Posts

Showing posts from January 6, 2013

சுவாமி விவேகானந்தரின் தத்துவ முத்துக்கள்!

Image
பவள சங்கரி சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கைத் தத்துவங்கள்! உம்மை நேசிப்பவரை ஒருக்காலும் வெறுக்காதே! உமக்கு உதவியவரை ஒருநாளும் மறவாதே! உம்மை நம்பியவரை ஒருபோதும் ஏமாற்ற எண்ணாதே! 15 வாழ்க்கைத் தத்துவங்கள் 1. அன்பு மட்டுமே வாழ்க்கையின் மேன்மைக்கான வழி. சுயநலமில்லாத சத்தியமான அன்பு ஒன்றே அமைதியாக வாழும் வழி.

2013ம் ஆண்டின் புத்தகத் திருவிழாவில் எனது எழுத்திற்கு ஒரு அங்கீகாரம்

அன்பு நண்பர்களே, வணக்கம். நாளை 11.01.2013, சென்னை நநதனத்தில் துவங்க உள்ள புத்தகக் கண்காட்சியில்  கடை எண்: 488 மற்றும் 489 பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரின் கடையில் என்னுடைய 4 புத்தகங்களும் வெளியாக உள்ளன. நண்பர்கள் இயன்றால் சென்று வாங்கிப் படித்து தங்களுடைய மேலான கருத்தைப் பகிர்ந்து கொண்டால் நன்றியுடையவளாக இருப்பேன். (1) விடியலின் வேர்கள் -  பேராண்மைமிக்க பெண் சாதனையாளர்கள் (2) கனலில் பூத்த கவிதைகள்! - சிறுகதைத் தொகுப்பு (3) கனவு தேசம் - சிறுகதைத் தொகுப்பு (4) நம்பிக்கை ஒளி! - குறுநாவல்  நன்றி. அன்புடன் பவள சங்கரி                                           

மணலும், (வாலிகையும்) நுரையும்! (6)

Sand And Foam - Khalil Gibran பவள சங்கரி     மேதையென்பவன் , ராபினின் மிதமானதொரு வசந்தகால துவக்கத்தின் கீதமானவன். மோசமான இறகு படைத்ததோர் ஆன்மாவாயினும் , அதுவும்கூட உடற்தேவையினின்று தப்பிக்க இயலாது. பித்தன் என்பதாலேயே அவன் உம்மையும் , எம்மையும் விடக் குறைந்த தகுதியுடனான இசைக்கலைஞன் அல்லன் ; ஒருகால் அவன் வாசிக்கிற அந்த இசைக்கருவி மட்டும் சிறிது ராகம் தப்பியதாக இருக்கலாம்.   இருதயத்தின் அமைதியினூடே உறைந்திருக்கும் , தம் குழவியின் இதழ்களின்மீது இசைக்கும் , ஒரு தாயின் பாடல் அது. நிறைவேறாத ஆசைகளென்பதே இல்லை.

எரிதழல் கொண்டு வா!

பவள சங்கரி மூடியிருந்த அறைக் கதவின் வழியாக உயிரை உருக்கும் மரண ஓலம். தீயால கருகி எரிந்து துடிக்கும் இறுதி நேரத்து போராட்டம். தெருவில் கூட்டம் கூடிவிட்டது. யாரோ ஆம்புலன்சுக்கும், போலீசுக்கும் போன் செய்தும் விட்டார்கள். படித்தவர்கள் குடியிருக்கும் அரசாங்க, டெலிபோன் குவார்டர்ஸ் பல மாடிக் கட்டிட்க் குடியிருப்பின் அருகில் உள்ள தனி வீடு. காலை ஷிப்ட் முடித்து வீட்டிற்கு  வந்தவர்கள் பக்கத்து வீட்டில் வந்த மரண ஓலமும், எரியும் வாசமும் கண்டு அரண்டு போய் மளமளவென காரியங்கள் செய்து கொண்டிருக்க, அந்த வீட்டின் உரிமையாளர், ஆசிரியை சரசுவதி ஒன்றுமே அசைவில்லாமல் மந்திரித்து விட்டதுபோன்று சுய நினைவின்றி  உட்கார்ந்திருப்பதைப் பார்த்து ஏதும் புரியாமல் அருகில் சென்று எவ்வளவோ உலுக்கியும், பலனில்லை. ஆம்புலன்சு அருகில் இருந்ததால் அடுத்த சில நிமிடங்களிலேயே வருவதற்குள், தானியங்கி பூட்டு பூட்டிக் கொண்ட அறையை வெளியிலிருந்து திறந்துகொண்டு பொறியாளர் சந்தானமும், லைன்மேன் கார்த்தியும் முந்திக்கொண்டு முதலுதவி செய்ய, அதற்குள் பாதி வெந்த நிலையில் அங்கு துவண்டு கிடப்பது டீச்சரம்மாவின் ஒரே செல்ல மகன் ரகு என்கிற ரகுவரன்