Posts

Showing posts from 2010

கனவு தேசம்.

அன்று சனிக்கிழமை. மாலை நேரம். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் என் அன்புத் தோழி மித்ராவை வீட்டின் வெளியே தோட்டத்தில் காண முடிந்தது. வார இறுதி நாட்களில் மட்டும்தான் அவளைக் காண இயலும்.
“ மித்ரா, இந்த கோடை விடுமுறைக்கு எங்கே போகப் போகிறீர்கள்?”, என்று கேட்டபோது, என் குரலில் சற்றே பொறாமை தலை தூக்கியதை மறைக்க முடியவில்லை.
“ ஓ, அதைக் கேட்கிறாயா. இன்னும் இதுவரை முடிவு செய்யவில்லை. எனக்கும், சந்துருவிற்கும் [ கணவனை பெயர் சொல்லி அழைக்கும் உயர்ந்த நாகரீகம் !] எத்தனை நாட்கள் ஆபிஸில் லீவ் கிடைக்கப் போகிறது என்பதைப் பொறுத்துத்தான் முடிவு பண்ண வேண்டும் !”
“ ரித்திக்காவிற்கு அடுத்த வாரத்திலிருந்து லீவ் ஆரம்பித்துவிடும் இல்லையா ?” என்றேன்.
”ஆமாம், ஆனால் அவள் பள்ளியில் இந்த முறை அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்குக் கூட்டிச் செல்கிறார்கள். அவளும் செல்கிறாள்”.
“ சரி, சரி, இந்த முறை நீங்க இரண்டு பேரும் தனியா இரண்டாம் முறையா ஹனிமூன் போகப்போறீங்க”, என்றேன் பெருமூச்சுடன்.
அவள் ஒரு குறும்புப் பார்வையுடன், “அதற்கெல்லாம் வயசு தாண்டிவிட்டது. அதுமட்டுமில்லை, நாங்கள் இருவரும் ஓடி ஓடி அலுத்துப் போய்விட்டோம். ஒரு ந…

ஆலகாலமும் அமுதாகும் ! - பகுதி - 4

Image
சண்டீஸ்வரர் வழிபாடு
பொன்னக் கடுக்கை முடிவேய்ந்த புனிதற்கு அமைக்கும் பொருள் அன்றி மின்னும் கலன்ஆடைகள் பிறவும் வேறுதமக்கு என்று அமையாமே மன்னாந் தலைவன் பூசனையின் மல்கும் பயனை அடியார்கள் துன்னும்படி பூசனை கொள்ளும் தூயோன் அடித்தா மரைதொழுவாம்.

நலம் தரும் நந்தி
கந்தனின் தந்தையைத்தான் கவணமாய் சுமந்துசெல்வாய் நந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய் அந்தமாய் ஆதியாகி அகிலத்தை காக்க வந்தாய் நந்தியே உனைத் துதித்தேன் நாடி வந்து எம்மைக் காப்பாய் ஒன்பது கோள்:களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய் பொன் பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய் சிந்தனை வளங்கொடுப்பாய் சிகரத்தில் தூக்கி வைப்பாய் நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய் மாலைகள் ஏற்க வைப்பாய் மழலைகள் பிறக்க வைப்பாய் வேலைகள் கிடைக்க வைப்பாய் விதியையும் மாற்றி வைப்பாய் சோலையின் வண்ணப் பூவை சூடிடும் நந்தி தேவா நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய் தஞ்சையில் பெரியநந்தி தளிருடன் வெண்ணெய் சாத்தி அஞ்சாத வேந்தன் நந்தி அழகிய நெகமம் நந்தி குஞ்சர முகத்தான் தந்தை குந்திடும் ரிஷப நந்தி தஞ்சடனாய் உனையடைந்தேன் தயங்காது எம்மைக் காப்பாய்.

பஞ்ச புர…

ஆலகாலமும் அமுதாகும் ! - பகுதி - 3.

