பவள சங்கரி
’ மர
கரி, கருமையான, நுண் துளைகள் கொண்ட,
எளிதில் உடையக்கூடிய தன்மை கொண்ட ஒரு
பொருள். இது நீரில் மிதக்கும்,
வெப்பம் மற்றும் மின்சாரத்தின் மோசமான
கடத்தி.
நுண்துகள்களுடைய
இந்த மர கரி அதன்
நுண்ணிய மேற்பரப்பில் திரவங்கள் மற்றும் வாயுக்களை உறிஞ்சிக்
கொள்ள முடியும்’
சரிகா,
பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துவிட்டு வீட்டிற்கு
பொடி நடையாக நடந்து வந்துகொண்டிருந்தாள்.
மனசெல்லாம் ஒரே பாரம் அழுத்தியபடி
இருந்தது. ‘கரிக்கட்டை’ என்ற வார்த்தையை எத்தனை
முறை, எத்தனை விதமான சூழ்நிலையில்
கேட்டிருப்போம் என்று எண்ணிப்பார்க்கையில் அவளையறியாமல்
உடல் ஒரு முறை குலுங்கி
அடங்கியது. தெருவில் வண்டிகளின் ஓசையெல்லாம் நாராசமாக ஒலித்தது.
“சனியனே,
இந்த கரிக்கட்டை மூஞ்சியை வச்சுக்கிட்டு இன்னும் எத்தனை நாளைக்குத்தான்
என் உயிரை வாங்குவியோ..
வரவனெல்லாம் மூஞ்சியைப் பார்த்தவுடனே, ஒன்னும் சொல்லாம திருப்பிக்கிட்டு
போறானுவ.. எதையாச்சும் கிரீமைப் பூசி கொஞ்சம் பளபளப்பானாச்சும்
காட்டுடின்னு சொன்னா பாவி மக,
அதையும் கேக்க மாட்றா.. கருகிப்போன
எண்ணெய்ச் சட்டி கணக்கா மூஞ்சியை
வச்சுக்கிட்டா எவன் திரும்பிப் பார்ப்பான்..
எப்பப் பாத்தாலும் எண்ணெய் வழியற மூஞ்சியோட,
தலையிலயும் எண்ணெய் வழிய நின்னா
எனக்கே கோவமால்ல வருது. உன் வயசு
புள்ளைக எல்லாம் எப்புடி அழகா
டிரஸ் பண்ணிக்கிட்டு மினுக்கிட்டு திரியுதுங்க.. எவ்ளோ சொன்னாலும் உனக்கு
மட்டும் ஏன் இந்த மர
மண்டையில ஏற மாட்டீங்குது”