Posts

Showing posts from March 17, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போம்! (6)

Image
பவள சங்கரி

“உன் நாவுக்கு அஞ்சு. அது குறி தவறக்கூடிய அம்பாகும்.” – ஹஸரத் அலி.


தேவையற்ற கவலையை விட்டொழியுங்கள்!

நம்மில் பலர் ஏதோ பெரிதாக பிரச்சனை வரப்போகிறது என்ற கவலையிலேயே அப்போதைய நிம்மதியைத் தொலைத்தவர்களாக இருக்கிறோம். பொருளாதார பிரச்சனை, இயற்கைச் சீற்றம், விபத்து, தீவிரவாதம், ஆரோக்கியக்கேடு, நெருங்கிய உறவின் பிரிவு, மரண பயம் போன்ற பல காரணங்கள் இதற்கு அடிப்படையாக இருக்கின்றன. இதில் சிலவற்றை நாம் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் கட்டுக்குள் வைக்க முடியும். ஆனால் நம் சக்தியின் எல்லைக்கப்பால் நிகழக்கூடிய சில விசயங்கள் பற்றி கவலைப்படுவதை விட்டு நடக்கக்கூடியவைகளில் கவனம் செலுத்துவதே அறிவார்ந்த செயல்.

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போம்! (5)

Image
பவள சங்கரி


”ஒரு கொள்கையை எடுத்துக்கொள் அதற்காகவே உன்னை அர்ப்பணித்து, பொறுமையுடன் போராடிக் கொண்டிரு.  உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும் – சுவாமி விவேகானந்தர்.
ஒரு செயலைச் செய்து முடிக்க உறுதியான எண்ணம் கொண்டு அதை ஆரம்பிக்கும் போதே அதற்குரிய சக்தி தானகாவே கிடைத்துவிடும் என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள். நமக்குள் புதைந்து கிடக்கும் சக்தியை பாதி அளவிற்கும் கூட நாம் பயன்படுத்துவது இல்லை என்றே கூறுகின்றனர். நம் முயற்சியை முழுமையாகப் போடும்போது அது பன்மடங்காகப் பெருகத்தான் செய்யும் என்பதும் நாம அனுபவத்தில் காணும் உண்மைதான். கண்ணிற்குத் தெரியாத கடவுள் போலத்தான் நம் சக்தியும் அல்லவா.நம் பார்வைக்குத் தெரியாவிட்டாலும் நமக்குத் தேவையான நேரத்தில் நம்முள் புகுந்து பெரும் சாதனைகள் புரிகிறதல்லவா?

யாதுமாகி நின்றாய்..... !

பவள சங்கரி
மலைகளின் இளவரசி கொடைக்கானல். தமிழகத்தில் தேனிலவுத் தம்பதிகளுக்காகவே உருவாக்கப்பட்ட இயற்கை வரம். கோக்கர்ஸ் வாக், கொடைச்சாலையின் தென் புறம், செங்குத்தான சரிவுகளின் விளிம்பில் அமைக்கப்பட்டுள்ள், 1கி.மீ தொலைவுள்ள குறுகிய நடைபாதையின் இரு புறமும் இயற்கை அன்னையின் இன்ப ஊற்று உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். பனி மூட்டம் இல்லாத நாட்களில் தென்புறம் டால்பினின் மூக்கு, பாம்பர் பள்ளத்தாக்கு பெரியகுளம் மற்றும் மதுரை நகரின் பறவைக்கண் காட்சி, என அனைத்தும் இன்னொரு உலகிற்கே இட்டுச்செல்லும்.
”அனாமிகா, என்னம்மா.. பலத்த யோசனையோ?”
“ம்ம்ம்ம்.. “
அனாமிகாவின் இது போன்ற மௌனமொழி இந்த 10 வருடத்தில் பழகித்தான் போய்விட்டது. அவளுடைய இயற்கையான குணத்தையே முழுவதுமாக மாற்றி, முடக்கிப்போட்ட அந்தக் கொடிய விபத்து நினைக்கவே அச்சமூட்டியது. இந்த கொடைக்கானல்தான் தங்கள் வாழ்வின் எத்தனை, எத்தனை பரிமாணங்களைப் பார்த்துவிட்டது என்ற எண்ணமே ஆச்சரியமாக இருந்தது.
***
புதுத்தாலியின் பசுமை மஞ்சள் நிறம், காலை இளங்கதிரொளியில் பளபளக்க, கணவனின் கையோடு, கை கோர்த்துக்கொண்டு, தோளில் லேசாக சாய்ந்து கொண்டு வெள்ளி நீர்வீழ்ச்சியின் சாரலில் சு…