Image
பிரதோச விரதம்
பிரதோச விரதம், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும், திரயோதசி திதி அன்று நீராடி மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும்.சுவாமிக்கும், அம்பிகைக்கும் அபிசேக ஆராதனைகள் செய்ய வேண்டும். அல்லது சிவன் கோவிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிசேக ஆராதனைகள் பிரதோச காலத்தில் நடக்கும். அதில் கலந்து கொண்டு அருள் பெறலாம். பிரதோச பூசையன்று முதலில் நந்தி தேவருக்கு பூசை நடைபெறும். சிவபெருமான் பிரதோச காலத்தில் நந்திதேவரின் இரு கொம்புகளுக்கு இடையே உயிர்கள் உய்யும் பொருட்டுத் திருநடனம் புரிந்தார்.
இப்பிரதோச வேளையில் பூலோகம் மட்டுமல்லாமல், ஈரேழுலகத்தில் வசிப்பவர்களும் வழிபாடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பிரதோசத்தின் வழிபாட்டின் சிறப்பு அம்சமாகும். குறிப்பாக தேவர்கள் தாங்கள் பிரதோச வழிபாடு செய்வதோடு அவ்வழிபாடு செய்பவர்களுக்கும் தாங்களே முன்வந்து உதவுவதாக புராணங்கள் கூறுகின்றன.
திருவாரூரில் உள்ள சிவாலயத்தில்தான் முதன் முதலில் பிரதோச பூசை ஆரம்பித்துள்ளது. தேவலோகத்தைச் சேர்ந்த தேவேந்திரன் தான் முதன் முதலில் இ…

ஆலகாலமும் அமுதாகும் ! - பகுதி - 2

Image
விநாயகர் வழிபாடு
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகந்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை காதலால் கூப்புவர்தம் கை.
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா.

பிரதோச வரலாறு :
உலகாளும் நாயகியான அன்னை பராசக்தி தன்னுடைய பீடத்தில் அமர்ந்திருக்குங்கால், தேவலோகக் கன்னிகையை நடனம் ஆடப் பணித்தார். அன்னையின் ஆவலைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, அக்கன்னிகை, அற்புதமாக நடனம் ஆடி அன்னையை உளம் குளிரச் செய்தாள். அன்னையும் உளம் குளிர்ந்து, அவள் நாட்டியத்தை மெச்சி, தன் கழுத்தில் அணிந்திருந்த மலர் மாலையை எடுத்து அவளுக்குப் பரிசாகக் கொடுத்தார். அக்கனிகையையும் பேரானந்தம் கொண்டு அம்மாலையுடன் செல்லும் வழியில் துர்வாச முனிவரைச் சந்தி…

ஆலகாலமும் அமுதாகும் !

Image
ஆலகாலமும் அமுதாகும் !
பூமியர் கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி ஆழிமிசைக் கல் மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி வாழி திருநாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி ஊழிமலி திருவாத ஊரர் திருத்தாள் போற்றி.
நால்வர் பெருமக்கள் துதி.
இப்பூவுலகின்கண் வாழும் உயிரினங்களில் ஆறறிவுப் படைத்த மனித இனம் சாலச் சிறந்ததொரு படைப்பாகும்.ஆதி காலத்தில் வாழ்ந்த அருளாளர்கள், ஞானிகள் ஏனையோர், ஆலயங்களில் உருவத்திருமேனி, அருவுருவத் திருமேனிகளில் நீக்கமற எங்கும் நிறைந்துள்ள களங்கமற்ற பரம்பொருளாகிய சிவத்தை எழுந்தருளச் செய்து வழிபட்டு, நித்திய ஆனந்தம் பெற்றனர் என்றால் அது மிகையாகாது.
ஆதிகாலந்தொட்டே நாயன்மார்கள், சந்தானாச்சாரியார்கள் போன்றவர்கள் சைவத்தை ஒளியூட்டி பிரகாசிக்கச் செய்வதில் பெரும் பணியாற்றியுள்ளனர்.சைவாலயங்களின் வழிபாட்டில் பிரதோச கால வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும்.
மகாப் பிரதோசத்தின் மகிமை :
* சிவபெருமான் ஆலகால விடத்தை அருந்திய நேரம்தான் பிரதோச வழிபாடாக செயல்படுகிறது.
* ஒரு பிரதோசம் பார்ப்பது பதினைந்து நாட்கள் கோவிலுக்குச் சென்று வந்த பலனைக் கொடுக்கும்.
* பதினோரு பிரதோசம் பார்ப்பது ஒரு கும்பாபிசேகம் பார்த்த பலனைக…

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - பாகம் - 7

Image
சக்தி.

சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஒரு குமிழியாம். சக்தி பொய்கையில் ஞாயிறு ஒரு மலர், சக்தி அநந்தம், எல்லையற்றது, முடிவற்றது; ஒன்றாக்குவது, பலவாக்குவது, சக்தி குளிர் செய்வது, அனல் தருவது, குதுகுதுப்புத் தருவது. குதூகலந் தருவது, நோவு தீர்ப்பது, இயல்பு தருவது, இயல்பு மாற்றுவது, சக்தி ஊக்கந் தருவது, சக்தி மகிழ்ச்சி தருவது....உவப்புந் தருவது.......
மகாகவி அன்றே பாடி வைத்துச் சென்றான், சக்தியின் சக்தியைப் பற்றி....
மனித உடலும், இயந்திரம் போலத்தான், ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு பாகம் மரை கழண்டு போகலாம், அதனை செப்பனிட்டு ஓடச் செய்வதிலேதான் ஒரு உரிமையாளனின் திறமை இருக்கிறது. அந்த வகையில் செப்பனிடும் போது அதனை ஏற்றுக் கொள்ள அடிப்படையாக உடலுக்குச் சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தியைத் தான் நாம் இயற்கையின் வரப்பிரசாதம் என்கிறோம். காய்கறிகள், பழங்கள், கீரைகள், தானியங்கள் இப்படி எத்தனையோ இயற்கை வளங்கள் நம் உடலுக்குச் சக்தி சேர்க்கின்றன. அதனை நன்கு பக்குவமான முறையில் சுத்தம் செய்து சமைத்து, உண்ணும் பக்குவத்தில் தயாரிப்பதில் தான் இதன் வெற்றி அடங்கியுள்ளது.
இன்று அத்தகைய சக்தி கொடுக்கக்கூடிய ஒரு சில பானங்கள் பற்றித்தான் பார்…

வாங்க..வாங்க......பழகலாம்.......

Image
வலைப்பதிவர்கள் சங்கமம் - 2010.

வருகின்ற டிசம்பர் 26ம் தேதி காலை 11.00 மணிக்கு உங்கள் அனைவரையும் ஈரோட்டில் சந்திக்க மிகுந்த ஆவலாய் இருக்கின்றோம். ஆம், தமிழ்ப் பதிவர்களுக்கான ஒட்டு மொத்த கூடுதலில் பதிவர்கள், வாசகர்கள் என அனைவரையும் ஒன்றாக சந்திக்க ஆவலாய் காத்திருக்கிறோம்.......... அனைவரும் தங்கள் நண்பர்கள் புடைசூழ, வருக, வருக என வரவேற்கிறோம். காலை தேநீர், மதிய உணவு, மாலை தேநீர் என செவிக்குணவுடன், வயிற்றுக்கும் ஈய்ந்து, எங்கள் கொங்கு மண்ணிற்கேயுரிய அன்பான உபசரிப்புடன், தங்களை உள்ளம் குளிரச் செய்யக் காத்திருக்கிறோம், நண்பர்களே........... கட்டாயம் வாருங்கள்....பழகலாம்......தோழர்களே..... எங்கள் படைத் தளபதிகளின் தொடர்பு எண்கள் கொண்டு, தங்களின் வருகையை உறுதி செய்யுங்கள் நண்பர்களே......... முன்கூட்டியே தங்கள் வருகையை தெரியப்படுத்துவதன் மூலம் விழாவை மேலும் சிறக்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் தங்கள் தொடர்புக்காகக் காத்திருக்கிறோம்...... டிசம்பர் 26ம் நாளை நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்ளுமாறு, நாம் இவ்விழாவைச் சிறப்பாக நடத்த தங்களனைவரின் முழு ஆதரவையும் எதிர்நோக்கி இருக்கிறோம். …

நிலையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ?

