சிற்பி வடித்த செம்மலரின் நித்தியச் சிரிப்பு
சிப்பி மூடிய சிதிலமிலா  சிங்காரச் சிரிப்பு
சிந்தும் ஒளியால் சிந்தனை கலங்காதச் சிரிப்பு
சிங்கம்  கர்ஜித்தாலும் சினம் அறியாச் சிரிப்பு!

Sunday, April 27, 2014

புரியாத புதிர்


பவள சங்கரி


வெள்ளை நிறத்தில் ஒரு குட்டி
கரும்புள்ளியுடன் மங்கிய நிறத்திலொன்று
அடர்கருமை நிறத்தில் மற்றொன்று
செழுமை நிறத்திலொரு கெடா

காய்ந்த கானகத்தில் கம்பு மேய்ந்தபடி
அவ்வப்போது இடையனை நோக்கியபடி
மண்மேட்டில் கையணையில் சாய்ந்தபடி
பகற்கனவில் சுகமாய் இலயித்தபடி!

சொடுக்கி அழைத்தவனின் சோதியில்
சொக்கப் பானையாய் மெய்மறந்ததில்
நிறமற்ற தனிமனமொன்று தாவியதில்
வேலிமுள்ளில் சிக்கி சின்னாபின்னமானது

வெம்மையும் கருமையும் செம்மையும் 
சீவத்தில் ஒடுங்கும் சிவமாய் - பாவமாய்
கல்லையும் முள்ளையும் தாங்கிநிற்கும்
தவமாய் தவிப்போடு தவழும் கோலம்

புரியாத புதிர்களாகக் கடந்துபோகும் காலம்
புரியாதது எதுவும் தனக்கானது அல்ல - வேறு
புரிதலுக்காகக் காத்துநிற்பது புத்தொளிவீசுவது
புரிந்தும் புரியாத புதுமணம் பொன்மனம்.


கலீல் ஜிப்ரானின் பொன் மொழிகள் (2)


பவள சங்கரி



சான்றோருக்கும், கவிஞருக்கும் இடையே 
அங்கோர் பச்சைப் பசும் புல்வெளி இருக்கிறது; 
அந்தச் சான்றோரதைக் கடக்க நேர்ந்தால் விவேகியாகிவிடுகிறார்; கவிஞரதைக் கடக்க நேர்ந்தாலோ தீர்க்கதரிசியாகிவிடுகிறார். 

கலீல் ஜிப்ரான்.

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...