சிறுகதைகள் இலக்கியம்

Image
பவள சங்கரி
நன்றி : இன் & அவுட் சென்னை இதழ்

நன்றி :வல்லமை பிரசுரம்
இலக்கியங்கள் என்பது அந்தந்தக் காலங்களின் கலாச்சாரங்கள், பண்பாடு, நடைமுறை வாழ்க்கை, இன்னல்கள் என அனைத்தையும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் கண்ணாடி. நச்சென்று வார்த்தைகளால், பளிச்சென்று தம் கருத்தை முன் வைக்கும் கட்டுரைகள் ஒரு விதம் என்றால், அலங்கார வார்த்தைகள் என்ற ஒப்பனையுடன் அழகாகத் தாம் கண்டவற்றை, கேட்டவற்றை, சற்றே கற்பனை கலந்து சுவையான பண்டமாக வழங்கக்கூடியது சிறுகதை. ஆரம்பக் காலங்களில் சிறுகதைகளுக்கு பரவலான அங்கீகாரம் இருந்திருக்கவில்லை. ஆங்கில இலக்கியங்களுக்கு கிடைத்த வரவேற்பு மற்ற மொழி இலக்கியங்களுக்கு கிடைப்பது அரிதாக இருந்திருக்கிறது. ஷேக்ஸ்பியர் படைப்புகள் குறித்து அறிந்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் இலக்கியவாதிகளாக கருதப்பட்ட காலமும் இருந்திருக்கிறது. மேலை நாட்டவர்களின் பிரவேசத்தினால் நமக்குக் கிடைத்த புதிய இலக்கிய வடிவமே சிறுகதை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற மாபெரும் காவியங்களில் பல சிறுகதைகள் கிளைக்கதைகளாக வேரூன்றியிருக்கும். நாயன்…

வாழ்வின் இனிய தருணம்!

Image
அன்பு நண்பர்களே,
வணக்கம்.  பல நேரங்களில் நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் சரியா, அல்லது நாம் போகும் பாதைதான் சரியா என்ற எந்தவிதமான சிந்த்னையும் இல்லாமலே ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் நீ போவது சரியான பாதைதான் என்று ஒரு அங்கீகாரம் கிடைக்கும் போது உள்ளம் குளிரத்தான் செய்கிறது. அதுவும் நல்ல நட்புகள் மனதார வாழ்த்தும் போது மகிழ்ச்சி பொங்கத்தான் செய்கிறது. மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்று உள்ளம் பரபரக்கிறது. எல்லாம் இறைவன் செயல் அல்லவா?
என் இனிய தோழி , தமிழ் மரபு அறக்கட்டளையின் துணைத்தலைவர் திருமதி சுபாஷிணி ட்ரெம்மல் அப்படி எனக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரததின் தருணத்தில் உடன் இருந்து என்னை மகிழ்ச்சியுறச் செய்ததோடு அதனை அழகாக குழுமத்தில் வெளியிட்டதற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் மத்திய அமைச்சர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் மிகச் சிறந்த மனிதாபிமானி. பெண்கள் முன்னேற்றத்தில் தனிப்பட்ட அக்கறை கொண்டவர். தம்முடைய இடைவிடாத பணிகளுக்கிடையேயும் இந்த  நிகழ்ச்சியை ஒப்புக்கொண்டு தில்லியிலிருந்து வந்த களைப்பு தீருமுன் பறந்து வந்து நிகழ்சியில் கலந்து கொண்டதாக தலை…

வாலிகையும் நுரையும் (14) - கலீல் ஜிப்ரான்

பவள சங்கரி
பனித்திரை பூண்ட மலையொரு குன்றுமில்லை;
நனைந்த மழையில் துளிக்கும் ஓக் மரம், விசும்பும் வில்லோ (அலரி) அல்ல.

பாருங்கள் இங்கேயொரு முரண்பாடான மெய்யுரையை:
ஆழ்ந்ததும், உயர்ந்ததுமான அவைகள் இரண்டிற்கும் இடைப்பட்டதைக் காட்டிலும்
ஒன்றுக்கொன்று நெருக்கமாகவே உள்ளது.

உம் முன்னால் தெளிவானதொரு கண்ணாடியாக யாம் நிற்கும் தருணம்,
நீவிர் எம்மை உறுத்துப் பார்த்து உம் உருவத்தையேக் கண்டீர் ஆங்கே...
பின் நீவிர், “யான் உம்மை விரும்புகிறேன்” என்றீர்.
ஆயினும் உண்மையில் எம்முள் இருக்கும் உம்மையே விரும்புகிறீர் நீவிர்.

உம் அண்டை அயலாரை நேசித்தலைக் கொண்டாடுவீராயின்
அது உம் நற்குணத்திற்கு இழுக்கு.

இசைக்கவியாரின் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் நிகழ்ச்சியில் நானும்!

Image
அன்பு நண்பர்களே,

வணக்கம். இன்று மதியம் 1.30 மணிக்கு பொதிகை தொலைக்காட்சியில், இன்தமிழும்,  இன்னிசையும் ஒருங்கே அமையப்பெற்ற இசைக்கவி இரமணன் அவர்களின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் என்ற நிகழ்ச்சியில் அடியேனும் தலைகாட்டியிருக்கிறேன்.
யூட்யூப் பதிவு இங்கே: http://www.youtube.com/watch?v=BD3Xb7rFLw0&feature=youtu.be