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எத்தனையோ இலட்சியங்களும் குறிக்கோளும் கொண்டிருந்தாலும், அனைவருக்கும் பொதுவான ஒரு விசயம், நாம் அனைவரும் ஒரே எல்லையை நோக்கித்தான் பயணிக்கிறோம் என்பதுதான். அதுதான் மகிழ்ச்சி, இன்பம், சந்தோஷம், அமைதி இப்படி பல பெயர்கள் கொண்ட அந்த ஒரே விசயம்...........எத்தனைதான் சாதனைகள் புரிந்தாலும், மகிழ்ச்சி என்ற ஒன்று கிட்டாத வரை அதில் எந்த பலனும் இல்லை அல்லவா? இந்த மகிழ்ச்சி எதனால் அதிகம் வருகிறது? அல்லது எப்போது நிலைத்து நிற்கிறது, இது எல்லோருக்குமே எழக்கூடிய ஒரு வினாதானே.........
பெரும் பணக்காரராக, அதாவது கோடிக்கணக்கான சொத்து உள்ளவராக இருந்தால் எல்லையில்லா மகிழ்ச்சி வருமோ?
ஓரளவிற்கு, அதாவது ஒரு டிகிரி என்று வைத்துக் கொள்ளலாம். சரி தேவையான துணிமணிகளும், பொருட்களும் வாங்கிமுடித்தவுடன் பிறகு சிறிது சிறிதாக மகிழ்ச்சி குறைந்து சலிப்பு தோன்ற ஆரம்பிக்கும்.சமீப காலங்களில் சராசரி வருமான விகிதம் கணிசமாக ஏறித்தான் இருக்கிறது. ஆனால் அதனால் மகிழ்ச்சி பெருகியுள்ளது என்றுகூற முடியாது. பணம் ஒரு அளவிற்கும் மேல் சேர்ந்து விட்டால், பிறகு அது மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய காலம் எப்போதென்றால், தன…

செல்லம்மாவின் பாரதி.

Image
சுட்டெரிக்கும் சூரியன்......அலைந்து திரிந்து, நிழலுக்காக ஏங்கித் திரிந்த வேளையில் விழுதுகள் வேறூன்றிய பரந்த, பசுமையான, பழமையான,ஆலமரம். பரந்தாமனை நேரில் தரிசித்த பரம பக்தனாக உள்ளம் குளிர அதன் தண்ணிழலை அணைத்துக் கொண்டேன்.
சில்லென்ற குளிர் கரம், குச்சியாக இருந்தாலும், உறுதியான கரம்.......என் தோளை வருடி, நலம் விசாரிக்க நானோ, யாராக இருக்கும் இம்மென்மலர் என சிந்திக்கும் முன்பே, முந்திக் கொண்டாள் அவள் தான் கவிக்குயில் பாரதியின் கண்ணம்மா என்கிற செல்லம்மா என்று!
அட எனதருமைத் தோழியே..........இன்றுதான் எனைக் காணும் மனது வந்ததா என்று பழங்கதையை அலச ஆரம்பித்தோம் இருவரும்.......
அவள் அன்று விட்ட செய்தியை தொடர ஆரம்பித்தாள் ஏக்கத்துடனே......
கவிக்குயில் பாரதி, தனதருமைக் கணவனின் பெருமை பேசுவதென்றால் அவளுக்கு சக்கரைப் பொங்கல் சாப்பிடுவது போல......
பாரதியின் பெண் விடுதலை கட்டுரையைச் சிலாகிக்க ஆரம்பித்துவிட்டாள்.
” சகோதரிகளே ! ஔவையார் பிறந்தது தமிழ்நாட்டில், மதுரை மீனாஷியும், அல்லி அரசாணியும், நேற்று மங்கம்மாளும் அரசு புரிந்த தமிழ்நாட்டிலே நம்முடைய நிலைமை தென்னாப்பிரிக்காவில் ஹிந்து தேசக் கூலிகளுடைய நிலைமையைக் …

தியானம்............

