Posts

Showing posts from October 22, 2017

சூரசங்காரம்!

Image
நேற்று பழனி மலை முருகன் தங்க மயில்வாகனனாக அற்புதக்காட்சி! முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்ய 18 ஆண்டுகள் தேவைப்பட்டதா? அவ்வளவு பலம் வாய்ந்தவனா அவன்? இல்லை அவன் திருந்தி நல்வழிப்பட பொறுமையாகக் காத்திருந்து அவன் திருந்தி வாழ வாய்ப்பும் அருளுகிறார் . பொறுமை கடலினும் பெரிது என்பதையும் விளங்கச்செய்கிறார். ஆறுமுகனின் திருவிளையாடல்களுள் ஒன்றான சூரசங்காரம் என்பது ஒரு குறியீடு. ஆணவம் எனும் அசுரனை அழித்து நம்மையெல்லாம் ஆற்றுப்படுத்தும்பொருட்டு சக்தி அம்சமாக எழுந்தருளும் முருகப்பெருமானுக்கு திருமுகங்கள் 6, படைவீடுகள் 6, வளர்த்தெடுத்த கார்த்திகைப்பெண்கள் 6 , சரவணபவ எனும் திருமந்திரமும் 6 எழுத்து. மலைக்கோவிலும், திரு ஆவினன்குடி ஆலயமும் மாலை 4 மணிக்கே குமரன் சூரனை வதம் செய்ய கிளம்பியவுடனே நடை சாத்தப்படுகிறது. பின் சூரசங்காரம் முடிந்தபின் ஆலயத்துனுள் எழுந்தருளுகிறார்.

Korea - Tamil cultural relationship

Image
We find it is timely to focus on India-Korea relationship from an economical, historical, cultural and linguistic point of views. By doing so we can bring these two economical powers of Asia closer for mutual prosperity and healthy relationships. The most dynamic and fastest growing economic region of the world today, and as two great countries of Asia, Korea and India,  have roots in their common values and interests. So the ongoing transformation of Korea-India relationships is not only a mere coincidence. As we know Korean companies like Samsung, Hyundai and LG are now household names in India already as their products have found an important place in most of our homes. This is because of Korean companie's confidence in the fundamentals of the Indian economy and its growth potential, they are investing in a big way. India maintained close trade and cultural relations with China by exporting coral, pearls, glass vessels and beads and in return importing jade and silk

கொடுமணல் அகழாய்வில் சூதுபவளம்!

Image
பவள சங்கரி இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு அகழாய்வுகளில் உலகளவில் சிறப்புப் பெற்ற மிக முக்கியமான அகழாய்வாக கொடுமணல் அகழாய்வு கருதப்படுகிறது. கல்வெட்டறிஞர் , புலவர்,பேராசிரியர் செ.இராசு அவர்கள் முதன் முதலில் ‘நொய்யல் ஆற்று நாகரிகம்’ என்று குறிப்பிட்டு வெளியிட்ட ஆய்வறிக்கை மூலமாக பிரபலமானது. மெருகூட்டப்பட்ட 8000 கண்ணாடி மணிகள் ஒரு கல்லறையில் கிடைத்த தகவல், 1985 முதல் 1991 வரை பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள் தலைமையில் நான்கு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. கொடுமணல், கொங்கு நாட்டின் ஈரோடு மாவட்டத்தில், பெருந்துறை வட்டத்தில் நொய்யல் ஆற்றின் வடகரையில், சென்னிமலையிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சங்ககாலத் தமிழ் மக்கள் பல்வேறு தொழில்நுட்பங்களில் மேன்மை பெற்றவர்களாக இருந்தனர் எனவும், அதன் மூலம் வளர்ச்சி பெற்று, பன்னாட்டு வணிகத்திலும், ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் மிக உன்னத நிலையை அடைந்திருந்தனர் எனவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ என்ற தனது நூலில், பக்: 79 முதல் 130வரை 5