விடியற்காலை....பிரம்ம முகூர்த்த வேளை. தியானத்திற்கான அருமையான நேரம். வஜ்ராசனத்தில் பயிற்சிகள் முடித்து, சுகாசனத்தில் ப்ரணாயாமம் ...........அடுத்து தியானம்.ஆழ்ந்த தியானத்தில் கிடைக்கும் ஒரு இன்பநிலை அது எப்பொழுதும் வாய்ப்பதில்லை. அதற்கெல்லாம் இமயமலைக்குத்தான் போக வேண்டுமோ என்னமோ....
கண்களை மூடி மனதை ஒரு நிலைப்படுத்த முயற்சிக்கலாமென்றா.....ல் “கர, கர,கர”..........மின் விசிறி சத்தம். சரி அதைக் கடக்க முயன்று கொஞ்சம் சிரமம்தான்....அதைக் கடந்தால் கூ......குகூ..........சின்னக் குயிலின் திருப்பள்ளியெழுச்சி. அடுத்து சில வினாடிகள்........’கொக்கரக்கோ’......முருகனின் கொடியிலிருக்கும், செஞ்சேவலின் சுப்ரபாதம் கடந்து, எங்கோ தொலைவில், மசூதியில் அல்லாஹூ..........அக்பர்....கடந்து, தெரு முனை பால் அங்காடியின் சலசலப்பு......இப்படி தெரு முனை வரை பயணித்த மனது வெட்ட வெளியை நோக்கி பயணிக்க ஆரம்பிக்க......
கொஞ்சமாவது மண்டையில மூளை இருக்கா....உனக்கு.......என் தர்ம பத்தினரின் [ தர்ம பத்தினிக்கு ஆண்பால் அதுதானேங்க...]புகழாரம். அவரோட ஒரு முக்கியமான ஆவணத்தில் லேசா ஈரக்கையை வைச்சுட்டேன்....அதுக்கு…

பிள்ளை மனம்..........

சசி.....என்ன நான் வந்தது கூட தெரியாம அப்படி என்ன யோசனை.......?
ம்ம்.....ஒண்ணும்மில்லீங்க.......
ஏதோ யோசனையுடனேயே எழுந்து சென்றவள், மணக்க மணக்க ஃபில்டர் காபியுடன் வந்தாள்.
நந்துவிற்கு புரிந்து விட்டது..... ஏதோ விசயம் இருக்கிறதென்று.
அது சரி, சசி உங்க அம்மா வீட்டுக்கு போனியே, அங்கே ஏதாவது பிரச்சனையா? உங்க அப்பா நல்லாத்தானே இருக்கார்?
அதெல்லாம் ஒண்ணுமில்ல......
அவள் ஒன்றுமில்லையென இழுக்கும் போதே ஏதோ இருப்பது தெரிந்தது. சரி அவளே சொல்லட்டும், பார்த்துக்கலாம், என்று கையில் பேப்பரை, எடுத்து காலையில் படிக்காமல் விட்ட மீதியைத் தொடரலாம் என்றால்,
வந்தவுடனே,பேப்பர்தானா......என்று முறைத்தாள்.
சரி என்ன பண்ணலாம் சொல்லு. உங்க அப்பாவிற்கு கண் ஆபரேசன் பண்ண வேண்டும் என்றார்களே, எப்ப பண்ணிக்கப் போறார் உங்கப்பா.....? என்றான் நந்து.
ஆமா. அதைக் கேட்கத்தான் நானும் போனேன். ஆனா எங்க அதப்பத்திப் பேச நேரம்?
ஏன் என்னாச்சு, என்றான் நந்து அக்கரையாக.
என்ன சொல்றது.... அக்கா வந்திருந்தா...நல்லாத்தான் எல்லோரும் பேசிக்கிட்டிருந்தோம். திடீர்ன்னு ஒன்னுமே இல்லாத ஒரு சாதாரண விசயத்திற்கு, வேணுமின்னே சண்டை போடுறா. எப்பவும் ரொம்ப நிதா…